பங்குச்சந்தை விழுந்திருந்தது

ஆனால், பங்குச்சந்தைக்குத் தோன்றிய வேறேதோ நினைப்பு அப்படியே தன்னை கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணவைக்குமளவு அதை துக்கத்தில் ஆழ்த்தியது: வாரன் பஃபெட் ஒரு வேளை தவறாக இருந்தால் என்ன செய்வது? இந்த நினைப்பே பங்குச்சந்தையை முன்னெப்போதையும் விட நலிவாக்கியது: வாரன் பஃபெட் போன்ற மகோன்னதர், பைசா பிரயோஜனமில்லாத கொடியதான பங்குச்சந்தை மேல் அன்பு செலுத்தித் தன் இதயத்தை வீணடித்திருப்பாரோ என்னும் சிந்தனை தோன்றியது. பங்குச்சந்தைக்கு குற்றவுணர்ச்சியும் கழிவிரக்கமும் தலைதூக்க, அப்படியே மொத்தமாக உருக்குலைந்து போனால் என்ன என்று எண்ணியது. ஆனால், அது செய்யவில்லை. என்ன ஒரு பைத்தியகாரத்தனம், என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

மீள்சந்திப்பு

ம்மா அவரை விவாகரத்து செய்து மூன்று வருடங்களாகிறது அன்றிலிருந்து நான் அவரைப் பார்த்ததில்லை எனினும் அவரைப் பார்த்த அந்த நொடியிலேயே நான் அவர் எனது ரத்தமும் சதையும் எதிர்காலமும் துயரமும் என்பதுபோல் நெருக்கமாக உணர்ந்தேன். நான் வளர்ந்தால் நிச்சயம் அவரைப் போலத்தான் இருக்கப் போகிறேன் என்பது போலவும்..நான் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை அவரது எல்லைகளுக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

எம். வி. வெங்கட் ராம்

அதீதக் கற்பனையாக இருந்தாலும், தற்கால சமூகப் பின்னணியைக் கருத்தாகக் கொண்டு எழுதியிருந்தார். பெண்கள் சம உரிமையை அந்தக் கதை மூலம் தான் வலியுறுத்துவதாகக் கூறினார். “நம் சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையும், பெண்கள் முன்னேற்றமும் மிக அவசியம் என்று நினைத்துதான் அந்தக் கதையையே உருவாக்கினேன். பெண்களுக்கு எதிராக எத்தனையோ அநீதிகள் நம் சமுதாயத்தில் நடக்கின்றன. ஒரு எழுத்தாளராக என்னால் செய்ய முடிந்தது அதைப் பற்றி எழுதி விழிப்புணர்வை உண்டாக்குவதுதான்.”

முடிவு

அப்படிப் பார்த்தால் அவள் முதலில் இங்கு வந்ததே தகராறில்தான். மகாராணி புயலைக் கிளப்பிவிட்டாள். யாரோ ஒரு வாசகன் நீளமாக ‘கதை நன்றாக இருக்கிறது. சூட்சுமமாக இருக்கிறது…’ அப்படி இப்படி என்று கடிதம் எழுதியிருந்தான். அப்போதுதான் அதைப் படித்து முடித்திருந்தேன். நடராஜும் அதைப் படித்துவிட்டு பெருமையுடன் தலை அசைத்துவிட்டு அப்போதுதான் வெளியே போயிருந்தான். இவள் உள்ளே வந்தாள். என்னவோ தனக்கே வந்தது என்பதுபோல கடிதத்தைப் படித்து உதட்டை சுழித்தாள். “சரி… இன்னும் இதே மாதிரி நாலு கதை எழுதிவிட்டு ஜனப்ரிய எழுத்தாளர் னு போர்ட் போட்டுடலாம்” என்றாள்.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

“வீட்டுல வேலை செய்யும் பெண்ணை நாள் முழுவதும் எனக்குத் துணையா இருக்கச் சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கு இருந்த அன்பால அதைச் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அது கண்காணிப்பு மாதிரி பட்டுது. அது தாங்கலை. போரிவிலி ஸ்டேஷன் போனேன். நான் அடிக்கடி அந்தேரி வருவேன் சாமான்கள் வாங்க அப்புறம் ஸாத் பங்களாவில இருக்கிற கோயிலுக்கு. அதனால ஒரு பாஸ் எடுத்து வெச்சிருந்தேன். ரயில் வந்ததும் சட்டென்று ஏறிவிட்டேன். அந்தேரியில இறங்கினதும் மனசு குழம்பிப் போச்சு. ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு வீட்டை விட்டுப் போனால் தங்க ஏது இடம்? அவளை ஏதாவது ஆசிரமத்துக்குப் போன்னு சொல்லுவாங்க. அங்கேயே ஸ்டேஷன்ல உட்கார்ந்துவிட்டேன். ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி ஒரு துக்கம் நெஞ்சுல கனத்துது. மனசுல இருக்கும் ஒரு ஆசையச் சொன்னதுக்கு எனக்கு தண்டனை. சொல்லாமல் செத்திருந்தா கொண்டாடியிருப்பாங்க. சுதா, உனக்கு பல ஜன்மங்கள்ல நம்பிக்கை இருக்கா? எனக்கு இல்லை. என் பாபா சொல்லுவார். நரகமும் சொர்க்கமும் மனசுலதான். உயிரோடு இருக்கும்போதுதான். இறந்த பின்னால நாம எல்லாம் காத்து, வெறும் காத்து…”

