உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?

காந்திய போராட்டத்தின் முக்கியமான நேர்மறை விளைவு இந்தியச்சுதந்திரம். அதே சமயம் அப்போராட்டம் காந்தியின் உயிருக்கு உயிரான கொள்கையான இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பதில் தோல்வியை அடைந்து,பாகிஸ்தான் பிரிவினையில் முடிகிறது.

மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”

சரி,செர்ச்சில் இன்னமும் குதிப்பதற்குத் தயங்கும் வாசகருக்கு வருவோம். அதன் மூவாயிரத்து சொச்சம் பக்கங்களே அவரை முதலில் மாய்ப்பில் ஆழ்துகிறது. ஒருக்கால் கால் நனைப்பதற்காக, அதன் ஹாதார்ன் மற்றும் லைலாக் பூக்கள் அடர்ந்த பாதைகளில் பயணித்தபடி செர்ச்சின் முதல் நாவலான The Way by Swann’s-ஐ மட்டும் படித்துவிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சப்புக்கட்டிவிட்டு ஓடிவிடலாம் என்று அவர் நினைக்கலாம். அவர் மட்டுமே அப்படி நினைக்கவில்லை, அதே கவலைதான் தயங்கும் கட்டுரையாளனுக்கும். கடந்த சில ஆண்டுகளாகப் பல சிறுபத்திரிகை நண்பர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளையும் மீறி அவன் இன்னமும், சுருக்கமுடியா ப்ரூஸ்டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் கட்டுரை(களை) முயன்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி மதில்மேல் அம்ர்ந்திருக்கிறான்.

ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா?

25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.  நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய  துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும்  வாசிக்கவேயில்லை.

“பேரரசு” என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன்/அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும்

இந்த புத்தகம் பேசும்  1600-1830 காலகட்டத்தில் இந்தியர்களுக்கு பெரும் செல்வம் திரட்டி தரும் வல்லமையுடன் இருந்த உற்பத்தி தொழில் திறமைக்கு அன்றைய அறிவு , வீரம், வணிகம் மூன்றும் என்ன செய்தன என நமக்குக் கேள்வி வரலாம். உற்பத்தி தொழில் என்னும் சக்தியின் மதிப்பினை பற்றிய அறியாமை இருந்ததாகவே தெரிகின்றது. அறியாமையால்  உள்ளூர் வீரமும், அறிவும், வணிகமும் தன்னை தாங்கும் கால்கள் தொழில்கள் என உணராமல் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுபவன் ஆகச் செயல்பட்டன

மாறாத புன்னகையும் மனவிரிவும்

This entry is part 49 of 72 in the series நூறு நூல்கள்

ஏற்கனவே தமிழ்க்கதை உலகில் நாம் கண்ட எந்தப் பாத்திரத்தின் சாயலும் இல்லாமல் புத்தம்புதிதான பாத்திரங்களை தம் கதைகளில் முன்வைத்திருக்கிறார் அஜிதன். ஜஸ்டின் அத்தகைய பாத்திரங்களில் ஒருவன். அவன் வேலை என்பது கிட்டத்தட்ட கூலிப்படை வேலை. அவன் மாமா ஏவி விடுவார். இவன் சென்று முடித்துவிட்டு வருவான். சரியான அடிதடி ஆள். ஆனால் தனக்கென ஒரு விசித்திரமான நியாயத்தை வைத்துக்கொண்டிருப்பவன். ஒருநாள் மாமா ஒரு குறிப்பிட்ட ஆளை வெட்டிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார்

கிழக்கும் மேற்கும்

இந்த நூலின் ஆசிரியர் பதினேழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து இருந்த, இந்திய வணிக மையம் பிரிட்டிஷ், அமெரிக்க பேரரசுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று கூறுகிறார். பிரிட்டிஷ் பேரரசு துவக்கத்தில் இந்தியச் செழுமையையும், அதனால் உருவான வணிக தொடர்புகளையும் நகலெடுக்க வேண்டும் என முனைந்தது.  பின்னர் அமெரிக்காவிலும் அந்தப் பார்வை வளர்ந்தது.

அயல் சுவை

This entry is part 55 of 72 in the series நூறு நூல்கள்

உள்ளபடியே இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கும்போதும்,அந்த விவரணையால், அவர்கள் வேறு என்ற உணர்வு வலுக்கிறது. பழகிப்போன பண்பாட்டில் வாழ்க்கை முறை விவரிக்கப்படுவதில்லை. பொதுப் புரிதல்கள் இல்லாத இடத்தில் வாழ்க்கை விவரணைகள் தேவைப்படுகின்றன. அவை நம்மைப் போன்றவர்கள் இவர்கள் என்ற உணர்வை அளிக்கும் போதே இவர்கள் வேறு என்ற உணர்வையும் அளிக்கிறது.

கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்

This entry is part 52 of 72 in the series நூறு நூல்கள்

தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி),  தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான்  சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான்

கல்லை மலராக்கும் கவிதைகள்

இதற்கு இணையாக வேறு வகையான சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும் வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச் சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன

கதைகளை ரசிப்பது எப்படி?

