இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு

நந்தன் கதை – இந்திரா பார்த்தசாரதிமுன்னுரையில் எழுதியது

இது நந்தன் கதைதான்; நந்தனார் கதை அல்ல. ‘ஆர்’ என்பது சிறப்பு விகுதி அன்று; சிலுவை. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சீறிய நந்தன், இந்த ‘ஆர்’ என்ற சிறப்பு விகுதிக்காக, ‘பார்ப்பானுடைய’ கைதட்டல் பெறுவதற்காக, நெருப்பில் எரிந்து போன சோகக் கதையைச் சொல்லுகிறது இந்த நாடகம். ‘பார்ப்பான்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் கூறவில்லை. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று நினைக்கிறவன் எவனாயிருந்தாலும் அவன் ‘பார்ப்பான்’. ‘பார்ப்பான்’ என்றால் ‘அறிவு ஜீவி’ என்று குழம்புகின்றவர்களும் இக்காலத்தில் இருக்கிறார்கள். ‘நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் உண்டோ’ என்று பாரதி கூறியிருப்பது அவர்களுக்கு வேதவாக்காக இருக்கலாம். சமுதாயப் பிரக்ஞையுள்ள எனக்கில்லை.

குருதிப்புனல் – அசோகமித்திரன்

1978-இல் எழுதியது

சென்ற மார்ச் மாதம் பார்லிமெண்ட் தேர்த்லில் ஜனதாவின் வெற்றி எப்படி நாடெங்கும் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கியதோ, அதே போலத் தமிழ் வாசகர்கள் உள்ள இடங்களில் எல்லாம் இவ்வாண்டு ‘குருதிப்புனல்’ நாவலுக்காக இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்திருக்கிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவரிடமிருந்து சீராகப் பல படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ் நாடக உலகுக்கு அவர் ஒரு புதுப் பரிமாணம் அளித்திருப்பவர். பல சிறுகதைகள், கட்டுரைகளும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. தரமான தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு உயிரூட்டி வளமூட்டி வருபவர்களில் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.


தமிழ் நவீன இலக்கியத்தில் ‘குருதிப்புனல்’ மூலம் பேசப்பட்ட பெயர் இந்திரா பார்த்தசாரதி. இவர் எழுதிய முதல் நாவல் ‘கால வெள்ளம்’. அரசியலில் நிகழும் சதுரங்கக் காய் நகர்த்தல்களைத் தமிழ் நாவல் களத்துக்குக் கொண்டு வந்தவர். நெருக்கடி நிலையைப் பின்னணியாகக் கொண்ட ‘மாயமான் வேட்டை’ மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஆக்கம். 1991-இல் சிறந்த இந்தியத் திரைப்படமாய் தேசிய விருது பெற்ற முதல் திரைப்படமான ‘மறுபக்கம்’-இன் கதை, ‘உச்சிவெய்யில்’ என்னும் இ.பா.வின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது. பாண்டிச்சேரி சங்கரதாஸ் நாடகப்பள்ளியின் இயக்குநராக நவீன நாடகத்தை முன்னெடுத்து சென்றார். ‘தமிழ் இலக்கியங்களில் வைணவம்’ என்னும் ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். ‘சாகித்ய அகாடெமி விருது’ உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ள இ.பா. போலந்து நாட்டு வார்ஸா பல்கலை.யிலும் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர். தற்போது அமெரிக்காவில் வாசம்.

பேட்டிக்கு ஒப்புக்கொண்டு,  வழிநடத்தி, ஒழுங்கு செய்து கொடுத்த இந்திரா பார்த்தசாரதிக்கு என் நன்றி. அவருடைய ஆழமான கருத்துக்கள் இணைய ஆர்வலர்களின் சிந்தையக் கிளறி செயலாக மாற்றும் வன்மை கொண்டது.


1964-இல் ஆனந்த விகடனில் எனது சிறுகதை ‘முத்திரைக் கதை’ யாக வெளிவந்தது. கரோல் பாக்கில் போய்க் கொண்டிருந்தபோது ‘மனித இயந்திரம்’ என்ற என் கதை பிரசுரமாகிய செய்தி தாங்கிய போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. என் சக அலுவலக நண்பர் புரபஸர் ஆறுமுகம் நச்சினார்க்கினியாரைத் தவிர வேறொரு ஜீவனையும் அறியாதவர். நல்ல கெட்டிக்காரர். பழைய தமிழிலக்கியம் ஆழமாகப் படித்தவர். நவீன இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்; pretension-உம் கிடையாது. ஆனந்த விகடன் போஸ்டரைப் பார்த்தவுடன் டாக்டர் ஆறுமுகம் ஏற இறங்க பார்த்து விட்டு, “என்ன கதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்” என்று கேட்டார். தமிழ்ப் பண்டிதர் வேறு மாதிரியாக காரியங்களில் ஈடுபடுகிறாரே என்று ஏக்கம் நிறைந்த ஒரு தொனி அவர் கேள்வியில் வெளிப்படையாகத் தெரிந்தது. தஞ்சாவூர் பாஷையில் ‘அந்தத் தெருவுக்கு போனவன பார்த்த மாதிரி’ என்று ஜானகிராமன் அடிக்கடி சொல்வார். செய்யத்தகாத காரியத்தை செய்த மாதிரி என்னைக் கருதினார். அவர் மேல் குற்றம் சொல்லவில்லை. ஆனால், பண்டித உலகத்துக்கும் எழுத்துலகத்துக்கும் அப்படியொரு இடைவெளி இருந்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கமலாம்பாள் சரித்திரம், பிரதாப முதலியார் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற தமிழ் நாவல் எழுதிய வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், மற்றும் பாரதியார் ஆகியோர் தமிழ் நன்கு படித்தவர்கள். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் கற்றறிந்தவர்கள். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து படித்தவர்கள். ஆனால், அதற்குப் பிறகு நவீன தமிழிலக்கியத்தில் எழுத ஆரம்பித்த பலருக்கு, பழைய தமிழ் இலக்கியத்தைக் குறித்து எதுவும் தெரியாது. ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். மணிக்கொடி எழுத்தாளர்கள், கு.ப.ரா போன்றவர்கள் இங்கிலிஷ் இலக்கியம் மூலம் வந்தவர்கள். தமிழ்ப் பண்டித உலகம் தனித்தே இருந்தது. அது never never land-இல் dravidian wisdom-இல் இருந்தார்கள். ஆகவே, தமிழில் பட்டப்படிப்பு படித்தால்தான் கதை எழுதவேண்டும் என்னும் அவசியம் கிடையாது. இலக்கியவாதிகளும், தமிழ் ஆசிரியர்களின் கதை என்றால் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். என்னைப் போன்றவரை ஒற்றனோ, planted guy from the other camp என்னும் பயத்துடனேயே நோக்கினார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பயங்கள் குறைந்து வருவது என்பது உண்மை.

அதே சமயத்தில் தமிழ் இலக்கியமும் தெரிந்த பிறகு எழுதவருவது நல்லது. இது தமிழ் சூழலின் மிகப் பெரிய குறைபாடு. வங்காளம் போன்ற வேறு எந்த மொழியிலும் இது போன்ற குறை இல்லை. என்ன காரணம் என்று தோன்றவில்லை. நவீன எழுத்துக்குக் காரணமான பலருள் பழங்கால இலக்கியங்களைப் படித்தவர்கள் ரொம்பக் குறைவாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

எனக்கொரு அனுபவம் ஏற்பட்டது. செலக்ஷன் கமிட்டி மீட்டிங் போயிருந்தேன். Dean-ஆகவிருந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடம் ‘என்ன ஸ்பெஷலைஸைஷேன்’ என்று கேட்டேன்.