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டுவந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள்.

கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“

தொழில் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் தொடர்ந்து நிலங்களின், பண்பாட்டின், மனிதர்களின் தனிப்பட்ட அடையாளங்களை அழித்து பொதுவான அடையாளமொன்றை நிறுவும் முனைப்புடனே நம் முன் விரிகின்றன. பெயரில் இருந்த தனித்துவங்களை இழந்து வெகு காலமாயிற்று. இப்போது நாம் நமது மொழி, உணவு முறை, மருத்துவ முறை, உடைகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள தனிப்பட்ட அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் ஒரு நாள்

“சீக்கிரம் நீங்க சினிமாவுல பாடறத நாங்க கேக்கணும் சார்” என்று வாழ்த்துவார்கள். கைகுலுக்குவார்கள். ”எப்படியாவது மகாதேவனயாவது, இல்ல எம்.எஸ்.வி.யவாவது போய் பாருங்க சார். உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாய்ப்பு தருவாங்க” என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். ”எஸ்.பி.பாலசுப்ரமணியன்னு புதுசா ஒருத்தருக்கு அடிமைப்பெண்ல மகாதேவன் வாய்ப்பு குடுத்திருக்காரு. நீங்களும் முயற்சி செஞ்சா கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள். “எதிர்காலத்து டி.எம்.எஸ். நீங்கதான் சார். அதுல சந்தேகமே இல்லை. சார் பெரிய ஆளாவும்போது எங்களயெல்லாம் மறந்துடக்கூடாது” என்று வேண்டிக்கொள்வார்கள்.

அந்நியன் என ஒருவன்

‘அவங்ககிட்ட அன்பு பாசம் இல்லாம இல்ல செய்ய நிறைய மனசு இருக்கு, ஆனா அவங்களுக்கு குடும்பம், குட்டிங்கனு ஆன பிறகு, அதெல்லாம் செய்ய முடியறதில்லை; இதெல்லாம் இயற்கைதான் நீங்களே உங்க வயசுல புரிஞ்சுப்பீங்க பாருங்க’ என்றார். அதன்பின் அவர் கூறிய எதுவும் அவன் காதில் விழவில்லை. நீண்ட ஒரு உரைபோல பேசிக்கொண்டே போனார். ஏதோ ஒரு பெரிய மேடைப்பேச்சை முடித்து சாதனை செய்துவிட்ட மகிழ்ச்சியில் அவர் முகம் அந்த சின்ன ஒளி இடைவெளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

முகுந்தன்

இவையெல்லாம் படிப்பதற்குக் கஷ்டமாகவே இருக்கும். மகாகொடுமை! ஆனால் இவ்வளவும் உண்மையேயல்லவா? ஏழைத் தீண்டாதாரின் துயரம் இதுதான். உலகத்தில் புண்ணிய பூமியும், தர்ம்ம் என்பதற்குப் பிறப்பிடமுமானது நமது பாரததேசம், அன்பும் தெய்வ பக்தியும், பாவத்தை கண்டு அஞ்சும் குணமும், நம் நாட்டில் வாழும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பானவை. ஆனால் நீசர் என்று பெயரிட்டு சிலரை ஒதுக்கி வைக்கிறோம். அக்கொடிய வழக்கத்தின் வெப்பத்தில் நமது தர்ம்ம், அன்பு, தெய்வ பக்தி, நல்லொழுக்கம் எல்லாம் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அவ்வழக்கம் தொலைய வேண்டும், தெய்வம் கொடுக்கும் சுக துக்கங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்து அனுபவிப்பதல்லவா தர்ம்ம?சில பேரில் பொறுக்க முடியாத சுமை போடுவது பாவம் அல்லவா?

இந்தப் பக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

செய்தி தெரியுமா உங்களுக்கு? பிரதம மந்திரியைக் கொலை செய்து விட்டார்களாம். ரேடியோவில் செய்தி வந்தது. அக்கம் பக்கத்திலும் பேசிக்கொள்கிறார்கள். டிவியைப் போட்டுப் பார்த்தேன், அதில் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தைகள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மூடச் சொல்லி உத்தரவு வந்ததாம். அஸ்நாவைப் பாவம் கல்சியே தன் காரில் கொண்டு வந்து விட்டாள்.

