அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.
Category: சிறுகதை
உமிழ்
ஒரே ஒரு நொடி, இருளடர்ந்த அந்த மதுக்கூடத்தின் மண் தரையில் தலைகுப்புற நான் விழுந்து கிடப்பதைப்போல் ஒரு காட்சி கண்முன் விரிந்தது. நிகழும் கணத்திலேயே அதனை பிரமை என்று உள்ளம் உணர்ந்தும் இருந்தது. இரண்டொரு நொடிகளில் அக்காட்சியின் மூலம் எது என்பதையும் நினைவுகூர்ந்திருந்தேன். சமீபத்தில் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா என்று அந்த இயக்குனர் எழுப்பிய வினாவிற்கு, எழுத்தாக எதுவுமில்லை எனவும் ஆனால் மனதினுள் கருக்களாக சில கதைகள் இருக்கின்றன என்றும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் எனக்கு நெருக்கமானதை விவரித்துச் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டதும் நான் சொல்லத் துவங்கிய கதையின் முதல் காட்சி அது.
ஆழி மனங்கள்
“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள். “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்.
அலகு
பாதியிலேயே ரத்னா கிளம்பினாள். சைகை காட்ட குமரனும் பின் தொடர்ந்தான். நடுஇரவிற்கு மேல் ஆகியிருக்க வேண்டும். கண்சிமிட்டும் தெருவிளக்குகள், அரைத்தூக்கத்தில் சில நாய்கள் தவிர யாரும் இல்லை. தன் வீட்டிற்குள் நுழையாமல் குமரனுடன் உள்ளே வந்தாள். அவளின் உடல் நடுக்கத்தையும் பெருமூச்சையும் அருகில் உணர்ந்தான். ஏதோ ஒரு பூவின் வாசனை. ஸ்பரிசம். எல்லாம் கலந்து ஒரு புது அனுபவம். நினைவில் அது அப்படியே தேங்கிவிட்டது.
கோதை வருவாளா?
புலரி… புலரி… புள்ளினங்கள் கூட்டில் சோம்பல் முறித்துக் கொள்கின்றன. பசுங்கன்றுகள் தாயை தேடிக் கொண்டு குதியல் போட பசுக்கள் மடியின் கனம் இறக்கி நிம்மதிக் கொள்கின்றன. அய்யோ… கிழக்கு வெளுத்து விட்டதா… இந்நேரம் கோதை வந்து விட்டிருப்பாளோ? அனிருத்யையின் உள்ளமும் உடலும் படபடத்தது, பஞ்சணையிலிருந்து துடித்தெழுந்த வேகத்தில் அதில் “கோதை வருவாளா?”
முடிவிலி
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பால்கனியில் நின்றுகொண்டு, தண்ணீர் வழிந்து தரையைக் கறைபடுத்தும் வரை மல்லிகைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளது கூந்தல் ஒழுங்கற்று அள்ளி முடிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு ராகமும் இன்றி அவள் ஏதோவொரு மெட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவர் அப்போது இளைஞராக இருந்தார்; அந்தத் தண்ணீர் வீணாவதைக் கண்டும், அந்தச் சேற்றைக் கண்டும், குடும்ப வாழ்க்கைக்குள் அன்பு நுழையும்போது ஏற்படும் அந்த ஒழுங்கின்மையைக் கண்டும் எரிச்சலடைந்திருந்தார்.
தலைப்பாறை
ஒரு பெரும் மரம் வழியில் முறிந்து கிடந்தது. அம்மரத்திற்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சொன்னான் நிஷாந்து. அம்மரத்தை மொத்தமாக முறிக்காமல் பாதையில் இடையூறாக இருக்கும் பாகத்தை மட்டும் அருகில் முறித்து போட்டிருந்தனர். அதைக் கண்ட திலீப் அண்ணன் “பாத்திய இந்த மரத்த மொத்தமா வெட்டக்கூட நம்மாளுங்களால முடியல, அவ்ளோ பெரிய மரம்” என்று சொல்லிக் கொண்டே முழு மரத்தின் நீளத்தையும் தன் கண்ணால் ஒருமுறை அளந்தான். அவ்வளவு பெரிய மரத்தை அப்பெரும் காட்டிலிருந்து முழுவதுமாக அகற்றுவதென்பது பெரும் சிரமத்திற்குரிய வேலை என்பதால் அந்த மரம் வாழ்ந்த காட்டிலேயே அதை அப்படியே விட்டுவிட்டு பாதைக்கு இடையூறான அதன் பாகத்தை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் அது பாதுகாக்கப்பட்ட வனமானதால் சீசன் காலகட்டத்தில் மட்டுமே அதற்குள் செல்ல அனுமதியுண்டு.
