ஹேமலேகாவுக்கு முன்பே விசோனியர்கள் இறந்தவர்களுக்குப் பாதை அமைக்கத் தொடங்கியிருந்தார்கள். அது எப்போது தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் தோண்டப்பட்ட மிகப் பழைய கல்லறைகளில் இறந்தவர்களின் கால்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே திசையை நோக்கியிருந்தன. அந்தத் திசையில் அப்போது என்ன இருந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நதி அதற்குள் பலமுறை தன் வழியை மாற்றியிருந்தது.
Category: இதழ்
கென் சரோ விவா: கருகிய நிலமும் கலகக் குரலும்
ஓகோனி உரிமைகள் மசோதா திறமையற்ற உள்நாட்டு காலனித்துவத்தை முற்றிலுமாக நிராகரித்து, நைஜீரியாவில் ஒரு புதிய ஒழுங்கிற்கு அழைப்பு விடுத்தது; அந்த ஒழுங்கில் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் விவகாரங்களுக்கு முழுப் பொறுப்பைக் கொண்டிருக்கும்; நைஜீரியாவின் பல்வேறு மக்களிடையேயான போட்டி நேர்மை மற்றும் நியாயமானதாக இருக்கும்; இதன் மூலம் அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.
விரியின் விளிம்பில்
ஆசிரமத்திற்குள் நுழைந்தோம். செட்டி நாட்டுக் கலை நுணுக்கங்களுடன் அழகாக கட்டப்பட்ட பெரிய கட்டிடம். இருபக்கமும் பெரிய திண்ணைகளுக்கு நடுவில் உயரமான கனமான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தேக்குக் கதவு. உள்ளே விசாலமான கூடமும், அறைகளும். சிதிலமடைந்தவற்றை மட்டும் மாற்றி பழமை மாறாமல் பாதுகாத்திருந்தார்கள். கட்டிடக் கலை வல்லுநர்களின் திறமையை மனதுக்குள் வியந்து கொண்டேன். பளிச்சிடும் சுவர்களின் வெண்மை தேக்குக் கதவுகளுடனும் ஓட்டுக் கூரையுடனும் பாந்தமாகச் சேர்ந்தது. பின்புறம் ஆற்றில் இறங்கும் படிகள்.
காலாட்படை வருகிறது
குளிர்காலம் வரப் போவதையடுத்து, மனிதர்கள் மேற்கத்திய உடை அணிந்திருந்தனர். திரையால் தங்களை மறைத்திருந்த அழகிய பெண்களையும், மீசை வைத்திருந்த இளைஞர்களையும் பார்த்தான். நவாப்களின் பழைய பாழடைந்த அரண்மனைகளைப் பார்த்தான்/ மசூதிகளின் முற்றங்கள் வழியாக நடந்தான். ’சலாம் அலைக்கும்’ என்று மிகச் சரியாகச் சொல்ல முடியாமல் சொல்லி நண்பர்களை வாழ்த்தினான். ரம்ஜான் விரதமிருந்தான். தொப்பி மற்றும் நீண்ட அங்கி அணிந்தான். கேள்வி் — பதில் பாணியிலமைந்த நிகழ்ச்சியிலும், கவியரங்களிலும் கலந்து கொண்டான்.
அழைப்பு
அம்ப்ருணர் எனும் ரிஷியின் மகளாகிய வாக் எனும் உயர்ந்த ஞானம் பெற்ற பெண்ரிஷி தனது ஆத்ம அனுபவத்தால் (மெய்யுணர்வால்) தானே எல்லாமாக, தன்னையே அந்த பிரம்மமாகக் காண்கிறாள். தானே பூமி, ஆகாயம், மனிதன், தேவன், உணவு, காற்று என்றெல்லாம் கூறிக் கடைசியில் முடிக்கும் எட்டாவது ஸ்லோகம் மிகவும் ஆழமான கருத்துடையது.
விசித்திர நாடகம்
டெல்லியைக் கடந்து ஃபரிதாபாத் நெடுஞ்சாலையில் கார் திரும்பியபோது, சட்டென்று நகரம் பின்னோக்கி நழுவியது. கார் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர, சுற்றியிருந்த நிலப்பரப்பு அசைய மறுத்து உறைந்து கிடந்தது. மூடுபனி விழும் குளிர் கால மாலைப் பொழுது திட்டமிட்டபடி தன் இறுகிய கரங்களை விரித்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் மன்பிரீத் சிங்கின் “விசித்திர நாடகம்”
காசு பணம் துட்டு மணி மணி!
யூபிஐ (Unified Payments Interface) வந்தபிறகு சில்லறை தேடும் அவசியமே இல்லையே. என்ன தொகையாக இருந்தாலும் சரியாக அனுப்பிவிடுகிறோம். சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் என்று கடைக்காரர் சொல்ல வேண்டியதில்லை. நோட்டைக் கொடுத்து சீட்டு வாங்கிவிட்டு நடத்துநரிடம் இருந்து சில்லறை வருமா என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதுவல்லவோ புரட்சி
கைம்மாறு
சட்டென்று பத்து வருடத்திற்கு முந்தைய அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. மாதேஷ் பூர்த்தி செய்த மதுரை காமரஜர் பல்கலைகழக விண்ணப்பம். அதில் தந்தை பெயருக்கு எதிரே பாரிஜாதம் என்று இருந்தது. “இது உன் அப்பா பெயரா” என்று ஆச்சரியத்துடன் வினவினேன். “இல்ல சார். என் அம்மா பெயர். நினைவு தெரிஞ்ச முதலா அம்மா தான். அப்பாவை பார்த்ததில்ல. வளர்த்த்தது, படிக்க வெச்சது, எல்லாம் அம்மா தான். பூ கட்டி, பத்து பாத்திரம் துலக்கி கஷ்டப்பட்டு என்னய ஆளாக்கினாங்க. அதான் ஃபார்ம்ல அப்பா பேருக்கு பதிலா அம்மா பேர எழுதியிருக்கேன்.” விளக்கம் தந்தான்.
இருள் பாய்ச்சல்
ஒரு குறிப்பிட்ட துளையின் வழியே செலுத்தப்படும் ஒளித்திரள் ஒன்றையொன்று அழித்து,ஏற்படும் இருள் விளைவை முற்றிலுமான அழிவுக் குறுக்கீடு(Complete Destructive Interference) என்று சொல்கிறார்கள். ஒளிச்சுழலால் மட்டுமே இது ஏற்படும். சுழல் படிக்கட்டுகளை உவமித்துக் கொள்ளுங்கள். ஒளி அப்படி பயணிக்கையில், மையத்தை நெருங்குகையில் அவை ஒன்றையொன்று வெல்ல முற்படுகையில் இருள் குவிந்து, ஒளியைவிட வேகமாகச் செல்கிறது சில குறிப்பிட்ட அறிவியல் நோக்கில், சில குறிப்பிட்ட இருள் வகைகள் அல்லது மாதிரிகள் ஒளியைக் காட்டிலும் வேகமாகப் பயணிக்கும் என்று ‘நேச்சர்’ இதழில் வெளியாகியுள்ள கட்டுரை சொல்கிறது.
டைட்டானிக்… இரு பேராற்றல்களின் சங்கமம் – இரு கவிதைகள்
அந்த மிடுக்கான கப்பல்
தன் உயரத்தில் அழகில் வண்ணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த
அதே வேளையில்
நிழல் சூழ்ந்த அமைதியான தொலைவில்
அந்தப் பனிப்பாறையும்
வளர்ந்து கொண்டிருந்தது.
கற்காலம் முதல் தற்காலம் வரை கண்ணாடி பிரதிபலிக்கும் அறிவியல் சிந்தனைகள்
மனித வரலாற்றில் கலையும் அறிவியலும் எப்போதெல்லாம் ஒன்று சேர்கின்றனவோ, அப்போது காலத்தைக் கடந்த பேரதிசயங்கள் பிறக்கின்றன. லிகர்கஸ் கிண்ணம் (Lycurgus cup) போன்ற வியத்தகு பொருட்களை உருவாக்கிய ரோமானியர்களின் கண்ணாடித் தொழில்நுட்பம், பிற்காலத்தில் ஐரோப்பாவின் ஆன்மிக, கலாசார அடையாளமாக மாறத் தொடங்கியது. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், அவர்கள் வார்த்தெடுத்த கண்ணாடி கைவினைத்திறன் அழியாமல் தப்பிப்பிழைத்தது. இடைக்கால ஐரோப்பாவில் கிறித்தவ மதம் வேகமாகப் பரவத் தொடங்கியபோது, புதிய வழிபாட்டுத் தலங்களான கதீட்ரல்களை உருவாக்குவதில் புதிய கட்டிடக்கலைப் புரட்சி வெடித்தது.
