கென் சரோ விவா: கருகிய நிலமும் கலகக் குரலும்

ஓகோனி உரிமைகள் மசோதா திறமையற்ற உள்நாட்டு காலனித்துவத்தை முற்றிலுமாக நிராகரித்து, நைஜீரியாவில் ஒரு புதிய ஒழுங்கிற்கு அழைப்பு விடுத்தது; அந்த ஒழுங்கில் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் விவகாரங்களுக்கு முழுப் பொறுப்பைக் கொண்டிருக்கும்; நைஜீரியாவின் பல்வேறு மக்களிடையேயான போட்டி நேர்மை மற்றும் நியாயமானதாக இருக்கும்; இதன் மூலம் அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நாட்டின்  முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.

காசு பணம் துட்டு மணி மணி!

யூபிஐ (Unified Payments Interface) வந்தபிறகு சில்லறை தேடும் அவசியமே இல்லையே. என்ன தொகையாக இருந்தாலும் சரியாக அனுப்பிவிடுகிறோம். சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் என்று கடைக்காரர் சொல்ல வேண்டியதில்லை. நோட்டைக் கொடுத்து சீட்டு வாங்கிவிட்டு நடத்துநரிடம் இருந்து சில்லறை வருமா என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதுவல்லவோ புரட்சி

மாறாத வேர்கள் நகரும் பாதைகள்

இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது அல்லது சிதைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. அவற்றின் பயண இலக்கு மாற்றம் பெற்றுள்ளது. நகரங்களைப் போன்று அபரீத நுகர்வு கலாச்சாரத்தில் கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போன்று, பெருவணிக  நிறுவனங்களின் கழுகுப் பார்வைக்குள் கிராமங்களும் இன்று வீழ்ந்து கிடக்கின்றன.   

மா பெறும் தேடல்

காட்டுக்குப் போகும் ராமனைப் பார்த்து பசுக்கள் அழுதனவாம். அதன் கன்றுகள் அழுதனவாம். அன்று மலர்ந்த பூக்கள் அழுதனவாம். நீர்நிலையில் இருக்கும் பறவைகள் அழுதனவாம். கள் ஒழுகும் மரங்கள் அழுதனவாம். யானைகள் அழுதனவாம்.  போரில் பயன்படுத்தப்படும் தேர்களின் தேர்க்காலில் கட்டப்படும் குதிரைகள் அழுதனவாம்.

கூட்டாட்சி தகுதிபெற்ற சுகாதார மையங்கள் (FQHC)

This entry is part 28 of 17 in the series பொது நலம்

1960-களில் அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் “வறுமைக்கு எதிரான போர்” (War on Poverty) திட்டத்தின் கீழ் முதன்முதலில் ‘சமூக சுகாதார மையங்கள்’ (Community Health Centers) உருவாக்கப்பட்டன. மருத்துவ வசதி குறைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

திரும்பும் பயணம்

This entry is part 8 of 10 in the series கொலம்பஸ்

நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?

உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பொழுதே வார்த்தைகளை வடிவமைக்கும் முறையைக் கொண்டு ஒரு குறியீட்டை/முத்திரையை அதற்குள் கிளாட் பதித்து விடுவதால் படிப்பவர்களால் கண்டுபிடிக்க இயலாது. உரையை ஆய்வு செய்யும் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தால் மட்டுமே அந்த குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் இதை ஒரு வகையில் “டிஜிட்டல் கைரேகை” என்றும் புரிந்துகொள்ளலாம்.

கொலம்பஸும் கொலம்பியாவும்!

This entry is part 7 of 10 in the series கொலம்பஸ்

1486-ல் சலமங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மோதல்  19-ம் நூற்றாண்டில் வாஷிங்டன் இர்விங் எழுதிய நாவல் பாணி வரலாற்று நூலில்,   வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது. சலமங்காவில் இருந்த முட்டாள்தனமான மதகுருமார்கள் “பூமி தட்டையானது; அதனால் கொலம்பஸின் கப்பல் கடலின் முனையில் கீழே விழுந்துவிடும்” என்று வாதிட்டதாகவும், புத்திசாலியான கொலம்பஸ் “பூமி உருண்டையானது” என்று அவர்களிடம் போராடி நிரூபிக்க முயன்றதாகவும் இர்விங் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கினார்.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு – அறிவின் புதிய போராட்டம்

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

மெடிக்கேர் (Medicare) 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூட்டாட்சி சுகாதாரக் காப்பீடு

This entry is part 27 of 17 in the series பொது நலம்

1960களின் நடுப்பகுதியில், அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பான்மையினருக்கு தனியார் சுகாதாரக் காப்பீடு கிடைப்பது கடினமாக இருந்தது — வயதான பின் நோய் அபாயம் அதிகரிப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களைத் தவிர்த்தன அல்லது மிக அதிக பிரீமியம் கோரின. இந்த இடைவெளியை நிரப்ப, 1965-இல் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன்(Lyndon B. Johnson) இன் கீழ் மெடிக்கேர் சட்டமாக்கப்பட்டது. முதியோர்களின் மருத்துவச் செலவை ஈடுசெய்வதோடு, தனியார் சந்தையில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பாரத்தையும் குறைப்பதே அதன் நோக்கம்.

பித்தனோ பேதையோ!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

ஜோஸ் முஜிகா – எளிய வாழ்க்கையின்  ஒரு குறியீடு  

பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை  தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று,  ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது.  இந்நிலைக்கு மாறாக,  தனது வாழ்க்கை தரத்தை  பிற நாடுகளின்  அதிபர்களுடைய வாழ்க்கைத்  தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா.

தயங்கி தயங்கி நடந்த புரட்சி – மேலை உலகம் தன் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க கற்றுக்கொண்டது எப்படி?

மிஸ்டர் கார்டர் சில நொடிகள் பதில் சொல்லவில்லை. “மதம் இல்லாத அறிவு என சொல்லத் தேவையில்லை, வெறும் மதம் மட்டுமே அறிவு இல்லை என பார்ப்பது”  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். அவருக்கே அது போதுமானதாக இல்லாமையால் எச்சில் விழுங்குவதை போல விழுங்கிக் கொண்டார். பிறகு யோசித்து “சில சமயம்,” என்றார் அவர் மெதுவாக, “ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறாரோன்னு தோணும்.”

நேர்க்காட்சி நிரூபணங்கள்

நான் இங்கு கூறிய மூன்று பரிசோதனை முடிவுகளும் இயற்கையின் குரலிலேயே பேசுகின்றன : “ புதிய புலங்கள், விசித்திரமான துகள்கள், துணை பரிமாணங்கள், பிற சீர்மைகள், இணை பிரபஞ்சம், இழைகள் மற்ற பிற – கனவு காணாதீர். நம்முன் உள்ள புதிரின் பகுதிகள் எளியவை: பொது சார்புக் கொள்கை, துளிம இயக்கவியல் மற்றும் பொது மாதிரி கொள்கை. நம்முடைய அடுத்த அடிவைப்பு என்பது இம்மூன்றையும் எப்படி சரியாக இணைப்பது மட்டுமே”

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்காலத்தின் வெளிப்பாடாக இறந்தகாலம்

இந்திரா பார்த்தசாரதியின் இலக்கியப் படைப்புகள் பெருமளவு புத்தெழும் இந்தியக் குடியரசின் குடிமக்கள் எதிர்கொள்ளும் சமகால சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கின்றன, மேலும் கதைக்களம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் — முக்கியமாக அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகள் — மத்தியில், ஆசிரியர் தாமே வாழ்ந்து பணியாற்றிய துடிப்பான தலைநகர் புது டெல்லியில் நிகழ்கிறது என்பதைத் தாண்டி, அவரது பல படைப்புகளில் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தெளிவாக முன்வைக்கப்பட்ட (அரை)வரலாற்றுப் பொருண்மைகள் பற்றிய வெளிப்படையான குறிப்புகளும் உள்ளன; இவை அவரது தனிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தின்படி மீள்-எழுதப்பட்டவை.

கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை  

இறக்கும் தருவாயில், கம்பனின் கும்பகர்ணன் இராமனிடம், “உன்னிடம் இரண்டு வாக்குறுதிகளை கோருகிறேன். முதலாவதாக, சிதைந்துபோன என் உடலை என் எதிரிகள் பார்த்து எள்ளி நகையாடுவதை நான் விரும்பவில்லை; எனவே, உன்னுடைய அம்பால் என் உடலை அப்படியே கடலுக்குள் தள்ளிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, என் அன்பிற்குரிய தம்பி விபீஷணனை உன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கிறேன்; ஏனெனில், உன்னோடு போரிட இராவணன் போர்க்களத்திற்கு வரும்போது, அவனுடைய முதல் இலக்கு விபீஷணனாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.” என்று உரைத்தான்.[3]

வாசகர் பொறுப்பு

கம்பனுடைய காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட உரையாசிரியர்களை, சிருஷ்டி நூல்கள் ஒன்றும் இயற்றவில்லை என்ற காரணத்துக்காக ஒதுக்கிவிட முடியாது. வைஷ்ணவ நூல்களுக்கு (பிரபந்தம்) வியாக்கி யானம் செய்தவர்களைக் காட்டிலும், அவர்கள் காலத்துக்கு முன்னாலும் யாரும் ஒன்றும் சாதிக்கவில்லை; இனிமேலும் சாதிக்க முடியாது. தங்களுடைய பரந்த சமஸ்கிருத அறிவைத் தமிழின் எல்லை கண்ட புலமையோடு இணைத்து இவர்கள் ஆற்றியுள்ள அற்புதங்களுக்கு ஈடு உலக இலக்கியத்திலும் காணமுடியாது.

அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு: விருப்பமான மருத்துவர் அமைப்பு

This entry is part 25 of 17 in the series பொது நலம்

உடல்நல பாதுகாப்பு நிறுவனங்களில் (HMO) இருப்பது போல PPO-வில் ஒரு கட்டாய முதன்மை மருத்துவர் (Primary Care Physician – PCP) தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஒரு தோல் நிபுணரையோ, இதய நிபுணரையோ, எலும்பு நிபுணரையோ — யாரையும் நேரடியாகச் சந்திக்கலாம். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்குப் பிடித்த மருத்துவர் ஒருவர் வலையமைப்பில் இருந்தால், இடையில் யாரும் பரிந்துரைக்க வேண்டியதில்லை.

கனவுக்கென்ன விலை?

இந்தப் பங்குச் சந்தை நுழைவினால் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த / பார்க்கும் ஊழியர்களில் 4,400 பேர் மில்லியனர்களாகவும் 400 பேர் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் இத்தகைய வளர்ச்சி இங்கு ராக்கெட் வடிவமைப்பாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள், அங்குள்ள உணவகங்களில் பணிபுரிபவர், ராக்கெட் கடலில் விழும் பொழுது அதை எடுத்துக் கரை சேர்பவர் என்று மிகப் பரவலாக இந்த மதிப்புக்கூட்டு நடந்திருப்பது பெரிய ஆச்சரியம். இத்தனை பேர் ஒரே நிகழ்வின் மூலம் பெரும் செல்வந்தர்களாக மாறுவது அரிதான ஒன்று. அதை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. 

உடல்நலக் காப்பீடுகளின் விற்பனை சந்தை

This entry is part 24 of 17 in the series பொது நலம்

அரசாங்க விதிகளின்படி, காப்பீட்டுச் சந்தையில் மானியம் பெற வறுமைக்கோட்டின் 100% மேல் வருமானம் இருக்க வேண்டும். ஆனால், இந்த 10 மாநிலங்களிலோ மெடிகெய்ட் பெற வருமானம் மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் (எ.கா: அலபாமாவில் 18%  மத்திய அரசின் வறுமைக்கோட்டின் கீழே வருமானம் இருக்க வேண்டும் என்அ (FPL) என்ற வரம்பு. ஆனால் சந்தையில் காப்பீடு கிடைக்க ஊதியம் கஒரு குறிப்பிட்ட அளவாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிரிமியம் கட்ட இயலும்.

மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.

சாகசக்காரிகளின் ஆலங்காடு

இத்தொகுப்பு காரைக்கால் அம்மையாரையும் அவர் ஜயபாஸ்கரன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாடுகிறதென்றாலும் அம்மையாரையும் விஞ்சிவிடும் ஓர் ஆளுமை இத்தொகுப்பில் ஆச்சரியமான விதத்தில் பதிவாகி இருக்கும் விதமே இத்தொகுப்பின் மணிமகுடம் எனலாம். கவிஞரின் பெரியம்மா ஒரு அழகான சிறுகதைப் பாத்திரத்தின் ஆழத்துடன் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் பரிணமிக்கிறார். சமயோஜிதர், அனுபவத்திலிருந்து வாழ்வதற்குத் தேவையான ஞானத்தை மட்டுமே இயல்பாக வடிகட்டிக் கொண்டவர்.

சநாதனச் சர்ச்சை – ஒழிக்க வேண்டியது எது?

சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு என்பது பிராமணர்களால் மட்டுமே கடைபிடித்துத் திணிக்கப்படுகின்ற ஒன்றா என்றால் அக்கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான். இன்றைக்குக் கேள்விப்படும் செய்திகளில் பெரும்பாலும் மற்ற உயர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் தமக்குக் கீழ் இருப்பவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளாகத்தான் இவை இருக்கின்றன. அதனால் இந்த ஏற்றத்தாழ்வுக்கான போராட்டத்தை இன்னும் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்துவது எந்த விதத்தில் சரியாகும்?  

கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்

This entry is part 2 of 10 in the series கொலம்பஸ்

கேப்டன் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறிய அறைகள் இருந்தன. சாதாரண மாலுமிகளுக்கும் மற்ற பயணிகளுக்கும்  தனி இடம் கிடையாது. அவர்கள் கப்பலின் தரைத்தளத்தில் (Deck) ஆங்காங்கே  குளிரோ,  கடுங்காற்றோ, பனியோ, உப்பு நீர் அறைதலோ எதுவானாலும் அங்கேயே படுத்துக்கொள்வார்கள்.   மழையின் போது மட்டுமே சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடுங்கிக்கொள்வார்கள்,

கோலமும் குணங்களும் அற்ப மாயைகளோ?

நம்முடைய உடலும், மனம் அல்லது மூளை அல்லது தன்னுணர்வு எப்படி செயல்படுகின்றது என்பதைப் பற்றி நாம் அறிந்துள்ளது மிகவும் குறைவு. ஆனால் அதைப் பற்றி அறிய மிகுந்த ஆவலும் கொண்டிருக்கிறோம். அறிதல் குறைந்து ஆர்வம் மிகுந்து இருக்கும் இந்த நிலைதான் ‘தன் உணர்வின் சிக்கல்கள்’ என்ற கருத்தைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற அறிவுத்தளத்தை   சிலருக்குத் தருகிறது. அதாவது இடி மின்னல்களை அறிந்து கொள்வது எவ்வளவு கடினமோ அதைப்போலத்தான் தன்னுணர்வை புரிந்து கொள்வதும் என்ற கருத்து இதிலிருந்து தான் எழுந்து வருகிறது.

மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா? 

