காணுமாறு காணேன்

சுந்தரம் புன்னகைத்தார். அப்புறம், மெல்லக் கையை உயர்த்த முயற்சி செய்து, ராமசாமியையும், தமயந்தியையும் இன்னமும் அருகே வருமாறு அழைத்தார். படுக்கையில் இருந்த அவருடைய விரல்கள், அவர்களது கைகளைத் தொட முயன்றன. இருவரும் முன்னே நின்று, அவர் கரங்களைப் பற்றினர். மிகுந்த சிரமத்துடன், சுந்தரம் சில வார்த்தைகளைக் கோர்த்தார். “சாம்பியன்ஸ்…” ஏதோ நினைவுகள் மனத்தில் ஓடின.

இறுதியே இயைவது ஆனால்

சங்க இலக்கியத்தின் பெண் சொல்கிறாள்… வாயால் நல்லதென்று சொல்கின்றேன், ஆனால் உடம்பு நல்லதில்லேன்னு காட்டுகிறது…. குடாகேசன்  கண்கள் விரிய, குரல் துள்ள விளக்கினான்.  இயற்பியல் உனக்கு அப்படித்தான்… படிக்கிறேன்னு சொல்கின்றாய், ஆனால் உன் சோர்வான முகமும், தளர்ந்த தோள்களும் கஷ்டமா இருக்கிறது என சொல்லுது  இல்லையா?,  குடாகேசன் கேட்டான்.

சம்பந்தம்

நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…”  அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன்

ஆகுதி

நான் ஒரு மோசமான மகன். நான் தவறான முடிவுகள் எடுத்தேன். நான் அவரை காயப்படுத்தினேன். அவர் தினம் தோறும் என்ன செய்ய வேண்டுமென பட்டியல் கொடுத்தேன். அவரை சிறை கைதியாக்கினேன். இப்போது அவர் எங்கேயோ, குளிரில், பயத்தில், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் முகம் கூட நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.

உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்

லோகநாதன் இவள் மீது கோபப்பட்டு ஓடும் நதியில் பாய்ந்த புவனை நினைத்தான். எண்ணங்கள்தான் எத்தனை வலுவானது என நினைத்தான். எதை நம்புகின்றோமோ, அது செயலின் ஆற்றலை வழங்குகின்றது எனச் சொல்லிக் கொண்டான்.  புவன் குழந்தைக்கு சாப்பிட்ட பின்னர் ஏப்பம் வர வேண்டுமென விக்கியின் முதுகை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தான்.

கறை

ஒரு கணம் அப்பாவின் ஞாபகம் அவனைத் தாக்கியது. பத்து அரிசி மூட்டைகளை அவன் நெஞ்சில் தூக்கி வைத்தது போல விஜயனின் நெஞ்சைச் சுமையாக அழுத்தியது.  தொலைப்பேசியில் கடைசியாகப் பேசிய சமயம், “தம்பி, யேங் இல்லேன்னா என்ன ஆகியிருப்போம்? ஒழுங்கா வேலை பாரு” என்று அப்பா சொன்னார். அப்பா இப்பொழுதெல்லாம் அழுவதில்லை, புலம்புவதில்லை என்பதைக் கவனித்தான்.

விளைவு

லாமு தீவில், இந்திய பெருங்கடலின் கரையோரம் சிமோன் கோமுவின் பிரம்மாண்டமான வீடு அமைந்திருந்தது. பழைய அரபுப் பாணியிலான வீட்டின் வெள்ளைச் சுவர்களும், செதுக்கப்பட்ட மர ஜன்னல்களும், பச்சை நிறக் கதவுகளும் சூரிய ஒளியில் ஜொலித்தன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட லாமுவின் குறுகலான தெருக்களில் கழுதைகள் மட்டுமே பயணிகளைச் சுமந்து சென்றன. மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத இந்த பழங்கால நகரத்தில், சிமோனின் வீடு கடலை நோக்கியபடி பனை மரங்களால் சூழப்பட்டிருந்தது.

