வேண்டிப்பெற்ற ஒன்றை இன்று மொத்தமாக இல்லாமல் ஆக்கவேண்டும்.எப்போது கிடைக்கும் என ஊகத்திற்கு அப்பால் எதிர்பார்ப்பை விதைத்திருந்த அது இன்னும் இரண்டு நாளில் உருத்தெரியாமல் போகப் போகிறது.ஆயிரம் காரணங்கள் மருத்துவ உலகிலிருந்து கிடைக்கிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வம்சாவழி பிரச்சினைகள், உறவுகளுக்குள் திருமணம் ஒத்த குரோமோசோம்கள்..கொண்டுபோய் குப்பையில் கொட்ட வேண்டும் அனைத்தையும் என ஒரு வேகம் வந்தது அவள் மனதில்.
சில தெருக்கள், சில உலகங்கள்
சைக்கிள் ரிக்க்ஷாவின் இருக்கையைச் சரிகை கோர்த்த சிவப்பு வண்ணப் பட்டு சீலை மறைத்திருந்தது. வாயில் குதப்பிய மாவாச் சாறை அடிக்கடி தரையில் உமிழ்ந்தவாறு இருந்த ரிக்க்ஷா இழுப்பவன் திணறிக்கொண்டிருந்தான். வயிறு முதுகைத் தொட, விலா எலும்புகள் புடைத்து நிற்க, ரிக்க்ஷாவை நகர்த்தப் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான். ஆனால், சோடா “சில தெருக்கள், சில உலகங்கள்”
காலங்கடந்த தெளிவுறுதன்மை
மெலோட்ராமா என்பது தீவிரமான நடிப்பு, சைகை, காட்சி வடிவமைப்பு (mise-en-scène), இசை மற்றும் கதை நிகழ்வுகளின் தற்செயல் சேர்க்கை ஆகியவற்றின் மூலம் அறவியல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான தெளிவை வெளிப்படையாகக் காண்பதாகவும் கேட்பதாகவும் மாற்றும் ஒரு முறைமையாக நீண்டகாலமாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது (Brooks 1976; Elsaesser 1972; Gledhill 1987). ஶ்ரீதரின் பங்களிப்பு என்னவெனில், இந்தத் தாமதிக்கப்பட்ட தொடர்பாடலையே அத்தகைய தெளிவின் மூல ஊற்றாக மாற்றுவதாகும்.
பாடுநனி கேட்டல்
யூரிபிடீஸைப் பற்றி எழுதத் தொடங்கியபோது ஆன் கார்சனின் முன்னுரைகளே மீண்டும் மீண்டும் என் மனதில் நிழலாடின. அவற்றைக் கடந்து அந்நாடகங்களைப் பற்றி என்ன பெரிதாக எழுதிவிடப் போகிறேன் என்ற அசூயை என்னை ஆட்கொண்டது. பின்னர் இந்த முடிச்சை அவிழ்க்க ஒரு வழி கிடைத்தது. மிகச் சிறப்பான அந்த நான்கு முன்னுரைகளையும் மொழிபெயர்த்தால் அவற்றின் கூட்டுத்தொகையே யூரிபிடீஸின் உலகிற்கான கச்சிதமான அறிமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. அவற்றை அடுத்தடுத்து மொழியாக்கம் செய்தேன்.
