நினைவில் மேவும் உரையாடல்கள்

இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.

உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும்

நோலனின் திரைமொழியில் மிகவும் வியக்கத்தக்க அம்சம் அதன் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பாகும். ஃபாலோவிங் (1998) தொடங்கி, நோலன் கதையாடல் விவரிப்பைத் துண்டாடும் ஒரு தனித்துவமான நடைமுறையை (Practice of narrative fragmentation) நிறுவினார். இது மரபார்ந்த ஹாலிவுட் கதைசொல்லல் முறைக்கு நேரெதிரானது. கிளாசிக்கல் கதையாடல் என்பது, போர்ட்வெல் விளக்குவது போல, காரண-காரியத் தொடர்புகளால் பிணைக்கப்பட்ட, ஒரு இலக்கை நோக்கி நேர்க்கோட்டில் நகரும் நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். நோலன் இந்தத் தர்க்கத்தை முறையாகச் சிதைக்கிறார்.

தலைமைச் செயலகம்

மூளைக்கும், மனதிற்கும் வேற்றுமைகள் இருக்கிறதா? மனதின் ஒரு பகுதி மூளையா அல்லது மூளையின் ஒரு பகுதி மனமா? மனம், சித்தம், புத்தி இவைகளின் தள எல்லைகள் என்ன? இவற்றிற்கான அறுதியான பதிலை தெளிவாக அறிந்திருக்கிறோமா? சைவர்கள் ‘நினைவை’ ஆகாய அம்சம் என்றும், நினைவும், காற்றும் இணைவது ‘பாய் மனம் அல்லது பேய் மனம்’ என்றும், நினைவும் தீயும் புத்தி என்றும், நினைவும் நீரும் சித்தம் என்றும், நினைவும், நிலமும் அகங்காரமென்றும்…