ஒரு மனிதர். அவரின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேச முப்பது செயல்முறை விளக்கங்கள். ஒருவரைப் பற்றி முப்பது பேர் பேசப் போகிறார்கள். திரும்பத் திரும்ப அரைத்த மாவையேதான் அரைத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. முப்பது பேரும் முப்பது விதமாக அவரை அலசி ஆராய்ந்தார்கள். ஒருவருக்குக் கூட அவர்கள் தலைப்பில் கொடுத்த நேரத்தில் பேசி முடிக்க முடியவில்லை. அவ்வளவு விஷயங்களைக் கொட்டித் தீர்த்தார்கள்.
Category: இசை
இசைப் பயணம் – சங்கீத யாத்திரை
ஆதிசங்கர பகவத்பாதரின் மாத்ருகா பஞ்சகத்தை அவர் அழகுற விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று! சகோதரிகள் பாடியதும் மிகமிக அருமை! திரௌபதி – கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நட்பு பற்றிய விளக்கங்களும் வெகு அருமை! ‘பாரோ கிருஷ்ணைய்ய’ எனும் அருமையான கனகதாசரின் பாடல் நட்பின் வெவ்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டியது. சகோதரிகள் இதனைப் பாடியவிதமும் கண்களில் ஈரம் கசிய வைத்தது.
தந்தையைப் போல் தனயன் – இசைப் பாரம்பரியம் பற்றி
ஸ்வாமிகளுக்கு அவர் தந்தையே ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது. ஸ்ரீ ராம ப்ரஹ்மம் ஸ்வாமிகளின் சிறு வயதிலிருந்தே அவருக்கு ராம நாமத்தின் ருசியை உணர வைத்து விட்டார் என்பது நமக்கு நன்றாக புலனாகிறது. ஸ்வாமிகள் இந்த உண்மையை தன்னுடைய முதல் கீர்த்தனத்திலேயே சூசகமாகவும் தெரிவித்துள்ளார்.
கரிசல் பூமியின் இசைத் தெய்வம் – விளாத்திகுளம் சுவாமிகள்
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச் சொல்கிறார்.
இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்
மொத்தத்தில் இந்தப் பாடலின் ரிதம், கடந்த காலத்தை இடத்தை உணர்த்தும் காட்சிப் படிமங்கள், ஒரு கவிதை மெட்டாய் மலரும்போது நிகழும் அற்புதம், இது உருவாக்கும் ஆதரவற்ற தனிமை, கையறு நிலை, சரணடைதல், சொல்லும் பொருளும் இயைந்து முயங்கியதில் கிறங்கிய இடங்கள், பாடிக்கொண்டே வரும்போது இசைக்கலைஞர் ஏற்படுத்தும் மெளனவெளி, ஏற்ற இறக்கங்கள், சிறியது பெரியதாகப் பாடுதல், சில இடங்களில் துரிதகதி மற்றும் குறுங்கமகங்கள் போன்றவை எல்லாமே ஒரு சரியான கலைச் சேர்மானத்தில் புதிய ஒன்றாக மாறியுள்ளது கவிதை.
தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!
அகந்தையை அழிக்க வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமையை அனைத்துப் பெரிய மகான்களிடமும் காண்கிறோம். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் சொல்கிறார்: அகந்தை என்பது கிழங்குபோல மானிடர்கள் உள்ளத்தில் வேரோடிக் கிடக்கிறதாம். இந்தனை அகழ்ந்து எடுத்துப் பிடுங்கிக் களைபவர்கள் உள்ளத்தில் மீனாட்சியம்மை விளக்காக ஒளி வீசுகிறாள் என்பார்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.
கருவியில் கிடைத்த சுநாதம்
வேதமூர்த்தி என்றதும் முதலில் மனத்தில் எழுவது அவர் கருவியில் கிடைத்த சுநாதம். ஸ்ருதி பத்திரிக்கையில் தொடர்ந்து கலைஞர்களைப் பற்றி எழுதிய சங்கரநாராயணன் ஒருமுறை சொன்னார், “பகவான் எதுக்கு ரெண்டு காதைக் கொடுத்திருக்கான் தெரியுமா? ஒரு காதுல காருகுறிச்சி அருணாசலத்தோட நாதத்தை நிரப்பிக்கணும். இன்னொரு காதுல வேதாரண்யம் வேதமூர்த்தியோட நாதத்தை நிரப்பிக்கணும்.”. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை, பாடகரின் குரல்வளம் போல, இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு.
ஆடும் சுருண்ட கேசக்குழல்கள்!
