பிரம்மாஸ்திரம்

’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.
’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’
ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்?

மரேய் என்னும் குடியானவன்

உலக இலக்கியத்தின் தலை சிறந்தபுனைகதைப் படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக்கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது அரிய சிறுகதைகளில் ஒன்றான ”‘மரேய்’என்னும்குடியானவன்“ என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு …

என் தலைக்கான கொன்றை

நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன. அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.

ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்

சம்பள நாளன்று மாலையிலேயே முகம் தெரியாத சில தலைமறைவு மனிதர்கள் கிராமத்திற்குள் நுழைந்தார்கள்.  தங்களை கிராமத்தலைவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மக்களை மிரட்டினார்கள். ….தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்துக்குப் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் வீணாகத்தான் போகப்போகிறது என்பதைக் கிராம மக்கள் உடனே புரிந்துகொண்டனர். ’காட்டிலிருந்து வந்திருக்கும் முரட்டுத் தோற்றம் கொண்ட அந்த மனிதர்கள், இரவு நேரத்தில் கிராமத்திற்கு வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்.  தலைமறைவு அரசாங்கத்தின் பெயரால் தங்களிடமிருந்து திருடுவதுதான் அது.அவர்களை எதிர்த்துப் போராடுவதில் பயன் ஏதுமில்லை.  அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தார்கள்.

விமான தளத்தை விற்ற சிறுவன்

டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே {அஸ்ஸாம்,நாகாலாந்த், மேகாலயா போன்றவை}உரிய வித்தியாசமான தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் …

விரிசல்

’இப்படி வேர்த்திருச்சே ஆச்சி…சரி சரி….எதுன்னாலும் மொதல்லே இதைக் குடிங்க’’
என்றபடி செம்பை அவள் கையில் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக்கொண்டு முழுச்செம்புத் தண்ணீரையும் தொண்டையில் அப்படியே சரித்துக்கொண்ட சாலாச்சி, முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு தன்னை ஓரளவுக்கு நிதானப்படுத்திக்கொண்டாள்.

முகமூடி

‘’ஏங்க்கா இப்படி அலட்டிக்கறே? அதுதான் உன்னோட செல்லப் பிள்ளை – அந்த ’முகமூடி’ கிட்டே குசுகுசுன்னு இந்தியிலே பேசி பக்காவா ஏதோ ஏற்பாடு பண்ணி வச்சிருக்கே போல இருக்கே.”

துக்கம்

பிரதிபா தன் தாயை இழந்துவிட்டாள் என்ற இந்தச் செய்தி, ஒருவருக்கு உடல் நலம் நன்றாக இருக்கிறது என்றோ, சுமாராக உள்ளதென்றோ அற்பமான செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைப் போன்றதுதானா? அதற்குரிய மதிப்பு இவ்வளவுதானா? மேலும் இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், அவள் மட்டும் தனியாக இருக்கும்போதுதானா அம்மா போய்விட்டாள் என்ற செய்தியை அவள் அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடிதம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் வந்திருக்கக்கூடாதா?

அடவியும் அந்தேரி மேம்பாலமும்..

சுய புலம்பல்களும்,தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள்

தன் வரலாற்றையும் தான் அறிந்த வேறொருவரது வரலாற்றையும் புனைவுப்பாணியில் நாவலாக்கித் தரும் போக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்று வருகிறது. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப்பெற்றிருப்பது திரு அ முத்துலிங்கம் அவர்களின் ’உண்மை கலந்த நாட்குறிப்புக்கள். ’உண்மை கலந்த’ என்னும் நூலின் முன்னொட்டே இது ஒரு தன் வரலாறு என்னும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. ’உண்மையோடு பின்னிப் பிணைந்திருக்கும் அந்த நாட்குறிப்புக்களைத் தான் கையாண்டிருக்கும் உத்திகளாலும் நுட்பங்களாலும் செழுமைப்படுத்திப் புனைவு இலக்கியமாக அளித்திருக்கிறார் முத்துலிங்கம்.

காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]

சரோஜா பாட்டி , காளிபரி என்ற இடத்துக்கு முதலில் சென்று காளையைத் தேடிப்பார்த்தாள். நகரத்தின் அந்தப் பகுதியில் காளைக்கு நிறைய பக்தர்களும் ரசிகர்களும் இருந்தார்கள். அவர்கள் அதனிடம் மரியாதை கொண்டவர்கள்;அன்போடு உபசரிப்பவர்கள். அங்கே அதைக் காணாமல் பின்னும் தேடிக்கொண்டு ஆற்றங்கரைப்படித்துறைக்குச் சென்றாள் அவள். காளையின் கூட்டாளிகள் சில பேரை அங்கே பார்க்க முடிந்தது. ஆனால்….அந்தக்காளை மட்டும் எங்கும் தென்படவில்லை.

ஜெயகாந்தனின் பெண்கள்

தான் ஆண் என்ற மேட்டிமைத்தனம் சிறிதும் இன்றி “கணவன் என்றும் காதலன் என்றும் சகோதரன் என்றும் தந்தை என்றும் உன்னைச்சுற்றியுள்ள எல்லா ஆண்களுமே இராவணர்கள் மட்டுமே” என்று ‘சுந்தர காண்டம்’ நாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்த ஒரே ஆண்படைப்பாளி தமிழ் இலக்கியப்பரப்பில் ஜே கே ஒருவர் மட்டுமே…

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள் , திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூடராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவுகூ̀றப்படுவதில்லை.

ஒழிமுறி – உறவெனும் புதிர்

தொழில்நுட்ப உத்திகள் மலிந்த இன்றைய திரை உலகிலும் கூடக் கதையும், திரைக்கதை அமைப்பும், கூர்மையான உரையாடல்களும் வலுவாக இருந்தால் ஒரு படத்தால் மொழி கடந்தும் ஒரு பார்வையாளனைக் கட்டிப்போட முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கும் ஒழிமுறி, ஒரு கதையின் படம்; ஒரு கதாசிரியனின் படம்; உரையாடல்களாலும் அவை முன் வைக்கும் எளிய தருக்கங்களாலும்,வாழ்வியல் உண்மைகளாலும் தொடுக்கப்பட்டிருக்கும் படம்.

’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’

வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை' முன் வைத்து…

1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.