அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.
Series: றெக்கை
றெக்கை – அத்தியாயம் 2
கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.
றெக்கை – அத்தியாயம் மூன்று
“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும் குழந்தை பெத்துக்கலியா? அவ தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப் போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன் முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”
றெக்கை – அத்தியாயம் 4
ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி
றெக்கை– அத்தியாயம் 5
தீனி மேசையில் வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள் ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன. கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
றெக்கை– அத்தியாயம் 6
வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது.
றெக்கை– அத்தியாயம் 7
நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா? ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் ..
றெக்கை– அத்தியாயம் 8
எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த அசலாக உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம் முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம் மற்ற ஆண் மடியிலும் மெல்லத் தொட்டு இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது,
றெக்கை– அத்தியாயம் 9
லெவி எஜமான் மூணு வேலை செய்து முடிக்க உத்தரவு பண்ணியிருந்தார் முதலாவதா, ஒரு பொருளை, இல்லை, ரெண்டு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கணும், சேர்த்தாச்சு. ரெண்டாவது உத்தரவு ஆல்பி எஜமான் டாக்டர் கடை நடக்க ஏற்படுத்தி இருக்கற ஸ்தலத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியாச்சு. உங்க மூணு பேருக்கும் காலை தீனியும் சாயாவும் உண்டாக்கி இங்கே எடுத்து வரணும்னு மூணாவது கட்டளை
றெக்கை அத்தியாயம் பத்து
வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி
றெக்கை– அத்தியாயம் 11
தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.
நாவல் றெக்கை– அத்தியாயம் 12
குழுவில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளராக வலநாடும் மற்றும் ஃபிஜியும், மொரீஷியஸ்ஸும் வந்தவர்களுக்கு அடுத்த தலைமுறை தமிழர்கள். மதறாஸ், மதுரை, நெல்லை, கோவை என்று சுற்றுலாவாகக்கூட மெயின்லாண்ட் போனவர்கள் யாரும் இல்லை. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் அநேகமாக எல்லோரும் தட்டுத் தடுமாறி தாய்மொழி பேசக்கூடியவர்கள்.
றெக்கை – அத்தியாயம் 13
maidin mhaith dochtúir அய்ரிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லி சிரித்தபடி இருக்கையிலிருந்து எழ முயல, தலை குப்புற விழுந்தாள் -பள்ளிக்கூடம் ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ளை மாதிரி. நிர்மலா பதறிப்போய் விரைந்து ஒநெல்லி பாட்டியம்மாளைத் தூக்கி நிறுத்தப் பார்த்தாள். கிழவி நல்ல கனமான உடம்பு கொண்டவள் என்பதால் அவள் தரைக்கு வழுக்கிக் கொண்டு போனாள். இதெல்லாம் அவளுக்கு வேடிக்கை காட்ட நடத்தப்படும் நிகழ்ச்சி என்று தோன்ற, நிறுத்தாமல் சிரிக்கத் தொடங்கினாள்.
றெக்கை – அத்தியாயம் 15
அவள் தலை திருப்பி நோக்க, பின் இருக்கைகள் வெறுமையாக இருந்தன. மெல்லச் சூழும் இருட்டில் எங்கேயோ சில்வண்டுகள் இரண்டு மாறிமாறிக் கிரீச்சிட்டன. கிட்டா வயதுப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் மொழியறிவும், கணித, வரலாற்று, புவியியல் அறிவும் போக வகுப்புத் தோழர்கள் மூலம் கிடைக்கும் பயங்கள் அறிவு முக்கியமானது. பெரியவர்கள் மூட நம்பிக்கை என்று தள்ளும் இந்த வகை அறிவில் பாம்பு, தேள், சிலந்தி, வண்டு குறித்து பயங்களும் உண்டு.
றெக்கை அத்தியாயம் 16
ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும் சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும். பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார் மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு கொடுக்க எங்கே முடியுது.
றெக்கை அத்தியாயம் 14
இந்த வகைப்படுத்தல் யாருக்காக செஞ்சிட்டிருக்கேன்? லெவி இருந்தால் வாங்கி படிச்சுட்டு, பாத்ரூம் எங்கேன்னு பகடி பண்ணுவான். ஆல்பீ இருந்தால் படிக்கறதுக்கு முன்னாலேயே இதிலும் ஒரு ரசம் உண்டு என்று குறும்புச் சிரிப்போடு சொல்வான். ரெண்டு பேரையும் நான் இழந்துட்டேன். ரெண்டு பேரோடு உறவு வச்சுக்கறது குடும்பப் பொண்ணுக்கு அதென்ன சொல்றா இழுக்கு தான். ரெண்டு பேரோடு எங்கே உறவு கொண்டாடினேன்? ஆல்பீ போய்ச் சேர்ந்து ஆறு மாதம் கழிச்சுத்தானே லெவியை கல்யாணம் செஞ்சது.
றெக்கை – அத்தியாயம் 17
நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
றெக்கை – அத்தியாயம் 18
பேரிளம்பெண் நிர்மலாவையும் முத்தச்சியையும் கையெடுத்து வணங்கி, அக்கச்சி, முத்தச்சி ரெண்டு வியக்திகளும் என்னை காப்பாற்றணும்..என்று சொல்லியபோது சிறுமி றெக்கை விரித்தபடி நாலடி பறந்து தெருமுனைக்கு போக, தெருநாய்கள் பலமாக திட்டி அவளை கார் பக்கம் விரட்டின. அடுத்த வினாடி வெண்சிறகு மறைந்துபட அவளோர் ஓநாயாகி பற்களை வெளியே நீட்டி பக்கத்தில் குரைத்தபடி இருந்த தெருநெய் ஒன்றை கழுத்தில் கடித்து தட்சணம் உயிருண்டோ என்று அங்கே இருந்த மனுஷர்களும், நாய்களும் – பேரிளம்சிறகுப் பெண் தவிர – வியப்பும் பயமுமாக உறைந்து போக வைத்தன.
றெக்கை – அத்தியாயம் 19
அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும் லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும்
