வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது. (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது
Author: அம்பை
சொல்லாத கதைகள்
கலா ஷஹானியைப் போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும் அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.
நீலகண்டப் பறவையைத் தேடியவர்
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.
ராம் என்றொரு நண்பன்
எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”
என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு
மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத கனம் என் மேல் கவிவதை உணர்ந்தேன்.
‘உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்’ – பேட்டி
ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் , ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு , விளக்கத்திற்கு உட்படுத்தி கட்டிபோடுகிறது. இது எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் என்றும் என்னிடம் எதிர்ப்புணர்வையே உண்டாக்குகின்றன. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து எழுதுவதால் ஒருவித மொழி பிறக்கலாம். சில உதாரணங்களை சொல்கிறேன். என் ஆராய்ச்சிக்காக நான் பல பெண்களின் கதைகளை படிக்க நேர்ந்தது. ஆண்களுடையதையும் படிக்க நேர்ந்தது. சில விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தன.நிறம், வடிவம் போன்ற விஷயங்கள். ஆண்களை விவரிக்கும் போது அவர்களுக்கான உபமானங்கள் தேக்கு மரம், உலக்கை, பாறாங்கல் போன்றவை இருந்தன. ஆண்கள் எழுத்தில் அதேசமயம் பெண்கள், கொடிகள், மிரளும் மான், பூக்கள் பழங்கள் என்று சித்தரிக்கப்பட்டனர். வேர்கள் ஆழப் புதைந்தும் கனத்துடன் கூடியம் உள்ள பொருட்கள் ஆண்களை குறித்தன .எடை இல்லாமல் மற்றவற்றை சார்ந்து, மற்றவர்களுக்கு களிப்பும் சுகத்தையும் தரும் பொருட்கள் பெண்களுக்கு உவமை ஆகின. நிறத்தை பொறுத்தவரை சிவந்த அல்லது சந்தன நிறம் உடைய பெண் தான் அழகு என்று சொல்லப்பட்டாள் . “அவள் கறுப்பு ஆனாலும் அழகு” என்ற விவரணை
பாமாவின் கருக்கு
பனங்கருக்கால் அறுபடுவது போல் வாழ்க்கை அமைந்துவிடும்போது அது வாழ்க்கையின் குறியீடாகிவிடுவது இயல்புதான். ‘கருக்கு’ புத்தகத்தைப் படிப்பதற்கு முன் கருக்கு என்ற சொல் புதுக் கருக்கு என்று நாம் கூறும் பொலிவைக் குறிக்கிறது அல்லது விடிவதற்கு முன் உள்ள கருக்கலைக் குறிக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். பனங்கருக்கைத் தொட்டிருந்தால் தானே அது இரு பக்கமும் ரம்பம் போல் அறுக்கும் கத்தி போன்றது என்று தெரியும்? பிறகு ஒரு முறை கிராமம் ஒன்றிற்குப் போனபோது பனங்கருக்கைத் தொட்டுப் பார்த்தேன். சட்டென்று விரலைக் கீறி விட்டது
என் நோக்கில் சுரா
‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார்.
ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு
ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட்
சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும்
”அடையாளங்களை ஒன்றிணைத்தல், வேற்றுமைகளைக் கோத்தல்” என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரை எழுதிய பர்நீதா பாக்சி பிறகு அதை டில்லியில் 2004இல் நடந்த மொழிபெயர்ப்பு குறித்த ஒரு கருத்தரங்கில் மீண்டும் படித்தார். மறைக்கப்பட்ட பெண்கள் சரித்திரத்தை மீளுருவாக்கம் செய்வதைப் பற்றியும் கல்வித் துறையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறும்போது பெண்கள் ஆவணக்காப்பகமான ஸ்பாரோவின் செயல்பாடுகளின் அடித்தளமாய் இருக்கும் சில கருத்துக்களைக் கூறினார். பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சரித்திரத்தில் உள்ள பெண்கள் இப்போது நாம் மீட்டெடுத்துக்கொண்டிருக்கும் புத்துருவாக்கும் மிகவும் சிக்கலான, சிந்தனையைத் தூண்டும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியானவர்கள். இவர்கள் வாழ்க்கை, அதை ஒட்டிய தரவுகள் …
நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை
ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும் ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் …
பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்
பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்து வருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறைபாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்து வருவதுதான். இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக் கூடாத அதீத காம இச்சைகள் இவைகள்தான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவி வருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை.
மனத்துக்கினியவள்
நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொம்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் ஆனந்தவிகடனில் 1961இல் வெளிவந்துகொண்டிருந்தது…
மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்
அதிக அளவு விதவைகள் இருந்ததும் சென்னை மாகாணத்தில்தான். மாதர் மறுமண இயக்கம் மேற்கொண்ட மற்ற அச்சு முயற்சிகளைவிடக் கூடுதலான ஓர் அச்சு முயற்சி தேவைப்பட்டது என்று உணர்ந்து, அதனால் பிறந்த அச்சு முயற்சிதான் மாதர் மறுமணம் . 1936 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த முதல் இதழின் அட்டையில் காந்தி இருந்தது. பத்திரிகைக்கு நல்ல கவனத்தைத் தந்திருக்க வேண்டும். காரணம் முதல் இரண்டு இதழ்களும் உடனடியாக விற்றுப்போயின
உரக்க ஒலித்த பெண் குரல்
1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”
குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை
அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள்…
மொழியும் மௌனமும் வாழ்க்கையும்
குறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா? அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா? மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா? அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா? இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.