ஆன் கார்ஸனின் சில சுருக்கக் குறிப்புகள்
கமில் கிளோடெல் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளை ஒரு மனநலக் காப்பகத்தில் கழித்தார், ஏன் என்று வியந்தபடி. (அவரை அங்கு சேர்க்கத் தேவையான) ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்த கவிஞரான தன் சகோதரருக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். என்னைப் பார்க்க வா, நான் இங்கே பைத்தியக்காரப் பெண்களுடன் வாழ்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்; நாட்கள் நீண்டவை, என்கிறார் அவர். அவர் புகைபிடிக்கவில்லை, உலாவச் செல்லவுமில்லை. சிற்பம் செதுக்க மறுத்துவிட்டார்
நிலம் கடந்த மானுடம்: அ. முத்துலிங்கம் கதைகளில் இடப்பெயர்வு, விசித்திரம் மற்றும் அங்கதம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்திலிருந்து தொடங்கிய பேரினவாத ஒடுக்குமுறையும் யுத்தமும், ஒரு பெரும் மக்கள் திரளை உலகெங்கும் சிதறடித்தது. இந்தத் துயரார்ந்த வரலாற்றின் சாட்சியாக எழுந்த ‘புலம்பெயர் இலக்கியம்’ பெரும்பாலும் கண்ணீராலும், இழப்பின் வலியாலும் எழுதப்பட்டது. ஆனால், அ. முத்துலிங்கம் இந்தத் தளத்தில் ஒரு முற்றிலும் மாறுபட்ட ஆளுமை. அவர் புலம்பெயர் வாழ்வை ஒரு முடிவற்ற துயரமாகப் பார்க்காமல், ஒரு ‘உலகளாவிய பயணமாகவும்’ (Global Odyssey), மானுட விசித்திரங்களைக் கண்டடையும் ஒரு ‘தத்துவார்த்தத் தேடலாகவும்’ மாற்றினார்.
நவநீதம் பிள்ளை
நிறவெறி ஆட்சியில் எந்தவொரு வெள்ளையினச் சட்ட நிறுவனமும் தன்னை ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ள மறுத்த சூழ்நிலையில், 1967-ஆம் ஆண்டில் நடால் மாகாணத்தில் தனது சொந்தச் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம், அந்த மாகாணத்தில் சொந்தமாகச் சட்ட நிறுவனம் தொடங்கிய முதல் பெண்மணி மற்றும் முதல் வெள்ளையரல்லாத பெண் வழக்கறிஞராக நவி பிள்ளை அறியப்பட்டார். நிறவெறியை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), கருப்பு மனசாட்சி இயக்கம் (Black Consciousness Movement) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல அரசியல் போராட்டக்காரர்களுக்காகவும், சித்திரவதைகளுக்கு ஆளானோருக்காகவும் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்
என் அன்பு ஆலிக்கும்..
வானில் சூரியன் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். செஞ்சுடர் ஒளிர அந்தத் தீவண்ணன் நடந்து வருவது போல பொன்னம்பலத்திற்கு மேனி சிலிர்த்தது. தன்னையறியாமல், பாட்டு கிளம்பியது. “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்; பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூ மிசை; என்னம்பாலிக்கும் ஆறு கண்டின்புற ; இன்னம் பாலிக்குமோவிப்பிறவியே “ என்று பூர்விகல்யாணி ராகத்தில் லயித்து, தில்லையம்பலவாணனை நினைத்து மனமுருகப் பாடிக் கொண்டே நடந்தவர் அப்படியே அந்த சூரியன் வந்த திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு கண்மூடி நின்றிருந்தார். “ நடராஜா” என்று கண் விழித்தவர் அருகில் நின்றிருந்தவரை க் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டார்.
நேரங்காலம் தெரியாம…
வேகமாக வளர்ந்து வந்த இந்தத் துறையில் விபத்துகளும் அதிகரித்துக் கொண்டுதான் வந்தன. இங்கிலாந்தில் செய்தது போலவே இங்கும் ஒரு ரயில்வே நேரத்தை கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். ஆனால் இங்கிலாந்தைப் போலல்லாமல் அமெரிக்கா பரந்து விரிந்த பெரிய நாடாயிற்றே. நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் நியூயார்க்கில் காலை ஏழு மணி ஆகும் பொழுது மேற்குக் கடற்கரையில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோ இருளில் மூழ்கி இருக்கும். இரு நகரங்களும் இருக்கும் நெடுங்கோடுகளைக் கணக்கில் கொண்டால் அவற்றுக்கிடையேயான நேர வித்தியாசம் ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள். இப்படி இருக்கும் பொழுது ஒரே ரயில்வே நேரம் எப்படிச் சாத்தியமாகும்?