‘பிற்கால நவீன இலக்கியம்’ என்று பதிலளித்தார்.

‘பிற்கால இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்?’

அவர் ‘தென்பாண்டி சிங்க’த்தைக் குறித்து ஆராய்ச்சி செய்திருப்பதாக சொன்னார். தற்கால இலக்கியம், மணிக்கொடி எழுத்தாளர்களைப் படித்ததுண்டா என்றதற்கு ‘இல்லை’ என்றார். ‘எனக்குக் கலைஞர் மட்டுமே போதும். அதுதான் தற்கால இலக்கியம்’ என்றார்.

தற்கால இலக்கியத்தை குறித்து எம்.ஃபில் செய்பவர்களும், என்னுடைய படைப்புகளை ஆராய்ச்சி செய்ய வருபவர்களும் என்னை அவ்வப்போது அணுகுவதுண்டு. என்னிடமே வந்து, ‘என்ன சார் எழுதியிருக்கீங்க?’ என்று கேட்பார்கள். தற்போதைய சூழலில் பழைய இலக்கியமும் தெரியவில்லை, புதிய இலக்கியமும் தெரியவில்லை என்னும் நிலையில் வந்து நிற்கிறோம்.

இ.பா.: க.நா.சுபரமண்யமும் புத்தகக் கடை வைத்திருந்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் படிக்கும்போது பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே புத்தகக் கடை வைத்திருந்தார். அப்படித்தான் முதன்முதலாக எனக்கு அவரைத் தெரியும். அவர் க.நா.சு. என்றூ தெரியாது. புத்தகக் கடையை விட்ட பிறகுதான் அவர்தான் க.நா.சு என்று தெரிய வந்தது. 1950-இல் அவரிடம் Aldous Hoxley புத்தகமொன்றைக் கேட்டேன். அவர் என்னிடம் Aldous Hoxley-இல் என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டார். ‘Ape and Essence’ படித்திருப்பதை சொன்னேன். அதற்கு முன்னால் படித்த இரண்டு புத்தகங்களையும் சொன்னேன். ‘Ape and Essence’ எதைப் பற்றி என்று கநாசு கேட்டார். இந்த மாதிரி குறுக்கு விசாரணை நடத்தினால் எத்தனை பேர் உங்களிடம் புத்தகம் வாங்குவார்கள் என்று எனக்கு சந்தேகம் வந்தது. ‘You are threatening people away’ என்றேன். பாடப்புத்தகம் மாதிரி வாங்க வருபவனிடம் கேள்வி கேட்டுத்தான் புத்தகம் விற்றால், யார் மீண்டும் வருவார்கள் என்னும் எண்ணம் எழுந்தது. கடைசியில் அந்த புத்தகக் கடை நஷ்டமடைந்து மூடப்பட்டுவிட்டது.

பிரக்ஞை உள்ளவர்கள்தான் புத்தகக் கடை வைத்திருந்தார்கள். ஆனால், தொண்டர் கடை என்பது வேறு. அவர் இன்னும் இருக்கார். இலக்கிய ஆசை அவருக்கு உண்டு. அவர் புத்தகம் அதிகம் படிக்க மாட்டார். பள்ளிக்கூடத்து ஆசிரியர் தி ஜானகிராமன், கு.ப.ரா. மற்றும் கரிச்சான் குஞ்சு எல்லோரும் அங்கே அமர்ந்திருப்பார்கள்.

இ.பா.: குழுக்கள் இப்போது அதிகரித்துவிட்டன. முன்பு எழுத்தாளர்களிடையே இவ்வளவு க்ரூப்கள் கிடையாது. இப்போது ஒவ்வொருவருடைய ஐடெண்ட்டிக்கும் தனித்தனி படை தேவைப்படுகிறது. அதனால்தான் பிரச்சினைகளும் வருகிறது. ஒருவர் போஸ்ட் மாடர்னிசக் கதை எழுதினால், இன்னொருவர், தான் எழுதுவதுதான் பின் நவீனத்துவம் என்றும் மற்றவர் எழுதுவது பின் நவீனத்துவம் அல்ல என்றும் சொல்லலாம். எல்லாமே ஒரு அடையாளப் பிரச்சினைதான். அதனால் சண்டைகளும் அதிகரித்திருக்கிறன. சிறு பத்திரிகைகளில்தான் ஏராளமான சண்டைகள். சிறு பத்திரிகைகள் எந்தக் காலத்திலும் சண்டை போடாமல் இருந்ததில்லை. இப்போது personality attacking-உம் அதிகரித்திருக்கிறது. ஆனால், எழுத்து, காலம் ஆகியவற்றில் it was more of an ideological quarrel. கோட்பாட்டுச் சண்டைகளாக இருந்தன. அது இலக்கியத்திற்கு லாபமாக இருந்தது. இப்போது தனிப்பட்ட முறையில் தாக்குவது, ஜாதியைச் சொல்வது, போன்றவை அதிகமாகப் போயிருக்கிறது.

இ.பா.: மற்ற இந்திய மொழியில் இருக்கும் கவிதைகளை விட தமிழ் மொழியில் வெளிவரும் கவிதைகளுக்குத்தான் embarassment அதிகம். தமிழ்க் கவிதை என்பதற்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. சங்க காலங்கள், கம்பராமாயணம், என்று இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. வேறு எந்த இந்திய மொழிக்கும் இந்த மாதிரி antiquity கிடையவே கிடையாது. அதிகமாக முன்னூறு நானூறு வருடங்கள்தான் சரித்திரம் கொண்டவை.

இதனாலும் தமிழ்ப் பண்டிதர்கள் நவீன கவிதைகளைப் படிப்பது கிடையாது. அவர்கள் மரபுக் கவிதையுடன் நின்றுவிட்டார்கள். கடைசியாக பாரதியை மட்டும் சேர்த்துக் கொண்டார்கள். பாரதியும் புதுக்கவிதை இல்லையே. நவீனக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் எல்லாமே சந்தத்துடன்தானே இருந்தன! புதுக்கவிதை எழுதுபவர் ஒருவரிடம் நானொரு கேள்வி கேட்டேன். ‘புதுக்கவிதையில் காவியம், epic எழுத முடியுமா?’ Wasteland-ஐ TS Eliot எழுதியிருக்கிறார். மில்டன் போல் நீண்டு இல்லாவிட்டாலும் வேஸ்ட்லாண்ட் காவியமாக கவிதையில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் நீண்ட கவிதை காப்பியங்கள் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

இ.பா.: அதெல்லாம் கவிதையே இல்லையே. படிமங்கள், புதிய கருத்துக்கள், நவீன கண்ணோட்டம், ஆகியவை இருப்பதுதானே புதிய கவிதை. தமிழில் எல்லாமே யாப்பில் அடங்கிடும். எதுகை மோனை இல்லாத கவிதைக்குச் செந்தொடை என்று பெயர். கருத்து பலம், style in thinking, சிந்தனை நடை ஆகியவை அழகாக அமையப் பெற்றதுதான் புதுக்கவிதை. இப்போது சுலபமாக எழுதுவதுதான் புதுக்கவிதை என்று ஆகிப் போயிருக்கிறது.