மேலே வேருள்ள அஸ்வத்தம்
“பயமின்மை, உள்ளத்தின் தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, புலனடக்கம், யாகம், சாஸ்திரம் படித்தல், தவம், நேர்மை, அஹிம்சை, உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், தீவிர ஏக்கம் இல்லாமை, இனிமை, நாணம், மனம் சலியாமை, திறமை, பொறை, உறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா!” என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும்
கொலம்பஸ் புறப்பட்டவுடன், அவரது அறிவுரைகள் அனைத்தும் மறக்கப்பட்டன. கொலம்பஸின் ஒழுங்கு நிறைந்த அன்றாடக் கடமைகளிலிருந்து விலகி, கோட்டையில் இருந்த ஆண்கள் பூர்வகுடி மக்களை மோசமாகவும் கடுமையாகவும் நடத்தினர். பூர்வகுடிப் பெண்களை பலவந்தமாக அபகரித்தல், தங்கத்திற்காக அச்சுறுத்துதல் ஆகியவையும் நடந்தன. ஸ்பானியர்களுக்கு இடையேயும் பிரிவினைகள் ஏற்பட்டு, சிலர் காட்டுக்குள் தனியாகச் சென்று வாழத் தொடங்கினர். ஒரு குழு தங்கச் சுரங்கங்களைத் தேடி தலைவர்களிடம் இருந்து பிரிந்து சென்றது.
முடிவின்மையின் அந்தம்
நூற்றாண்டுகள் கடந்து விட்டன. சீராக்கின் ஞானம் முழு விவிவியத்துடன் கணக்கற்ற வீடுகளில் காணப்படுகிறது. ஆர்க்கிமீடிஸின் நூலோ மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே வாசிக்கப்பட்டது. ரோமப் பேரரசின் விரிவாக்கத்தில், மஹா கிரேக்கத்தின் பெருமைமிகு இறுதிச் சின்னமான சீராகுஸை (Syracuse) நகர் மீதான படையெடுப்பின் போது ஆர்க்கிமீடிஸ் கொல்லப்பட்டார். விரிவடைந்து சென்ற ரோமப் பேரரசு வெகுவிரைவில் தன்னுடைய அரச மதத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்றாக சீராக்கின் ஞானத்தை இழுத்துக் கொண்டு அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்.
தன் நாட்டிலேயே அந்நியனான கண்டுபிடிப்பாளன்: தடைகளால் இயக்கப்பட்ட இயந்திரம்
ஜி.டி.என்-ன் வாழ்க்கையை மிக உன்னிப்பாக விவரித்திருந்தாலும், திரைப்பட ஊடகத்தின் கோணத்தில் கதையை எவ்வாறு கட்டமைப்பது என்பதில் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இன்னும் அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாம். படத்தில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், ஏனோ தொடர்ச்சி இல்லாமல் இருக்கின்றன. உதாரணமாக, ஜி.டி.என் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்க முயற்சிக்கும் ஆரம்பக்கட்டக் காட்சி மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இயக்குனர் அவரை அவசர அவசரமாக ஒரு பெரிய மில் முதலாளியாக மாற்றுகிறார்; அவர் பருத்தி நெய்யும் (spinning) தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வது போல சில காட்சிகளைக் காட்டினாலும், உடனே அவர் மில் முதலாளியாக மாறுவது போலக் காட்சி மாறுவது சற்று இடிக்கத்தான் செய்கிறது.
முப்பரிமாணம்
ஐந்து மணி நேரம் கழித்து பணியாள் ஒருவனுடன் படியேறி அந்த அறையின் முன்பு சென்று நின்றபோது அதன் கதவுகள் என்னை அபரிமிதமான கிளர்ச்சிக்கு உள்ளாக்கின. ஆனால் விசித்திரமான ஓசைகள் கேட்ட அந்தக் குளியலறையை நோக்கி எட்டுவைக்க இயலாமல் உடல் தயங்கிப் பின்வாங்கியது என்னுள் இனம்புரியாத சலனத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. சீருடை மற்றும் கைத்துப்பாக்கி இல்லாமல் நான் வலுவற்ற புழு என்பதும், அவற்றின் துணை இன்றி இவ்விடத்திற்கு வந்தது அத்தனை பாதுகாப்பான செயல் இல்லையோ என்கிற அபத்தமான ஐயமும் தோன்றியது. பூட்டப்பட்டிருக்கும் அறையினுள் எவர் பதுங்கியிருக்கப் போகிறார்கள் என்று தர்க்கம் உரைத்தாலும் என்னால் அதனை மதித்து செயலாற்ற இயலவில்லை.