உற்றது உணராது, உயிர் உலைய வெய்துயிர்ப்பாள்
அவன் புரியாமல் நின்றிருந்தான். விளங்கச் செய்வது, இயங்கச் செய்வது, கனத்துத் தடுத்து மறைப்பது எனக் கற்றிருந்தான். இப்போது அவற்றைத் தன் கைகளிலும் குரலிலும் அறிய வேண்டியிருந்தது. வலையின் முடிச்சொன்றை அவிழ்க்க முயன்றான். விரைந்து முடிக்க வேண்டும் என்றபோது பார்வை குறுகியது. முடிச்சு அவிழாதபோது உடல் இறுகியது. இன்னும் வலுவாக இழுத்தான். முடிச்சு மேலும் இறுகியது
கஃபே-கான்ஸர்ட்
இந்தத் தீர்ப்பு சொன்ன செய்தி கஃபே-கான்ஸர்ட் தொழில் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பூர்ஷே ஏற்படுத்தியிருந்த நண்பர்கள் குழு இப்போது நிரந்தர அமைப்பாக மாறியது. தங்கள் பாடல்களைப் பாட எவ்வளவு ராயல்டி செலுத்த வேண்டும் என்று அவர்கள் பட்டியலிட்டனர். நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாட அனுமதி வழங்கவும், ராயல்டி தொகையை வசூலிக்கவும், அதைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் வழிமுறைகளை உருவாக்கினர். 1850-இல் தற்காலிகக் கூட்டமைப்பாகத் தொடங்கி, 1851-இல் முழு அமைப்பாக அது பிறந்தது. ஸாஸெம் (SACEM — Société des Auteurs, Compositeurs et Éditeurs de Musique)
மரமேந்தும் மழைத்துளி
இரவில் தெளிந்த வானத்தில் தெரியும் நிலவு நகர்வதில்லை. அறிவியலின் அடிப்படையில் நிலவு நகர்வதைச் சொல்வதாக ஏற்பினும், கவிஞன் தெளிந்த வானத்தில் நிலவைப் பார்க்கையில் அதன் நகர்வுடன் தொடர்புள்ள வேறொன்றைக் கவிதையில் சொல்லாமல் நிலவு நகர்வதை மட்டும் அறிவியலைத் துணைக்கழைத்துச் சொல்ல வாய்ப்பில்லை. விரையும் நிலவெனச் சொன்ன பின் மழைக்குச் செல்கிறார். நகர்தலையும், நகராமல் இருப்பதையும் அடுத்தடுத்து காட்சிப்படுத்தும் இந்த ஹைக்கூவில், நிலவு நகர்வதாக பாஷோ சொல்வது, வரிகளில் இல்லாத இன்னொன்றையும் காட்சிப்படுத்துகிறது.
புது நகர நிர்மாணமும் இரண்டாம் பயணத்தின் முடிவும்!
இந்தப் புகார்கள் ஸ்பானிய அரசவையை சென்றடைந்தன. இதனால் அதிருப்தி அடைந்த ஸ்பானிய அரசு, ஹுவான் அகாடோ (Aguado) என்பவரை 1495-ல் ஹிஸ்பானியோலாவுக்கு உண்மை நிலவரத்தை விசாரிக்கவென்று அனுப்பினர். அவர் அரசரின் பிரதிநிதியாக வந்து அங்குள்ள நிர்வாக நிலைமையை விசாரிக்க வேண்டியிருந்தது. அகாடோ தன் அதிகாரத்தை முறையில்லாமல் பயன்படுத்தியதால், கொலம்பஸ் இனி மேலும் புதிய கண்டுபிடிப்புகளைச் சேர்க்காமல் ஸ்பெயினுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நா.பாலா கவிதைகள்
நன்கு விரிந்து மடிந்திருக்கிற இதழ் வட்டம்.
அதே மிருதுவான இதழ்கள் தாம்.
ஆனாலும்
ஏதோ இடறிக் கொண்டேயிருக்கிறது.
தற்போதைக்கு
‘நான் அறிந்திராத
நீங்கள் அறிந்திராத
திருச்சி அன்பு நகரின்
செம்பருத்திப் பூக்கள் அறிந்திராத
செம்பருத்தி’
அறங்களனைத்தையும் கைவிடுக!
