ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 17 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2

This entry is part 2 of 17 in the series ஹைக்கூ

அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.

புறாவின் அழைப்பு

This entry is part 3 of 17 in the series ஹைக்கூ

வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.

காகமும் அழகு

This entry is part 6 of 17 in the series ஹைக்கூ

வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.

வாளைத் துறந்த சாமுராய்

This entry is part 7 of 17 in the series ஹைக்கூ

ஒரு சாமுராய்க்கு முக்கியம் வாள். வாளைத் தீட்டுவதும், கூர் பார்ப்பதும், இமைக்கும் நேரத்தில் அதை உறையிலிருந்து எடுத்து வீசுவதும், பின்னர் உறையைக் கண்ணால் பார்க்காமல் கைகளால் உணர்ந்து வாளை மீண்டும் உறையில் செருகுவதும், சாமுராய் மேற்கொள்ளும் பயிற்சிகள். வாளின் திறனைப் பின்னிறுத்தி அறிவால் ஆளுமையை நிரூபித்த சாமுராய் உண்டென்றாலும், அது விதிவிலக்கு.

நடவுப் பாடல்

This entry is part 8 of 17 in the series ஹைக்கூ

ஹஜிமே என்னும் இந்தச் சொல் ஜப்பானிய உரையாடலில் இடம்பெறும். ‘முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்கிறேன்’ என்னும் சொற்றொடர் ஜப்பானிய உரையாடல்களில் ஒருவரை முதலில் சந்திக்கும்போது அவசியம் சொல்லப்படும் வாக்கியம். ஜப்பானிய மொழியில் ‘ஹஜிமேமாஷிதா’.

அறுந்த பட்டம்

This entry is part 9 of 17 in the series ஹைக்கூ

காற்றாடியும் தன்னைச் சுற்றியிருக்கும் காற்றாலும், தான் இணைக்கப்பட்டிருக்கும் நூலாலும் உயரே பறக்கிறது. காற்றின் விசையால் உயர்கிறது, பறக்கிறது. நூலின் இணைப்பால் நிலைத்து நிற்கிறது. காற்றாடிக்கு நூலுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகையில் காற்றின் விசையால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் வீழ்கிறது.

கிளைக்கு உயரும் மலர்

This entry is part 10 of 17 in the series ஹைக்கூ

தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.

படுக்கை வரையில் பனி

This entry is part 11 of 17 in the series ஹைக்கூ

அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.

பிள்ளையின்மை

This entry is part 12 of 17 in the series ஹைக்கூ

குழந்தையற்றவள்பொம்மை விற்கிறாள்விதி கவிஞர்: ரென்செண்ட்சு (1654 – 1707) உமஸுமெனொஹினாகஷிட்சுகுசொஅவரெனரு 石女の雛かしづくぞ哀れなる கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒரு மார்ச் 3ம் தேதி, பழைய ஜப்பானிய நாட்காட்டியின்படி மூன்றாம் மாதத்தின் மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாள் ஹினா மட்சுரி என்னும் பெயரில் பொம்மைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. “பிள்ளையின்மை”

முதற்பனி

This entry is part 13 of 17 in the series ஹைக்கூ

புதிய தொடக்கத்தைக் கவித்துவமாகக் குறிப்பிடும் வார்த்தையாக மொழியிலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்புக்கேட்டுப் புதிதாகத் தொடங்குவதற்கு ஏற்ற பருவகாலமாகக் கலாசாரத்திலும் ஹட்சுயுகி என்னும் முதல் பனிப் பனிப்பொழிவு இணைகிறது. ஹைக்கூவின் முதல் அடி பருவகாலத்தின் முதற்பனியை மட்டும் குறிப்பிடாமல் உள்ளுறையாக ஒரு புதிய தொடக்கத்தைச் சொல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

தலைக்குடைகள்

This entry is part 14 of 17 in the series ஹைக்கூ

ஹைக்கூக்கள் ஒற்றை வரியில் கடந்துசெல்லும் காட்சி பொதுவான இயற்கைக் காட்சியாக அமைந்திருப்பின் அதன் படிமங்களை ஜப்பானியரல்லாத வாசகரும் உணர்ந்துகொள்ள இயலும். ஆனால், காட்சிப்படுத்தலில் ஜப்பானிய சமூக, கலாசாரப் பின்னணிகளும் கலந்திருக்கையில் அந்தக் கவிதையை அதன் தளத்தில் நின்று புரிந்துகொள்வதற்கு அந்தக் கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக அமைப்பை மேலோட்டமாகவாவது அறிந்துகொள்ளும் தேவை இருக்கிறது.