உன்னதமானதெல்லாம் இலவசம்
தண்ணீர் நாவல் மெட்ராஸின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பற்றிய படைப்புதான் என்றாலும், அவர் அந்நகரத்தின் தண்ணீர் நெருக்கடியைப் பற்றிய நாவலை எழுத முனையவில்லை. அறிவதை விடவும் பார்ப்பதற்குத் தரப்படும் முன்னுரிமை அங்குள்ளது: அப்பெண்ணின் ஊர் தெரியாது, அவளது பெயர் தெரியாது; துல்லியமாக ஒரு அறியப்படாதவள் என்பதால் மட்டுமே அவள் பார்க்கத் தகுந்தவளாகிறாள். திரும்பத் திரும்ப நிகழ்வதை வலியுறுத்துதல் அங்குள்ளது: ஒரு குறிப்பிட்ட கணத்தின் திடீர் மெய்வெளிப்பாடு அல்ல, மாறாக “திரும்பத் திரும்ப” நிகழும் ஒரு பொறுமையான திரட்சிதான் கடந்துபோகும் ஒரு சித்திரத்தை ஓர் கலைவடிவமாக மாற்றுகிறது.
றெக்கை (இறுதிப் பகுதி)
மழை முழுக்க ஓய்ந்து வானம் வெளி வாங்கியது. நிர்மலா நிமிடத்துக்கு நிமிடம் பெருகிக் கொண்டிருந்த கார்னிவல் கூட்டத்தின் நடுவில் உந்தும் தள்ளுமாக அலைக்கழிக்கப் பட்ட கன்று போல் நகர்ந்தாள். பசித்தது. எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடனே வீடு திரும்ப வேண்டும். வசிக்கும் இடம் எது? அவள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறாளா அல்லது வீட்டிலிருந்து போகிறாளா? லெவி, லெவி எங்கே? அல்பி எங்கே? இறகு முளைத்த இரண்டு குழந்தைகள் எங்கே?
இறை உறையும் இடம்
கிருஷ்ணர் கீதையில் பல இடங்களின் “நான், எனது” என்று குறிப்பிடுகிறார். அவர் “நான்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் தன்னை வசுதேவனின் மகனான கோகுலத்துக் கண்ணனாகவும், சில இடங்களில் காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், சில இடங்களில் உலகிற்குக் காரணமான ஈஸ்வரனாகவும், சில இடங்களில் அந்த பிரம்மமாகவும் தன்னை குறித்துக் கொண்டு சொல்கிறார். எனவே எந்தெந்த இடத்தில் எந்தப் பொருள் பொருந்தி வருகிறதோ அதையே நாம் தேர்ந்தெடுத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயிரத்தொரு கேள்விகள் கேட்ட அபூர்வ சிந்தாமணி
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் வரப் போகிறார்கள் என்று எப்படி முதலிலேயே தெரியும், ஏதாவது ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் பெயர், ஊர், தொழில், உறவினர் என்று செய்து கொள்ள வேண்டுமா ? அப்படிச் செய்தாலும் யார் எவர் என்று சுவாமிஜிக்கு எப்படித் தெரியும் ? புகைப்படமும் கொடுப்பார்களா ? அத்தனையையும் சுவாமிஜி எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறார் என்பது போல பல கேள்விகள்.
சிட்டி சிறுகதைகள்
பிறகு லட்சுமணன், பார்வதி, உயரதிகாரி சேர்ந்து கோவிலுக்கு செல்லும்போது லட்சுமணன் பூ வாங்கிவரச் செல்லும்போது இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கதையில் அவளது கரிசனம் சொல்லப்படுகிறது. பிறகு ஊருக்கு கிளம்ப தயாராகையில், மாமியார் அடுப்படியில் வேலை என்று உள்ளே செல்கிறாள்; கணவன் லட்சுமணன் ரயிலுக்கு போக வண்டி அழைத்துவர போக, உங்களோடு பேசவேண்டும் என்று அறையில் நாற்காலி போட்டு உட்காரச் சொல்கிறாள் பார்வதி. இந்த நெருக்கத்தை எதிர்பார்க்காத உயரதிகாரி அவள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. அதுவும் நண்பன் மனைவி, இனி நான் இங்கு வரமாட்டேன் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறான்.
