இலக்கியம் பலவீனமானது. அன்றாட லௌகீக நோக்கத்திற்கு பைசா பிரயோசனமில்லை. அது எங்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்க மாளிகையில் ஆபரணம் வாங்கவோ உதவாது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய உங்களை வளப்படுத்தாது. ஆனால் மனிதகுலத்தின் எந்தவொரு கலாச்சார முயற்சியும் இருந்ததைப் போலவே இலக்கியமும் அழியாமைக்கு நெருக்கமாக உள்ளது.
Tag: பாஸ்டன் பாலா
🕊️ 2025 நோபல் அமைதி பரிசு — கேள்வி & பதில் தொகுப்பு (FAQ)
மரியா கொரினா மச்சாடோ யார்? அவருக்கு ஏன் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது?
தகவல்: வெனிசுலாவில் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்தும் முக்கிய தலைவி.
கிண்டல்: மேற்குலகத்திற்கு பிடிக்காத ஆட்சிக்கு எதிராக நின்றதால் பதக்கம் கிடைத்தது.
புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.)
சுய மேற்பார்வை கற்றல்’ இன்றைய நிலையில் நன்றாகத்தான் வேலை செய்கிறது – ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் அவற்றிற்குப் புரிகிறது: வார்த்தைகள் கொண்ட கோப்பை முழுமையாக விளக்கிச் சொல்லி, விலாவாரியாக வக்கணையாகக் கேள்வி கேட்டால் ஏதோ சொன்னதை ஓரளவப் புரிந்து பதிலளிக்கும். அல்லது ஒரேயொரு அசையா புகைப்படத்தைக் காட்டினால் அந்தப் படத்தை ஏதோ புரிந்து கொள்ளும்.
பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்
“கிள்ளாக்குகளின் வரிசை” என்பது – ஒரு முழு வாக்கியமாகவோ அல்லது வாக்கியங்களின் தொடராகவோ இருக்கலாம். அதாவது, ஒரு மொழி மாதிரியானது (எல்.எம்/LM) வெவ்வேறு முழு வாக்கியங்கள் அல்லது உரை தொகுதிகளின் சாத்தியத்தை கணக்கிட முடியும்.
சகுனங்களும் சம்பவங்களும் – 5
இன்றைய நாளில் எவர் வேண்டுமானாலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனும் வெற்றிமாறனின் விடுதலையும் எடுத்து விடலாம். எனினும், தாலுகா அலுவலகம், அதன் அரசியல், உள்ளே நிலவும் சித்தாந்தம், மேலிட மந்திரி, உள்கட்சி பூசல், தலைமை அதிகாரியின் கையாலாகாத்தனம் – இதுவெல்லாம் காமெடியாகச் சொல்கிறார்கள். அடுத்தது என்ன ஆர்வமூட்டுகிறார்கள்.
சகுனங்களும் சம்பவங்களும்-4
இருவரும் கமிலா கபெலோ என்பவரின் ‘கிரவுன்’ (முடி மகுடம் – Camilla Cabello’s song ‘Crown’ ft. Grey from Bright: The Album – நகாரி இசைத் தயாரிப்பில், கொன்னக்கோல் ரகுநந்தன் இசையைத் தேர்ந்தெடுத்து சட்டென்று ஆடுகிறார்கள். ஒரே பாடல். ஒரே கலாச்சாரம். பரதத்திலும் கதக்கிலும் எவ்வாறு சிறு மாறுபாடுகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பதை காட்சி ரூபமாக கதகளியாடுகிறார்கள். இளையராஜா சிம்பனி; ரஹ்மான் நாட்டுப் பாடல்; கதரி கோபால்நாத் ஜாஸ் கேட்பது இன்பம். அது போல் இது ஆட்டத்தில் இன்பம்:
சகுனங்களும் சம்பவங்களும்-3
ஆண் நாத்திகர்களை முகக் குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்களிடமிருந்து வேறுபடுத்தலாம். ஈரானிய ஆண்களை விட ஹிஸ்பானிக் ஆண்கள் அனைத்து நீள் தாடிகளையும் சாதகமாகப் பார்க்கிறார்கள். பாரசீக வெறுப்புப் பேச்சைக் கண்டறியும் இயந்திரக் கற்றல் மாதிரியை அறிஞர்கள் வெளியிட்டனர். எதிர்பாலினத்தவரை விரும்பும் பெண்களை விட தற்பால் உறவுகளில் உள்ள டச்சுப் பெண்கள் குற்றங்களில் சந்தேகிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அறிவிப்புகள், வாசகர் கடிதம்
உங்கள் வாடிக்கையாளரின் திருமண நாள் வருகிறதா? அதற்கு உரிய வாசகங்களோடு, நானே பிரத்தியேகமாக எழுதிய மாதிரி வசனங்களை உருவாக்கி, நீங்களும் நானும் இணைந்து எடுத்த நினைவுகளை விநோதமாக மீட்டெடுத்து, நம் உறவை பலப்படுத்தி, அடுத்த விற்பனையை ஊக்குவித்து, திருப்திகரமான அனுபவமாக மாற்றுவது எவ்வாறு என்று யோசியுங்கள்.
சகுனங்களும் சம்பவங்களும் – 2
அவர் கங்காரு போலவும், நீர் தெளிப்பான் போலவும் ஆடுகிறார். அந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமையான ஆட்டங்களை ஹிந்தி, தெலுங்கு, தமிழப் பட குத்தாட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
சகுனங்களும் சம்பவங்களும் – 1
உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா?
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்
சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.
ஆகாரசமிதை
ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …
கைச்சிட்டா – 4
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..
கைச்சிட்டா – 3
அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
கைச்சிட்டா
இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு
குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?
விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?
ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?
தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் என்பவரும் & டானா மாக்கென்ஸி என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.