உடைபட்ட ஊன்றுகோல்

This entry is part 15 of 17 in the series ஹைக்கூ

வேகமாக வீசிய இலையுதிர் காலக் காற்று மல்பெரி மரக்கிளை ஊன்றுகோலை உடைத்துப் பெருந்துயரத்தைத் தந்தது என்னும் பொருளில் இந்த ஹைக்கூ ஊன்றுகோல் இழந்த ஒரு மனிதனைக் காட்சிப்படுத்துகிறது. இது ஹைக்கூ எழுதப்பட்ட காலகட்டத்தில் கவிஞனுடைய வாழ்வில் நடந்த எதுவும் வாசகனுக்குத் தெரியாமற்போனாலும், கவிதை அதனளவில் முழுமையாகப் பொருளை உணர்த்துகிறது. 

மரமேறும் தவளை

This entry is part 16 of 17 in the series ஹைக்கூ

மழைப் பொழிவால் வாழை மரம் சாய்ந்து சாய்ந்து ஆடுகிறது. அதன் மேல் தவளை ஏறுகின்றது. வழுக்குவதற்குக் காட்டாகச் சொல்லப்படும் வாழையில், அதிலும் மழையிலும் காற்றிலும் ஆடிக்கொண்டிருக்கும் அம்மரத்தில் அது ஏறுவதும், ஜென் மரபின்படி நிலையாமையின் குறியீடாகக் கவிதையில் வெளிப்படுகின்றது.

பிள்ளையிழப்பு

This entry is part 17 of 17 in the series ஹைக்கூ

கம்பராமாயணத்தில் இந்திரஜித் போரில் வீழ்ந்த பின், பிள்ளையிழந்த துயரத்தால் இராவணன் அடையும் வேதனைகளையும் அவனுடைய புலம்பலையும் விருத்தத்தில் வடிக்கிறார். அதில் ஒரு பகுதியாக, // மைந்தனெ எனக் கதறுவான், பெருமை பெற்ற மகனே எனக் கூவுவான், என் தந்தையே என்பான், என் உயிரே எனச் சொல்வான், உன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் இன்னும் இருக்கிறேனே எனத் தன்னைத் தானே நொந்துகொள்வான், வெந்த புண்ணின் மீது வேல் பாய்ச்சப்பட்டது போன்ற துயரத்தை அனுபவிப்பான் // என்னும் பொருளுடைய வரிகளைப் படிக்கையில் அரக்கர்களின் அரசனாக இருப்பினும் மகனை இழப்பின் அத்துயரத்திலிருந்து ஒரு தந்தை தப்ப முடியாது என்பது தெளிவு.

தனிமையும் அழைப்பொலியும்

This entry is part 18 of 17 in the series ஹைக்கூ

காவல் இல்லக் காப்பாளன் தனிமையில் இருக்கிறான். மான்களை விரட்டுவதற்காக நெருப்பு உண்டாக்கிப் புகை வெளியிட்டு அதன் மணத்தால் வயலிலிருந்து மான்களை விரட்டியும் அவை வயலுக்குள் நுழைந்துவிடாமலும் காக்கிறான். யாருமில்லாமல் அவன் மட்டும் வனத்தில் தனிமையில் காவல் காத்திருக்கையில் தனக்கு உறக்கம் வராமலிருப்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தாமிர மணியைத் தானே அடித்து ஒலியை உண்டாக்குகிறான்.  

தும்பியின் பிம்பம்

This entry is part 19 of 17 in the series ஹைக்கூ

பறக்கும் தும்பி நீரில் தன் பிம்பத்தைக் காண்கிறது, அது பறந்து கொண்டிருப்பதால் பிம்பமும் நகர்கிறது, பிம்பம் நகர்வதால் அதைத் தும்பி துரத்துகின்றது. துரத்துவதால், பிம்பம் நகர்கிறது. துரத்துவதும் நகர்வதுமாக அந்தக் குளிக்கும் நீர்த்தொட்டியின் மேல் தும்பியின் பயணம் தொடர்கிறது. தொட்டியின் எல்லையில் தும்பியின் பயணம் முடியலாம், அல்லது அது திரும்பி மீண்டும் நீரில் தன் பிம்பத்தைக் கண்டுத் தொடரலாம்.