சில சமயங்களில் இந்த வழக்கு விசாரணை ஒரு சட்ட நடவடிக்கையாகத் தோன்றாமல், தொழில்நுட்பம், பிரபல கலாச்சாரம், பெருநிறுவனப் போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மோதலைப் போலவே இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டரீதியான வாதங்களுக்கு அடியில் இது வெறும் ஒரு நிறுவனப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் கூட்டணியின் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு

This entry is part 23 of 17 in the series பொது நலம்

1993 செப்டம்பர் 22 அன்று, கிளிண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் கட்டாயக் காப்பீடு; வேலையளிப்பவர்கள் அனைவரும் தங்கள் ஊழியர்களின் காப்பீட்டு செலவில் 80 சதவீதம் பொறுப்பேற்றல்; மாநில அளவில் காப்பீட்டுச் சந்தைகளை ஒருங்கிணைக்கும் பிராந்தியக் கூட்டமைப்புகள்; நோயாளியின் வயது அல்லது உடல்நிலையைப் பொறுத்து அதிக விலை வசூலிக்கத் தடை; மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தும் வரம்புகள்.

கொலம்பஸ்

This entry is part 1 of 10 in the series கொலம்பஸ்

கொலம்பஸிற்கு வைஸ்ராய், அட்மிரல் மற்றும் கவர்னர் போன்ற பட்டங்களும், அதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படுமென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய நிலப்பரப்புகளில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பில் 10% கொலம்பஸிற்கு வழங்கப்படுமென்றும், எதிர்காலத்தில் அவர் கண்டுபிடித்த நிலப்பரப்புகளிலிருந்து கிளம்பும் எந்த வணிகக் கப்பலின் செலவிலும் எட்டில் ஒரு பங்கு (1/8th) அளிக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் லாபத்திலும் எட்டில் ஒரு பங்கு அவருக்கு அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு: வாக்குறுதிகளும் யதார்த்தங்களும்

This entry is part 22 of 17 in the series பொது நலம்

சில திட்டங்கள் அந்த அந்தப் பிராந்தியங்களுக்கு ஏற்ற வண்ணமும், சில மாநிலம் முழுமைக்குமானதாகவும், சில தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுபவையாகவும் இருக்கின்றன. . இந்த வகையில் பல தெரிவுகள் இருப்பது பயனர்களுக்கு ஒருவகையில் வரமாகும். ஆனால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதைக் கொடுக்கும் சாபமும் கூட.  

பொய்மையின் பக்தன்

தந்தை, தாய் மற்றும் அவர்களது மூத்த மகனுக்கு இடையிலான அந்த முக்கோண உறவுதான் இந்த வியக்கத்தக்க புத்தகத்தின் மையக்கரு. ஏமாற்றங்களும், அதே சமயம் வசீகரமும், ஆபாசமும், வீண் பெருமையும் கொண்ட தந்தை, சிறுவன் மிமியை ஒரே நேரத்தில் அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறான். தந்தையின் கலை லட்சியங்கள் நிறைவேற எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மிமி, அந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள ‘The Drinkers’ ஓவியத்திற்காக நீண்ட நேரமும் வலியுடனும் முழங்காலிட்டு போஸ் கொடுக்கிறான்

“உடைமை வாழ்வியல் ” மற்றும் “இருப்பு வாழ்வியல்” முறைகள்

நவீன நுகர்வு கலாசாரம் வாழ்க்கையை தொடர்ச்சியான வாங்குதல் மற்றும் கைவிடுதல் என்ற செயல்முறையாக மாற்றுகிறது. பொருட்கள் நீண்டகால பயன்பாட்டிற்காக அல்லாமல், குறுகிய கால சுகத்தை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மனிதன் உண்மையான திருப்தியை அனுபவிப்பதற்குப் பதிலாக தற்காலிக தூண்டுதல்களின் பின்னால் ஓடுகிறான். இத்தகைய நுகர்வுச் செயற்பாடு மனித வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை மாற்றி உடனடியாக கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றுகிறது.

