திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்.
Category: இலக்கிய விமர்சனம்
தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்
இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.
‘நவீனக் கண்ணன்’ – இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா.
கிருஷ்ணாவதாரத்தின் முடிவு, ஜரா என்ற வேடன் எய்யும் அம்பால் நிகழ்கிறது. அந்த இறுதிக் கட்டத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்களை அளிக்கிறான். அதை நாரதர், தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம், நடு, முடிவு என்ற வழக்கமான நேர்கோட்டுக் கதைப்பாணியைத் தவிர்த்து விட்டுப் பாரதத்திலும் பாகவதத்திலும் கண்ணன் ஆற்றும் பங்கோடு அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து, ‘நான்லீனியர்’ முறையில் முன்னும் பின்னுமாய்த் தாவித் தாவிச் செல்லும் வகையில் கதைப்பின்னலை அமைத்திருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைக்கூறு உத்தியின் உச்சம், ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வின் தனித்துவமும் அதுவே.
இந்திரா பார்த்தசாரதியும் நாடகங்களும்
தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.
வேரை மறந்தவன், விலை கொடுத்தவன் – குற்றமும் மன்னிப்பும், போலந்தும் தமிழும்
இன்று நினைத்துப் பார்த்தால், அந்த நாவல் எனக்கு ஒரு இலக்கிய அனுபவமாக மட்டுமல்ல, உலகத்தைப் பார்க்க ஒரு புதிய சாளரமாகவும் அமைந்தது. போலந்து என்ற நாடு, கிழக்கு ஐரோப்பாவின் சோசலிச அரசியல், யூதர்களின் வரலாறு, இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, மனித உறவுகளின் சிக்கல்கள்—இவற்றையெல்லாம் முதன்முதலில் இந்த நாவலின் வழியாகத்தான் அறிந்தேன். இணையமும் சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில், நல்ல இலக்கியங்கள்தான் உலகத்தின் பல கதவுகளை நமக்காகத் திறந்து வைத்தன.
இந்திரா பார்த்தசாரதி நிழற்படங்கள்
புகைப்பட ஆல்பம் – படத்தொகுப்பு
ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே: விமலாதித்த மாமல்லன் சில குறிப்புகள்
அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு
ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”
வாசிப்பின் நிலப்பரப்பு: ஜாய்ஸின் டப்ளின்
கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது
பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்
அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”
கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்
இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் “கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்”
விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்
புனைவு வனம் எழுத்தாளர் கணேஷ் ராம் உடன் ‘தெப்பம்’ குறுநாவல் குறித்த உரையாடல்: சொல்வனம்.காம்: ஆசிரியரை சந்திப்போம் சொல்வனம்.காம்: புனைவு வனம்: எழுத்தாளர் ஷங்கர் பிரதாப் உடன் சந்திப்பு: ‘உயிர்வளி’ குறித்த உரையாடல் எழுத்தாளர் பாலாஜி ராஜு – Writer Balaji Raju Short Stories: Review and “விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்”
மனசாட்சி ஒரு காட்டு விலங்கு
ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது.
சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை
கதையில் வரும் கணவனும் absolution பெறத் தான் முயற்சிக்கின்றானோ? பெண்களுக்கான வெளி மறுக்கப்படுவதற்கு தான் காரணம் அல்ல, அதற்கு தான் குற்றவாளி அல்ல என்பதை நிறுவ தான் அவன் முயல்கிறானா? எனில் அவன் போலியா? இன்று அவனைப்பற்றிய விமர்சனம் எப்படியிருக்கக் கூடும்? மனைவிக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதிலுள்ள agency, பெண்ணிற்கு கிடையாதா, அவளுடைய ஒப்புதல்/consent பற்றி சிந்திக்காதவன் என்று இன்றைய கலாச்சார சூழலில்/ zeitgeistல் புழக்கத்தில் உள்ள சொற்களை அவன் மீது சுமத்தலாம்.
கதைகளை ரசிப்பது எப்படி?
புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும் தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது.
முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்
எழுத்தாளர் காலத்துகள் தனது அண்மைய சிறுகதை தொகுப்புகள் இரண்டை அனுப்பி வைத்திருக்கிறார், அவற்றில் ஒன்றன் பெயர், _முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்._ “சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்தாக வேண்டும்,” என்று ஆல்பர் காம்யூ எழுதியதாக நினைக்கிறேன் (அவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை – பிரஞ்சு மொழியில் “முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்”
கப்பை – கதையை முன்வைத்து…
மார்த்தாண்டத்துக்காரி தன்னுடைய இன்ஸடா பக்கத்துக்கு ஸ்டைலிஷ் சோல் எனப் பெயரிட்டு ஒரு மாய உலகை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு ஹார்டினும், லைக்கும், கிஸ்ஸும் அளிப்பவர்கள் அவளது / அவனது உசிரு. அதற்கு வெளியே இருக்கும் உலகம் அவர்களை பொறுத்தவரை பொய்யான ஓர் உலகம் மட்டுமல்ல, அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு மாய உலகம். அங்கு தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், உதாசீனங்களுக்கும் மாற்று இல்லை என நினைக்கிறார்கள்.
வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்
மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது. பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”
தமிழ் நாவலின் விரியும் எல்லைகள்
ஆவணப்படுத்துதல் நாகரிக வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம். சினம், வன்மம், வீரம் முதலியவை மனித வரலாற்றில் தேவையான அளவு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. பகைவரை வெற்றி கொள்வதற்கான கருவிகளாக இவை கருதப்பட்டன. இதற்கு மாறாக ஒத்துழையாமையைக் கருவியாகக் கொண்டு பகைவரை வென்றெடுக்கும் முறையை மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த மெய் காக்கும் போராட்டம் என்னும் இந்த ஒத்துழையாமைத் தத்துவப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தன் சொந்த அனுபவமாக அமைத்து மூன்று பாகங்களாக சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் (1997) நாவல் ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் புதியதொரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறது.
அந்நியனின் அடிச்சுவட்டில்
என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”
நீர்ப்பறவைகளின் தியானம்
பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன். அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.
பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம்
ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவிதையோடு உடன்பட வேண்டும், அதன் நாயகன் நிச்சயமாக அவன் நிலங்களை ஒழுங்குபடுத்தி செப்பனிட வேண்டும் (set his lands in order). ஆனால் அன்பை, நிதர்சனத்தைக் காட்டிலும் ஆதர்சமானதொருநிலையில் உயிர்த்தெழுப்புவதற்காக, அதை இறக்க அனுமதிக்கும் மனநிலையைப் பராமரிப்பது கடினம். இதனால்தான் லண்டன் ப்ரிட்ஜ் வீழவிருக்கும் நிமித்தங்களுடன், வறண்ட சமவெளி பின்னே விரிந்துகிடக்கும் சூழலில் அவன் இன்னமும் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், வறண்ட எண்ணங்களைக் காட்டிலும் மேலான ஏதோவொன்று ஈட்டப்பட்டு, இடிபடுகளுக்கு எதிராக இங்கு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது.
மகோன்னதத்திற்கான ஆயத்தம்
சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக…
கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம்
“கலையெனத் தோற்றமளிக்காத மெய்யான கலை என்றதைக் கூறலாம். அதன் மறைமைக்கு மேல் எதையுமே ஒருவன் கற்றறியத் தேவையில்லை.” “மறைமை” நமக்கு பரிச்சயமான ஒரு கலாஸ்ஸோ வார்த்தை… டியெபோலோவின் படைப்புகளில் ஒரு வகைமையான ஸ்கெர்ச்சி-ஐ (The Scherzi, ஸ்கெர்ஸோவின் பன்மை, ஜோக் அல்லது சேட்டை என்ற அர்த்தம் கொண்டது) அறிமுகம் செய்து வைக்கும் ஒரு விசிடிங் கார்டை போலக் கையாளப்படுகிறது. ஸ்கெர்ச்சியும் கப்ரிச்சியும் (மனம் போன போக்கில் என்று பொருட்படும் …
கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I
எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.
“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.
புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”
அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
தண்டபாணியின் உள் எண்ணங்கள் மிகச் சாதாரண மொழியில் எழுதப்பட்டாலும் அவரின் மன ஆழங்கள் அலசப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் ஓர் அறிஞராகக் காட்டப்படுகிறது. இதைக் கதாசிரியரின் சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும் நாவல் முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது.
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்
ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”
காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்
“உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை” – கவிஞர் சுகுமாரன். பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டியபோது வந்துசேர்ந்த சிந்தனைப் போக்குகளில் பெண், பெண்ணுடல், பெண் மொழி, பெண் வாழ்க்கை போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆண்களின் வாழ்வியல் “காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்”
தந்தைக்கு என்றும் நன்றியுடன்
கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.
தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?
வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது? வெ.சா. ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். “தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?”
பொன்னுலகின் வேடிக்கைகள்
ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.
மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம்
இந்தியாவில் கொத்தடிமை முறையைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர்கள். 1986ல் மகாஸ்வேதா பழங்குடிகளுக்கான இயக்கத்தைத் தொடங்குகிறார். பெங்காலின் பல தினசரிகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.
முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்
வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது.
பாண்டி(த்ய)ஆட்டம்
எதை உன்னதம் என்போம்? அது மனதிற்கினிய உயர்ந்த பொருளா அல்லது எட்மண்ட் பர்க் சொல்வதுபோல் இருண்மையான, நிலையற்ற பயங்கரமா? அது ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வியலில் ‘உன்னதமயமாக்கம்’ என்று ஆகிவிட்டதா? இந்த கேள்விகளுடன் நம்பி கிருஷ்ணன் பாரதியை ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ என்று இணைக்கிறார். அப்படியாகப்பட்ட உன்னதம் ஸ்டீவென்ஸ்சுக்கு ஆத்மாவில் இறங்கி வருகிறது.
