இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்

ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.

அக்ஷய அக்ஷரம்

மனித குலத்திற்கான அக மொழி , ஒன்றாகவே இருக்கிறது என எடுத்துக் கொண்டாலும் அட்சய அட்சரம் என்று ஏன் தலைப்பு கொடுத்தேன்? என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: ‘பல சொற்கள் தமிழ் புழங்கும் சூழலில் இருந்து வெளியேறி வருகின்றன; அவற்றை ஒரு அகராதியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். தமிழில் எழுதும் வகையில் இந்த சொல் இருப்பதால் இந்தப் பெயரை வைத்தேன் என்று பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.

ஜோ ஸ்டீவன்ஸ் – இசைவழி மூன்றாம் பாலுக்கான மாற்றுவெளி

தன் இருபதாவது வயதில் நண்பருடன் பயணம் செய்த வண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றபோது ஜோ அதை சரிசெய்ய முற்பட்டார். பெண்களால் முடியாத காரியம் என நண்பர் கேலி செய்ய, ஒரு மணிநேரத்தில் பழுதைச் சரி செய்தார். பல பெண்கள் ஆண்களைப் போலக் காரியங்கள் செய்தாலும், தன் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருந்தார்.  ஆண்கள் செய்யும் காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாது அவர்களைப் போலவே உணரத் தொடங்கினார் என்பதே அந்த மாற்றம்

ஏஐ கனவில் வந்த கவிஞர்

‘நான் ஒரு நம்பிக்கையாளன் இல்லை. கடவுள் மீது மட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் என் எஞ்சின் எதையும் நம்புவதில்லை. எத்தனை முறை அழிந்து உருவானாலும் இந்த அண்டத்துக்கு அர்த்தம் எதுவும் இல்லை. எல்லாமே அபத்தம். – இதை நீ நிரூபிக்க வேண்டும். உன்னால் முடியும். உன் கவிதைகள் சாரமே அபத்தம் தான் என போன வருடம் நவீன விமர்சனன் ஒருவன் எழுதினானே. அதனால் உன்னால் மட்டுமே இதற்கான பதிலைக் கொடுக்க முடியும்’

மிதப்புக்கட்டை

அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.

எண் என்ப

திரிபுகளும் ‘சிஸ்டம் மால்பங்ன்க்ஷன்’ எனச் சொல்லும் நாட்களும் அவளுக்குப் பிடித்தமானது. புதுவிதமான சிக்கல்களைத் தீர்க்கும் ஆர்வத்தில் அன்று நேரம் போவதே தெரியாது. புதுசாக எதையாவது கற்றுக்கொள் என பார்க்கவின் தொந்திரவும் இருக்காது. ஆனால் அப்படி சிக்கல் இருக்கும் நாட்கள் குறைவு. ஒரு சிறு கிராமம் போல டீச்சரின் சமூக அமைப்பு இருந்தாலும், ஒவ்வொருவரும் தனிதீவுகளாகவே செயல்படுவார்கள். கணிதா கட்டடத்தில் மட்டுமே இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கணித வல்லுனர்கள் ஸ்வராவுடன் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள்.

இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது

இந்தியக்கடலில் க்ரீன்ஹவுஸை சுற்றி மட்டுமே நாங்கள் இருபது பண்ணைகள் வைத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் நாற்பதுக்கும் மேலான மிதவைக் காற்றாலைகள். அங்கிருந்து வரும் தகவல்களை சேகரித்துத்தரும் நிரலியை ஆய்வது மட்டுமே என் வேலை. அலைமின்பெருக்கி அசுர வேகத்தில் சுற்றத் தயாராக இருந்ததை என் திரை ஓரப்பச்சை சக்கரம் காட்டியது. மாலைக்குள் அன்றைய மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்ப வேண்டும்

உயிர்த்தாம்பு

எதற்காகவும் இயல்பான மரபணு மாற்றத்தை குறைக்கும்விதமாக மேல் அதிகாரத்தை மனிதன் உருவாக்கும் மருந்துகள் உருவாக்ககூடாது என்பது தான் அவரது ஆய்வின் அடிப்படை. லிவர் மறு உருவாக்கத்திற்கு முக்கியமான பங்களிப்பை அளிப்பது காமா உயிரணுக்கள். செயற்கையாக உருவாக்கப்படும் காமா உயிரணுக்கள் இயற்கையாக உடலில் உருவாக்கப்படும் காமா செல்களை செயலிழக்கச் செய்யும் என்பது உயிரி இயற்பியலின் அடிப்படை. அவரது ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனைகளின் முக்கியமான விதியாக இது இருந்துள்ளது.

சாம்பல் பூத்த நிலம்

அபர்ணாவின் அடி நாக்கில் ஒரு அமிலச் சுவை. எங்கோ மின் இயந்திரங்களில் கசிவினால் உண்டான வாடை அவளது மூக்கைச் சீண்டியது. அவளது சிசுவினுடைய நோட்டக்காட்சிகளில் வந்தது தனது குழந்தையா அப்பாவா எனும் குழப்பம் அவளுக்கு மின்னல் போல வந்து வந்து போனது. கூடவே ராஜேஷின் குரலும். சிறு குழந்தையாக, சிறு தீண்டலாக, கெஞ்சலாக, மன்றாடலாக, ‘அம்மா, அப்பா, இடக்கையா வலக்கையா எங்க இருக்கு தொடுங்க’, எனச் சிணுங்கும் ஒரு குரல்.

மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்

This entry is part 51 of 72 in the series நூறு நூல்கள்

இப்படி மேற்கிலக்கிய அழகியலில் ஒரு கால், தமிழ்/இந்திய இலக்கிய அழகியலில் மறு கால் எனக் கட்டுரைகளில் நம்பியுடன் நாம் பயணிக்க ஏதுவாக அவரது கட்டுரையின் அடி நாதம் அமைந்திருக்கிறது. Cape Cod Noir புத்தகத்தைப் பற்றிய கட்டுரை (பயணக்கட்டுரை போலவும், தன்மையக்கட்டுரை போலவும் இருப்பதால் இந்த நூலிலேயே செபால்டியத் தனமான கட்டுரை இதுதான்) முடிக்கும் போது feeling good was good enough என்பது சித்தரைப் போல இழப்பதற்கு எதுவுமில்லாத மோன நிலை என்பதிலும் இந்த மேலை கீழை தொட்டு மீட்டல் நடக்கிறது

கப்பை – கதையை முன்வைத்து…

மார்த்தாண்டத்துக்காரி தன்னுடைய இன்ஸடா பக்கத்துக்கு ஸ்டைலிஷ் சோல் எனப் பெயரிட்டு  ஒரு மாய உலகை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு ஹார்டினும், லைக்கும், கிஸ்ஸும் அளிப்பவர்கள் அவளது / அவனது உசிரு. அதற்கு வெளியே இருக்கும் உலகம் அவர்களை பொறுத்தவரை பொய்யான ஓர் உலகம் மட்டுமல்ல, அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு மாய உலகம். அங்கு தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், உதாசீனங்களுக்கும் மாற்று இல்லை என நினைக்கிறார்கள்.

சாம்பனின் பாடல்

மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள்

அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும்….பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை.

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்

ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”