அனல்

ஜலந்தரனின் திருமணத்தினை நடத்தி வைக்க அங்கும் இங்கும் ஓடி வேலை செய்திருந்த வீரேந்தரின் பாதங்கள்  ஓர் அடி பின்னால் நகர்ந்தது. ஜலந்தரன் கோபம் அவர் அறிந்ததே,ஆனால் அவரிடம் மட்டும் இதுவரை குரலை உயர்த்தியதில்லை. மனைவி, பிள்ளைகள், வேறு ஊழியர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் எல்லாரிடமும் கோபம் வரும். அவரிடம் மட்டும் கோபம் வந்தாலும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்வான். அவனது மனைவியிடம் இவரைத் திட்ட வேண்டிய சொற்களைக் கொட்டுவான். இன்று அதெல்லாம் இல்லாமல் போயிருந்தது.

வாங்-ஃபோவின் மீட்சி

விடியலைத் தன் சக்தியாகக் கொண்டிருந்த, மாலை வெளிச்சத்தைக் கைப்பற்றத் தெரிந்திருந்த அந்த முதியவரின் பக்கத்தில் நடப்பதற்கு லிங் பிறந்திருக்கவில்லை. அவன் தந்தை தங்க வியாபாரி; தாய், மரகத வியாபாரியின் ஒரே மகள். அவள் ஆண் குழந்தையாகப் பிறக்காததற்காக அவளது தந்தை சபித்துவிட்டு தன்னுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் அவளுக்கே விட்டுச் சென்றிருந்தார்.

திரிபுரை

“இந்த ம்யூசியத்துல பாருங்க – வித விதமான மொழி பேசும், பலவிதமான வாழ்க்கை கொண்ட வரலாற்றுச் சக்திகள் எல்லாம் ஒரே கூரைக்குள் இருக்கு. ஆனா பல அறைகளில் விதவிதமான காரணங்களால் இருக்கு. நாம எல்லாரும் அப்படித்தான் வாழறோம் – ஒவ்வொரு அறையிலும் ஒரு முகம். பல அறைகள், பல முகங்கள் – இது நம்மை உடைக்காம, நம்ம கதையைச் சொல்ல உதவனும். ஆனா எல்லா அறைகளும் ஒரு  பெரும்கதையின் பகுதி.

பண்பாட்டுத் தரிசனம்

“அரவு ஆட்டவல்லான்” என்ற கட்டுரையின் தொடக்கத்தில், அட்டபுயங்கப்பிரான் என அழைக்கப்படும் சிவனின் புராணக் கதையை விளக்குகிறது. அனந்தன், கார்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகிய எட்டு நாகங்களைக் கொண்டு ஆடும் சிவனின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த ஆடும் சிவனின் குறிப்பு தமிழ்க் கவிதை மரபில் வளர்ந்த பக்தி இலக்கியமான காஞ்சிப் பதியில் குறிப்பிடப்படுகிறது.

முடிவு

அர்ஜுனால் கண்ணை மூடி இருக்க முடியவில்லை. “அம்மா.. அம்மா.” அர்ஜுனின் குரல் நடுங்கியது. அவன் உடல் நாணல் காற்றில் மடங்குவது போல மடங்கியது, கண்கள் விரிந்து, மூச்சு வேகமானது. அடுத்த லேனில் விபத்தில் சிக்கிய கார் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது. சுற்றிலும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் நெடுஞ்சாலை விளக்குகளில் மின்னின.

பேருடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன்

தாமஸ் ஹாப்ஸின் ‘லெவையாதன்’ இந்த பாற்கடல் கடைவதின் முக்கிய விளைபொருள். அது வெறும் அரசியல் தத்துவ நூல் அல்ல. அதிகாரம், சட்டம், வணிகம், மதம் என அனைத்தையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த புரட்சிகர நூல். பின்னாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இது போன்ற சிந்தனை மாற்றங்கள் அடித்தளமாக அமைந்தன.