கணையாழி ஆரம்பித்த புதிதில் டில்லியில் அதனுடைய அலுவலகம் இருந்தது. கணையாழியின் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன். அவர் அரசாங்கக் குடியிருப்பில் வசித்தார். அதனால் அவருடைய வீட்டு முகவரி கொடுக்க முடியாது என்று என்னுடைய முகவரியைக் கணையாழிக்குக் கொடுத்திருந்தோம். படைப்புக்கள் எல்லாம் என்னுடைய வீட்டுக்குத்தான் வரும். அதில் பெரும்பாலும் நாளன்றுக்கு நூறு போஸ்ட்கார்டுகளாவது இருக்கும்; அனைத்தும் கவிதைகள்.

இ.பா.: நான் படிக்கலை. எல்லாத்தையும் (கணையாழி கஸ்தூரி ரங்கனுக்கு) அனுப்பி வைத்து விடுவேன். இதைச் சொல்லும்போது, இன்னொன்று நினைவுக்கு வருகிறது. கவிதைக்காக அப்போது ஒரு சிறிய, சைஸிலும் மிகச்சிறிய பத்திரிகை ஒன்று இருந்தது. ‘புள்ளி’ என்ற பெயரிலோ அல்லது அது போன்ற ஏதோ ஒரு பெயரிலோ வந்து கொண்டிருந்தது. ஸ்டாம்பை விட கொஞ்சம் பெரியதாக இருக்கும். நண்பர் ஒருவர் என்னுடன் டில்லியில் தங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பத்திரிகைய எடுத்து ஷேவ் செய்ததை, எடுத்துப் போடுவதற்கு பயன்படுத்திவிட்டார். அன்றுதான் போஸ்ட்டில் வந்த பத்திரிகை அது. ‘என்னப்பா இது… பத்திரிகையில் செய்கிறீர்களே?’ என்றேன். ‘கிழிஞ்ச பேப்பர் என்றுதானே நினைத்தேன்’ என்கிறார் அவர். நவீன கவிதை என்பதே ஜோக்காக ஆகிப்போனது.

புதுக்கவிதை நல்ல பாரம்பரியம் உடையது. பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் என்று மூத்த கவிஞர்கள் இருந்தார்கள். இப்போது கவிதை பாருங்க! உடனே சினிமாவுக்குத் தாவிடறான். லான்ச்பேட் மாதிரி கவிதை எழுதுகிறார்கள். எனக்கு உண்மையிலே ஈடுபாடு கவிதைதான், இலக்கியம்தான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டாலும், சாப்பாட்டுக்காக சினிமாப் பாடல் எழுதுகிறேன் என்று புலம்பி மட்டும் விடுகிறார்கள்.

இ.பா.: நாம் எழுதுவது நம்மை கன்வின்ஸ் செய்தால் போதுமே! நான் பிஜேபி அல்ல; காங்கிரஸ் அல்ல; நான் சொல்ல விரும்புவதில் நம்பிக்கை உடையவன், அப்படியென்று நம்பிக்கை இருக்க வேண்டும். பின்னாளில் விமர்சனம் வருமே என்று எழுதிக் கொண்டிருந்தால் எழுத்தில் ‘sub-conscious constraints’ வந்துவிடும். அதனால் அப்படியில்லாமல் முதலில் you have to convince yourself. நீங்கள் முத்திரைகளைக் குறித்து கவலை கொள்ளவில்லை என்று இருக்கவேண்டும். அந்த ஒரு கன்விக்ஷன் இருந்தால் போதும். எழுத்து தானே அமைஞ்சுடும். முத்திரை குத்துவாங்களே என்று பயந்து கொண்டே போனால், பொலிடிகலி கரெக்டா எழுதற மனப்பான்மை வந்துவிடும். அது உங்களுக்கே நீங்கள் தடை விதித்துக் கொள்வது போன்றது.

இ.பா.: அந்த பீரியடில் ஆனந்த விகடன் ‘அக்ரஹாரத்துப் பத்திரிகை’ என்னும் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அப்போதுதான் மெதுவாக மாற்றம் தொடங்கியிருந்தது.

‘குமுதம்’ எல்லோரையும் எழுப்பிவிட்டது. எஸ்.ஏ.பி clientele-ஐ மாற்றிக் காட்டினார். புது மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதே சமயத்தில்தான் தினத்தந்தி வெகுவாக வரவேற்பை பெற்றது. ஆனந்த விகடன் என்பது மைலாப்பூர், திருவல்லிக்கேணியில் மட்டும்தான் விற்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் 61, 62களில் ஜெயகாந்தனை கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள். என்னுடைய ஆறு கதை முத்திரைக் கதையாக வெளிவந்தது. New kind of writing. நான் டெல்லியில் இருக்கேன் என்பது தவிர என்ன்னைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. இது விற்பனையைக் கூட்டக் கூடியது என்பது அவர்களுக்குத் தெரியும். கன்ஸ்யூமர் ப்ராடக்ட்.

இப்போது அதெல்லாம் விற்கவில்லை. இன்றிருக்கும் இளைஞர்கள் எழுதினாலும், இ.பா.க்களோ, ஜெயகந்தனோ எழுதினாலும் விற்பனையை அதிகரிக்கவில்லை. இப்போது சினிமாதான் விற்கிறது.

அவர்களின் அடிப்படை மனோபாவம் மாறியதாக சொல்லமுடியாது. Off-of-Broadway-இல்தான் வித்தியாசமான நாடகங்கள், புதிய கலைஞர்கள் கிடைப்பார்கள். Off-of-Broadway-இல் ஒரு நாடகம் சிறப்பாக ஓடினால் அது Off-Broadway-க்கு வரும். அதன் பிறகு Broadway-க்கு வரும்.

That’s the death of the writer. Laissez Faire பொருளாதாரத்தில் இன்று இவற்றிற்கான தேவை குறைந்துவிட்டது.

இ.பா.: கஷ்டமான விஷயங்களை எளிமையாக சொல்வதுதான் உயரிய இலக்கியம். உண்மையான இலக்கியம். The simplicity of Tolstoy is amazing. எளிமையென்றால் எளிமைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அல்ல. உயரிய கருக்களைத் தாங்கிய விஷயங்கள். The idea is to reach people. இலக்கியம் என்பது என்னவென்று பார்த்தால் நம்மைக் குறித்த அடையாளங்களை நாமே அறிந்து கொள்வது ஒன்றாகக் கருதலாம். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்னும் அக்கறையும் இருக்கிறது.

காற்றாடி எதிர்காற்று இல்லாமல் பறக்குமா? வாசகன் இல்லாதவன் எப்படி எழுத முடியும்? ‘இதயத்திலே ஒளி உண்டாயின்; வாக்கிலே ஒளி உண்டாம்‘ என்று பாரதி பாடியிருக்கான் இல்லையா? If there is clarity of thought, there is clarity of diction and clarity of style, clarity of writing.

இ.பா.: சிறந்த இலக்கியம் போதனை செய்ய வேண்டும் என்று அவசியமல்ல. விஷயத்தை சொல்லவேண்டும். ஆனால், கணக்கு வாய்ப்பாடு போல் நேரடி போதனையாக இருந்தால் யார் படிப்பார்கள்?

Art for artsake என்று சொல்றாங்க. ஆனால், art is for life. Open propaganda-வாக இருந்தால் அது இலக்கியமே இல்லை. திருக்குறள் போதனை இலக்கியமாகவும் நீதி நூலாகவும் இருந்தாலும், அதை ஏன் எல்லாரும் படிக்கிறாங்க? அதனுள் இலக்கியம் இருக்கிறது என்பதால்தான். இலக்கியம் ப்ரொபகாண்டாவாக இருந்தால், அதற்குப் பெயர் manifesto. அறிவுபூர்வமா யோசிக்க வைக்கணும். Think and conquer. எழுத்து நம்மை அசைத்திருக்க வேண்டும்.

