ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. அது நினைவுகளில் இருந்து பாடப்பட்டது. எழுதி வைக்கப்பட்டவை அல்ல. ஒருவர் கடைக்குச் சென்று நாட்டுப்புற இசையின் இசைக் குறிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்றாட நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, குடியேற்றத்தால் உருவாகி இருந்த ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக ஒரு நாட்டுப்புற இசை இருக்க முடியாது.
Tag: கோகுல் சால்வாடி
எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு
பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் என்று தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார் டிக்கென்ஸ். அமெரிக்காவில் தங்கள் புத்தகங்கள் விற்பனையாவதால் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அமெரிக்கர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பைரஸியைக் கண்டிப்பதில்லை. அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். என்று கூட்டங்களில் பேசினார் டிக்கென்ஸ். இந்தப் பேச்சை அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.
காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்
டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்
பைரஸி
தன் தந்தையின் மரணத்திற்குப்பின் இத்தாலிக்குச் சென்றார் கிறிஸ்டியன் பாக். தொடர்ந்து இசை பயின்றார். ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக இருந்த அவர் கத்தோலிக்கராக மாறினார். இத்தாலிய பாணி ஆபரா நிகழ்ச்சிகளை நடத்தினார். மிலன் நகரில் புகழ் பெற்றார். அன்றைய இத்தாலி அவரைப் போன்ற பல திறமையான இசைக் கலைஞர்களைப் பெற்றிருந்தது. தேவாலயங்கள், அரசவைகளில் இசைக்கலைஞர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது. கிறிஸ்டியன் பாக், லண்டன் நகரம் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.
புதிய லண்டன்
புதிய லண்டன் மாறுபட்டிருந்தது. பாரம்பரிய மரபுப்படியான அமைப்பிற்குப் பதிலாக, வாணிபப் பொருளாதாரத்திற்கு நோக்கம் கொண்டு வணிகப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது அரசின் வர்த்தக மையம் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தது. 1694 ல் உருவான இங்கிலாந்து வங்கி வணிக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது. காப்பீட்டுத் தொழில் உருவாகியிருந்தது. வியாபாரிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பை புதிய காபிக் கடைகள் உருவாக்கின.
தங்கக் கூண்டு
இசையில் மெலடி என்ற ஆங்கிலச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்டது. ஒன்றை இழை அல்லது ஒற்றைக் குரல், என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புல்லாங்குழல் மட்டும் வாசிக்கப்பட்டால் அது மெலடி. அதனுடன் ஒரு வயலினும் சேர்த்து வாசிக்கப்பட்டால்? அவை இரண்டும் ஒன்று போல இல்லாமல் தன்னிச்சையாக இருந்தால்? அவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்படாமல், ஒன்றை ஒன்று மெருகேற்ற வேண்டும்.
ஸ்டேஷனர்ஸ் கம்பெனி
“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார்.
இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்
ஒருவகையில் காக்ஸ்டன் ஒரு பதிப்பாளர் மட்டுமல்ல. ஒரு வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தேடிச் சேர்த்து, எளிமையாகப் புத்தக வடிவில் அச்சாக்கி அதை சந்தைப்படுத்தும் ஒரு தொழிலை உருவாக்கினார். ஒவ்வொரு புத்தகமும் ஏன் முக்கியமானது என்பதை விளக்க, அவற்றுக்கு முன்னுரைகள் எழுதினார். பதிப்புத் தொழிலை ஆதரிக்கும் புரவலர்களை உருவாக்கினார். வாசகன் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக புத்தகங்களைக் கடைவிரித்தார்.
அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம்
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு தேவை. முதலில் இந்த எழுத்துருக்கள் கடினமான இரும்பு ஒன்றில் இடம்வலமாகச் செதுக்கப்படவேண்டும். அப்படிச் செதுக்கப்பட்ட எழுத்துரு செப்புத் தட்டின் மேல் வைத்து அடிக்கப்பட்டு, அச்சுப் பாதிக்கப் படவேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட செப்பு அச்சில் உலோகக் கலவை ஊற்றப்பட்டு, எழுத்துருக்கள் உருவாக்கப்படவேண்டும்.
நெட்பிலிக்ஸ் (Netflix) பிறந்த கதை
இந்த வழக்கின் க்ளைமாக்ஸ் காட்சி 1983 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறியது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வைத்த ஒற்றைக் கேள்வி இதுவே. “மக்கள் தங்கள் விருப்பம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கும் VCR ஐத் தடை செய்ய வேண்டுமா?” கேட்பதற்கு எளியதாகத் தோன்றும் இந்தக் கேள்வி, தொழில்நுட்பம், படைப்புரிமை மற்றும் சட்டவரையறை என்ற பல சிக்கல்களைக் கொண்டிருந்தது.
கலையும் வணிகமும் மோதிக்கொண்ட கதை – கிறிஸ்துமஸ் ரிப்பன்
ஈடன் சென்டரினுள் நுழைந்து பறந்து செல்லும் பறவைகள் போலத் தோற்றம் அளிக்கும் அந்தச் சிற்பங்கள் மக்களைக் பெரிதும் கவர்ந்தன. “Flight Stop “ என்று பெயரிடப்பட்ட அந்த நாரைக் கூட்டத்தின் சிற்பம் மைக்கேல் ஸ்னோ (Michael Snow ) என்ற சிற்பியின் படைப்பு. கிறிஸ்துமஸ் விடுமுறை வியாபார உத்திக்கும், சிற்பி மைக்கேல் ஸ்னோவின் படைப்புரிமைக்கும் மோதல் உருவானது.
பாயும் குதிரை
இந்த சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரையின் பெயர் சாலீ கார்டனர் (Sallie Gardner). அன்று லீலன்ட் ஸ்டான்போர்ட் மற்றும் அவரது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த பாலோ ஆல்டோ (Palo Alto) பண்ணையில் கூடியிருந்தனர். ஓடு தளத்தின் ஒரு முனையில் குதிரை சாலீ நின்றுகொண்டிருந்தது. உத்திரவு கிடைத்தவுடன் சாலீ பாய்ந்து ஓடியது. சாலீயின் குளம்பொலியும், காமிராக்களின் ஷட்டர் ஒலியும் படபடத்தது போலவே பார்வையாளர்களின் இதயங்களும் படபடத்தன.
கிங் காங்
இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயார் செய்த கூப்பர், தனது நண்பர் டீலோஸ் (Delos W. Lovelace) என்ற எழுத்தாளரைக் கொண்டு தான் உருவாக்கி இருக்கும் கிங் காங் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுத வைத்தார். இந்த நாவல் கிங் காங் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பு பதிப்பிக்கப்பட்டது.