ஒரு நூற்றாண்டு நினைவுகள் – இதழியலாளர் மூவர்

வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக  சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 ஆவுடை அக்காள் காட்டும் மானிட விடுதலை

கவிஞர், ஞானி என்ற பார்வைகளில் போற்றப்படும் ஆவுடையக்கா செங்கோட்டை அக்கிரகாரத்தில் ஆசாரமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். திருமண வாழ்க்கை, யார் தன்னுடைய கணவன், என்பது பற்றிய தெளிவு என்று எதுவுமறியாத பருவத்தில், வயதுக்கு வருமுன்பே பெற்றோர் அவளுக்கு அண்டை வீட்டுப் பையனை மணமுடித்து வைத்தனர். ஒரு நாள் தன் வீட்டில் அழுகையும், அதிகமான வருத்தமும் தொடர்ந்திருக்க, ஆவுடை அக்கா தாயிடம் அதற்கான காரணம் கேட்கிறாள். அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்து விட்டான் என்று தாய் சொல்ல. அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்ததற்கு நாம் ஏன் அழ வேண்டுமெனக் கேட்கிறாள்.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

ஒவ்வொரு நாட்டின் அரசும், தங்கள் நாணயத்தின் மதிப்பு என்று ஒன்றைச் சொல்ல, அதை அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் ஏற்க, ஒரு பொருண்மையான பொருளின்றி, அதாவது, தங்கம் போன்ற ஒரு அடிதாங்கியின்றி, நாணய மாற்று விகிதம் உருப்பெற்றது. நாணயக் கொள்கையின் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய வங்கிகளுக்குத் தேவையான நீர்மையை இது வழங்கினாலும், தங்கம் முன்பு விதித்திருந்த கட்டுப்பாடான ‘நாணய வழங்கல்’ (Money Supply) இல்லாமல் போய், நாடுகள் அதிக நாணயங்களை அச்சிடத் தொடங்கின.

ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே:  விமலாதித்த மாமல்லன் சில குறிப்புகள்

அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.

தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது

புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன. முன்னொரு காலத்தில் அறிதல் என்பது “தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது”

இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையும் தொடரும் மனநலப் பிரச்சினைகளும்

வறுமையின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இத்தகைய இடப்பெயர்வு நடைபெற்றாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இடைத்தரகர்களின் மூளைச் சலவையால்  இவர்கள் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் மிகச் செல்வச் செழிப்பான நாட்டிற்குச் செல்ல இருப்பதாகவும், மிக அதிக சம்பளத்தை வருமானமாக ஈட்டப் போவதாகவும் நம்ப வைக்கப்பட்டார்கள். Girmit.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலார்களின் முதல் நிலை தரவுகள் இதனை உறுதிசெய்கின்றன

என் பெயர் பூனா (Buna)!

இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன். 

தென்னை மரத்தில்…

மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.

ஸ்டேஷனர்ஸ் கம்பெனி

This entry is part 3 of 10 in the series காப்பிரைட் கதைகள்

“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த  ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார்.

கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே

இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது  விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார்.

உலக நிகழ்வுகளும் ஊகச் சந்தையும்

உதாரணமாக இந்த நேரத்தில் இந்தியா வெல்லும் என்று நூறு டாலர் பந்தயம் கட்டி இந்தியா வென்றால் உங்களுக்கு கட்டிய நூறு டாலரோடு இன்னும் 125 டாலர் சேர்த்து 225 டாலர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் 100 டாலர் பந்தயம் கட்டலாம். நாளைக்கு இந்தியா வென்றால் 100 டாலருக்கு 150 டாலர் கிடைக்கும் என்று விலை மாறலாம். ஆனால் நாம் கட்டிய பந்தயம் அதனால் பாதிப்புக்குள்ளாகாது. அது போல நாம் ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான். அதிலிருந்து பின்வாங்க முடியாது. வாங்கி விற்கவும் வழி கிடையாது

தெஹ்ரானில்

சாலையின் ஓரத்தில் ஒரு சிறுவன் கிடந்தான்; அவன்மேல் ஒரு சாதாரண உடை அணிந்த  அதிகாரி அமர்ந்திருந்தார். அந்த அதிகாரியிடம் லத்தி எதுவும் இல்லை ஆனால் அவருடைய கை கீழே மேலே என்று நகர்ந்துகொண்டிருந்தது. நான் சற்றே அருகே சென்றேன். அவர் கத்தியால் அந்த சிறுவனை குத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து உடனடியாக ஓட தொடங்கினேன்.

ஆலிஸ் பால்

தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆலிஸ் மருந்தைக் கொடுத்துவிட்டிருந்தாலும், தனது ஆய்வு முடிவை அவள் பிரசுரிக்காமலிருந்தாள். அப்போதுதான் வந்தார் ஆர்தர் டீன் (Arthur Dean) எனும் அறமற்ற ஒருவர். ஆலிஸ் அங்கு பணிபுரிகையில் ஆர்தர் டீன் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். மிக மதிக்கப்பட்ட விஞ்ஞானியான அவர், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளையும் ஆய்வகங்களையும் அவரது மொத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

உயிரின் மூலக்கூறு சமச்சீரின்மையை எது தூண்டியது?

பண்டைய பூமியில், காந்தமயமான கனிமங்கள் எலக்ட்ரான் ஸ்பின்னிற்கும் மூலக்கூறின் வடிவத்திற்கும் இடையில் மூலமொழி ஒன்றை பேச வைத்திருக்கலாம். சமச்சீரின்மை சமநிலையிலான சிறிய வேறுபாட்டை தன்னைத்தானே வலுப்படுத்தும் உறுதியான வடிவமைப்புகளாக மாற்ற உதவியிருக்கலாம். அத்தகைய வடிவங்கள், ஆர்.ஏ.ஓ போன்றவற்றின் தொடர்ச்சியிலும் உருவெடுத்து, அவற்றின் உருவாக்கத்திற்கும், பின்னர் புரதங்களுக்கும், செல்களுக்கும் வழி வகுத்தன.

கூட்டு முயற்சியும் பொது நலமும்

This entry is part 19 of 17 in the series பொது நலம்

ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.

கீடம்

நமது அவதானிப்பு, கீடம் எனும் சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார் என்பதில் நிலை கொள்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நூலில் 4286 பாடல்கள். அதாவது 17,144 அடிகள். அங்கு எங்கும் கீடம் இல்லை. கம்பன் கீடம் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பானே எனும் வினா நமக்கு எழாமல் இராது. 10,368 பாடல்களில் இரு இடங்களில் கீடம் கண்ணில் பட்டது.

பீட்டரும் பக்கிரியும் : டேக் 5 புத்தக வெளியீடு – ஏற்புரை

சில சமயங்களில் புறத்தின் நிதர்சனங்களே கட்டுரையின் முடிவை நிர்ணயிக்கிறது. பெல்லோ கட்டுரை இறுதியில் அமெரிக்கத் தேர்தல் மிக மூர்க்கமாக தன்னை இருத்திக் கொள்கிறது, ஹெர்சாக் பாணியில் அமைந்தருக்கும். பெல்லோ வாசகி ஒருவள், அவருக்கு எழுதும் காத்திரமான கடிதத்தின் வழியே. க்ரஸ்நஹொர்கையின் சேடன் டாங்கோவப் பத்திப் பேசறச்சே பெய்லா டாரோடா படத்தையும் பேசறது இயல்பாகவே கட்டுரையின் போக்கே நிர்ணயிக்கிறது.

தன்மை விலையிடல் –  பேரம் பேசுதலின் நவீனப் பரிணாமம்!

நான்கு நகரங்களில் கிட்டத்தட்ட ஐந்நூறு நுகர்வோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தன்மை விலையிடல் காரணமாகக் குறைந்தபட்ச விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் கிட்டத்தட்ட 25% சதவிகித வித்தியாசம் இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றனர். வெறும் பலசரக்கு மட்டும் வாங்குவதில் இந்த வித்தியாசமானது ஒரு வருடத்தில் ஆயிரத்து இருநூறு டாலர் வரை செலவினத்தை அதிகமாக்கும் எனச் சொல்கின்றனர். இப்படி மாறுபடும் விலைகளை வைப்பதே ஒரு விதத்தில் பேரம் பேசுவதுதான்