எனவே கிருஷ்ணரின் கூற்றுப்படி இருப்பது இரண்டே இரண்டு யோகங்கள்தாம். கர்மயோகம், மற்றும் ஞானயோகம். விளக்குவதற்கு வசதிக்காகவும், ஒரு குறிப்பிட்ட யோகம் எம்முறையில் பயிலப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவேதான் ராஜயோகம், பக்தியோகம், உபாசனாயோகம் என்ற பிரிவுகளும் பேசப்படுகின்றன. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூன்று யோகங்களையும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள் அடக்கி விடலாம்.
Tag: ஜெகதீஷ் குமார்
எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது. ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.
நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
மனம் அமைதியாக இருக்கும்போதும், புலன்கள் நமது கட்டுக்குள் இருக்கும்போதும்தான் மனம் தன்னைப் பற்றிய அறிவில் ஆழ்ந்திருக்க இயலும். எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகியிருக்கிற அந்த உணர்வை அனுபவிக்க இயலும். இந்த நிலையை அடைவதற்குத் திதிக்ஷா என்ற சகிப்புத் தன்மை மிக அவசியம். இந்தப் பண்பு இல்லையெனில் மனம் ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் அசைந்து எதிர்வினை அளிக்கத் துவங்கும்.
ஒருமையுள் ஆமைபோல்
எனவே வைராக்யம் என்பது உலகை நிராகரிப்பது அல்ல. உலகத்தினின்றும் ஓடிப்போவது அல்ல. எனக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அல்லது மகிழ்ச்சி தேவைப்படும்போது நான் அவற்றுக்காக உலகைச் சார்ந்திருக்காமல், நிலையான ஒன்றையே சார்ந்திருப்பேன் என்ற தெளிவுதான் பற்றின்மை என்று அழைக்கப்படுகின்றது.
தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
இந்த நான்கு தலைப்புகளில் விஷயம், பிரயோஜனம், சம்பந்தம் ஆகிய மூன்றும் வேதாந்த நூலைப் பற்றிய தலைப்புகளாகும். இந்த மூன்றையும் வேதாந்தம் தீர்மானிக்கிறது. இவற்றைத் தன்னுள் கொண்டிருப்பதாக ஒரு வேதாந்த மாணவனுக்கு உறுதியளிக்கிறது. அதிகாரி என்ற தலைப்பு மட்டும் மாணவனைச் சார்ந்தது. அதிகாரித்துவம் எனப்படுகின்ற வேதாந்தக் கல்வியை அடைவதற்கான தகுதிகளை அவன்தான் அடைந்திருக்க வேண்டும்.
வகையறச் சூழ்ந்தெழுதல்
அத்வைத வேதாந்தம் மற்றும் குமாரில பட்டரின் பட்ட மீமாம்சம் ஆகிய இரு தத்துவப்பள்ளிகள் மட்டுமே அனுபலப்திப் பிரமாணத்தை சுதந்திரமான ஓர் அறிதல் வழிமுறையாக ஏற்றுக் கொள்கின்றன. இந்த முறையில் பெறப்படும் அறிவில் சத்ரூபம் (நேர்மறை) மற்றும் அசத்ரூபம் (எதிர்மறை) இரண்டுமே சரியானதும், செல்லுபடியாகக் கூடுவதுமாகும் என்பது அவர்களது கணிப்பு. பிற பிரமாணங்கள் தோல்வியுறும் இடங்களில் அனுபலப்திப் பிரமாணத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களது வாதம்.
நுண்பொருள் காண்பது அறிவு
தன்னை அறிதல் எங்ஙனம்? நான் இருக்கிறேன் என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு புறக்கருவிகளின் உதவி அவசியமே இல்லை. நான் என்ற உணர்வு நம் எல்லோருக்குமே சுயமாக விளங்கி வருகிறது. “ஆத்மா ஸ்வதசித்தம்.” நம் யாருக்குமே நம்முடைய இருப்பு குறித்து எந்த விதமான ஐயமும் இல்லை. இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் எல்லோரும் நம்மைக் குறித்து ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்துள்ளோம்.
செயற்பாலது ஓரும் அறன்
மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும்.
ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்
பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும் இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”
தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்
எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.
வாசகர் கடிதம்
கதை காட்சிகளாகவே நகர்வது வாசகனை வெள்ளையம்மாளின் உலகத்துக்குள் பிரவேசிக்கச் செய்ய எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. நிறைய நுண் தகவல். அந்த வட்டாரத்துக்கே உரித்தான தகவல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன (குச்சிக் கிழங்கு விளைச்சல், மம்பட்டியும் காரைச்சட்டியும் கொண்டு செய்யும் சித்தாள் வேலை, புலியூர் கடவீதிக் காட்சிகள்). அவள் ஐஸ்கிரீமை சாப்பிடுவாளா? எப்படிச் சாப்பிடுவாள்? என்ற எளிமையான சுவாரசியத்தைத் தூண்டவும் கதை தவறவில்லை
மனசாட்சி ஒரு காட்டு விலங்கு
ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது.
கனடா! கனடா!
“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார்.
வாழ்க தலைவரே!
செவ்விந்தியர்களின் கசீனோவா? வடக்கு டகோடாவிலா? சரி. எத்தனை செனட்டர்கள்? பதிமூன்று? அவர்கள் நேற்றிரவு அங்கிருந்தார்களா? நீங்கள் சொல்வது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தானா? அவர் குடித்திருக்கவில்லைதானே? அப்படியா, குடித்திருந்தாரா? சரி, இப்போது தாமதமாகி விட்டது. நான் அதிபரை அழைத்துத் தெரிவிக்கிறேன்.”
சஹிதா: அணையா நெருப்பு
சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”
பேராசிரியரின் கிளி
நம் ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை அதீதமான தன்னம்பிக்கைக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தினால் செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முடிந்தபோதிலும், நோயாளிக்கு இதனால் உருவாகும் நிரந்தரமான வலியை நீக்குவதில் பல சிக்கல்களை நான் உணர்ந்திருந்தேன். அதனாலேயே அந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது.
கல்லளை
அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.
கர்மா
முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார்.
ஊனுடல்
ரிசார்ட்டிலிருந்து வெளியேறி, கடற்கரை மணலில் நடந்து குடிலை அடைவதற்குள், கடற்காற்று அவன் ஆடைகளுக்குள் புகுந்து குளிரேற்றி விட்டது. தீவுக்குள் அவன் முதலாளி கொடுத்த அறையில் தங்கியிருந்த போது இரவில் புழுங்கிக் காய்ந்தது. பகலில் மண்டை பிளக்கும் வெயிலில் அவன் செங்கல் அடுக்கி சிமெண்ட் பூச வேண்டும். இரவில் பத்து பேருடன் ஒற்றை அறையில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ரிசார்ட்டிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐனியும் இங்கு இருக்கிறாள். அவள் பணிபுரியும் இடத்தில் வேலை என்றால், அது மேகங்களில் உறங்குவது போலத்தான். அதற்கு என்ன வழி என்று அவளிடமே கேட்க வேண்டும்.
தேன் கூடுகளின் வீடு
என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த கரடுமுரடான புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருக்கிறேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுக்கிறேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டுமிருகங்களையுமே நான் வெறுக்கிறேன். பிசுபிசுப்பான தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுக்கிறேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை மனிதனிடம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
