க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்

தமிழில் க.நா.சுவின் இடம் என்ன? அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.

பொய்த்தேவு நாவலுக்கு க.நா.சு எழுதிய முன்னுரை

மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது.இந்த வினாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த்துவிடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.

க.நா.சுவின் இலக்கியச் செயல்பாடுகள்

மேற்கத்திய மனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு படைப்பாளி தமிழ் எழுத்தாளன் ஒருவரின் மனதில் இப்படி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு இப்படி ஒரு வாசகன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே ஸெல்மா லாகர்லாஃபும் இறந்து போய்விட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. க.நா.சு தன் அபிப்ராயத்தைத் தன்னுடன் எத்தனை பேர் சேர்ந்து சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது.

குட் பை, வி வி எஸ்

குழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.

தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்

காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.

க.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்

“நான் உன்னத உலகப் படைப்புகள் பற்றிய என் அறிவைக் கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் சொல்கிறேனே தவிர என் சொந்த விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொண்டு சொல்லவில்லை” என்பதுதான் க.நா.சுவின் பதிலாக இறுதி வரை இருந்தது. தமிழில் யார், யாருடைய எழுத்துகள் இலக்கியமில்லை என்பதுடன், எவர், எவர் இலக்கியம் படைக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதையும் தன் பணியாக இறுதிக் காலம் வரை செய்து வந்தார் அவர்.

குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்

குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

உலக இலக்கியம்

உலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’

வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.

தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’

‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது? தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன? காந்திய லட்சியம் எப்படிப்பட்டது? காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன? எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும்? இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.

‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்

பிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.

நிர்வாண நடிகன்

அசோகன் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன் நீ வெறும் நடிகன் அல்ல. மிகச் சிறந்த உண்மை நடிகன். அதிலும், மிகச்சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார். “ரேகாகூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டபின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார்.

பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்

இந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் வெகு நேர்த்தியாக இருப்பதோடு, பார்வையிழந்தவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தை “பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்”

DILLI – தில்லி

தில்லி (DILLI) என்ற இந்த விவரணப்படம், பிற மாநிலங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தில்லி பெருநகருக்குப் பிழைப்பு தேடி வரும் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. வெகுசிறப்பான ஒளிப்பதிவுடனும், நேர்த்தியான இசையுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் வெற்றி, விவரணப்படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் தேவையைச் சுட்டுவதாக இருக்கிறது.

க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்

பணத்தட்டுப்பாட்டின் காய்ச்சலில் வதங்கிய இருவரும், சி.சு.செல்லப்பாவும், மணிக்கொடி எழுத்தாளர்களும் எப்படி உயர் இலக்கியம் என்ற கனவின் குளுமையில் இளைப்பாறினார்கள் என்பதை இங்கு படிக்கலாம். காலணா, அரையணாவெல்லாம் இவர்களுக்கு அத்தனை முக்கிய விஷயங்களாக இருந்தது தெரிந்து இவர்கள் எதற்காக அத்தனை போராடி ‘இலக்கியம்’ படைத்தார்கள் என்பது குறித்து நமக்கு வியப்புதான் எழும். ஏனெனில் இவர்கள் படைத்த இலக்கியத்தை வாங்கிப் படிக்க அப்படி ஒரு சமூகமே அங்கு இல்லை.

மகரந்தம்

பாம்புகள் என்றால் நம்மில் பலருக்கு அதீதப் பயம். குரங்குகளுக்கும் பாம்புகளைக் கண்டால் பயம். மனிதர்களின் பாம்பு குறித்த பயம் குரங்குகளாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது என்று சில உளவியலாளர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதெல்லாம் ஏதோ ஹேஷ்யம் போலத்தான் தெரிகிறது. ஆனால் ஏன் நம்மிடம் சில குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்ததால் பயம் போய் விடுகிறதா என்ன?

விமரிசனத்தின் நோக்கம்

இலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.

சென்னைக்கு வந்தேன்

சென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.

சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.

பொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை

இன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.

இலக்கிய விமர்சனம்

கம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.

மூன்று சிறுகதாசிரியர்கள்

மூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.

கவிதைகள்

உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை

வாசகர் மறுவினை

சொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

க.நா.சு சிறப்பிதழ்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.

சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.

பொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்

பொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

பொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.

நிலை

அவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை”.

ஜெயந்தனின் தார்மீகக் கோபம்

அவருடைய சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது. மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டியவர்.

ராதேஷ்யாம்

வெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.