தெருக்கூத்து – பகுதி 4

இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய ஒரு நாடக மரபு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள்…

தெருக்கூத்து – பகுதி 3

அன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் …

தெருக்கூத்து – பகுதி 2

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மை செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக்கொண்டன. இந்த பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். .அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டவிட்டன.. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.

தெருக்கூத்து – பகுதி 1

தொடக்கத்திலேயே சொல்லவேண்டியது, தெருக்கூத்து ஒன்றும் பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், இக்கலைவடிவம் தமிழகத்தின் இதர மக்களால் ஏளனத்துடன் பார்க்கப்படினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடு. ஓர் இனத்து மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட, வேட்டைக்கார, உணவு சேகரிப்பு பழங்குடி நாட்களிலிருந்து, அவ்வினத்தின் பரிணாமத்தின் ஒவ்வொரு படிநிலையினுள்ளும் ஒன்றினுள் ஒன்றாய் புகுந்து ஊடுருவி, தன் அடர்ந்த பரப்பினுள் உபகண்டத்தின் பிற பகுதிகளினின்று காற்றுவாக்கில் வந்த பாதிப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆவணம், ஒரு பல்படிவச் சுவடி (palimpsest)

புத்தகக் கண்காட்சியில் பை நிறைய கதைகள்

போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் கதைத் தொகுப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

விசிட் விசா

சூசை அந்தத் தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணைக் காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். இரண்டு வருடத்துக்குப்பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்தத் திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயரை மாற்றி ‘சூசை’ன்னு ஞானஸ்தானம் வாங்கினான்.

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.

முறிமருந்து

வைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன.
“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது.

சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.

நானறிந்த வெ.சா

இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார். அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டு வார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடைய கட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார். படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலே இன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லை என்பார்.

வெ.சா – இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு நினைவுப் பயணம்

ஒரு சிலர் ஒரு சில சலுகைகளை அவருக்கு வழங்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதை பார்க்க நேரும்போது ஒரு மனிதன் எப்படி எல்லாம் தன்னுடைய நல்லதொரு பக்கத்தை வெளிக்காட்டாமல் இத்தனை ஆண்டுகள் இத்தனை பேருடன் பழகியிருக்க முடியும் என்ற ஆச்சரியம் என்னை மிகவும் படுத்தி எடுக்கிறது. இன்று தமிழ் படைப்புலகில், கலை இலக்கியப் பரப்பில் வெ.சா. காட்டிய தரிசனங்கள்தான் புதுப்புது ரூபங்கள் எடுத்து நமக்கு பெருமை அளித்து வருகிறது. தெருக்கூத்துக்கு சிம்மாசனம் வழங்கி சிறப்பளித்தவர் வெ.சா. அவர் நடேச தம்பிரான் டெல்லியில் மேடையேற்றிய கர்ணமோட்சத்தை பற்றி எழுதிய பிறகுதான் நவீன நாடகக்காரர்களின் கவனம் தெருக்கூத்தின் பக்கம் திரும்பியது. நவீன நாடகம் பற்றி, ஓவியங்கள் பற்றி, கவிதைகள் பற்றி, இசை பற்றி, புதினங்கள் பற்றி, சிறுகதைகள் பற்றி சாமிநாதனின் கருத்துக்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் சற்று நிதானித்து பொருட்படுத்தக் கூடியதாக இருந்தன. பல மாற்றங்களுக்கும் அவை அடி கோலின என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெ.சா.வின் கருத்துக்கள் மியூசியத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியவர்கள் கூட அவர் தங்களுடைய படைப்புக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதை அறிய துடித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

வெங்கட்  சாமிநாதன்: விமர்சன படைப்பாளி

தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம, கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை….அதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார்.

வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்

This entry is part 34 of 72 in the series நூறு நூல்கள்

சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்

பண்பாட்டு விமர்சனம்: வெ.சா.வை சாக்காக வைத்து சில சிந்தனைகள்

இங்கே சமூக விமர்சனம் என்பது சாதி விமர்சனம் என்ற அளவிலேயே குறுகிப் போனதுதான். சாதி விமர்சனம் என்பது அந்தந்த சாதியைச் சார்ந்த அறிவுஜீவிகளாலேயே செய்யப்படும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். உண்மையில் வெ.சா. ‘வசனம்’ எழுதிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ சம்ஸ்காராவை விட வீச்சு அதிகம் கொண்டது. ஆனால் நாடகமா, திரைக்கதை வசனமா, புனைகதையா என்ற உருவத்தெளிவு இல்லாததாலும், வெ.சா.வுக்கே அப்படைப்புக் குறித்துப் பெருமிதம் இல்லாமலிருந்ததாலும் அது வெகுமக்கள் தளத்திற்கு போய்ச்சேரவில்லை. பெரியாரின் தத்துவவெளி சிறிதாக இருந்தாலும் அவரது தீவிரமான பிரச்சாரம் மூலமும், விசுவாசமான தொண்டர்கள் மூலமும் மக்களை வேகமாகச் சென்றடைந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. மொழி இங்கே அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கிறது. இரண்டாவது பொதுவெளி அறிவுஜீவிகளுக்கும், கல்விப்புல அறிவு ஜீவிகளுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளி.

கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்

தெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …

கண்ணப்பத் தம்பிரான்

1960-களின் இடையில், 65-66 அல்லது சற்று முன் பின்னாக இருக்கலாம் – டெல்லியில் ஒருநாள் மாலை ரவீந்திர பவனின் புல்வெளியில், தாற்காலிகமாக எழுப்பப்பட்டிருந்த மேடையில், கண்ணப்பத் தம்பிரானும் நடேசத் தம்பிரானும், பாரதத்திலிருந்து ஒரு காட்சியை, காரமான வாதப் பிரதிவாதங்களும், துவந்த யுத்தமும் நிறைந்த ஒரு காட்சியை, நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். வாள் சண்டையும் வீராவேசமான கிரிகைகளும், உரத்த குரலில் சொற்போரும் நிறைந்த அந்தக் காட்சி, ஓர் நிகழ்வுக்கு எத்தனை உக்கிரமும், வீரமும், ஓர் உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த உச்சத்திலேயே சுமார் 40-45 நிமிடங்கள் வரை சரிவில்லாது அக்காட்சியின் விறுவிறுப்பை நீடிக்க செய்ய முடியும் என்பதற்கான நிதர்ஸன நிரூபணமாக அது இருந்தது. அன்று எனக்கு நடேசத் தம்பிரானும் சரி கண்ணப்பத் தம்பிரானும் சரி, அவர்கள் பேண வந்த தெருக்கூத்து என்ற வகை நாடக வெளிப்பாடும் சரி, எல்லாம் புதியன. முதல் அறிமுகமே அதுதான். அந்த இருவரும் பெரிய கலைஞர்கள், அவர்கள் பேணும் வெளிப்பாடுக் கலை என்பது அந்த மாலை எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. எந்தப் புத்தகமுமோ, எந்த அறிஞரின்/ ஆராய்ச்சியாளரின்/ வெள்ளைத்தோல் நிபுணரின்/ கலைஞரின் சிபாரிசுமோ தேவையாக இருக்கவில்லை.

வாசகர் மறுவினை

சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும். சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம்…

நா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

எத்தனையோ புத்தகங்கள் மதிப்புரை பெறுகின்றன, அவை மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால் ரசிகன் என்னும் சிறுகதைக்காரர், பேசப் படவே இல்லை. அதற்கான காரணங்களை இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவராயும் என்னுடன் சினேகபாவத்துடனும் ஒரு கால கட்டத்தில் இருந்த வல்லிக்கண்ணனிடம் கேட்டேன். ”ஆமாம் அப்படித் தான் ஆயிற்று. ஆனால் நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.

சென்னையில் வாலி வதம் – தோற்பாவைக் கூத்து

Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.[…]கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும்.

வெங்கட் சாமிநாதன் – பகுதி 2

தனது கடுமையான விமர்சனப் பார்வைகளுக்கு நடுவிலும் கூட வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய பல குத்தல்களைப் பொதிந்து வைத்திருப்பவர் வெ.சா. ”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” என்ற கிண்டல் வெகு பிரபலமான ஒன்று. இதழாளர் மாலனை “தென்னாட்டு குல்தீப் நய்யார் என்றும் பெஞ்சமின் ப்ராட்லி” என்றும் புகழும் உதயமூர்த்தியைப் பற்றி தனக்கேயுரிய அங்கதத்துடன் வெ.சா எழுதுகிறார், “ இதன் மூலம் மாலனைப் பற்றி மட்டும் அல்ல தன்னைப் பற்றியும் எம்.எஸ்.உதயமூர்த்தி சொல்லிவிடுகிறார்.”

பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்

பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள்
நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு
என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.