ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா?

25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.  நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய  துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும்  வாசிக்கவேயில்லை.

கொகெய்னும் கிரேக்கும்

துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம். கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும்  ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,

ரேபிஸ் தொடர்ச்சி

ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய்களில் இருவகையான நோய் அறிகுறிகள் உண்டாகும்  furious எனப்படும் வகையில்  நாய்களுக்கு வெறிபிடித்திருக்கும்.  அரிதாக  dump எனப்படும் வகையில் ரேபிஸ் தொற்று உண்டான நாய்கள் மிக அமைதியாக உணவின்றி ஒரே இடத்தில் படுத்திருக்கும்.  பெரும்பாலும் சிறுகுட்டிகளே இவ்வகையில் அதிகம் பாதிப்படைகின்றன.

ரேபிஸ்

லூயி பாஸ்டர் வெறிநாய் கடித்த சமயத்துக்கும் ரேபிஸ் நோய் உருவாகும் சமயத்துக்கும் இடைப்பட்ட தேக்க நிலையை  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக சிகிச்சைக்கு பயன்படுத்தினார். ரேபிஸ் தடுப்பூசி லூயிபாஸ்டர் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசி முன்பே அவர் Pig Erysipelas என்னும் பறவை/பன்றிகாய்ச்சலுக்கும், ஆந்தராக்ஸ் மற்றும் பறவை காலராவுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்திருந்தார்.

அரிசியில் ஆர்சனிக்

 கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்  6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல்  நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. “அரிசியில் ஆர்சனிக்”

துகளியல்

மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது  மருந்துகளில் கலப்படங்களை கண்டுபிடிக்க,  அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்த தாவர துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கஞ்சா

இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச செய்திகளில் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவரொருவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தாக கைதுசெய்யபட்டது பேசுபொருளாக இருந்து. போதையூட்டும் தாவரங்கள் குறித்த ஆய்வில் இருப்பதால் நான் அதுகுறித்து மேலும் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் சிங்கப்பூரில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மிகக் கடும் தண்டனைகள் வழங்கப்படும். இந்த மாணவனுக்கு “கஞ்சா”

லாவண்டர்

லாவண்டர் தீக்காயங்களை ஆற்றும், நல்ல உறக்கம் வரவழைக்கும் படபடப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல அமைதியை அளிக்கும். தசை பிடிப்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கும் லாவண்டர் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். லாவண்டர் உண்ணத்தக்கதும் கூட

சீஸ்

மேலும் சீஸ் உருவாகும் போது இருக்கும் பாக்டீரியாக்கள் அவை பழமையாகும்போது  இருப்பதில்லை. இந்த பாக்டீரியாக்களின் உடலிலிருக்கு ம்நொதிகள்  சீஸில் கலந்து பழமையாக்குதலின்போது பிரத்யேக நறுமணத்தை உண்டாக்குகின்றன. எனவேதான் பலவகைப்பட்ட பாலிலிருந்து தயாராகும் சீஸ்கள் பலநூறு வகை நறுமணங்களும் சுவையும்  கொண்டிருக்கிறது

 மரியா சிபில்லா!

1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.

 குரு

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

உயரும் : சுரேஷ் பிரதீப்

This entry is part 60 of 72 in the series நூறு நூல்கள்

திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள்  தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு

குட்ஸூ

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

பெயோட்டி

சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர்… அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள். அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது

பப்பைரஸ்

ஆனால் கிமு  3ம் நூற்றாண்டில் கிளியோபாட்ராவின் முன்னோடிகளான எகிப்தின் மன்னர்கள்,  உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதுவரை எழுதப்பட்ட ஒவ்வொரு நூலையும் கண்டுபிடித்து மொழிமாற்றுவது, வாங்குவது  அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றபோது,  திருடுவதை கூட செய்தார்கள். இந்த பட்டியலில்  எஸ்கிலாஸ், சோபோகிளிஸ் மற்றும் யூரிபிடிஸ் ஆகியோர் இருந்தனர்.

கனி மரம்

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,

சர்க்கரை பூஞ்சை

எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை  பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான ஒய்னும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. 

