போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு அரிசோனன் குறிப்பு:  விமானங்களின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி எழுதாமல் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே. பொதுவாக விமானங்கள் என்று எழுதினால் ரைட் சகோதரர்களிடமிருந்து தொடங்கி இன்றுவரை உள்ள பயணி “போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1”

அதிரியன் நினைவுகள் – 11

This entry is part 11 of 33 in the series அதிரியன் நினைவுகள்

எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன.  யூத மற்றும் அரேபிய  தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள்  தங்கள் பகுதியைத்  துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத  நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார்,  இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல்.   மன்னருடன் இருந்தவர்களில் சிலரும்  விபத்தில் மாண்டிருந்தனர்

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்

திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும்  மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது.

போன்ஸாய் – குறைவே மிகுதி!

போன்ஸாய் உருவாக்கத்தில் பொதுவான விதிகள் சிலவுண்டு. ஒரு போன்ஸாயின் எந்த இடத்திலும் அதை உருவாக்கியவரை பார்க்க கூடாது என்பது முதன்மையான விதி, அதாவது கிளைகளை வெட்டிய தழும்போ இலைகளை கத்தரித்த தடமோ கம்பிகளோ எதுவுமே பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது. போன்ஸாய்கள் ஒரு மெல்லிய துயரை பார்ப்போரின் மனதில் உருவாக்கவேண்டும் என்பதும் இதன் விதிகளில் ஒன்று .

மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்

‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும்  தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண “மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்”

வேராழத்தை காட்டுதல்

தே ஒரு இலையின் வரலாறு நூல் குறித்து      சில ஆண்டுகளுக்கு முன் வரை வரலாறு என்றாலே மனதில் பெரும் அலுப்பு தோன்றும். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. வரலாற்றை மிகச் சுவாரசியமாக வாசிக்கும் வண்ணம் எழுதப்படும் நூல்கள் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. ராமச்சந்திர குகா இதில் முதன்மையானவர். “வேராழத்தை காட்டுதல்”

அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?

கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.

மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?

மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள்.

பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?

ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.

இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?

பொருளாதார வளர்ச்சி என்றால் மண்டை காய வைக்கும் கணிதமும் பொருளியல் அளவாக்கங்களும் கொண்டு விளக்குவார்கள். இவர் சரித்திரமும் சேர்த்துக் கொண்டு சீனாவின் 19ஆம் நூற்றாண்டின் பட்டு ஏற்றுமதியையும் 20ஆம் நூற்றாண்டின் வங்கி வளர்ச்சியையும் ஆராய்கிறார்: தொடர்புள்ள கட்டுரை: What would count as an explanation of the “இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?”

சந்திப்பு

ஏதாவது ஒரு விதத்தில் அந்த பொறுப்பற்ற துணிவு இறுதிவரை தொடர்ந்தே ஆகவேண்டும். ஒருகால் அதன் முடிவு வெற்றியாகவும் இருக்கலாம். எதிரியிடமே நாங்கள் கரை சேர்ந்தது பற்றி தகவல் தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த அபத்த விளையாட்டில் லூயிஸை இழப்பது பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. மேலும் அப்போது எனக்கு மற்றொரு சிந்தனையும் உடனெழுந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று லூயிஸைச் சந்திக்க நேர்ந்தால், அந்த கணத்தில் மட்டுமே இந்த ஆட்டம் உண்மையிலேயே தொடக்கம் பெறும் என்றும் அத்தியாவசியமான, கட்டற்ற, அபாயகரமான எங்கள் கற்பனை நவிற்சி தோய்ந்த இலட்சியவாதத்திற்கான பரிகாரமாகவும் அது இருக்கக்கூடும் என்றும் நம்பினேன். உறக்கத்தில் அமிழும் கணத்திற்கு முன் எனக்கு ஒருவிதமான மனக்காட்சி தோன்றியது: லூயிஸ் ஒரு மரத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறான், எங்கள் அனைவராலும் சூழப்பட்டு, கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறான், பின்னர் முகத்தை முகமூடியை அகற்றுவதைப் போல் கழட்டுகிறான். கையில் தன் முகத்துடன் என்னையும், அவனது சகோதரனான பாப்லோவையும் ரோகேயையும் அணுகி, அதை அணிவித்துக் கொள்ளும்படி சைகை செய்கிறான். அவர்கள் இருவரும் மறுத்த பிறகு நானும் அதை அணிந்துகொள்ள மறுக்கிறேன், கண்களில் நீர் வரும் வரையில் சிரித்துக்கொண்டே. அதன்பின் லூயிஸ் தன் முகத்தை மீண்டும் அணிந்து கொள்கிறான்.