புராதனத்தின் இழை
சொற்கள்
பிரக்ஞையில்
வந்து சேர்வதற்கு முன்
பொருட்களுக்கிடையே நிலவும்
நுட்பமான ஒப்பந்தத்தை
எவ்வகையிலும்
மாறாத வேர்கள் நகரும் பாதைகள்
இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது அல்லது சிதைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. அவற்றின் பயண இலக்கு மாற்றம் பெற்றுள்ளது. நகரங்களைப் போன்று அபரீத நுகர்வு கலாச்சாரத்தில் கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போன்று, பெருவணிக நிறுவனங்களின் கழுகுப் பார்வைக்குள் கிராமங்களும் இன்று வீழ்ந்து கிடக்கின்றன.
அட்லாண்டா — மரங்களின் கைகளில் ஒரு நகரம்
கேப்பேஜ்டவுனின் சந்துகளில் உயிரோவியங்களாக சுவர்களை அலங்கரிக்கும் வாழ்க்கைக் கதைகள். ஈஸ்ட்சைட் டிரெயிலின் வழியே உருவப்படங்கள். க்ரோக் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதையில் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும், மீண்டும் மீண்டும் வரையப்பட்ட, கலகலப்பான அதிகாரப்பூர்வமற்ற ஓவியங்கள்.
சொர்க்கத்தின் பறவைகள் – அப்துல்ரஸாக் குர்னா (தமிழில் லதா அருணாச்சலம்)
வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
இவ்வரலாற்றில் குறிப்பாக வைரத்தை இயற்கை வடிவத்துக்குத் தகுந்தவாறு வடிவமைத்ததில் இந்திய கலைஞர்களின் பங்கு மிகவும் சிறப்பானது. அவர்கள் கல்லை அதிகமாக வெட்டி எடையை இழக்கச் செய்வதைவிட, வைரத்தை வைரத்தால் அறுக்க செய்த முறைகள், ஒளிர்வுடன் இயற்கை வடிவத்தை மதிப்பதும் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தியது.
கடவுள் தொடங்கிய இடம் – அ. முத்துலிங்கம்
பயணத்திற்கு எப்போதும் தயாராய், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கு மாஸ்ரர் “டைனோசர்களுடன் வாழ்ந்த, நான்கு சிறகுகள் கொண்ட மைக்ரோராப்டர் வலிமையானது. அது இரண்டு சிறகுகள் கொண்ட பறவைகளை வேட்டையாடி உண்ணும். உயிர் வாழ்வதற்கு இரண்டு சிறகுப் பறவைகள் அதி வேகமாகப் பறக்கத் தொடங்க, மைக்ரோராப்டரால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. பட்டினி கிடந்து அழிந்து போயின. முந்தியது பிந்தியது என்று இல்லை; திறமையும் மதியூகமும் தேவை” எனச்சொல்கிறார்.
சாமியா சாதி பார்த்தது?
திருவிளையாடற்புராண நூல்கள் பல உண்டு. அவற்றுள் ஏ.பி.நாகராஜன் எதை எடுத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை. திருவிளையாடற்புராண நூல்களில் காலத்தே பிற்பட்ட நூலான பரஞ்சோதி யாரின் திருவிளையாடற்புராணத்தில் ஐம்பத்து இரண்டாவது திருவிளையாடலாக ‘ தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்’ பாடப்பட்டுள்ளது. நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடக்கும் உரையாடல் , சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டுவது வரை திரைப்படத்திற்கும் இந்நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
உண்மையுமாய் இன்மையுமாய்…
நிர்வாணத் தேடலின் துவக்க நிலையில் ஒரு உரையாடலின் போது சித்தார்த்தன் கோவிந்தனிடம் சொல்கிறான் //”தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசமிருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன? அகத்தை விட்டுப் பறப்பதுதானே? ‘நான்’ எனும் வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே? துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கிற தன் ஏமாற்றம் தானே?”//
பதினைந்து ஆண்டுகள்
எந்த ‘கார்ப்பரேட் இலக்கியங்களை’ அவன் குப்பை என்று எள்ளி நகையாடினானோ, அதே குப்பைக் கூடையில் தானும் ஓர் அங்கமாகிவிட்டதைப் போல உணர்ந்தான். ரொட்டி நிறுவன அதிகாரியின் நாவலுக்குக் கீழே விழுந்த அதே பாசாங்குத்தனமான ‘லைக்’குகள், நாளை இவன் நாவலுக்கு விழச் சாத்தியமில்லை. சில வருடங்களாக வேலையின்மையிலிருந்து மீள முடியாதவனாக இருக்கிறான். சக-ஊழியர்கள் இல்லாதவனுக்கு ஏது “லைக்”?. தப்பித் தவறி ஓரிரு “லைக்” விழுந்துவிட்டால் – அது இவன் திறமைக்காக இருக்காது!
இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்
துறைமுகத்தை விட்டு கப்பல்கள் நகரத் துவங்கியதும், கப்பல்களின் கீழ்த்தளங்களில் பெரும் பரபரப்பும் சத்தமும் உண்டானது. குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட குதிரைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவை கடலின் அலைகளினாலும், இடநெருக்கடியினாலும் பயந்து கூச்சலிடத் துவங்கின. விலங்குகளின் கழிவுகளாலும், காற்றோட்டமில்லாத கீழ்த்தளங்களினாலும் கப்பல்களுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியது. மாலுமிகள் மற்றும் குதிரைப்படை வீரர்கள் விலங்குகள் நிலைதடுமாறி விழுந்து கால்கள் உடைந்துவிடாமல் இருக்க, அவற்றை கயிறுகளால் பிணைத்துத் தூக்கி நிறுத்தும் பணியில் உடனடியாகத் தீவிரமாக இறங்கினர்.
மா பெறும் தேடல்
காட்டுக்குப் போகும் ராமனைப் பார்த்து பசுக்கள் அழுதனவாம். அதன் கன்றுகள் அழுதனவாம். அன்று மலர்ந்த பூக்கள் அழுதனவாம். நீர்நிலையில் இருக்கும் பறவைகள் அழுதனவாம். கள் ஒழுகும் மரங்கள் அழுதனவாம். யானைகள் அழுதனவாம். போரில் பயன்படுத்தப்படும் தேர்களின் தேர்க்காலில் கட்டப்படும் குதிரைகள் அழுதனவாம்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் வாடிக்கையாளர் அணுகுமுறையும்
இணையத்தில் உள்ள தரவுகள் பொது என்ற பட்சத்தில், நெருக்கமான நுகர்வோரின் ஒவ்வொரு மின்னணு அசைவும் தன்னுடைய வியாபார மற்றும் பெரு மொழி மாதிரிக்கு தீனியாக மாற்றி, அதை மேலும் மெருகேற்ற வேண்டும். இதையும் நுகர்வோரை அழுத்திப் பெறக் கூடாது. நுகர்வோரின் பயன்பாட்டு வசீகரத்தில், அவரையும் அறியாமல் இந்தப் பணி நிறைவேற வேண்டும்.
பாட்டுத் தொழிற்சாலை
வறுமையில் இறந்த அமெரிக்க பாப் இசையின் தந்தை ஃபாஸ்டரின் கதையை நாம் இதற்கு முன் பார்த்தோம். அவரது புகழ்பெற்ற “ஓ சுஸானா” மின்ஸ்ட்ரல் இசை நிகழ்ச்சிக்கு என்று எழுதப்பட்ட பாடல்தான். பின்னாட்களில் ஃபாஸ்டர் தனது மின்ஸ்ட்ரல் வகைப் பாடல்களைக் கைவிட்டார் என்றும், ஹாரியட் பீச்சர் ஸ்டோ எழுதிய, “அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலும் அவர் மனமாற்றத்திற்கு ஒரு காரணம் என்றும் , பின்னாளில் கறுப்பின மக்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் வகையில் அவர் எழுதிய பாடலை பிரெட்ரிக் டக்ளஸ் என்ற அடிமை முறைக்கு எதிரான செயற்பாட்டாளர் பாராட்டினார் என்றெல்லாம் குறிப்புகள் சொல்கின்றன. இது இந்த அத்தியாயத்தின் அடிக்குறிப்பல்ல. அமெரிக்கப் பாப் இசை வரலாற்றின் அடிநாதம். டின் பான் ஆலி இசையமைப்பாளர்களைச் சுரண்டியது என்று கருதினால், அது கறுப்பினக் கலைஞர்களைக் கடுமையாகச் சுரண்டியது என்று சொல்லலாம்.