நல்ல புத்தகமென்பது முடிவிற்குப் பின்னால்தான் தொடங்கவே ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அது நம்மிடம் பேச ஆரம்பிக்கிறது. பிரச்சாரத்தில் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறதே? அப்புறம் எப்படி அது இலக்கியமாகும்!

இ.பா.: அந்தக் காலத்தில் இருந்த forms-ஏ இப்போது இல்லையே! மாற்றம் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. புதிய வடிவங்கள் அந்தந்தக் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் ஏற்படுகிறன.

இ.பா.: மனைவி படித்திருக்கிறாள். அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

இ.பா.: அதை எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொருத்த விஷயம். நாலாயிர திவ்விய பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதியிருக்கிறார்களே… அவற்றை அனுபவித்துப் படிக்க வேண்டும். They had approached it as literature. வியாக்கியானத்தைப் படிச்சுப் பார்த்தாலே தெரியும்.

‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

‘அம் சிறைய மட நாராய் என் செய்யுமோ’. – ‘அழகிய இறக்கைகளை உடைய, உதவக் காத்திருக்கும் நாரையே! நீ தூது போ’ என்று அனுப்புகிறாள்.

இதை அப்படியே பார்த்தால் ‘இதில் என்ன இருக்கிறது’ என்றுதான் தோன்றும். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் பால் அருந்த வாய் வைத்தது போல் பறப்பதற்கு ஏதுவான சிறகுகளின் மேல் கண் வைக்கிறாள். தூது போவதற்கு சிறகு வேண்டாமா!? அதனால் ‘சிறகு’மேல் கை வைக்கிறாள். ‘மட நாராய்’ என்றால் பெண் நாரை இது. அது அப்போதுதான் தன் துணையுடன் கூடியிருக்கிறது. இது மாதிரி இன்னும் பல இடங்களில் அனைத்தும் கிடைக்கும். இதெல்லாம் இலக்கியமில்லாமல் என்ன?

அந்தக் காலத்தில் இதையெல்லாம் பக்தி இலக்கியமாக ஒதுக்கி வைத்துவிட்டார்கள். உங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாம் அதை பக்திமான்கிட்டேயிருந்து மீட்ட வேண்டும்.

ஆன்மிகமாகவும் அதை பார்க்கலாம். பக்தி என்றால் என்ன அர்த்தம்? பக்திங்கறது individual salvation மட்டும் அல்ல. தனக்கு மட்டும் கேட்பது அல்ல. ‘பஜ்’ என்கிற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து பக்தி வந்திருக்கிறது. பஜ் என்றால் பஜனை என்பது போல் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து collective salvation for all people. சமூக அமைதிக்கான சிந்தனை.

ஆண்டாள் மாதிரி down to earth ஆக வேண்டும். ‘அம்பரமே, தண்ணீரே, சோறே’ என்று சொல்கிறாள். குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர், உணவு, உடுத்த ஆடை ஆகிய அத்தியாவசியத் தேவைகளாக இறைவனை நினைக்கிறாள்.

திருவாய்மொழியில் ‘உண்ணும் சோறும் வடுவில் நீரும் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணனே’. இங்கே ‘வெற்றிலை’யை சொல்கிறார். சாப்பாடு சாப்பிட்டபிறகு, வெற்றிலை மீது போகம் என்று வியாக்கியானம் சொல்லும். How they enjoyed these things! பக்தி இலக்கியத்தில் உள்ள நயங்கள் எல்லாம் மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுக்கும்.

இ.பா.: வியாக்கியானங்கள் பல இடங்களில் நமக்கு இலக்கியத்தை காட்டுகிறது. பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்ட உரைகள் இருக்கிறது. எண்ணூறு வருடம் பழமையானது. இராமானுஜர் காலத்திலேயே வந்துவிட்டது. இராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களைக் கூப்பிட்டு நாலாயிர பிரபந்தங்களுக்கும் உரை எழுத சொன்னார். அதில் வந்ததுதான் இவை எல்லாம். கம்பராமாயணத்துக்கு உரையே கிடையாது. வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் எழுதியதுதான் முதல் உரை. அதற்கு முன்னால் இல்லை. உரையெல்லாம் இப்பத்தான் வந்தது. சங்க இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் உரை எழுதிய மாதிரி, கம்பராமாயணத்துக்குக் கிடையாது.

இ.பா.: எல்லாமே இங்கு politicize ஆகி விடுகிறது. நல்ல இலக்கியமாக இருந்தால் இவற்றைத் தாண்டி நிற்கும். இப்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் அடங்கிப் போயிடும். ஆனால், அந்த கதையோ, நாவலோ, சிறப்பாக இருந்தால் காலத்தைத் வென்று நிற்கும்.

இ.பா.: நிச்சயமாக.

நான் ஏன் எழுதறேன்? ஒரு சம்பவத்தைப் பார்க்கிறேன். அதனால் பாதிக்கப் படுகிறேன். எப்படி அந்த பாதிப்பு ஏற்பட்டது… அந்த விஷயம் எந்த விதமான சலனங்களை ஏற்படுத்தியது?

அதற்கு காரணம் என்னுடைய பிறப்பு, வளர்ந்த விதம், சூழ்நிலைகள், கல்வி; அப்புறம் என்னுடைய தனித்தன்மை… இதெல்லாம் எனக்கே எனக்கு மட்டுமே இருக்கக்கூடிய கை ரேகயைப் போல. மற்றவர்களுக்கு வேறு விதமாய் இருக்கும். இதை நிர்ணயிப்பது என்னுடைய பேக்கிரவுண்ட், இவையெல்லாம்தான்.

சல்மான் ருஷ்டி எழுதுகிறார் என்றால், அவர் திருப்பி திருப்பி தெற்காசியாவையும் இந்தியாவையும்தானே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்! அவருடைய லேட்டஸ்ட் நாவல் படிச்சீங்களா?

இ.பா.: நான் படிச்சுட்டேன். இட்ஸ் எ க்ரேட் நாவல். காஷ்மீரைக் குறித்து எழுதியிருக்கிறார்.

இ.பா.: எப்போதுமே புகழ் வெளிச்சம் கண்ணைக் கூச வைத்தால் இதுதான் பிரச்சினை. ருஷ்டி மாதிரி பல காரணங்களுக்காக limelight-இல் இருந்தால் ரீடர்களைப் பார்ப்பதே இல்லை என்றுதான் தோன்றும்.

நானும் வாசகரை விட்டு அதிக தூரத்தில் இருப்பதைத்தான் விரும்புகிறேன். வெளிச்சம் பட்டுக் கொண்டே இருந்தால், அந்த வெளிச்சத்திற்காக அசுரப்பசி ஒன்று வரலாம். அது உங்கள் சென்சிடிவிட்டியைக் கெடுத்துவிடும். நுண்ணுணர்வு எல்லாம் இல்லாமல் காணாமல் போய்விடும்.

இ.பா.:  எந்த சப்ஜெக்டப் பற்றி எழுதுகிறேனோ அதைப் பொருத்த விஷயம். பாதிப்பிருக்கலாம். இராமானுஜரைக் குறித்து எழுதும்போது வைணவத்தின் பாதிப்பு இல்லாமல் இருக்காது. அதே சமயம், ‘அவுரங்கசீப்’ குறித்த நாடகம் எழுதும்போது, அதில் வைணவத்தின் பாதிப்பு என்ன இருந்துவிடப் போகிறது? பல வேறுபட்ட விஷயங்களைக் நான் கையாண்டிருக்கிறேன். இதை எழுதியவர்தான் அதை எழுதினாரா என்று சந்தேகம் வரும்.

