இந்திரா பார்த்தசாரதி – வரலாற்றின் மறுவாசிப்பு

பிராம்மணநெறிச் சடங்குகள், கடவுள் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, ஆத்மாவின் இருப்பு போன்றவைகளை கேள்விக்குட்படுத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே கொள்ளப்பட்டதையும், நிறுவனங்களுக்கும் அவைகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் தொன்றுதொட்டு நடந்துவ்ருவதையும், இந்திய தத்துவ வரலாற்றில் பெரும்பாலான தத்துவப் போர்கள் தென்னாட்டில் நடைபெற்றதையும் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.