அமெரிக்க எல்லையில் சோதனைக்குள்ளாகும் டிஜிட்டல் வாழ்க்கை
டூனிக் ஒரு சாதாரண பயணி அல்ல. அவர் அட்லாண்டாவின் “Stop Cop City” இயக்கத்துடன் தொடர்புடைய போராளி. அவரது போராட்ட குணம், அரசியல் நடவடிக்கைகளே அதிகாரிகளின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அவருடைய கைபேசியை கைப்பற்றுவதைத் தடுக்க அதன் தகவல்களை அழித்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க அதிகாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது எல்லை பாதுகாப்புத்துறை
சிலிகானிலிருந்து ந்யூரானுக்கு
சிலிகான் சில்லுகளுடன் நரம்பணுக்களை இணைத்து, ஒரு கலப்பின கணினியை உருவாக்கும் நுட்பம். மனித மூளையின் உயிருள்ள செல்களையும், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் உயிருருக்களையும் மின்முனைகளுடன் இணைத்தால், தரவுகள், தகவல்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான கணக்கீடுகள் செய்து விளைவைச் சொல்கிறது. கார்டிகல் ஆய்வகம், உண்மையான நரம்பணுக்களை சிலிகான் சில்லுகளில் பயிர் செய்கிறது. பின்னர் தூண்டப்படும் சூழலை அமைத்து, அவைகள் தத்தமக்குள் உரையாட அல்லது வினையாற்ற வழி கிடைக்கிறது. நரம்பணுக்கள் நரம்புச்சந்திகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன.
துளிமக் கருந்துளைகள்
துளிம ஈர்ப்பியலை கணக்கில் கொண்டால், இந்த ஊகம் பிழையானது. துளிம விலக்கம் – அண்டத்தை பெருவெடிப்பில் எகிற வைத்த அதே விலக்கம் – என ஒன்று இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு என்னவென்றால், விழுந்து கொண்டிருக்கும் பொருள் மையத்தை நெருங்குகையில் துளிம அழுத்தம் காரணமாக வேகம் குறைந்து அதே சமயம் அதீதமான ஆனால் எல்லைக்குட்பட்ட அடர்த்தியுடன் இருக்கும். பொருள் நசுங்கும் ஆனால் எல்லையற்று நசுங்கிக் கொண்டே இருக்காது – ஏனெனில் எவ்வளவு சிறியதாக ஒரு பொருள் இருக்கலாம் என்பதற்கும் எல்லை உண்டு. நொறுங்கும் அண்டம் விரியும் அண்டமாக எகிறி வெளிவருவது போன்று, பொருள் எகிறிக் குதிக்குமாறு ஒரு பெரும் அழுத்தத்தை துளிம ஈர்ப்பியல் பிறகு உண்டாக்கும்.
கூட்டாட்சி தகுதிபெற்ற சுகாதார மையங்கள் (FQHC)
1960-களில் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் “வறுமைக்கு எதிரான போர்” (War on Poverty) திட்டத்தின் கீழ் முதன்முதலில் ‘சமூக சுகாதார மையங்கள்’ (Community Health Centers) உருவாக்கப்பட்டன. மருத்துவ வசதி குறைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஆட்டம்
அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.
குறத்தி முடுக்கு: ஒரு பார்வையின் பயணம்
விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.
உமிழ்
ஒரே ஒரு நொடி, இருளடர்ந்த அந்த மதுக்கூடத்தின் மண் தரையில் தலைகுப்புற நான் விழுந்து கிடப்பதைப்போல் ஒரு காட்சி கண்முன் விரிந்தது. நிகழும் கணத்திலேயே அதனை பிரமை என்று உள்ளம் உணர்ந்தும் இருந்தது. இரண்டொரு நொடிகளில் அக்காட்சியின் மூலம் எது என்பதையும் நினைவுகூர்ந்திருந்தேன். சமீபத்தில் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா என்று அந்த இயக்குனர் எழுப்பிய வினாவிற்கு, எழுத்தாக எதுவுமில்லை எனவும் ஆனால் மனதினுள் கருக்களாக சில கதைகள் இருக்கின்றன என்றும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் எனக்கு நெருக்கமானதை விவரித்துச் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டதும் நான் சொல்லத் துவங்கிய கதையின் முதல் காட்சி அது.