பனைமரமே, பனைமரமே
இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கே. என். ராமச்சந்திரன் போன்ற தரமான இலக்கிய வாசகர்கள் இவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நான் படிக்காமல் விட்ட எழுத்தாளர்கள் பற்றிப் பேச்சு வரும்போது ஹெப்ஸிபா ஜேசுதாசன் பற்றியும் பேசியிருக்கிறோம். நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆராய்ச்சியை 1974 இல் தொடங்கியபோது “ஹெப்ஸிபா ஜேசுதாசனை மறந்துவிடாதே” என்று நினைவு படுத்தினார் வெங்கட் சாமினாதன். புத்தம் வீடு நாவலை மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். இடையில் அது பற்றி சி.சு.செல்லப்பா கூறியதையும் எங்கேயோ படித்திருந்தேன்.
இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்
இனம் மதம் என்ற நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப்போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதை தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துக்களால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு அண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும்…
நீளாவுடன் நீளும் பயணம்
மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை
ஊர் வேண்டேன்…
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?
விருதேற்பு உரை
எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.
குடுமியில் சிக்கிக்கொண்ட மோக இழைகள்
பாகீரதியின் மதியம் பிரம்மாண்டமான கித்தானில் பல விஷயங்களுக்குக் கால வெளி வரம்பில்லாமல் புராணக் கதைகள் போலவே நேர்க்கோட்டில் அல்லாமல் வட்டமாகச் சென்று சொல்லப்படும் கதை. கதையும் அதனுடன் வரும் உப கதைகளும் அவற்றினின்றும் பிரியும் எண்ணங்களும் எண்ணங்களிலிருந்தும் வழிந்தோடும் கருத்துச் சொட்டுகளும் அவற்றைப் பிரிக்கும் ஒற்றை இரட்டை அடைப்புக் குறிகளும் என்று ஒரு சிக்கலான வடிவத்தில் பலரின் மோகம் பற்றிய கதையைச் சொல்கிறது. (இந்த மோகத்தை இங்கு மோகம் என்று பெண்-ஆண் மோகமாக மட்டுமே குறிப்பிடுவது ஒரு வசதிக்காகத்தான். கதையில் மொழி, இனம், நிலம், கலை என்று பல மோக வடிவங்கள் உள்ளன. பெண்-ஆண் மோகம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியதாகவும் அவற்றை மீறியதாகவும் இருக்கிறது என்பதை விளக்கிவிடுவது நல்லது). இந்த முயற்சியில் தன் வாகனமான எலியின் மேல் அமர்ந்துகொண்டு
அணில் கட்டிய பாலம் ஒன்று
கோட்டையூரில் ரோஜா முத்தைய்யா வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. அந்தச் சிறிய ஊரில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கவில்லை. பேருந்தின் நடத்துனரே என்னிடம் முத்தைய்யா அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு நான் போகிறேனா என்று விசாரித்திருந்தார். அவர் வீடு பல ஆராய்ச்சியாளர்கள் வந்துபோகும் இடமாக இருந்தது போலும். நான் வருவது குறித்து முன்பே எழுதியிருந்ததால் பழங்கால வீட்டின் நீண்ட தாழ்வாரத்தை அடுத்த பெரிய் முன்னறையில் கீழே தரையில் அவர் அமர்ந்திருந்தார்.
“வாங்கம்மா” என்று வரவேற்றார்.
மண்ணாசை
வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….
சந்தையில் புத்தகங்கள்
புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து….“எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க” என்று கனிவுடனும் “உங்க ’சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது.
பரத நாட்டியம் – இன்றைய சில பிரச்னைகள் ஒரு பேட்டி (1973)
இது 1973 இல் எப்போதோ நடந்த பேட்டி. தற்செயலாக ஓர் நாள் அம்பையின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கிறது ஓரிரு நாளில் என்ற செய்தி மூன்றாமவர் ஒருவரிடம் கேட்டபோது ஆச்சரியமாயிருந்தது எனக்கு. பின் நான் அது பற்றிக் கேட்டபோது தான் அம்பை திரிவேணி கலா சங்கத்தில் நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. அப்படியானால் நல்லதாயிற்று. பல வருஷங்களாய் என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் பிரச்சினைகள் பல உண்டு. அவை முடங்கிக் கிடக்கின்றன; அவற்றை எழுதித் தருகிறேன், சாவகாசமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். அப்படித்தான் பின்வரும் பேட்டியில் உள்ள ஒரு பாதி கேள்விகள் முதலிலும் பின்னர் கிடைத்த பதில்களை வைத்து மேற்கொண்டு மறுபாதிக் கேள்விகளும் எழுதித் தரப்பட்டன. அம்பை தந்த பதில்கள் எல்லாம் இங்கே. இன்றானால் சில கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டேன். பல இன்னும் நிறைய கேட்டிருப்பேன்.
