நாடகங்கள் மேல் தமிழ் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது அந்த படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் ‘மழை’. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
Author: அழகியசிங்கர்
நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு….
இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது. முதலில் ஆச்சரியம். முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது. கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது. கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது.