முனிவர் இராமனின் நிலையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது அந்தப் பரப்பிரம்மத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இராமனுக்கும் கூடத் தெரியுமோ என்னவோ! ஆக, அப்படியொரு நிலையைத் தனது மனக்கண்ணில் காண்கிறார் தியாகராஜர். ஏனென்றால் அவர் தனது ஒவ்வொரு சுவாசத்திலும் இராமனையே சுவாசிப்பவர். காண்பதெல்லாம் இராமன். அவனுடைய சரித்திரத்தின் ஒவ்வொரு நொடியும் நிகழ்வும் இவருடைய அதீதமான கற்பனையின் உச்சம்தான்.
சொர்க்கத்திலிருந்து ஒரு குரல்
அவருடைய கச்சேரி அமைக்கப்படும் விதம் எல்லோரையும் கவர்வது. கச்சேரிக்கு முன்னால் கச்சேரி நடைபெறப் போகும் சூழலைக் கருத்தில் கொண்டு பாடல் தேர்வு செய்யப் படுகிறது. பாடலுக்கேற்ப பேஹாக், கமாஜ், காபி, மேக், யமன் போன்ற ராகங்களில் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுப்பார். அந்த பாடலின் உணர்வுக்கு ஏற்ப ஒப்புமையுடைய மற்ற கவிதைகளின் வரிகளையும் சேர்த்துக் கொண்டு பாடும் தன்மையால் கேட்பவர் உணர்வை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல அதுவும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை
கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.
வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்
பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
இந்திய இசை – ஆனந்த குமாரசுவாமி
பாடலின் வரிகள் எந்தக்காலத்தில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் ஆசிரியரிடமிருந்து வாய்மொழியாக மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அந்த இசைக்கருக்கள் தொன்மையானவை. மற்ற கலைகளையும் வாழ்வையும் போலவே இசையிலும் இந்தியா ஓர் அற்புதமான காட்சி அனுபவத்தை, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் தொல்பழங்காலத்தின் உணர்வுகளுடனும், மிகுஉற்பத்திச்செயல்பாடுகளில் மூழ்கியிருப்பவர்களும் போட்டியை அடிப்படையாகக்கொண்ட சமூகஅடுக்குகளின் பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் அச்சமுற்றமவர்களுமான நமக்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய உணர்வுபூர்வமான அனுபவங்களின் வீச்சுடனும் வழங்குகிறது.
உஸ்தாத் பிஸ்மில்லா கான்
பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, “கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?” என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.
ஆறு தாரகைகள்
படு நிதானமாக, யானையின் சாவகாச நடைபோலத் தொடங்கிய வாசிப்பு, துள்ளிப் பாயும் மான் போலவும், அதைத் துரத்தும் வேட்டைநாய் போலவும் வேகமெடுத்து நாலுகால்ப் பாய்ச்சலில் முன்னேறியபோது, யாருக்கு யார் பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்ற குழப்பம் மையத்தில் அமர்ந்து அபாரமாக ஸாரங்கி வாசித்த மிஸ்.ரிஹானாவுக்கே ஏற்பட்டிருக்கும். அமர்த்தலான தலையசைப்பும், வசீகரமான சிரிப்புமாக அவனைத் தாண்டித்தாண்டி மேலேறினார்.
இசைக்கும் புத்தகம்
காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்
அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி
தனி வாத்தியத்தில் மட்டுமே தங்களை அர்ப்பணிப்பவர்கள், அந்தக் கருவியில் புதுமையான ஆழத்தை அடைந்து, இசையை உச்சத்தில் கொண்டு செல்வதற்கான திறனைக் கொண்டவர்கள். மேலும் நுணுக்கமாக பார்த்தால், ஒவ்வொரு வாத்தியக் கருவியிலும் பல்வேறு சங்கீத பரிமாணங்கள் மறைந்திருக்கின்றன. எந்த வாத்திய கருவியிலும் இன்னும் முழுமையாக மீட்டபடாத இசை, அறியாத இசைப் பரிமாணங்கள் உள்ளது, அதைப் புதியதாக உருவாக்கும் திறன் இருக்கின்றது
நடமிடும் விரல்கள்
‘கோபாலி மேடைக்கு வருவது தெரியும், உட்கார்ந்திருப்பது தெரியும், உட்காருவது தெரியாது, மைனா கிளையில் அமர்வதைப் போல’ என்று மரப்பசுவில் தி ஜா எழுதியிருப்பார். ராக ஆலாபனையின் போது அவரது கவனம் முழுக்க ஸ்ருதியில் இருக்கும்; சின்னச் செல்லத் தட்டலுடன் ஒற்றை ஓசை வரும். பிறகென்ன, கலைஞருக்கும் இவருக்குமான கொடுக்கல் வாங்கலில் மொத்தப் பரிசும் ரசிகருக்கே. இரு கைகளின் விரல்கள், விரிந்தும், குவிந்தும் வரும் பாங்கில் மொழியின் ஒலி கேட்கும்
நீலாம்பரி ராகம் உனக்காகவே நீலா
கச்சேரியின் நடுவில், எம்எஸ் அம்மா “தொல்லுயி…” என்று தொடங்கும் அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். எனது நண்பன் “ஆஹா நீலாம்பரி ராகம், சபாஷ்” என்று உற்சாகமானான். “மாதவ மாமனு” கேட்டிருக்கியோ என்றவன், என்னை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் தொடங்கிய ராக ஆலோபனையில் தன்னை மறந்து விட்டான். நான் அருகில் நடைபெறும் கிசுகிசுக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
எல். சுப்பிரமணியத்தின் ராக ஹார்மனி கருத்து எவ்வாறு உலகளாவிய இசைக் கலவையை உருவாக்க உதவும்?