‘தன்னளவில் ஒன்றுமில்லாதவன், சொற்ப இலைகளின் ஓசையில் எந்தத் துயரையும் நினையாதொழிய, அங்கில்லாதது ஒன்றுமில்லை, உள்ளது இல்லாதது’. வாலஸ் ஸ்டீவென்ஸ் கட்டுரையில் பாரதி, ஷெல்லி, கீட்ஸ், விட்மன், குறுந்தொகை, ரிக் வேதம் அனைவரும் பொருத்தமாக இடம்பெறுகிறார்கள். விதியின் இயற்கைச் சுழற்சியைத் தலைகீழாக்கும் உன்னதம் காணக்கிடைக்கிறது.
யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”
கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்
சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”
வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2
சூழல் உண்டாக்கிக் கொடுக்கும் நெருக்கத்தின் பாலியல் விழைவா? நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா? நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது? அது குணத்தின் எதிரொலியும் அல்லவா என்று கேட்பது போலிருக்கிறது வண்ணநிலவனை வாசிக்கையில்.
வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து:பாகம்-1
வண்ணநிலவனின் தந்தைகள் எப்போதுமே பிரியத்திற்குரியவர்கள். பெண் பிள்ளைகளுக்கான அவர்களின் வாஞ்சை ஒளி பொருந்தியது. தாவணி அணிந்த மகளைக் கல்லூரி விடுதிக்கு அழைத்துப்போய், மனம் கலங்கி விட்டுவிட்டு வரும்போதும், கல்யாணம் செய்துவைக்கத் தெம்பில்லாத தந்தையைவிட்டு, விருப்பமானவனுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகும் மகளுக்கு, பேருந்து நிலையத்தில்தான் இன்னும் இருப்பாள் என்று தான் விருப்பமாய் வாங்கி வந்த காதணிகளை மகனிடம் கொடுத்துவிடும் தந்தை… என அவரின் தந்தை மனத்தின் அபூர்வ அன்பைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகளின் மீதான கூடுதல் பிரியமென்றோ, வழமையான அன்பென்றோ வண்ணநிலவனின் தந்தையன்பைக் கடந்து போய்விட முடியாது. பெண்மையை ஆராதித்த ஆதித் தந்தைமையின் தூய்மையை அந்த அன்பிற்குள் பார்க்கலாம்.
இருளின் விசும்பல்கள் – By Night in Chile
ஏமாற்றும் கலையின் உச்சகட்டத்தை சீலே அடைந்துவிட்டது. நாடு எதிர்காலமற்ற பாதையில் செல்லும் பயணத்தில் உள்ளது. உச்சகட்ட பயம், அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களிடையே பரப்ப நினைத்த உச்சகட்ட பயம். ஒரு தீவிரமான விமர்சகரான உரோசியாவுக்கு இதுபோன்ற வகுப்புகள் எடுப்பது என்பது மரணத்துக்கு ஒப்பானது. இதை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன என ஃபேர்வெல் கேட்டபோது அது மிக அவசியம் என ஆவேசத்துடன் சொல்ல முடிந்தது. யாருக்கும் கவலை இல்லை. எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் சிறு துளியை ஸ்பரிசிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet
கதையைக் கூறத் தொடங்கும்போது மெக்ஸிகோ நாட்டுப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கிவிட்டிருந்தது. அவள் இன்னமும் நான்காம் மாடி கழிப்பறையில் அடைபட்டுக்கிடக்கிறாள். அவளது உடல் அங்கு கிடந்தாலும், மனம் தொன்மங்களிலும் வரலாற்றின் இருண்ட சொதிகளிலும் விழுந்து கிடக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதாக அவளது கதைகூறல் இருந்தாலும், அரூபமான விவரங்கள் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை
“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.
மினுங்கும் பொழுதுகள்
‘நிழல்கூட அளவாக விழுமாறு எழுப்பபட்ட பிரம்மாண்ட’ கட்டிடத்தின் முன்னுள்ள புங்கை மரம் எப்படி தப்பித்தது என்பது குறித்த வியப்பும் (‘என் கடவுளின் சாமரம்’), வேலை முடிந்து திரும்புகையில் தற்செயலாக தென்படும் ‘இளம்பழுப்பு’ நிலவும் (‘இரவின் ஒளி’), ‘வீடும் வெளியும்’ பகுதியின் வெளிச்சத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் நகரம் வெகு தொலைவில் வந்துவிட்டதை சுட்டுகிறது.
மகிமை
இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன்
ஜெர்மானிய எழுத்தாளர் ஸீபால்ட் வகைப்படுத்த இயலாப் புத்தகங்களைப் படைத்துள்ளார். புனைவு, பயணம், மெல்லிய மறைதலுடன் சொல்லப்பட்ட சுயசரிதை மற்றும் புதிரான குறிப்பற்ற புகைப்படங்கள் என்று பலவற்றைக் கலந்து மறைந்து கொண்டே இருக்கும் மனித அனுபவத்தின் சுவடுகளை மீட்டெடுக்கும் தனது படைப்புகளில் பயன்படுத்தினார்.