கண்ணெதிரே

இன்னும் மூன்று வினாடிகள் தேவைப்படுகின்றன, மீதமுள்ள பாதுகாப்பு முறை வரைவுகள் அழிக்கப்பட்டு அவனுடைய அடையாளச் சில்லுவின் உள்ளடக்கம் பிரதியெடுக்கப்படுகிறது. ஒரு மெல்லிய மணியொலிக்குப் பின் நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். என்னிடம் க்ளோன் கிட்டி விட்டது. லெய்லா ப்ராட்லியிடம் நான் வெறும் பொது அடையாளத்தைதான் எடுத்தேன், ஆனால் ப்ரின்ஸிடம் எடுத்தது வெறும் அடையாளம் மட்டும் அல்ல, அவன் இது வரை அடையாள சில்லுவில் சேர்த்து வைத்த அத்தனை தகவல்களும் என்னிடம் வந்திருக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தைப் போற்றி

அந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என்ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.

பெய்யெனப் பெய்யும் மழை

1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி.

2. இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

சயனம் – அத்தியாயம் 12

பஞ்ச் பத்தான் ஊருக்குள் வந்து விட்டான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் வெறும் பத்தான் தானே ஏண்டா பஞ்ச் பத்தான்கறீங்க? கோவில் கல்லுக்கட்டில் அமர்ந்திருந்தவர்களுக்கு பஞ்ச் என்றால் தெரியாமல் கேட்டார்கள். என் வழி தனீ வழின்னு ரஜினிகாந்த் படையப்பாவுல சொல்லிட்டே திரியுவாருல்ல அது மாதிரி கைய நீட்டி எதாச்சிம் சொல்லிட்டே இருக்கான் மாமா! என்று இளவட்டம் ஒருவன் மாமனுக்கு சொல்லிக் கொண்டே போனான். பஞ்ச் பத்தானுக்கு ஆகக்கூடி வயசு இருபத்தி அஞ்சு தான் இருக்கும்…

ஸ்பிதிக்கு ஒரு பயணம் – பகுதி 2

எங்கு நோக்கினும், திசைகள் அனைத்திலும், மலைத்தொடர்கள் உயர்ந்து தாழ்ந்தும் விண்கரையில் அலையாடுகின்றன. மரம் ஏதும் இல்லாத வெற்றுப் பரப்பாய் விரியும் மலைகள், எங்களைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நீள்கின்றன, சூரியனின் கதிர்கள் அனலாய்த் தாக்க அவை ஒளிர்கின்றன, தகிக்கின்றன. இமயவரம்பென்றால் இதுதான் – மலைகளுக்கு அப்பால் மலைகள், அவற்றுக்கப்பால் வேறு மலைகள் – தொலைவில் ஒளிரும் தொடுவானில் மலைச் சிகரங்கள் ஒன்றி மறைகின்றன.

ஒரிஜினல் உச்சரிப்பில்…

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!

ஆருடம் பலித்த கதை

எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள் எல்லாம் ஒரு வித நடுத்தரவர்க்கத்து பம்மாத்துத்தனம் என்பதுதான் என் முடிவு. எல்லையற்ற சுயநலமே இது போன்ற விஷயங்களை வளர்த்து வருவதாக என் அபிப்பிராயம் .இருப்பினும் நாளிதழில் தனுர் இராசிக்கு இன்று என்ன என்று பார்ப்பதற்கு காரணம் நானும் இது போன்ற ஒரு மத்தியதர வர்க்கம் என்று சமாதானம் செய்து கொள்வேன்.

'ஒரு பெண்ணைப் போல்’

‘ஒரு பெண்ணைப் போல்’ நடக்கவேண்டும். ‘ஒரு பொண்ணைப் போல்’ ஓட வேண்டும். ‘ஒரு பெண்ணைப் போல்’ பந்தை வீச வேண்டும் என பதின்ம வயதில் மகளிரின் மனவுறுதியை மட்டுப்படுத்தும் பிரயோகங்கள் குறித்த விழிப்புணர்ச்சி விளம்பரம்:

உலகம் சுற்றும் கால்பந்து

உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதைப் பார்க்க எல்லோரும் பிரேசில் சென்றால், பிரேசில் சென்றோரின் ஒளிப்படங்கள் கால்பந்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன. மியான்மரில் கால்பந்து விளையாடும் சிறுவர்கள் முதல் பாலஸ்தீனப் பெண்கள் அணி வரை பல்வேறு முகங்களையும் ரசிகர்களையும் காணலாம்.

