இந்திரா பார்த்தசாரதி எனும் பேராளுமை

‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு.  அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.

இந்திரா பார்த்தசாரதியும் நாடகங்களும்

தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.

அருமணிகளின் அழகியல் தேர்ந்த ஆபரணச்சிற்பி

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் அளவில் பெரியதான உடையவர் ராமானுஜர் நாடகம், சமயம் சார்ந்த ஆவணங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சமகால பிரதிக்கான சிறந்த உதாரணம் எனலாம். காட்சிகளாக நிகழும் இந்த நாடகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு பாவனை என்கிற முன்னெச்சரிக்கையோடு இந்த நாடகத்தை அணுக வேண்டுகிறார் ஆசிரியர். ராமானுஜர் யாதவ பிரகாசரிடன் சீடராக இருந்து, வேதாந்த சர்ச்சைகளின்பால் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்த பிறகு, திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொள்ளும்போது, வைணவ குரு பரம்பரையின் ஆச்சாரியரான ஆளவந்தாரின் அறிமுகம் ஏற்படுகிறது என்கிறது ராமானுஜ திவ்ய சரிதம்.