வார்ட் நம்பர் 6

வாஷிங்டன் சதுக்கப் பூங்கா பல இசைக் கலைஞர்களால் அதிர்ந்தது – ஜாஸ் நால்வர் குழு, கிளாசிக்கல் வயலின் வாசிப்பாளர், பீட்பாக்சர் – ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலைகளைத் தனக்குரியதாக மாற்றி இருந்தனர். இந்த ஒலிக்கலவை விடுதலையின் குரலாக ஒலித்தது. 

ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்?

சத்யசரண் தான் இருக்கும் காலத்தில் வனத்தின் மீது மையல் கொள்கின்றான். அது தீராக்காதல் இல்லை. வேலை முடிந்து திரும்புகையில் தீரும் காதல்.அதற்குப் பிறகு அசைப்போடும் நினைவாக வாழ்வெங்கும் தங்கும் இடத்தில் அதனை வைத்துக் கொள்கின்றான். மையல் கொண்ட பெண்ணை வர்ணிக்கும் காதலன் போலக் காட்டினை வர்ணிக்கின்றான். அங்குலம் அங்குலமாக ரசிக்கின்றான். அதில் முழுக் கவனம் வைக்கின்றான்.

விஷக் கிணறு

நம்மூரில் ஒரு மனநிலை உள்ளது. ஊர் வளரத் திட்டம் இல்லாது, தன் வீட்டை மட்டும் ஊரில்  பெரிதாகக் கட்டிக் கொண்டு அங்கே காலா காலத்துக்கும் சொகுசாகச் செல்வாக்காக வாழமுடியும் என்னும் மனநிலை. ஊர் செழிப்பில்லை , ஊரில் பிழைப்பில்லை என்றால் வீட்டைப் பராமரிக்கக் கூட முடியாது போகும் என்ற எண்ணமே இல்லாது வாழ்பவர்கள். அது ஒரு சிதல். கதையில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று ஜெயசந்திரன் செயலற்றுப் போன ஊரில் செயல் உருவாக்கம் செய்ய வீட்டை வாங்கத் தயாராகின்றான்.

பொற்குகை ரகசியம்- சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பு அனுபவம்

கதாசிரியரின் பல வரிகள் ரசிக்கும் படி உள்ளது. “ கொமாரப்பாளையத்தில் சங்கமேஸ்வரன் என்னும் பெயர் உள்ளவர்களை தேடுவது,  மாலத்தீவில் டூனா மீனை தேடுவது போலத்தான்”. “எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக் கூடிய கண்ணாடி பாத்திரத்தை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா”. “அந்த எழுத்துக்களை கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறகுகளை விரித்து மேலெழுந்துக் கொண்டிருந்தது”. “நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய் பரவிய  தாடியும், மீசையும் வைத்திருந்தார்”

டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்

17 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில் அரசுகள் தங்கள் கால்களை அழுத்தமாக ஊன்றி கரங்களை உலகை நோக்கி விரித்தன, அதிகாரம் மையத்தில் குவிதல் விசை கொண்டது.  அதன் செயல்பாட்டிற்கு இரண்டு வகுப்புகள் முக்கியமானவையாக மாறின.  ஐரோப்பாவில் அக்காலத்தில் பெரும்பாலும் முடியாட்சிகளே இருந்தன. அதிகாரம் முடியாட்சியில் இருந்தே வழங்கப்பட்டது.

அமெரிக்கன் ரியலிசம் சொல்லும் பாஸ்டன் நகரக் காட்சிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியையோ, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தினையோ இந்த பதிவின் பொருட்டு கற்பனை செய்து பார்க்கலாம். அது கடினமாகத் தோன்றுகின்றதா? ரொம்ப தூரமாக இருக்கின்றதா?  சின்ன விளையாட்டு ஒன்றினை முயற்சி செய்து பார்த்தால் எளிதில் தொட்டு விடலாம். அப்பாவின் பிறந்த நாள், தாத்தாவின் பிறந்த நாள், தாத்தாவின் அப்பாவின் பிறந்தநாள் என யோசித்தால் நான்கே தாவலில் அங்குச் சென்று விடலாம்.