அடிப்படையில் எல்லாருமே ஹ்யுமானிடிதான். It is a proper study of mankind in man. அதுதான் வெவ்வேறு பாஷையில், வெவ்வேறு விதமாக, வெவ்வேறு வடிவத்தில் எல்லோரும் சொல்கிறார்கள். இராமனுஜரின் அடிப்படைத் தத்துவம் மனிதாபிமானம்.


இ.பா.: நல்ல எழுத்தை எவ்வளவு பிராமணங்கப் படிச்சாங்க? தெரியாது எனக்கு… (சிரிப்பு) படிக்கிறவங்க யாரா இருந்தாலும் சரி; தலித்தா இருந்தாலும், பிராமணனா இருந்தாலும் சரி… மக்களை கொண்டு வந்து ஜாதியில் போய் அடைக்காதீங்க. புதுமைப்பித்தன் பிராமணன் இல்லை. ஆனால், பிராமணன்களால் மட்டும்தான் படிக்கப்பட்டார்.

இ.பா.: இல்லை… ஜெயகாந்தனின் காலகட்டத்தில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. புதுமைப்பித்தன் பீரியடில் அவ்வாறு கிடையாது. ஆகவே, எல்லாவற்றையும் ஜாதியில் அடக்க முடியாது. ஆனால், தேவையில்லாமல், புதுமைப்பித்தன் வெள்ளாள எழுத்தாளர் என்றெல்லாம் புஸ்தகம் எழுதுகிறார்கள். இதெல்லாம் ரொம்பக் கேவலமாக இருக்கிறது. Let us not go into all these issues.

இ.பா.: Dialect-ங்கறது முக்கியமான விஷயம். இப்போது இன்னொன்று வந்திருக்கிறது. Idiolect-ங்கறாங்க. Idiom + dialect. Dream tongue என்பார்களே…ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கென்று புதுப்பாணியை உருவாக்கிக் கொள்ளுதல். ஒவ்வொரு எழுத்தாளரும் தனித்தன்மையுடன் எழுத்துநடையைக் கொண்டு தனி மொழியை நிலைநிறுத்துதல். அதே சமயம் வாசகர்களையும் சென்றடைவார். He will not go all agog for it.

ஈழத்துக் கதையை தஞ்சாவூர் dialect-ல் எழுதினால் எப்படியிருக்கும்? அது படிப்பதற்கு உயரிய கதையாக இருந்தால், if it is worth all the trouble நிச்சயமாகப் படிக்கணும். அது புரியவில்லை என்று நிறுத்திக் கொள்ளக் கூடாது.

How many people understood James Joyce’s Finnegans Wake? அதைப் படித்து புரிந்து கொண்டவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், he created his own idiom. அதாவது அவருடைய dream tongue.

இ.பா.: உயரிய இலக்கியத்தின் அடையாளமே பத்து பேர் மட்டும் படிப்பதுதான் என்று சிலர் சொல்வார்கள் (சிரிப்பு). அப்படி நான் சொல்லவில்லை. ஈழத்துப் பிரச்சினைகள் குறித்து ஈழத்து மொழியில் எழுதாமல் வேறு எந்த மொழியில் எழுத முடியும்! எல்லாரும் படிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வட்டார வழக்கு should not interfere with the making of good literature.

இ.பா.: சுதந்திரத்துக்கு முன் பத்திரிகையாசிரியர்கள் வித்தியாசமாக இருந்திருக்கிறார்கள். போத்தன் ஜோசபை நான் சொல்லியிருக்க முடியாது. போத்தன் ஜோசப் பெரிய அறிவாளி.  ஆனால், ஒரு intellectual mercenary. அவர் இங்கே இருந்துவிட்டு, பாகிஸ்தான் வந்தபிறகு Dawn எடிட்டராகப் போய்விட்டார். அவருக்கென்று ஒரு ஐடியாலஜி எதுவும் கிடையாது. பத்திரிகையாளனுக்கு ஒரு conviction வேண்டும். conviction இல்லாமல் வெறும் intellectual mercenary-ஆக இருக்கக் கூடாது. இப்போது அநியாயத்தை அநியாயம் என்று எழுதுவதே அரிதாகிவிட்டதே!

ஜெயகாந்தனே எமர்ஜென்சியை ஆதரித்தவர்தானே ?

இ.பா.: ஆமாம். He appeared in television and supported emergency. ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள் கொண்டு வந்தார்கள். He was supporting congress. எழுத்தாளராக அவருடைய intellectual honesty எங்கே?

போலந்துக்கு நான் சென்றிருந்தபோது martial law. அந்தக் காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் புத்தகங்கள் வார்சா யூனிவர்சிடியின் lavatory-இல் இருக்கும். People did not like him. ஏனென்றால், அவர் martial law-ஐ ஆதரித்தவர். மாணவர்கள் தங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவரின் நாவல்களையெல்லாம் டாய்லெட் பேப்பராக உபயோகித்தார்கள். அவருடைய வீட்டு வாசலில் அத்தனை புத்தகங்களையும் கொண்டு வந்து போட்டுவிட்டார்கள். ‘Be true to thy ownself’ என்று ஷேக்ஸ்பியர் சொல்வார். அட்லீஸ்ட், உனக்கே நியாயமாக நடந்துகொள்.

இ.பா.: அவர் எந்த சமயத்தில் பேசினார் என்று எனக்குத் தெரியாது. அவரின் எழுத்தைப் பாருங்கள்… போதும்! அவரின் பழைய எழுத்துக்கள் ரொம்ப நல்லா எழுதியிருக்கார். இப்போது அபிப்பிராயம் உதிர்க்கிறது எல்லாம், ப்ரொஃபஷனல் ரைட்டர் என்று வந்த பிறகு, இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனம் எல்லாம் பிடித்துவிடும்.

இ.பா.: அரசியல் குறித்த ஈடுபாடு இருக்கவேண்டும். ஆனால், அரசியல்வாதியாகக் கூடாது.  உலகத்தில் எதுதான் அரசியல் இல்லை! அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே பாலிடிக்ஸ்தான். அரசியலைப் பற்றி கலக்காமல் இலக்கியத்தைக் குறித்துப் பேசுவது, மகாத்மா காந்தியைக் குறிப்பிடாத சுதந்திரப் போராட்டம் போல. பாலிடிக்ஸ் என்றால் என்னவென்று நினைக்கறீர்கள் என்பதைப் பொருத்தது. Politics is social living. அப்படிக் கொண்டால், அரசியல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

அந்தக் காலத்தில் இருந்த பக்தி இலக்கங்களில் அரசியல் இருக்கிறதாவென்றால், ‘ஏன் அரசியல் இல்லை?’ Religious politics. சமண மதமோ, பௌத்த மதமோ தமிழ்நாட்டில் தழைக்கவில்லை என்றால், அதற்கு காரணம் பக்தி இயக்கம்.

இ.பா.: அந்தக் காலத்தில் இருந்தே, சங்க காலத்திலேயே இப்படித்தானே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலும், பூம்புகாரில் ‘கரிகாற் பெருவளத்தான் வாழ்க’ என்று சொல்லிக் கொண்டு தலையை வெட்டிக் கொள்வார்களாம். பலி பீடங்கள் என்பது மரபு. தலைவனுக்காக தன்னுடைய தலையைத் தருவது இன்றும் காசுக்காக தொடர்கிறது.