டைபாய்டு மேரி

அச்சமயத்தில் டைபாய்டு இறப்புக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று வியாதிகளை உடனே ஆராயும் சிறப்பு அதிகாரிகள் இந்த  ஆயிஸ்டர் பே நோய்த் தொற்று விஷயத்தை  கையிலெடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்கள். எனினும் என்ன காரணத்தினால் தொடர்ந்து 7 பேருக்கு தீவிர டைபாய்டு தொற்று உருவானது என்று கண்டறிய முடியவில்லை. பல பக்கம் தட்டச்சிடப்பட்ட அறிக்கைகள் இந்த மர்ம நோய்த் தொற்றை குறித்து வெளியிடப்பட்டன எனினும்  காரணமென்று எதையும் அவர்களால் குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை

மேடை உரை அனுபவங்கள்

கடந்த ஜனவரியில் சென்னை இலக்கிய விழாவில்  என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். 1 மணிநேர உரை அதுவும்  ’’இயற்கையை அறிதல்’’ என்னும் மிக முக்கியமான தலைப்பு , இலக்கிய விழாவில் இப்படியான துறை சார்ந்த  தமிழ் உரைகளுக்கான வாய்ப்புக்கள் அரிதினும் அரிதாகவே கிடைக்கும் என்பதால் நான் வழக்கத்தை காட்டிலும் சிறப்பான தயாரிப்புகளோடு எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 11 மணி நேரம் ரயிலில் பயணித்து சென்னை சென்றிறங்கினேன். மறுநாள்  காலை 10 மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9 30க்கு என்னை அழைத்து மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் உரையாற்ற  ஒத்துக்கொண்டிருப்பதால் அரைமணி நேரத்தில் என் உரையை முடித்துக்கொள்ளும்படி  அறிவுறுத்தினார்கள்

அகார் அகார்

அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை. அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.  ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.

லண்டானா கமாரா

லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.

ஊனுண்ணித் தாவரம் – வீனஸ்

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

கடுகு

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

ரிஸின்

மார்கோவின் படுகொலையை இப்போது நினைக்கையில் , அக்கால அரசியல் காழ்ப்புக்கள் அப்படி நஞ்சூட்டப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் , ஆனால் அப்போதும் இப்போதும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடில்லை என்பது 2020ல் ருஷ்ய எதிர்கட்சி தலைவரும், ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளருமான அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)க்கு நடந்த நஞ்சூட்டி கொல்லும் முயற்சியை அறிந்து கொண்டால் தெரியவரும். ரிஸின் கொண்டிருக்கும் ஆமணக்கு எண்ணெய் , உணவுப்பொருட்களில் சிறு அளவில் இவ்விதைகள் சேர்க்கப்படுவது ஆகியவை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்

மிஸல்டோ – முத்தச் சிறுகிளை

பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும்  நிகழ்வுதான்.அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.

பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள்

அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில்  200 கிமு – கிபி 700  காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி  செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி  15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து. 

டாக்டரும், முனைவரும்

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

மைதா

கேடுவிளைவிக்கும் உணவுகள் என்று இணையத்தில் தேடினால் வரும் 10 உணவுகளில் பெரும்பாலும் முதலிரண்டு இடங்களில், மைதா, பரோட்டா இரண்டும் இருக்கும்
ஆனால் மைதா உடலுக்கு கேடுதருவது என்பதற்கு அடிப்படையாக எந்த அறிவியல் ஆதாரங்களும் காட்டப்பட்டதில்லை. இது குறித்த முறையான ஆய்வுகளும் செய்யப்பட்டதில்லை.

பாப்பாத்தி என்னும் பரமேஸ்வரி

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.

சந்தனம்

சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால்  செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி  வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய்   எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப்  பயன்படுகிறது

புல்லரிசிப் பூஞ்சை

1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து  விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்

ஸாகே!

ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று  ஒவ்வொரு வருடமும்  ஒரு இளம்பெண்ணை  விழுங்க வரும், எட்டாவது வருடம்  அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான  சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர்  அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில்  கடும் ஸாகே  மதுவை  நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம்  கொண்டிருந்த  மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள்   நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று

காய்ச்சல் மரம் (சிங்கோனா)

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

யூகலிப்டஸ்

இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை  ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட  ’யூகலிப்டஸ்’  மிக அழகிய   காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு  இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்.