அமெரிக்க பாப் இசையின் தந்தை
ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. அது நினைவுகளில் இருந்து பாடப்பட்டது. எழுதி வைக்கப்பட்டவை அல்ல. ஒருவர் கடைக்குச் சென்று நாட்டுப்புற இசையின் இசைக் குறிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்றாட நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, குடியேற்றத்தால் உருவாகி இருந்த ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக ஒரு நாட்டுப்புற இசை இருக்க முடியாது.
நானெனும் நான் (சிலந்தீ)
என் கூந்தலிழையின்
நுனிப்பற்றி சுருட்டி
இழுத்து நாணாக்குகிறாய்
என் ஓடா குருதியின் கரையிலமர்ந்து
கூடா வார்த்தைகளின்
பண் இசைக்கிறாய்..
அத்தியாயம் 9: பிளாட்பார்மில் முடிதிருத்தும் சலூன்?
அந்தப் பிளாட்பார்ம் ஒரு விசித்திரமான பொருளாதாரச் சூழலையும் உருவாக்கியிருந்தது. அங்கே இலவச உணவு, துணி துவைக்கும் வசதி, குளிர்பானங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டதால், ஜூஹு ஹெலிபேஸிலிருந்து ஹெலிகாப்டரில் ஏறும்போதே நாங்கள் எங்கள் பணப்பைகளை (wallets) பைக்குள் பத்திரமாக வைத்துவிடுவோம். பிளாட்பார்மில் இருக்கும்போது பணத்தைச் செலவழிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், அதில் ஒரு சுவாரசியமான விதிவிலக்கு இருந்தது. அக்காலத்தில் இந்தியா பல துறைகளில் சுயாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றி, இறக்குமதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்திருந்தது. நாங்கள் சர்வதேசக் கடல் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால், பிளாட்பார்மிற்கு வரும் பிற வெளிநாட்டுப் படகுகளோ அல்லது கப்பல்களோ சில வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து அங்கே விற்பனை செய்ய முடியும்
ஆழி மனங்கள்
“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள். “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்.
புத்தியில் நிலைத்தவன்
“எவன் ஒருவன் உடலும் மனமும் இயங்கும்போது அந்தச் செயல்களுக்குள் செயலற்ற தன்மையையும், செயலற்று வெறுமனே அமர்ந்திருக்கும் போதும் அந்த நிலையில் செயலையும் காண்பானோ, அவனே மனிதர்களுக்குள் உண்மையான புத்திமான். அவனே யோகி. அவனே தன் அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்த நிறைவு பெற்றவன் ஆவான்.” என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.
ரொட்டி சுட்டதடா…
முதலில்லெல்லாம் எனக்கு ப்ரெட்டைக் கண்டாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாத பொழுது உண்ணும் பண்டம் என்பது என் மனத்தில் பதிந்து விட்டதாலோ என்னவோ ரொட்டியைக் கண்டாலே ஒருவித ஆயாசம் ஏற்படும். அதிலும் அதை பாலில் முக்கி சொதசொதவெனச் செய்து தருவார்கள். இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது. இதையே தோசைக்கல்லில் கொஞ்சம் நெய் “ரொட்டி சுட்டதடா…”
தேசிய நெடுஞ்சாலை I-94 கிழக்கு
வாகனத்தில் உள்ளே
அதிசயிக்க தக்கது என எதுவுமில்லை
தன் நோக்கத்தை நேர்த்தியாய் நிறைவேற்றும்
இயந்திரத்தின் மெல்லிய உறுமல்.
சக்கரங்களின் சீரான இசை.
திரும்பும் பயணம்
நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
றெக்கை- அத்தியாயம் 27
அல்பிக்கு வந்திருக்கும் ஷயரோகம் குழந்தைகளை பற்றிப் படராமல் முன் ஜாக்கிரதையோடு குழந்தைகள் விசியையும் கிட்டாவையும் அவுட் ஹவுஸில் முத்தச்சன் தம்பதியோடு தற்காலிகமாக தங்க வைத்திருக்கிறாள். லெவி வேறு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒரு நாள் விடாமல் டிஸ்பென்சரியில் தனித்திருக்கும் நிர்மலாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுக்க வந்து விடுகிறான். கையெழுத்து போட்ட கை சும்மா இருக்குமா என்ன.
