தமிழ் இலக்கியங்களில் வைணவம் – நூல் அறிமுகம்

ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும்.

எது சனாதனம்?

சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீமைகளுக்குமான ஒரு பெயர் சனாதன தருமம் என்று இவர்கள் சொல்கிறார்கள். எனவே ’சனாதனத அழிப்பு’ என்கிற வெறுப்பு நிலைபாட்டை இப்படி சொல்லித்தான் நியாயப்படுத்துகிறார்கள்.இதன் எதிர் நிலைபாடு என்னவாக இருக்க வேண்டும்?

இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

இந்து சம்ஸ்காரங்கள்

எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. இவை ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன