ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1

“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள்.

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2

நான் உன்ன கேலி பண்றேன்னு நெனச்சுக்காதே. உடல்சார்ந்த விசயத்தில் உன் தைரியத்தின் மீது எனக்கு உண்மையிலேயே நிறைய மதிப்புண்டு. எனக்கோ அது சுத்தமா கிடையாது. உன் நண்பன் ஜெத்ரோ கூறினான், தேவதைக் கதையில் வர பையனப் போல பயத்தையோ கூச்சத்தையோ உன்னால உணரக்கூட முடியாதுன்னு. நான் அதுக்கு நெரெதிர். சில சமயத்துல, பார்க்கப்படுவதை, டார்லீனால் பார்க்கப்படுவதைக்கூட என்னால் சகிச்சிக்க முடியாது. இரண்டு இடது பாதங்கள், பத்து கட்டை விரல்களை வைத்துக் கொண்டு நாட்டியக்காரியாக ஆனது எனக்கு எப்படிப்பட்ட திருப்புமுனையாக இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாரு