பையப் பையப் பயின்ற நடை

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள்.   சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன.  சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”

மிளகு

சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.

முன்னுணர்தல்

என் முதுகில் அவர் பார்வை முள்போல உறுத்துவதாய் உணர்ந்தேன். இல்லை, முள் இல்லை. துரப்பணம். என் உடம்பில் துளைபோட்டு மறுபுறம் பாயத் துடிக்கிறது அது. வலி இல்லையே தவிர, குடைந்து நகரும் எஃகுக் கம்பியை என்னால் உணர முடிகிறது. பின்னாட்களில் அதற்கும்கூடப் பழகிவிட்டேன். என்றாலும், முதல் தடவை ஏனோ அச்சமும் குடைந்தது….ராவுடைய இரண்டு கண்களையும் பற்றிச் சொன்னேனல்லவா, இரண்டு கைக ளையும் சொல்ல வேண்டும். இடது கைச் சுட்டுவிரல், வாசிக்கும் வரிகளைத் தடவிய வாறு மெல்ல நகர்ந்தது – விரலால் வாசிக்கிற மாதிரி. கடந்துசெல்லும்போது புத்தகத்தின் விரித்த பக்கங்கள் பார்வையில் பட்டன. தொட்டால் ஒடிந்துவிடும்போலப் பழமையின் மஞ்சளேறிய தாள்கள்.

நேர்பு

என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை… ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை. பாவநாசம் சிவன் எழுதிய கல்யாணி ராகப் பாடலில் ஒரு வரி ‘நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி’ என்று வளரும். நேர்மை எனும் சொல்லை நினைக்கையில் சங்கரன் நம்பூதிரியின் குரலில் அந்த வரி காதில் நிறைக்கிறது. அச்சொல்மீது நமக்குக் கொதி ஏற்படுகிறது… அதேபோன்றே நேர்மையைத் தேடினாலும் நேர்மையில்லாதவர் என்போர் எவராயினும் அவர் அரக்கரே! அரக்கர் என்போர் கம்பராமாயணம் கூறும் இலங்கைக் குடிமக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் நிறைந்துள்ளனர். அடையாளம் கண்டாலும் நாம் காணாதவர் போல் நடிக்கிறோம். நேர்மை என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் என்று மாற்றி எழுதி விடலாம்.

வீடு

“ஆமா… நீதான் ஒன் மருமகன் பேச்ச நம்பணும்…” என்றாள் ஜூலி. அம்மாவிடம் அவள் அப்படி விட்டேற்றிதாகப் பேசினாலும் ‘ஒரு வேளை டேனியலு செயிச்சு வூடுவேண்டிக் குடுத்துட்டாருன்னா…” என்றொரு ஆசை ஜூலியின் மனதில் துளிர்க்கத்தான் செய்தது. அதற்காக ஸ்டீபன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? ஆம்பளைகளை அவ்வப்போது சத்தம்போட்டு அடக்கி வைத்தால்தானே குடும்பம் ஒழுங்காக ஓடும்? இதெல்லாம் ஜூலிக்குத் தெரியாதா என்ன?

“பசுக்களும் காளைகளும்” : என். கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு

Threw, grab, push, rear, stand, held, stumble, bend, slide…குறுநாவலின் இட நெருக்கடியில் அபரிமிதமான வினையாற்றல்கள் மிகுந்த கவனத்துடன் சிக்கனமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் பலம் அதன் உண்மையான மகோன்னதத்தில் இங்கு நமக்குக் காணக் கிடைகிறது. விவரங்களில் அது செலுத்தும் கவனம், மனிதனும் மிருகமும் ஒன்றை மற்றொன்று விஞ்ச முனையும் விளையாட்டில் முக்கியம் பெறும் அசைவுகளின் வரிசை முறையைத் தாளம்தப்பாமல், நிகழ்வை அது நிகழும் கணத்தில் விவரித்து வாசகருக்கு காட்சியும் ஒசையும் பிணையும் ஒரு காட்சி அனுபவமாகக் கடத்துவதில் வெற்றிபெரும் வியக்கத்தக்க அந்தக் கவனத்தை நம்மால் இங்கு இனங்காண முடிகிறது. நிதானித்து அந்த வரிசை முறையை அனுபவியுங்கள்…

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்

ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”

தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்

ரிக்வேதத்தில் காணப் படும் “சப்த சிந்து” நிலவியல் ஐயத்திற்கிடமின்றி துல்லியமாக சிந்துவெளி அகழாய்வு இடங்களையும் முத்திரைகள் கண்டெடுக்கப் பட்டுள்ள நிலப் பகுதிகளையும் விவரிக்கிறது. Satellite Imaging மூலம் ரிக்வேதம் கூறிய சரஸ்வதி நதி ஓடிய வறண்ட படுகையும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நிலவியல் குறித்த பிரக்ஞை தொடர்ந்து மகாபாரதம், புராணங்கள் வரையும் அதற்கப்பாலும் நீடிக்கிறது. ஆனால், தமிழில் உள்ள எந்தத் தொல் நூலிலும் சிந்து நதி, சரஸ்வதி நதிப் பகுதிகளின் நிலவியலுடன் மிக remote ஆகத் தொடர்புறுத்தக் கூடிய மிகச்சிறு குறிப்பு கூட இல்லை.

“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”

சிறு முடிச்சு, அல்லது சின்ன நிகழ்வு, அல்லது ஒரு கதாபாத்திரத்துக்கு நேர்ந்த அனுபவம் இதுபோன்றவைதான் எனக்குள்ளே கதைகளாகின்றன. வரலாறைத் தாங்கி நிற்கும் அந்தப் பாலமோ வளைவோ பாத்திரமோ இன்னபிற விஷயங்களோ மட்டுமே கதைகளாவதில்லை; ஆக முடியாது; ஆகவும் கூடாது. கதையினூடே நான் சொல்ல முனைவதற்கு வலுச்சேர்ப்பதற்கு வேண்டுமானால் அவை கதைக்குள் வந்தமர்ந்து உதவலாம். அதை நான் படைப்பாளியாக ரசித்து ஏற்பதுண்டு, சிலவேளைகளில் ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு.

ராம்கரூவின் வாரிசுகள்

துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.

கணக்கு

ஏதோ ஒரு அருவருப்பு அந்த இடம் முழுவதும் பரவி இருப்பது போன்ற உணர்வு. தன் உடல் முழுவதும் அந்த வெறுப்பு அலையாகப் பரவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் விஜி. அம்மா அவரைப் பார்த்து சிரிக்கும்போது ஏதோ ஒன்று தன்னுள்ளிலிருந்து விலகியது போலிருந்தது. அவள் தன் உள்ளுக்குள் இருந்த அவளின் பிம்பத்தை இனி மறுஆய்வு செய்ய வேண்டும் என நினைத்தாள்.

வியாழன்

‘’கிளட்ச், கியர், பிரேக் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணேன். பத்து தடவைக்கு மேலே கிளட்ச ரொம்ப ரொம்ப மெதுவா விட்டு வண்டி ஆஃப் ஆயிடுச்சு. கிளட்சை மெதுவா விடு. ஆக்சிலேட்டரை மெல்ல ரெய்ஸ் பண்ணுன்னு சொன்னேன். அவ சட்டுன்னு அதிகமா ஆக்சிலேட்டர் கொடுத்து வெடுக்குன்னு கிளட்சை விட்டுட்டா.’’

பேய் வீடு

இப்போது அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்,” பென்சிலை விளிம்பில் நிறுத்தியபடி யாராவது நிச்சயமாய்க் கூறலாம். அதன் பிறகு, வாசித்த அலுப்பில் எழுந்து தானே பார்த்துக் கொள்ளலாம். வீடு காலியாகக் கிடந்தது, கதவு எல்லாம் திறந்தபடி, ஜன்னல்கள்’ ஆ’வென்றபடி. காட்டுப் புறாக்கள் மகிழ்வுடன் கலகலக்கும்.

மகத்தான மங்கை

நான் அப்படியொன்றும் அழகியல்ல
நாகரிக யுவதிகளைப் போல
அளவெடுத்த அங்கங்கள் வாய்த்தவளல்ல
எனும் மெய்யுரைத்தால்,
நான் பொய்யுரைக்கிறேன் என்றே புறந்தள்ளுகிறார்.

எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்

கணினித் துறையில் சாதித்த பல பெண்களின் பெயரைப் பலரும் அறியக்கூட இல்லை. இக்கட்டுரையில் நாம் உரிய கவனம் பெறாத திறமைசாலிகளான சில பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.

அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல்

This entry is part 4 of 7 in the series பூமிக்கோள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சோலார் நெபுலா எனப்படும் வாயு மற்றும் துகள்கள் நிறைந்த சுழலும் பெரு மேகம், வரம்பு மீறிய ஈர்ப்பு விசையால் தகர்ந்து, பின் தற்சுழற்சியால் தட்டையான வட்டத் தட்டாகிப் பெரும்பாலான (99.8%) உட்பொருட்கள் தட்டின் மையத்துக்கு ஈர்க்கப்பட்டுப்பின் அந்த மையமே சூரியனாகியது.

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2

This entry is part 27 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்

தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?

ஓ! நாட்டின் வளர்ச்சி முதல் தேவை!. மற்றவையெல்லாம் பிறகுதான் என்றால் நான் கேட்கிறேன்! பாகுபாடுகளை நிவர்த்திப்பது எவ்வாறு வளர்ச்சியைத் தடைசெய்யும்? சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதும் வளர்ச்சியோடு சேர்ந்ததுதானே.

நஞ்சை வாயிலே கொணர்ந்து!

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார். சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  “நஞ்சை வாயிலே கொணர்ந்து!”

மின்னல் சங்கேதம் – 11

This entry is part 11 of 12 in the series மின்னல் சங்கேதம்

மோத்தியின் உடல் மாமரத்துக்குக் கீழே கிடந்தது. நிறைய பேர் வந்து பார்த்தார்கள். தொலைவிலிருந்து பார்த்துவிட்டு நடுங்கியபடி சென்றார்கள். எல்லோரும் ’கடவுள் அருளால நாம பிழைச்சிட்டோம்’ என்று நினைத்தார்கள். அவர்களிருக்கும் நிலைமையின் குரூரத்தைக் காண அவர்கள் கண்களைத் திறந்துவிடுவதற்காகவே மோத்தி உயிர் விட்டது போல ஆகிவிட்டது. அவளுடைய பிணம்தான் அபாயத்தின் முதல் அறிகுறி, நெருங்கிவிரும் இடியோசையின் முதல் முனகல்.

தடக் குறிப்புகள்

This entry is part 1 of 4 in the series தடக் குறிப்புகள்

“சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார்.

வேராழத்தை காட்டுதல்

தே ஒரு இலையின் வரலாறு நூல் குறித்து      சில ஆண்டுகளுக்கு முன் வரை வரலாறு என்றாலே மனதில் பெரும் அலுப்பு தோன்றும். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. வரலாற்றை மிகச் சுவாரசியமாக வாசிக்கும் வண்ணம் எழுதப்படும் நூல்கள் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. ராமச்சந்திர குகா இதில் முதன்மையானவர். “வேராழத்தை காட்டுதல்”

குரூப்ல கும்மி

அநேகமாக நாம் அனைவரும் ( அது என்ன, அநேகமாக, கண்டிப்பாகவே) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசி தகவல் பரிமாற்ற செயலிகளில் (வாட்ஸ்அப், டெலிகிராம்) ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்புகளில் இணைக்கப்பட்டிருப்போம்.(நாமாக எங்கே சேர்ந்தோம்). தாமாக கேட்டு இணைந்த தியாகிகளும் உண்டு. இதில் இரண்டு மொபைல் போனுடண், “குரூப்ல கும்மி”

அறிவுடைப் புதுப்பொருள்

இந்த இரு பரிமாண மின் பகுப்பிகள் பல்வகையான கரைப்பான்களில் (solvents) தங்கள் அணுக்களைக் கரைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை. வெளிப்புற நிலைகளான வெப்பம், பிஹெச் (pH-potential of Hydrogen) ஆகியவற்றைக்கொண்டு இந்தப் புதுப்பொருளின் அமைப்பு முறைகளை மாற்றமுடியும் என்பதால், குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படவேண்டிய மருந்துகளை மிகத் துல்லியமாக அங்கேயே உட்செலுத்த முடியும்.