ஆடல்
பாலசரஸ்வதி, மயிலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற பல மகத்தான நடனக் கலைஞர்கள் நடனத்தின் ஆன்மிக உச்சத்துக்கு அதைக் கொண்டுபோயிருந்தாலும், அது “கௌரவ” ஸ்திதியை அடைந்தது ருக்மணிதேவி, கிருஷ்ணய்யர் போன்றவர்களால்தான் என்றுதான் கூறப்பட்டது. கௌரவமான பெண்கள் என்று கருதப்பட்ட தாசி குடும்பத்தைச் சேராத பெண்களும் ஆடலாம் என்ற அளவுக்கு அது மெருகேறியதே தவிர, ஆடலின் அமைப்போ, வெளிப்பாடோ சிறிதும் மாறவில்லை. கடவுள் என்ற மூலம் ஆட்டம் காணவில்லை. “நடனம் ஆடினார்”, “தெருவில் வரானோ”, “கிருஷ்ணா நீ பேகனே பாரோ”, “ஸாமி நின்னே”(வர்ணம்) போன்ற பாடல்கள்தாம் இன்றும் உணர்ச்சிகளை வெளியிடப் பயன்படுபவை. காதலை வெளியிடும் பெண் இன்றும் பால் குடித்தால் வாந்தி வருவதாகவும், குயிலின் கூவல் நாராசமாய் ஒலிப்பதாகவும், ஹம்ஸதூளிகா மெத்தை குத்துவதாகவுமே விரகத்தை வெளியிடுகிறாள். அன்று ஆடப்பட்ட தாசி ஆட்டம் அன்றைய சமூக வர்க்கபேதங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக ஆடப்பட்டது. இன்றைய தாசி ஆட்டம் அல்லது பரதநாட்டியம் சிறிது மாறுதலுடன் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினராலேயே ஆடப்பட்டு, அவர்களாலேயே ஆளப்பட்டு, அவர்களாலேயே போற்றப்பட்டும் வருகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உட்படாத ஒரு நபரே இன்றைய ஆடலின் வெளிப்பாட்டுப் பிரதிநிதி. இதனால்தான் இவர்கள் பாதிப்புகள் அற்ற வெறும் ஆட்டக்காரர்களாக (Performers) மட்டும் இருந்து வருகிறார்கள்.
கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்
ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது
பசு, பால், பெண்
மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப் பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை. இந்தப் பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்துகொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும். பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது.
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
“வீட்டுல வேலை செய்யும் பெண்ணை நாள் முழுவதும் எனக்குத் துணையா இருக்கச் சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கு இருந்த அன்பால அதைச் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அது கண்காணிப்பு மாதிரி பட்டுது. அது தாங்கலை. போரிவிலி ஸ்டேஷன் போனேன். நான் அடிக்கடி அந்தேரி வருவேன் சாமான்கள் வாங்க அப்புறம் ஸாத் பங்களாவில இருக்கிற கோயிலுக்கு. அதனால ஒரு பாஸ் எடுத்து வெச்சிருந்தேன். ரயில் வந்ததும் சட்டென்று ஏறிவிட்டேன். அந்தேரியில இறங்கினதும் மனசு குழம்பிப் போச்சு. ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு வீட்டை விட்டுப் போனால் தங்க ஏது இடம்? அவளை ஏதாவது ஆசிரமத்துக்குப் போன்னு சொல்லுவாங்க. அங்கேயே ஸ்டேஷன்ல உட்கார்ந்துவிட்டேன். ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி ஒரு துக்கம் நெஞ்சுல கனத்துது. மனசுல இருக்கும் ஒரு ஆசையச் சொன்னதுக்கு எனக்கு தண்டனை. சொல்லாமல் செத்திருந்தா கொண்டாடியிருப்பாங்க. சுதா, உனக்கு பல ஜன்மங்கள்ல நம்பிக்கை இருக்கா? எனக்கு இல்லை. என் பாபா சொல்லுவார். நரகமும் சொர்க்கமும் மனசுலதான். உயிரோடு இருக்கும்போதுதான். இறந்த பின்னால நாம எல்லாம் காத்து, வெறும் காத்து…”
சம்பூர்ணமான பூரணி
ஏழு ஸ்வரங்களும் கூடி வரும்போதுதான் இசை சம்பூர்ணமாகிறது என்கிறார்கள். கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் நவம்பர் 17ம் தேதி. ஒரு மாதம் முன்னால்தான் தன் நூறாவது வயதை எட்டியிருந்தார் பூரணி. அதற்கான எந்தக் கொண்டாட்டத்தையும் அவர் விரும்பவில்லை. இத்தனை வயதாகியும் உடல் நலத்தோடு இருக்கிறோமே, குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர்.
SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்
பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.
SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்
பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.