மேற்கத்திய இசைக்கு ஒத்த சுருதியான ஏற்றங்களை மாற்றி மேம்படுத்த விரும்பும் இசைக்கலைஞர்கள் ஒத்திசைவாகக் கட்டப்பட்ட ராகத்தை புரிந்து கொண்டால் அவ்வாறு செய்யலாம். மேற்கத்திய இசை ஒன்றிப்பும் கோட்பாட்டையும் நன்கு அறிந்தவர்களுக்கு இந்த அமைப்பு மேலும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கத்திய பாரம்பரிய நல்லிணக்கம் அதன் வரலாறு முழுவதும் மாற்றங்களையும் புதுமைகளையும் கண்டுள்ளது.
தாவிதின் திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள்
பல காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாக சங்கீதங்கள் புத்தகம் அமைந்துள்ளது. ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட150 பாடல்களைக் கொண்டது சங்கீதங்கள் புத்தகம். இப்பாடல்கள் யூதர்களின் சடங்குகளில் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் இவை நீண்ட காலங்களாக புழக்கத்தில் இருந்தன.
நல்ல இசையின் அடையாளமான இரண்டு எழுத்துக்கள்
எச்.எம்.வி நிறுவனமே ஆச்சரியம் அடையும் வண்ணம் பிளேட்டுகள் விற்றுத்தீர்ந்தன. முதல் பாடலின் அடைமொழியோடு “எவரிமாடஎம்.எஸ்.” பெயரில் மேலும் சில இசைத்தட்டுகள் வெளி வருகின்றன. தமிழகத்தின் பல நகரங்களில் கச்சேரிக்கு அழைக்கப்படுகிறார். இந்த தனிக் கச்சேரிகள் “கிராமபோன்பிளேட்புகழ்”, எம்.எஸ் சுப்புலட்சுமியின் கச்சேரி என்றும் அறிவிக்கப்பட்டன. 2004ல்தான் அன்னையின் பெயரையும் தந்தையின் பெயரைப்போல முன்னெழுத்தாகப் போட்டுக்கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது
துவாரம் மங்கத்தாயாரு
வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது. (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது
அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்
நமது முதல் கேள்வி, புதியதாக இராகம் கண்டு பிடிப்பது அவசியமா? ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ராகங்கள் உள்ளன. அவற்றை கண்டு பிடிப்பதற்கே ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது இது எதற்கு என்ற கேள்வி எழலாம். இதற்கு கண்ணதாசன் “ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும், வெறும் இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்” என்று பதில் அளித்து இருக்கிறார். இந்த பாடல், “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்”, இடம் பெற்ற படம் ” அபூர்வ ராகம்”. அந்த திரை படத்திலேயே இன்னொரு பாடல் (அதிசய ராகம், ஆனந்த ராகம்) வழியாக நம் கேள்விக்கு விடையும் அளித்து இருக்கிறார்கள் MSV மற்றும் Dr பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். அந்த திரைபாடப் பாடலின் துவக்க ராகம் “மஹதி”.
தமிழ்ப் பண்பாட்டின் குரல்
வழக்கம் போல பழைய பாடல் தேடலில் மாட்டியது இந்தப் பாடல். படம்: நான் பெற்ற செல்வம் (1956) இசை: ஜி.ராமநாதன். குரலாலேயே விரட்டி விளையாடும் டி.எம்.எஸ், ஜிக்கி. நடுத்தர குடும்பத்தை கண்முன்னே காட்டும் சிவாஜி, ஜி.வரலக்ஷ்மி. தொப்பையில்லாத, தன் ஒவ்வொரு அசைவிலும் ‘நடிகர் திலகம்’ என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயங்கள் இல்லாத சிவாஜி. இந்தப்பாடலில் இவரின் உடல்மொழிகள் கூட ஆரம்ப காலக் கமல் படங்களில் நாம் கண்டவையே. எழுபதுகளின் இறுதியில் இலங்கை வானொலியில் ஜிக்கி, ஏ எம் ராஜா பாடல்கள் தவிர நேரமிருந்தால் மற்ற பாடல்களும் போடுவார்கள் என்றிருந்த காலத்தில் ஏதோ ஒரு ஓய்ந்த மதிய வேளையில் கேட்ட பாடல். காலத்தை வென்ற இசை மனதை நிறைக்கிறது.
மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்
வெறும் மேலதிக கொண்டாட்டங்களுக்கான இசையை கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு. சங்கீதம் வாயிலை திறந்து வைத்துக்கொண்டு அரவைணைக்க தயாராக இருக்கும் தருணத்தில் விலகிவிட்டிருக்கிறேன். நமது நம்பிக்கையில் சில தத்தளிப்புகளை உருவாக்குகிறது. பழகிய சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கிறது. கற்பனையின் எல்லை என்று நீ வகுத்தது அடிப்படை தவறு . மேலும் விஸ்தரி என்ற அறைகூவல்.
மன்னார்குடி சாவித்ரி அம்மாள்
மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.
அளவுமீறா அமுதப் பெருக்கு
கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.
காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …
உசைனி
“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.
எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்
ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்?
வெண்முரசு பிள்ளைத்தமிழ்
”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…
கல்கோனாக்கள் கரைவதில்லை
‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் “கல்கோனாக்கள் கரைவதில்லை”
நீர் தான் ரசிக சிகாமணி!
பொதுவாக சிட்டை ஸ்வரங்கள் அனுபல்லவிக்கு பிறகும், சரணத்திற்கு பிறகும் பாடப்படும். ஆனால் இந்த கீர்த்தனத்தில் சரணத்திற்கு பிறகே பாட வேண்டும் என்று சுப்பராம தீக்ஷிதர் தன்னுடைய புத்தகத்தில் கொடுத்துள்ளார். இந்த சிட்டை ஸ்வரத்திற்கும் மற்ற கீர்த்தனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிட்டைஸ்வரத்திற்கும் மிகுந்த வித்யாசம் உண்டு.
இந்துஸ்தானி, கர்நாடக இசைக்கலைஞர்கள் எவ்வாறு சுருதியில் ஈடுபடுகிறார்கள்
சுருதி சுத்தத்துக்காக ஒரு இந்துஸ்தானி பாடகர் மேற்கொள்ளும் பயிற்சிக்கு இணையாக கர்நாடக இசையில் எதுவுமில்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். சஞ்சய் சுப்ரமண்யனின் வலையொளிகளில் அவரிடம் ஒரு நேயர் தனது மகளின் சுருதி சுத்தத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று கேள்வி கேட்கிறார்.
காரு குறிச்சி
நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே அவருக்கு ‘யோகம்’ தொடங்கிவிட்டதாக இங்கே பேசிக்கொள்வார்கள். ஒருநாள் காலை 7 மணி இருக்கும். நான் வெளிக்குப் போய்விட்டு, குச்சியால் பல் தேய்த்துக்கொண்டே கரை வழியாக ஊருக்குள் வந்தேன். காளியம்மன் “காரு குறிச்சி”
காருகுறிச்சியைத் தேடி… (3)
செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.
காருகுறிச்சியைத் தேடி… (2)
காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் …
காருகுறிச்சியைத் தேடி…
“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.
நானன்றி யார் வருவார்….
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி சபரீஸ் ஹோட்டலில் ‘ஆர்டர்’ செய்து விட்டுக் காத்திருந்தபொழுது, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை…..’ என்று மனதுக்குள் காலையிலிருந்து பாடிக்கொண்டிருந்த வாணி ஜெயராம் திடீரென்று ஆம்பிளைக் குரலில் வெளிப்பட்டுவிட, எதிரே பிரும்மாண்டமான சோலாப்பூரிக்குப் பின்னிருந்து தலையைத் தூக்கி ‘தர்பாரி கானடா?’ என்றவரின் முகம் இன்னும் “நானன்றி யார் வருவார்….”
நள்ளென் நாதம்
இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் கோவிட்-19 தி வீக் இதழில் பூஜா அவஸ்தி பண்டிட் ராமேஸ்வர் பிரசாத் மிஸ்ரா-வினுடைய குரு படே ராம்தாஸ் மிஸ்ரா. அவர் பெனாரஸ் கரானா பள்ளியைச் சேர்ந்தவர். அவரிடம் பயிற்சி செய்யும்போது, ஞாபக சக்தி மட்டுமே சிஷ்யர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது. “காலையிலும், “நள்ளென் நாதம்”
“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”
ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””
கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்
பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”
ஓசை பெற்று உயர் பாற்கடல்
வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.
சாவித்ரி- ஓர் இசை
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல்
‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக்கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும் என்பதுதான்.
இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்
பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.
பூப்போலே உன் புன்னகையில்…
மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”
‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து
கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர் கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன…
மூதாதையின் கவிதை
நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.