இ.பா.: எதிலுமே ஸ்திரமான நம்பிக்கை இல்லாமல், ஏதாவதொரு காரணங்களுக்காக, இந்த மாதிரியான கொள்கைகள் இருப்பதாக காண்பித்துக் கொள்பவர்கள் எல்லாம் கடைசியில் பலகீனமாகப் போவதில் ஆச்சரியமில்லை. அந்த பீரியடில், brahmnins represented religious forces. அதனால், நாங்கள் பிரமாணர்களுக்கு எதிரானவர்கள். So, we are also against all they represented. அந்த மாதிரியான எண்ணத்தினால்தானே இந்த கொள்கைகள் வந்தது. கடவுள் இருக்காரா, தெய்வம் இருக்கா இல்லையா என்பதைக் குறித்தெல்லாம் சயிண்டிஃபிக்கா கேள்வி கேட்டா enquiry செய்தார்கள்! அதனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

இ.பா.: நமக்கே நம்முடைய அடையாளத்தை கண்டு பிடிக்கத்தான். எழுத ஆரம்பிப்பது அடையாளத்தைத் தெரிந்துகொள்ளத்தான். அதற்கப்புறம் நம்முடைய உணர்ச்சிகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக மாறுகிறது. மற்றவர்களும் உங்களுடன் ரிலேட் செய்கிறார்கள் என்னும்போது மகிழ்ச்சி ஏற்படும். உலகத்துக்கு உபதேசம் பண்ணுகிறோம் என்பதெல்லாம் இல்லை. குறிப்பிட்ட சம்பவம் நம்மை எப்படி பாதிக்கிறது? கோபமோ, மகிழ்ச்சியோ, எதுவாக இருந்தாலும்… ஒரு righteous indignation. தார்மீகக் கோபம்.

இ.பா.: கதாபத்திரங்கள் அடிப்படையில் என்னுடைய நாவல்கள் இருக்கும். I proceed from character to the narration of the story. கதாபாத்திரங்களை உறவாடவிடும்போது கதை உருவாகிறது. Plot-ஐ நான் முதலில் நினைப்பதில்லை. Only characters.

எல்லாக் கதையும் அப்படி சொல்லமுடியாது. ‘குருதிப்புனல்’ என்பது நடந்த சம்பவம். அந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு, கதாபத்திரங்களும் இருக்கிறது. கன்னையா நாயுடு மாதிரி ஆட்கள் எல்லாம். Even there I don’t plan the plot. The interaction between the characters, they decide the plot.

அதே மாதிரி ‘தீவுகள்’ என்னும் நாவல் டெல்லியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.

இ.பா.: அப்படியெல்லாம் யாரும் இல்லை. எல்லாராலும் பாதிக்கப்படறதுதான். நாம் எவ்வளவு படிக்கிறோமோ, எவரை விரும்பிப் படிக்கிறோமோ, எல்லாமே பாதிப்பதுதான். பாதிப்பு என்பதால் அவர்களைப் போலவே எழுதணும் என்று அவசியமில்லை. ஜானகிராமன் has definitely influenced me. ஆனால், அவரை மாதிரி எழுதவேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஆதவன் என்னுடைய ஸ்டூண்ட். சம்பத் என்னுடைய மாணவன். இவர் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என்று யாரையும் சொல்ல முடியவில்லை.

இ.பா.: நிறையப் பேர் எழுதுகிறார்கள். ஜெயமோகன் எழுதுகிறான். அப்புறமா, ஆனந்த விகடனில் கூட எழுதுகிறாரே… எஸ் ராமகிருஷ்ணன்.

இ.பா.: எது மேற்கு? எது கிழக்கு? கருத்துக்களைப் பொருத்தவரையிலும், கோட்பாடுகள் எல்லாம் பொருத்தவரையிலும், கிழக்கு, மேற்கு எதுவுமே கிடையாது. Human problems are the same all over the world. But, the way of narrating may be different. கதையை எப்படிச் சொல்கிறோம் என்பது வேற மாதிரி இருக்கலாம். ஆனால், மனிதனுக்கான பிரச்சினைகள் எல்லாம் ஃபண்டமெண்டலா ஒன்றுதான். அணுகுமுறை வேறு மாதிரி இருக்கலாம். மேல்நாட்டில் எல்லாத்துக்குமே ஒரு பெயரைக் கொடுத்து, பட்டயம் கட்டித் தொங்க விட்டு விடுவார்கள். ஆனால், அந்த மாதிரி dilemma is the samething everywhere.

குருஷேத்திரத்தில் அர்ஜுனன் சண்டை போடலாமா, வேண்டாமா என்றான். It is a typical, classical example of existential dilemma. இந்த மாதிரி மேநாட்டு பாதிப்பு என்பதெல்லாம் ஒண்ணும் கிடையாது. அடித்தால் நாம அழறோம். சந்தோஷமாக இருந்தால் நாம சிரிக்கிறோம். இதெல்லாமே எல்லா இடத்திலயும் ஒன்றுதான். வித்தியாசங்கறது கிடையாது.

எந்த விதத்தில் மேல்நாட்டுத் தத்துவங்களை எல்லாம் கொண்டு வந்து சால்வ் பண்ணப் பார்க்கிறேன் என்றால் ‘exploitation of the rich over the poor’ அப்படியென்றால், அதற்கு மார்க்ஸிஸம் என்றும் சொல்லலாம். Don’t you think that it is their problem also existent in their country? இதே மாதிரியே முன்னாடியே டீல் பண்ணியிருக்கிறார்கள்… It is all universal.

இ.பா.: The best writer in any Indian language, is definitely much better writer than, what so called best writer who writes in english, but at the same time english is not his mother tongue. அதாவது, இந்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்கள், இந்தோ-ஆங்கில எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகளை, விட மிகச் சிறப்பகவே இருக்கிறது.

ஏனென்றால், ஆங்கிலத்தில் எழுதும்போதே you are always thinking of a foreign audience. அதுவே மிகப் பெரியத் தடையாகிறது. Am I explaining myself to a foreigner? தாய் மொழியில் எழுதும்போது, பிரச்சினைகளை விளக்க வேண்டாம். Why the hell should I explain? I am writing to my own audience. I know they will understand. The problem of distinct constraints, problem of restrictions, எல்லாமே தடைப்பட்டுப் போகிறது. இந்தோ-ஆங்கில எழுத்தாளர்களை விட இரண்டாவது தலைமுறையில் வந்த இந்திய எழுத்தாளர்கள் சிறப்பாக இருக்கும். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களின் படைப்புகள் இன்னும் நன்றாக இருக்கும்.

‘லொலிடா’ எழுதிய விளாடிமிர் நபகாவ், ஜோஸப் கான்ராட் போன்றோரை சொல்லலாம். நாற்பது வயதில்தான் கன்ராட் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். அவர் போலந்தில் பிறந்தவர். இருபது வயதில் இங்கிலாந்துக்கு சென்றார். He was a sailor. Brilliant writer in english. But, still they say, issues எல்லாம் அவரால் பேசமுடிகிறதேத் தவிர, அந்த ஒரு நேடிவிட்டி இல்லை என்கிறார்கள். நபகோவுக்கும் இதே பிரச்சினைதான். ரஷியாவில் பிறந்தவர்; மிகச் சிறந்த அமெரிக்க எழுத்தாளர்.