சிறுகதைகளின் வழியாக அமெரிக்க வரலாறு (1900-1939)

ஆனால் 1931ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பேசுகையில் அமெரிக்க அதிபர் ஹூவர் கவனத்துடன் பீதிக்குப்  பதிலாகப் முதன் முதலாக பொருளாதார மந்தநிலை என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டார். ஹுவரை பொறுத்தவரைப் பீதியை விட மந்தநிலை என்னும் வார்த்தை மிக குறைவான அச்சத்தினை மக்களிடம் கொடுக்கும் என நினைத்தார்.

“பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும்

இந்த புத்தகம் பேசும்  1600-1830 காலகட்டத்தில் இந்தியர்களுக்கு பெரும் செல்வம் திரட்டி தரும் வல்லமையுடன் இருந்த உற்பத்தி தொழில் திறமைக்கு அன்றைய அறிவு , வீரம், வணிகம் மூன்றும் என்ன செய்தன என நமக்குக் கேள்வி வரலாம். உற்பத்தி தொழில் என்னும் சக்தியின் மதிப்பினை பற்றிய அறியாமை இருந்ததாகவே தெரிகின்றது. அறியாமையால்  உள்ளூர் வீரமும், அறிவும், வணிகமும் தன்னை தாங்கும் கால்கள் தொழில்கள் என உணராமல் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுபவன் ஆகச் செயல்பட்டன

கிழக்கும் மேற்கும்

இந்த நூலின் ஆசிரியர் பதினேழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து இருந்த, இந்திய வணிக மையம் பிரிட்டிஷ், அமெரிக்க பேரரசுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று கூறுகிறார். பிரிட்டிஷ் பேரரசு துவக்கத்தில் இந்தியச் செழுமையையும், அதனால் உருவான வணிக தொடர்புகளையும் நகலெடுக்க வேண்டும் என முனைந்தது.  பின்னர் அமெரிக்காவிலும் அந்தப் பார்வை வளர்ந்தது.

கதைகளை ரசிப்பது எப்படி?

This entry is part 50 of 72 in the series நூறு நூல்கள்

புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும்  தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது. 

சிந்தனையின் சுருக்கமான வரலாறு

புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி அறிமுகம்  “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி “சிந்தனையின் சுருக்கமான வரலாறு”

அறிவியல் பார்வை

பெரும் அறிவியல் திறனுடைய பல்கலை அறிவுடைய நகரத்தில் 250,000 மக்களின் உணர்ச்சிகரமான வரவேற்பின் நடுவில் ஹிட்லர் வியன்னாவுக்குள் நுழைந்தார். அவரை நகரம் தங்கள் காவிய தலைவனாகவே பார்த்தது. சிறு எதிர்ப்பு மட்டுமே இருந்தது. இத்தனை பெரிய அறிவுலக அறிவியல் பார்வையின் பங்களிப்பு இருந்தும் , இனவெறி உணர்ச்சி பெருக்கெடுத்து நின்றது. அறிவுலகம் பெரும்பாலான மக்களின் அகவுலகை தொடவில்லை. பிரபஞ்சம் பெரும் லீலைகளை கொண்டது. பிரபஞ்ச லீலைகளின் உள்ளசைவையும், அழகியலையும் கேள்விகளால் தொடர்வது அறிவியலையும், அழகியலையும் மனிதருக்கு அளிக்கிறது.

புகை

முதல் முறை பார்த்த பொழுது அவளுக்கு 35 வயது. ஆனால் 40 வயதை தாண்டியது போல் இருப்பாள். ஒரு எண்ணெய் நிறுவனத்தின், உதிரிபாகப் பிரிவின்ன் சாதாரண விற்பனைப் பிரதிநிதியாய் அவளைச் சந்தித்தான். சீசர்ஸ் பேலஸ் காசினோவில் ப்ளாக்ஜாக் டேபிளில் முதல் நாள் இரவு சந்தித்தாள். மறுநாள் உதிரிபாக கேட்லாக்கை தூக்கிக் கொண்டு அவனை வந்து கான்ஃபரன்ஸில் சந்தித்தாள். ஒரு நல்ல இரவு அமைந்தது.