Auto-da-Fé (1931/35) : புனைவெழுத்தே தருமச் செயலாய்

இருவருக்கும் இடையில் உருவாகும் தகவல் தொடர்புப் பிழைகள் தாளவியலா இருண்ட நகைச்சுவையாக வெடிக்கின்றன. பக்கம் பக்கமாக இருவரது நனவோடைகளும் விரிகின்றன, பரஸ்பர வெறுப்பும் சந்தேகங்களுமாய். தெரீஸ் அவனது சொத்துக்களின் சொற்பத்தை நம்ப மறுக்கிறாள்; விடாமல் அவனைத் தன் பேரில் உயிலெழுதச் சொல்லி நச்சரிக்கிறாள். கீய்ன் தனது நூல்களுக்காக அஞ்சுகிறான், அவற்றை அவளிடமிருந்து காப்பாற்ற திட்டங்கள் போடுகிறான், நூல்களின் படைத்தலைவனாகப் பொறுப்பேற்று அவற்றை போருக்குத் தயார் செய்கிறான். நூல்களின் புத்தர் மவுனம் சாதிக்கிறார், ஜெர்மானிய தத்துவவியலாளர்கள் அடிபணிய மறுக்கின்றனர், ஃபிரென்சு சிந்தனையாளர்கள் எள்ளி நகையாடுவதோடு ஆங்கிலேயர்கள் இருக்கும் புத்தக அலமாரிக்கு அனுப்புகின்றனர், ஆங்கிலேயர்கள் நல்ல யதார்த்தமான புத்திமதி சொன்னாலும்…

கல்லறையின் மீதொரு தேசம் – 1

”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள். பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.

ஷியாவா? ஸுன்னியா??

ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும். இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம், அதே போல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு. ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவது போல…

ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம்

முடிவு நெருங்குவதை உணரும் ஹிட்லர், ஈவா பிரௌனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். ராணுவ அதிகாரி மோங்கேயிடம் ஹிட்லர், ”பெர்லினை இன்னும் எவ்வளவு நேரம் காப்பாற்ற முடியும்?” என்கிறார். ”ரஷ்யப் படையினர் சில நூறு மைல்கள் தூரத்திலேயே உள்ளனர். 20 மணி நேரம்தான் காக்கமுடியும்.” என்கிறார் மோங்கெ. ஹிட்லர் தான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்கிறார். பிறகு தனது பாதுகாவலர் குன்ஸியை((Gunze) ) அழைக்கும் ஹிட்லர், ~~நாங்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, எங்கள் உடல்கள் ரஷ்யப்படையிடம் கிடைத்தால், அதை மியூசியத்தில் காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்கள். எனவே எங்கள் உடல்களை உடனே எரித்துவிடவேண்டும்.” என்று தெரிவிக்கிறார். குன்ஷா (Günsche) 200 லிட்டர் பெட்ரோல் தயார் செய்து வைத்துக்கொள்கிறான்.

கொடும்பாலையில் மறுபடி துளிர்க்கும் ஜோராஸ்ட்ரியனியம்

உலகின் இரு பெரும் செமிதிய மதங்கள் சகிப்புத்தன்மை அற்றவை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றில் ஒன்று, இப்போது காருண்யம் என்பதே உலகுக்குத் தான் அளித்த கொடைதான் என்று பாவலா செய்து உலகரங்கில் தொடர்ந்து பெரும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய பிம்பம் நிலவத் தேவையான ஊடகப் பிரச்சாரங்கள், உலகைக் கொள்ளை அடித்துக் கொழுத்த செல்வந்த நாடுகளான யூரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் பாகனியத்தைப் பூண்டோடு அழிக்கத் தன் பிரச்சாரகர்கள் மூலம் பொய்களே நிறைந்த பிரச்சாரங்கள் என்று எல்லா வகை முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்னொன்று துவக்கத்திலிருந்தே கத்தியை, பெருங்கொலைகளை, ஆக்கிரமிப்பை, போரை, வன்முறையை நம்பி உலகெங்கும் பரவி இருக்கிறது, இன்றும் அதே வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, வெற்றி பெற்ற போர்த்தந்திரத்தை எதற்காகக் கைவிட வேண்டும் இல்லையா?

துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

சென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

ஈரானில் குடிமக்கள் இதழியல்

ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.