இ.பா.:  அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி போன்றவர்கள் எல்லாம் ரெண்டு, மூணு வயசில் எல்லாம் வெளிநாடுகளில்தானே வளர்ந்தார்கள். அருந்ததி ராய் எல்லாம் செகண்ட் ஜெனரேஷன். ஆனால், வெஸ்டர்ன் ரீடரை என்ன அட்ராக்ட் செய்யும் என்பதை அறிந்திருக்கிறார்கள். Exoticism of India. இந்தியாவைப் பற்றி எழுதும்போது இந்தியாவின் exotics எல்லாம் சொல்லணும்னு நினைக்கிறாங்க. ஏனென்றால், அதுதான் appeals to the western writer. ரியலிஸ்டிக் ட்ரீட்மெண்ட் இல்லாமல் போய் விடுகிறது.

ஜோசப் கன்ராட் போன்றவர்கள் எல்லாம் இங்கிலாந்தைக் குறித்துதான் எழுதினார்கள். போலந்தைக் குறித்து எழுதவில்லை. அமெரிக்க எழுத்தாளன், அமெரிக்காவை குறித்து எழுதுவது மாதிரி அமெரிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள்?

Thats why I prefer RK Narayan. இந்தியாவைப் பற்றி மட்டும்தான் எழுதினார். கதாபாத்திரங்களும் தெற்குப் பகுதியை சார்ந்தவர்கள். Deep insight கிடைக்காது என்னும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால், அவர் கதாபாத்திரங்களை ஐடிண்டிஃபை செய்ய  முடிகிறது.

இ.பா.: Are you writing a manifesto or document? நாம் கதைதானே எழுதுகிறோம்! என்ன தேவையோ அந்தத் தேவைக்கு மேலே, உள்ளே போய் deep-ஆக போக வேண்டிய அவசியமே இல்லையே. நுனிப்புல் என்றால் ரெண்டு விஷயத்தை சொன்னாலும் ஆழமா இருக்கவேண்டும். அகலமா இருக்கணும்னு அவசியமில்லை. பல விஷயத்தை எடுத்துக் கொண்டு, ஆழமாக இல்லாமல், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆழமா இருந்தால் போதும்.  எவ்வளவு படித்திருக்கிறோம் என்பதைக் காட்டுமே தவிர, வேறெதையும் கொண்டு வராது.

When you are trying to impress, that’s the only impression we are making. That we were trying to impress.

இ.பா.: ‘அஹம் பிரம்மாஸ்மி’. I become that. கடவுளை நமக்குள்ளேயே ரியலைஸ் செய்யலாம். We are God. ‘தத்வமஸி’ என்றால் you become that. Every man realizes himself that he is going to ultimate reality, அவர்களின் டைமெண்ஷன் பிரமாதமாக இருக்கும். பௌத்தம் வந்தபிறகு இது individual salvation என்றாகிறது. தனிப்பட்ட முறையில் சமூகத்துக்கு சம்பந்தமில்லாமல் போய் விடுகிறது. Buddhism was more concerned about society oriented people. கிறித்துவத்தைக் குறித்துச் சொன்னமாதிரி பௌத்தமும் சமயத்தைச் சார்ந்து இருக்கிறது.

அந்தக் காலத்தில் கிராமங்களில் பார்த்தால், சாப்பிட்ட பிறகு எச்சில் இலையை எதிர்த்த வீட்டு வாசலில் போடுவார்கள். We are more converned about our personal cleanliness. மூணு வேளை குளிப்போமே தவிர, we are not bothered about social hygiene. அதனால்தான் நமக்கு சமூகப் பிரச்சினைகளில் இன்வால்வ்மெண்ட் இல்லாமல் போச்சு.

அவ்வப்போது இவற்றை எதிர்த்து மூவ்மெண்ட் வந்திருக்கிறது. Bhakthi movement was against individual salvation. பெரிய பெரிய கோயில் எல்லாம் கட்டினார்கள். கம்யூனிடியாக ஒன்றாகக் கொண்டு வர பார்த்தார்கள். இதெல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. சின்ன் இண்டெர்வ்யூவில் சொல்லி முடித்து விட முடியாது.

Colonisation வருவதற்கு முன்னால் நமக்குப் பொலிடிகல் கான்ஷியஸ்னெஸ் என்பதே கிடையாது. ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆன்டால் என்ன’ என்பதுதான் நம்முடைய attitude.

இ.பா.: ‘ஏசுவின் தோழர்கள்’ படித்தீர்களா?

இ.பா.: Polish communism… அதில் இது போன்ற கேள்விகள் பேசப்படுகிறது. அது இப்போது ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. ‘Comrades of Jesus’ என்று. It’s been published by Roopa.

நீங்க சொன்ன மாதிரி second world war-க்கு பின்புதான் போலந்து போன்ற நாடுகள் கம்யூனிஸ நாடாகிறது. Polish people were always different kind of people. They never existed in the map of Europe for another 120 years. Either they were ruled by Russia or by Austro-Hungarian empire. போலந்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து விட்டார்கள். ஒரு பாதியை ரஷியா; இன்னொரு பாதியை ஆஸ்ட்ரோ-ஹங்கேரி; மூன்றாவது மிச்சத்தை ப்ரஷியா; ப்ரஷியா என்பது ஜெர்மனி.

ஆனால், நூற்றிருபது வருஷம், இந்த மாதிரி ஒரு நாடு மூன்றாக பிரிந்து இருந்தால், அந்த நாடே காணாமல் போயிருக்கும். போலந்து தாக்குப் பிடித்ததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

முதல் காரணம், their love of the language. போலிஷ் மொழியின் மீதுள்ள பற்று.

இரண்டாவதாக, they are the only catholic country surrounded by all the orthodox,  presbyterian, protestant, lutheran churches. 99 சதவீத போலிஷ் மக்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள். That gave them a special identity. கம்யூனிஸத்தை எதிர்க்கும்போது மதமும் முக்கியப் பங்காற்றுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் national sentiments are driven by the catholic church என்பதைப் பார்க்கலாம். போலந்தின் தேசிய சிந்தனைக்கும் சர்ச் காரணம்.

இ.பா.: எனக்கு விஷ்ணுபுரம் இன்னும் பிடித்திருந்தது. படித்துவிட்டு எழுதுவதும், ஒரு இடத்தில் இருந்து விட்டு அதைப் பற்றி எழுதுவதும், வேற வேற விஷயம். இரண்டும் வேறு. அவர்களைப் பற்றியெல்லாம் புத்தகங்களைப் படித்துவிட்டு நாவல் எழுதக் கூடாது. அங்கேயே போய் இருந்துவிட்டு எழுதும் அனுபவத்திற்கு வித்தியாசம் இருக்கிறது. நான் அங்கெல்லாம் இருந்ததினால், என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. Its a good novel; but it didn’t impress me as much as விஷ்ணுபுரம்.

இ.பா.: அமெரிக்க இந்தியர்களுக்கும் இந்தியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. இங்கேயும் ஒய். ஜி. மஹேந்திரா, எஸ்.வி. சேகரைத்தான் விரும்புகிறார்கள். யாராவது கூத்துப் பட்டறை முத்துசாமியையோ, நவீன நாடகக்காரர்களையோ கூப்பிடலாம் என்று யோசிப்பதுகூட இல்லை.

அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணுவது இல்லை. ரசனை எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இங்கே இருக்கக் கூடிய தியேட்டர் மூவ்மெண்ட், லிடரெரி இயக்கம் ஆகியவற்றால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. Exposure and opportunity இருக்கிறது. அந்த எக்ஸ்போசரை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

பெரும்பாலானவர்கள், இங்கே வந்து ரொம்ப நாளாக இருக்கக்கூடிய தமிழர்கள், இந்தியர்கள் கூட, இந்தியாவில் முப்பது வருஷம் முன்னாலிருந்த அபிப்பிராயங்களைத்தான் இப்போதும் வைத்திருக்கிறார்கள். அங்கே மாறிப்போனது கூட இவர்களுக்குத் தெரியாது. They are not even exposed to the modern ideas. I am not talking about youngsters.