ஒரு செயலுக்கான தூண்டுதல் என்பது அந்தச் செயல் குறித்த அறிவு, செயலின் அறிபடுபொருள், மற்றும் அந்தச் செயலை அறிபவன் என்று மூன்று விதமாக இருக்கின்றது என்கிறார். மேலும் செயலுக்கான இருப்பிடம் என்பது செயல் செய்யும் கருவி, அந்தக் குறிப்பிட்ட செயல், மற்றும் அந்தச் செயலைச் செய்பவன் என்று மூன்று விதம் எனக்கூறுகிறார். செயலிற்கான ஐந்து காரணிகளை முதலில் விளக்கிய அவர் இப்போது வேறு கோணத்தில் செயலுக்கான காரணிகளை விளக்குகிறார்
பிறப்பினைக் கொண்டாடும் உலகம்
தாய் – சேய் உளவியல் அடிப்படையில் தாயின் குரலைக் கேட்பதனால் அவளுடைய அருகாமையை உணர்ந்து கொள்கிறது அந்த ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தை. ஏணி, தூளி என்பது அக்காலத்தில் குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் தனது பழைய புடைவையால் உருவாக்கும் ஊஞ்சல் போன்ற சாதனம். தாயின் அருகாமையை இதனாலும், அந்தத் தொடு உணர்ச்சியினாலும், அவளுடைய வாசம் அதிலிருப்பதாலுமே அக்குழந்தை உணர்ந்துகொள்ளும்.
கண்ணாடி வில்லைகளிலிருந்து உலோகப் பிரதிபலிப்பான்கள் வரை
சிறிய கண்ணாடித் துண்டானது, ஜன்னலாக இருந்தபோது வெளி உலகை மனிதனுடைய கண்களுக்கு அருகில் கொண்டு வந்தது. ஆனால் அதன் வடிவத்தையும் மேற்பரப்பையும் கட்டுப்படுத்தத் தெரிந்தபோது அது அறிவியல் கருவியாக மாறியது. இங்குதான் ஒளியியல் அறிவியலின் உண்மையான தொடக்கம் எனக் கூறலாம். சாதாரண கண்ணாடித் துண்டை விட சற்று வளைந்த கண்ணாடியால் ஒளியை குறிப்பிட்ட விதத்தில் திருப்ப முடியும்எனக் கற்றுக் கொண்ட மனிதன், அதன் வளைவு சரியாக அமைந்தால் தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை சிறிய பகுதியில் ஒன்றுகூட்ட முடியும் என்பதை உணர்ந்து, லென்ஸை உருவாக்கினான்.
எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்தவர் – லீ குவான் யூ
அயராத உழைப்பு, நேர்மையானத் தொழிற்முறை, ஊழலற்ற அரசு நிர்வாகம், குற்றங்களைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறை, சமுகப் பாதுகாப்பு, நாட்டில் எல்லோரும் திறமயைக் கொண்டு முன்னேற்றம் காணமுடியும் என்ற அரசியல் சூழ்நிலை அவரது அரசால் உருவாக்கப்பட்டது. திக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சிங்கப்பூர் குடியரசு, கால ஓட்டத்தில் உலகமே போற்றும் ஒரு அற்புத நாடாக உருமாறியது. இந்த முன்னேற்றத்துக்குப் பலியானது பேச்சுரிமையும் கருத்துரிமையும் என்பதை மறுக்க இயலாது.(கி. சீலதாஸ், ‘வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யமாகும் என்ற லீ குவான் யூ சீங்கப்பூரின் விடிவெள்ளி’,செம்பருத்தி, மார்ச் 30, 2015) சிங்கப்பூரை முன்னேற்ற மென்மையான நடவடிக்கைகள் உதவாது என்று கருதியதால் பல கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் அவர் இயற்றினார்
தகவல் – 1
இந்த நிகழ்வை முதன் முதலில் விளங்கிக் கொண்டவர் நுண்தகவல் இயற்பியலின் ஸ்தாபகரான லுட்விக் போல்ஸ்ட்மன் (Ludwig Boltzmann). வெப்பம் என்பது மூலக்கூறுகளது தன்னிச்சையான நுண்ணலகு நகர்வுகளே: தேநீர் சூடாக இருக்கையில் மூலக்கூறுகளின் நகர்வுகள் அதீதமாக கிளர்ந்திருக்கும். பிறகு, இது ஏன் குளிர்ந்து விடுகிறது? அதியற்புதமான ஓர் ஊகத்தை போல்ஸ்ட்மன் துணிந்து முன்வைத்தார்: சூடான தேநீரிலும் குளிர்ந்த காற்றிலும் உள்ள மூலக்கூறுகளின் சாத்தியமான நிலைகள் குளிர்ந்த தேநீரிலும் வெதுவெதுப்பான காற்றிலும் உள்ள மூலக்கூறுகளது நிலைகளை விட குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த இறுதி நிலை என்பது குறைவான சாத்தியக்கூறுகள் உள்ள நிலைகளில் இருந்து அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ள நிலைகளுக்கு பரிணமத்துச் செல்வதே. தேநீர் தானாகவே சூடாகாது. ஏனெனில் தகவல் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளாது.