This entry is part 50 of 72 in the series நூறு நூல்கள்

புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும்  தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது. 

பெண்களின் கீழ்படிதல்

பெண்களது கீழ்படிவே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது. பெண்கள் அழகாகவும், சாந்தமாகவும், பணிவாகவும், தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆண் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதனை சட்டமாக வரைகிறது. இந்த சட்டங்களினாலான சமூக அமைப்பை பெண்களும் சுவீகாரம் செய்கிறார்கள்.

மார்ஷ்லேண்ட் புத்தக விமர்சனம்

அவர் நினைவுகள் மெல்ல அவரின் கடந்தகால குற்ற சரித்திரத்தை வெளிக்கொணர்கிறது. 1968 மற்றும் 1969 ல் டோக்கியோ மற்றும் ஜப்பானின் இதர பகுதிகளில் நடந்த மாணவ கலவரம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியாக அமைகிறது.ஒரு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு அட்சுவோ, வாக்காகோ, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் தீவிர மாணவப் பிரிவினை சேர்ந்த மாணவர்கள் குழுவான ‘கியூ- செக்ட்ஐ’  சேர்ந்தவர்கள் கைதாகும் பொழுது கதையின் போக்கு தீவிரமடைகிறது.

கே.ஜே  அசோக்குமாரின் ‘ரமணி குளம்’

This entry is part 57 of 72 in the series நூறு நூல்கள்

 பெரும்பாலும் இன்றைய  நவீன வாழ்க்கையின் பல எதிர்மறை அம்சங்களின் தொகுப்பாகவே நாவல் அமைந்த போதும், இறுதியில் ஒரு நம்பிக்கை ஒளியுடனேயே முடிகிறது என்பதும் ஒரு சிறப்பு.இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.இன்றைய தமிழகச்  சூழலில் ஒரு வகையான அரசியல் சரிநிலையை இந்த நாவல் மீறுகிறது. அது எது என்பதை நான் சொல்லப்போவதில்லை. வாசகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளலாம்.

சிந்தனையின் சுருக்கமான வரலாறு

புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி அறிமுகம்  “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி “சிந்தனையின் சுருக்கமான வரலாறு”

மோகனாங்கி

இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா!

சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

This entry is part 58 of 72 in the series நூறு நூல்கள்

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்

உயரும் : சுரேஷ் பிரதீப்

This entry is part 60 of 72 in the series நூறு நூல்கள்

திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள்  தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு

மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

This entry is part 62 of 72 in the series நூறு நூல்கள்

ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள்.  ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார்.  இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges)  பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்

மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்

This entry is part 65 of 72 in the series நூறு நூல்கள்

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மெல்ல அதை விருந்தினர் விடுதியாக மாற்றிய விளக்கத்திலிருந்து கதை துவங்குகிறது. அந்த விடுதியில் தங்கிச் செல்வோர் அனைவரும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள். இந்த விளக்கத்தினிடையே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களால் நிறைந்து காணப்படும் அந்த விடுதியில், அவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருப்பார்கள் என வார்த்தைகளில் சிறிய வேறுபாட்டைக் காட்டிக் கடக்கிறார். 

பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது

This entry is part 67 of 72 in the series நூறு நூல்கள்

அதீதத்தின் ருசி கிராமத்து வாழ்வியலை அவர்களின் மன உணர்வுகளோடு கலந்து புலம்பலை புறந்தள்ளி வாழ்வை வார்த்தைகளின்றி அவதானிக்கச் செய்து மன அமைதியோடு அமர்ந்து மண்ணை தன் மனதிற்கு ஏற்றவாறு மாற்றி அதற்கும் ஒரு ருசியை கொடுத்த மகத்துவத்தை உணர்த்தும் ஆழமானதொரு சிறுகதை. பெண்களின் அக உணர்வுக்குள் சலிப்பு, இயலாமை, அவமானம் எல்லாவற்றையும் அண்டவிடாமல் நுட்பமானதொரு மன வடிவை கட்டமைத்து பிரபஞ்சத்தை தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதொரு உணர்வைத் தரும் அதீத்தின் ருசி பெண்களின் பேராளுமையை பறைசாற்றுகிறது.

மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !

This entry is part 68 of 72 in the series நூறு நூல்கள்

தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்போ, அல்லது திருமணம் என்கிற அமைப்பில் இருக்கக் கூடிய மௌடீகமோ, அந்தத் தம்பதிகளுக்குள் ஒரு விலகல் நேர்ந்து அவர்கள் தேமேயென்று வாழ்கிறார்கள். அவன் வெளியூருக்கு சென்ற சுதந்திரமான ஒரு நாளில் அவள் இணையத்தில் நுழைய, ஒரு மற்றொரு ஆளுடன் சுவாரஸ்யம் பூக்கிறது. அதில் அவள் திளைக்கிறாள். ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சிகளுக்கான ரெடிமேட் பதில்களும் உண்டு.

உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை

This entry is part 69 of 72 in the series நூறு நூல்கள்

சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இரு மதிப்புரைகள்

This entry is part 70 of 72 in the series நூறு நூல்கள்

வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.

அனைத்துக்கும் சாட்சியாக நாம் 

This entry is part 71 of 72 in the series நூறு நூல்கள்

ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்

தமிழ்ப் பெண்கவிதைவெளி

இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது

புதுவெளிச்சம்

This entry is part 72 of 72 in the series நூறு நூல்கள்

இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய்  ஒளிர்தலைக்  கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை,  கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும்  வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை. 

‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்

இந்த நாவலை, _”பன்முக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் அத்தனை கலைஞர்களுக்கும்”_ சமர்ப்பித்துள்ள நூலின் ஆசிரியர், _”தஞ்சை வட்டாரத்தில் மரபார்ந்த கலையான கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது ஒரு காலத்தில் உன்னத கலையாக இருந்தது. காலப்போக்கில் அது தனது அழகியலை இழந்து வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்டது. அந்த கலையில் திறன்மிக்க கலைஞர்களாக இருந்தவர்கள் காலச்சூழலில் அடையாளமற்று போனார்கள். அவர்கள் குறித்து நான் தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், ஒரு நீண்ட கலை மரபுக்கு அவர்கள் ஆற்றி வந்த கலை சேவையை போற்றும் வகையில் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன்”_ என்று இந்த நாவல் எழுதத் தொடங்கியதற்கான நோக்கத்தை எழுத்தாளர் கூறுகின்றார்.

இயற்கையின் கலகம்

Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.

நீர்ப்பறவைகளின் தியானம்

This entry is part 47 of 72 in the series நூறு நூல்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன்.  அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.  “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.

எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும்

அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

பின்கட்டு

This entry is part 45 of 72 in the series நூறு நூல்கள்

இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.

கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்

கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.

தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி

This entry is part 43 of 72 in the series நூறு நூல்கள்

எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை.  இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு.  ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.

கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I

This entry is part 1 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.

சிவகாமி நேசன் என்னும் இனிமை

பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”

நீலகண்டப் பறவையைத் தேடி

மஞ்சள் பூ பூத்திருக்கும் சிறு கடுகுச் செடி முதல் பேராலமரம் வரை நிலத் தாவரங்களும், நதிப்படுகையின் கோரைப்புல் முதல், ஏரியின் ஆழத்தில் உள்ள கிழங்குக் கொடிகள், நாணல் வரையான நீர்த்தாவரங்களும் கதைக்குப் பங்களிக்கின்றன. அது போன்றே எலி, தவளை முதலான சிறு விலங்குகளிலிருந்து யானை போன்ற பெருவிலங்கு வரை பல்வேறு விலங்குகளும் நாவலெங்கும் இடம் பெற்று கதையோட்டத்திற்கு உதவுகின்றன. சிறு மின்மினிப்பூச்சிகள், வயல் நீரில் வட்டமிடும் சிறு நீர்ப்பூச்சிகள், ஜிஞ்ஜி போன்ற குளிர், பனி இரவுகளில் ஒலியெழுப்பும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவையை முழுங்கும் பானசப்பாம்பு போன்றவை கதை நெடுக நடமாடுகின்றன.

புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து

This entry is part 21 of 72 in the series நூறு நூல்கள்

ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.

ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்

This entry is part 48 of 72 in the series நூறு நூல்கள்

இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”

பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து

இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை, அது போன்ற வெம்மையில்லை. பனிமூட்டம்போல மென் தண்மையுடன் தழுவி மயக்குகிறது.

யசோதராவின் புன்னகை

என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”

பொன்னுலகின் வேடிக்கைகள்

ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

நூல் அறிமுகங்கள்

This entry is part 6 of 8 in the series கைச்சிட்டா

டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.

பாகீரதியின் மதியம் – விமர்சனம்

This entry is part 10 of 72 in the series நூறு நூல்கள்

நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.

கல்லும் மண்ணும்

பாரத தேசத்தின் ஆன்மிகக் கலாச்சார ஊற்றுகளில் முக்கியமான ஒன்றான தமிழ் மண்ணின் மிகச் சாதாரண, பொருளாதாரம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் கடைக் கோடிப் படியில்கூட இராத சாமானிய மக்களிடம் இந்த மண்ணின் ஆன்மிக தரிசனம் தத்துவ வார்த்தைகளாக மட்டுமன்றி, உண்மையான வாழ்வை வழிநடத்திச் செல்லும் உணர்வாகவும் இருந்த காலம் இக்கதை நிகழும் நேரம்.

நகரத்தில் இப்போதும் இரவு

பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள். பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார்.

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு

ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் “தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு”

கைச்சிட்டா – 3

This entry is part 3 of 8 in the series கைச்சிட்டா

அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”

நண்பனா, வாதையா?

தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.

உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்

மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத்திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள்.