ஜாதிச்சண்டை எல்லாம் இங்கும் நிறைய பார்க்கிறேன். நிறையக் கேள்விப்படுகிறேன். சுந்தர ராமசாமி குறித்து இணையத்தில் பார்த்தேனே… இப்போது தமிழ்நாட்டில் மாறிப் போய்விட்டது. ஆனால், இங்கே இன்னும் மாறவில்லை என்று நினைக்கிறேன். Brahmins are not interested. தமிழ்ச்சங்கம் என்று எடுத்துக் கொண்டால் பிராமின்ஸ் பங்கே கிடையாது. இங்கே செயிண்ட் லூயிஸில், மிஸௌரி தமிழ்ச்சங்கத்தில் பேசப்போனபோது, the only brahmin family was my family. கர்நாடக சங்கீதமோ, பரதநாட்டியமோ என்றிருந்தால் you find exclusively, mostly brahmins. அவர்கள் எல்லாம் தனி; மற்றவர்கள் எல்லோரும் வேறு…

அந்த divide இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது; நிறைய இருக்கிறது. ம்யூஸிக் அகாடெமி… இப்போதும் இருக்கு. கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், தமிழ் என்றால் நமக்குச் சம்பந்தம் இல்லை என்றுதான் இங்கு பிராமின்ஸ் நினைக்கிறார்கள். Thats very unfortunate.

இ.பா.: இலக்கிய அனுபவத்துக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. எழுத்தாளனுக்கு நாடகத்தைக் குறித்த தெளிவு இருந்தால், ‘இது நாடகமாக எழுதினால் நன்றாக இருக்குமே’ என்று தோன்றும். நான் ‘மழை’ என்றொரு நாடகம் எழுதியிருக்கேன். அது முதலில் எழுதும்போது, நாவலாகத்தான் எழுத நினைத்தேன். திடீர்னு ஏதோ தோணிச்சு. நாடகம்னா இது! இதைப் போய் நாவலா எழுதினால் நல்லா இருக்காது. Play can be a literature. ஷேக்ஸ்பியர் நாடகங்களை நாடகமாகவும் பார்க்கலாம்; இலக்கியமாகவும் பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு காம்பினேஷன் அமையறது ரொம்ப rare.

நாடகத்தை நடிக்கப்படணும்னு காண்பிக்கறதுக்காகத்தான் நாடகம் எழுதப்படுகிறது. Its only for staging. Full consummation எப்போது நடக்கிறது என்றால், when the play written is staged.

இ.பா.:  எக்ஸ்போஷர் ஜாஸ்தியாக இருந்தால் எழுத்தில் தெரியும். All kind of fine arts-இலும் exposure இருந்தால்தான் பார்வை அகலமாகும். எப்படி ஒன்றை விஷுவலைஸ் செய்கிறான், எப்படி அதை சித்தரிக்கிறான் என்பதெல்லாம் தெரியவரும்.

இ.பா.: Unfortunately, அவர்களில் ஆடியன்ஸ் ஒரே மாதிரிதான் இருந்து வருகிறது. மைனாரிட்டி ஆடியன்ஸாகத்தான் இருந்துகிட்டிருக்கு. அதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. மைனாரிட்டி என்பதில்தான் நம்முடைய பெருமையே இருக்கிறது என்று எண்ணுவதும் காரணமாக இருக்கலாம். நாமே முதுகை சொறிந்து விட்டுக்கொண்டு, ‘இண்டெலெக்சுவல்ஸுக்குதான் இவை’ என்றாலும் பிரச்சினைதான். முத்திரை இல்லாமல் ஒரு நல்ல நாடகத்தைப் போட்டுப் பார்க்க வேண்டும். அதை எப்படி ரிசீவ் பண்ணுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். ‘Mine is an intellectual play’ என்று சொன்னால் who will come and see it?

இ.பா.: நான் இதைப் பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் சமீபத்தில் வெளிவந்த பேட்டியில் கூட சொல்லியிருந்தேன். தமிழினுடைய கண்ணோட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த திராவிட இயக்கங்கள்தான். மாற்றங்கள் என்றால் for worse; not for good.

எல்லாமே exaggerated. உயர்வு நவிற்சியில் மட்டுமே திளைக்க வைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் என்று பேசுகிறோம். சங்க இலக்கியம் எல்லாமே தன்மை நவிற்சி, டைரக்ட்… உயர்வு நவிற்சியே கிடையாது. ‘ஒரு பொண்ணு’ என்று சொல்லமுடியாது. ‘சிற்றிடையாள், பேரிடையாள்’ என்றுதான் எழுத முடியும். மொழி எப்படி மாறுகிறது என்று பாருங்கள். Culture, சினிமா, பாலிடிக்ஸ் போன்ற எல்லாத் துறைகளிலும் இது reflect செய்கிறது.

இ.பா.: பெரியாரின் சீர்திருத்த இயக்கம் சமுதாயத் தேவையாக இருந்தது. மூன்று பெர்சண்ட் உள்ளவன் 97% இருக்கிறவன் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டால், எப்படி ரியாக்ஷன் இல்லாமல் இருக்கும்? It was a right movement. It was necessary at the time when Periyar started it. Brahmins had to be looked in that way. Unfortunately, it has not integrated the society. இண்டெக்ரேஷனுக்கு பதிலாக இது அதுக்குள்ள பிரிவு, பிரிவு, பிரிவு, பிரிவாகப் போய் விட்டது.

ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் என்ன செய்தான் – வடக்கில் இந்து, முஸ்லீம் என்று பிரித்தான். தெற்கில், பிராமின் மற்றும் நான் – பிராமின் என்று பிரித்தான். ஏனென்றால், இங்கே இந்து – முஸ்லீம் இடையே அவ்வளவு இஷ்யூ இல்லை. So, the problem was between the 97% and 3%. Once the 3%, ceases to be the problem, the 97% started subdividing itself.

இப்போது இது ‘வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை’ என்று தமிழ்நாடே ஜாதி அடிப்படையில் ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பல விஷயங்களில், இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கிறது. ஜாதி என்பது வடக்கில் முன்னால் கிடையாது. அங்கே நான் -பிராமின் என்னும் கான்செப்ட்டே கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் பிராமணரல்லாதவர்கள் என்று நெகட்டிவாக சொல்லி… அதுவே ஒரு பெரிய அயோக்கியத்தனம். Why should a community of 97% people refer to negativity?

இப்போது வடக்கிலும் இவ்வாறு ஆகி வருகிறது.

இ.பா.: அடாப்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். படைப்புகளை இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும். தழுவலாக இருக்க வேண்டும். ஷேக்ஸ்பியரையோ கிங் லியரையோ தெரியாதவன் படிக்கும்போது, தமிழ் நாடகத்தைப் பார்க்கிற மாதிரிதான் பார்ப்பான். Theme is universal.

இ.பா.: நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. I am trying to translate ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ into english. நான் ஏற்கனவே ‘கிங் லியரை’ இறுதியாட்டம் என்று மொழியாக்கமாக அடாப்ட் செய்திருக்கிறேன். அதே போல் ஷேக்ஸ்பியரின் ‘டெம்பஸ்ட்’டை செய்து கொண்டிருக்கிறேன். Contemporary issues-யும் பொருத்தி செய்து வருகிறேன்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக என்னுடன் பொறுமையாக உரையாடியதற்கு நன்றி


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.