துளிம இயற்பியலும் வேத வேதாந்தங்களும்
‘பார்ப்பவர்தான், பார்க்கப்படுகிறார்’ என்ற ஜிட்டுவின் வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. அதைதான் முன்னரேயே ‘அஹம் ப்ருமாஸ்மி’ என்று உபனிடதம் சொல்லிவிட்டது. ஒரு குவாண்ட இயற்பியலாளராக, போம் துணை அணுப்பொருளுடன் இக்கருத்தை பொருத்துகிறார். நான், அவன் என்ற பேதங்களற்ற, அபேத நிலையே சத்தியம் என்று போம் சொல்கிறார். சத்தியத்தை அறிய, ‘ரியாலிடி’யின் மூலம் செல்வது இயலாது. இருவருமே ப்ருஹதாரண்யக உபனிடதத்தின் ‘அஸதோமா சத் கமய- அசத்தியத்திலிருந்து, சத்யத்திற்கு அழைத்துச் செல்’ என்பது ‘ரியாலிடிக்கும்’ ‘சத்தியத்துக்கும்’ இருக்கும் வேறுபாடு என்று வலியுறுத்துகிறார்கள்.
மொழி புரியாவிட்டாலும் மனம் புரிந்த இசை
ஒருவரை நேசிப்பதற்காகத் தன்னையே மாற்றிக் கொண்டே சென்றால், ஒரு கட்டத்தில் தன்னையே இழந்துவிடலாம். உண்மையான அன்பு என்பது உன்னை நீயே அழித்துக்கொள்வது அல்ல என்ற கருத்துடன் 2018ல் வெளியான Love Yourself: tear நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல் பாடல்கள் அதுவும் தோல்வி, வலி, பிரிவு என்றால் இளைஞர்களைக் கேட்கவும் வேண்டுமா? கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த தொகுப்பு Billboard 200ல் முதலிடம் பிடித்தது. K-pop ஆல்பம் ஒன்று அமெரிக்க ஆல்பம் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு- 2026 ஆன் கார்சன்
ஆன் கார்சன் சாஃபோ மற்றும் யூரிபிடிஸ் போன்ற கிரேக்க செவ்வியல் எழுத்தாளர்களின் பல அதிகம் அறியப்படாத படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். மூலத்தின் அனுபவம் சிதையாமல் நவீன கவிதைகளுக்கான நடையில் கூரிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வேர்ச்சொல் (Etymology) ஆய்வே தனது ஆக்கங்களின் தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறார்.பலவகை இலக்கிய வகைமைகளின் இலக்கணங்களுக்கிடையேயான எல்லைக்கோடுகளை மீறிய கவிதைகள், கட்டுரைகள், லிப்ரெட்டோக்கள்(ஓபரா, பேலே (Ballet) போன்ற இசை நாடகங்களுக்கான பாடல்கள், வசனங்கள் அடங்கிய உரை) உரைநடை விமர்சனங்கள் மற்றும் கவிதை நாவல்களையும் படைத்துள்ளார்.