இகபானா மலர்களின் வழி

உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.

காஃபி

அந்த காஃபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான்  கொண்டு வந்தது காஃபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி  பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காஃபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது

ஆரோக்கிய பச்சை

கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை  எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்

ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாகப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வெட்டிவேர்

வெட்டிவேர் ஆசியாவை தாயகமாக கொண்டது. வெட்டிவேரின் வட இந்திய, தென்னிந்திய என்னும் இரு வகைகளில் வட இந்திய வகைகள் வழக்கம் போல் மலர்ந்து கொண்டிருக்கின்றன. 
கோடைகாலத்தில்  தென்னிந்தியாவெங்கும் உலை போல் கொதிக்கும் காலநிலையில் இருந்து மக்களை காப்பாற்றி குளிர்விக்க வெட்டிவேர் மற்றும் நனனாரி சர்பத்துகளும், தர்பூசணியும், இளநீரும் எப்போதும் கிடைக்கும். வீடுகளில்  பானை தண்ணீரில் நன்னாரி அல்லது வெட்டிவேர் போட்டு வைத்து நல்ல வாசனையும் குளிர்ச்சியுமாக நஅருந்தப்படும்.. வெட்டிவேர் தட்டிகளில் நீர் தெளித்த இயற்கை குளிரூட்டிகளும் பரவலாக புழக்கத்தில் இருக்கின்றன.  

கடலைப் பயிரும் கார்வரும்

கார்வர் முதன்முறையாக அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும்.
கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைப்பயறு சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.

பெருங்காயம்

 சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.  உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

மலர்ப் பித்து

வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும்  தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன.  1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.

வலி

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

சிக்கரி

காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது, காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும் புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

சோயாவும் டோஃபுவும்!

சோயா பால், சுத்தமாக்கப்பட்டு ஊறவைத்த சோயா விதைகளை அரைத்த விழுதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விழுது சூடாக்கப்பட்டு சோயாவின் கடும் நெடிக்கு காரணமான lipoxidase என்ஸைம்கள் நீக்கப்படும். பின்னர் வடிகட்டுதல் மூலம் கசடுகள் நீக்கப்பட்ட சோயா விழுதில் சர்க்கரை மற்றும் நீர் கலக்கப்பட்டு, அதன் நறுமணமும் நுண் சத்துக்களின் அளவும் மேம்படுத்தப்படும். பின்னர் இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கொழுப்புக் கட்டிகளை அரைத்து, கலக்கி, மிருதுவாக்கப்பட்ட பால் சந்தை படுத்தப்படுகின்றது…. விலங்குப்பாலுடன் ஒப்பிடுகையில் சோயாபாலில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் அதே அளவில் இருந்தாலும் பிற முக்கியமான நுண் சத்துக்கள் மிக குறைவாக இருப்பதால் அவை தயாரிப்பின் போது சேர்க்கப்படுகின்றன.

புகையும் , புகை சார்ந்தவைகளும்

கடந்த  வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள்  சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை. 

லினன்

ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும் தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு நிலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கிறது….பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.

நூடுல்ஸ் நூடுல்ஸ்!

லக்னோவில் ’மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கப்பட்டு இருக்கவில்லை’ என்று அறிவிக்கும் உறையுடன் இருந்த மேகி நூடுல்ஸின் ஆய்வக சோதனைகள் மோனோ சோடியம் குளுடமேட்டை கண்டறிந்தபோது முதல் அதிர்ச்சியும், ஆயிரம் மடங்கு அதிகமாக காரீயம் இருக்கிறது என்றபோது அடுத்த அதிர்ச்சியும் நாடு முழுவதும் உண்டானது.
நெஸ்லே அப்போது பிரச்சனையின் தீவிரத்தை முழுதாக அறிந்து கொண்டிருக்கவில்லை. விற்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தீர்ப்பை நெஸ்லே அலட்சியமாக எடுத்துக் கொண்டு, மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு  3 வாரங்கள் அமைதியாக இருந்தது.

சோள பாப்பியும் ஓபியம் பாப்பியும்

இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இந்த செடியில் இளஞ்சிவப்பு தீற்றல்களுடன் வெண்ணிற மலர்கள் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.