அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D  ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார்.  அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார்.  மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். 

விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி

பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும்.  ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்‌ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ).  முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன்.  அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்).  தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.