பழையன கழிதல்

உடமைகளை வெளியேற்றிய விட்டில் நின்று பார்க்கும்போது எங்களில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது போல இருந்தது. சுவரின் தீபாராதனை கருப்பு திட்டு, பென்சில் கிறுக்கல்கள், கைவிரல் தடங்கள், எண்ணெய் பிசுக்கு என்று எங்கள் அடையாளங்கள் மிச்சம் இருந்தன. எங்கள் நினைவுகளிடமிருந்து உன்னால் அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியாது என்று வீட்டிடம் சொல்கிறமாதிரி தோன்றியது. அத்தனையும் ஒரு சுண்ணாம்புப் பூச்சில் ஒளிந்து கொண்டாலும் இந்த விட்டின் நிரந்தரமான ஒரு அங்கமாய் உள்ளே உறைந்துவிடும்.

தேளும் – கொஞ்சம் நினைவுகளும்

”பால்மாறாம பயல காளி கோயில் பூசாரிகிட்டக் கூட்டிட்டுப் போயி மந்திரிச்சு தின்னூரு பூசிக் கூட்டிட்டு வா… காளியாத்தா எந்த விஷச் சந்தும் அவன அண்ட விடாமப் பார்த்துக்குவா…..” என்றாள் அம்மி. அம்மா விஷயத்தைச் சொல்லவும் பூசாரி தாத்தாவுக்கு வெலம் வந்து விட்டது. “எந்தப்பய தொட்டான்னு சொல்லும்மா….! எலும்ப எண்ணீடலாம்; வரவர அவனுங்களுக்கு துளிர் விட்டுப் போயிருச்சு…. பத்து நாளைக்கு முன்னால இப்படித்தான் வெள்ளிக் கெழமை பூசையப்ப, ஒரு எளந்தாரிப் பய கோயிலுக்குள்ள ஏறீட்டான்; எறங்குடா, நீயெல்லாம் கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாதுன்னா, இப்ப என்னன்னு சிலுத்துக்கிட்டு நிக்குறான்…. அவனுக்கு நம்ம பயலுக நாலு பேரு சப்போர்ட்டு வேற…. அதான் இந்தக் கழிசடைகள் எல்லாம் கண்ணு மண்ணுத் தெரியாம ஆடுறானுங்க…. யாருன்னு மட்டும் சொல்லும்மா பொலி போட்றலாம் அவனுங்களை……”

ஹெமிங்வேயிற்கு அஞ்சலி

நன்நம்பிக்கையுடன் ஆவலாய் இருந்த மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படியே அவர்களைக் கேட்டுக்கொண்டான்.  அவர்களும் அப்படியே அழைத்தார்கள் பில்லைத் தவிர.  முரட்டுத்தனமான  மாஜிமிலிட்டரிக்காரனான பில் அவனை ‘காப்டன்’ என்றழைக்கவே  ஆசைப்பட்டான். அவர்களுள் சிலர் இலக்கியத்தை விரும்பிய அளவிற்கு அதை புரிந்துகொள்ளவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவர்கள் புனைவை சுயசரிதையின் ஓர் திரிபாகத் தான் கற்பனை  செய்து கொண்டிருந்தார்கள்.

கருங்காலி

எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.

கவிதைகள் சொல்லும் (சிறு)கதைகள்

கதை சொல்லுவதில் ஆர்வம் கொண்ட மனிதன் எவ்வாறு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான் என்று யோசிக்கிறோம். வாய்மொழியாகவே சிறுகதைகள் வெகுகாலத்திற்கு முன் வழங்கப்பட்டன. பாட்டிகள் சொல்லும் பல கதைகள் இன்றைக்கும் இதற்குச் சான்றாக உள்ளன! உலகில் எல்லா மொழிகளிலும் எழுத்தும் இலக்கியமும் வளரத் துவங்கியதும், கவிதை (அ) செய்யுள் ஒன்றே இலக்கிய வடிவமாகக் கருதப் பட்டிருந்தது. கதை சொல்லும் மனிதன் எவ்வாறு அதைச் சொன்னான்?

மகரந்தம்

இதை எப்படிக் கண்டு பிடித்தார். பின் அதைத் தன் நிறுவனத்து மேலாளர்களிடம் சொல்லுமுன் எத்தனை தயங்கினார். பலமுறை சோதித்த பின்னரே அறிவித்தார் என்பதெல்லாம் கீழ்க்கண்ட செய்திக் குறிப்பில் கிட்டுகின்றன. உலகில் உள்ள கொலைக் கருவிகளுக்கெல்லாம் தடுப்பான ஒரு மேலங்கியைத் தயாரித்துப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவியவர் ஒரு பெண் அறிவியலாளர் என்பது எத்தனை பொருத்தமான விஷயம்?!