அசுவ யாகம்
மடொன்னா, தனக்கொரு உடனடி விமோசனம் வேண்டி பரிதாபமாய் யாசித்துக்கொண்டிருந்தது. கடந்துகொண்டிருந்த விநாடிகளின் நரக வேதனையைக் கால்கள் காட்டித் துடித்தன! வழக்கமாக, கருணைக் கொலையைக் கால்நடை மருத்துவரே செய்வார். டத்தோ, தன் கையாலேயே மடொன்னாவின் வேதனையை முடித்து வைக்க விரும்பி, மருத்துவரிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சினார். மருத்துவர், இக்கொலையில் பிரதானமாக உறுதிசெய்யப்பட வேண்டிய உடனடி மயக்கமும், மரணமும் பற்றி விலக்கி, அதற்கானத் துல்லியமான இடத்தை நெற்றிப் பொட்டில் சுட்டிக் காட்டி, அரைமனதுடன் உடன்பட்டார்.
நவரத்தின விலாசத்தின் யானைக் கொட்டில்
ப்ரின்ஸ் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். இளைய மகாராணி அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். இன்றும் பெண்கள் மகாராஜா முன்னிலையில் சாதாரணமான குரலில் பேச மாட்டார்கள். பெரிய மகாராஜா அதை எதுவும் கவனிக்காமல் மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்து கொண்டு பெரிய குரலில் “குட்மார்னிங் ஆல்” என்று எல்லோரையும் புன்னகையுடன் பார்த்து விட்டு உணவு கொண்டு வரச் சைகை செய்தார். வெள்ளைச் சீருடையில் இரண்டு பணியாளர்கள் வெள்ளி தம்ளர்களில் பழ ரசம் ஊற்றி விட்டு, பெரிய வெள்ளி தட்டுகளில் பரிமாறினார்கள். முதலில் வந்தது குங்குமப்பூ போட்ட பாதாம் ஹல்வா போன்று இருந்தது. ப்ரின்ஸ் ஹல்வா வேண்டாம் என்று கையை மறித்தார்.
தெய்வங்களைக் கொல்லுதல் எனும் புனித சடங்கு
சிப்பாய் கோடாரியை வீசினான். முதல் அடி தாடையில் விழுந்தது. கல் பொடியாகி வெண்மையான தூசியாக கீழே விழுந்தது. இரண்டாவது அடி முழங்காலில். மூன்றாவது வயிற்றில். உடைந்த சிலைக்குள்ளிருந்து எலிகள் திரண்டோடின. கடவுளின் உடலை வீடாகக் கொண்டிருந்த சிறு உயிரினங்கள் திடீரென்று வீடிழந்தன. கும்பலில் சிலர் பின்வாங்கினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். கடவுளுக்காக அல்ல. தங்கள் இளமைக்கால நினைவுகள் கைவிட்டு போவதால் அவர்கள் அழுதார்கள்.
ஓடும் நதி.. உதவாக் கரை..
முக்தா அப்பாவின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அது அதனதன் இடத்தில் – தாத்தாவின் உபதேசமென அப்பா பல முறை சொன்னது. அப்படியேதான் இருந்தது. இருட்டில் கூட வந்து எடுக்கலாம். டைரியின் நடுவே இருந்த ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்து முக்தா படிப்பதை பூரணி பார்த்துக் கொண்டிருந்த்தாள். ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான காகிதங்கள் அப்பாவின் கையெழுத்துடன்.
முருகன் ஏஜன்சிஸ்
முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.
தேரோட்டம்
செம்புடங்களை எரவானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தாள். ஒரு கையில் மோர் செம்பை இறுக்கப் பிடித்தபடி ஒரு எம்பு எம்பி முற்றத்தில் போடப்பட்டிருந்த கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து தாவிப்போக ஆரம்பித்தேன். நடுவில் துணி காய்ந்து கொண்டிருந்த கயிற்றிடம் ஒரு கணம் நின்று தயங்கியபின் காற்றில் பறந்து இரண்டு கம்பிகளை தாண்டிச் சென்று பிடித்தேன். கடைசிக்கம்பியிலிருந்து சுற்றுச்சுவர் மீது குதிக்கும்போது, மோர் சிந்தாமலிருக்க ஊஞ்சல் போல இரண்டு முறை ஆடிய பின் கையை விட்டுவிட்டு சுவரின் மீது குதித்தேன்.
சம்ஹாரம்
அப்பாவின் கைகள் முன்பைப்போல ஓங்குவதில்லை இப்போது. அதற்கு மாறாக மிகவும் கீழ்தரணமான வசைச்சொற்களை சரமாரியாக பிரயோகித்தவண்ணம் இருக்கிறார். அம்மா ஏதேனும் சாதாரணாமாக பேசினால்கூட உச்சுக்கொட்டுவதும், பதில் என்று அவர் வழங்கும் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஏதேனும் ஒரு கொடிய சொல்லை இணைத்து அளிப்பதும் வழமையாக மாறிவிட்டிருக்கிறது. அவரின் ஒவ்வொரு தேவைக்கும் உடனிருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலோ, அல்லது அவளுக்கே அலுத்துவிட்டதாலோ என்னமோ, அம்மா இப்போதெல்லாம் எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதில்லை.
இல்லாதவனின் வீடு
மூன்று வருடங்களுக்கு முன் என்னைப் பிரிந்து, என் காதலை ஏற்காமல் போன கமலாவை என்னால் மறக்க முடியவில்லை. — 12B-க்கு புதிதாக வந்தவள் என்று நினைத்தேனா? இல்லை, அது தவறு. அவள் எப்போதுமே அங்குதான் இருந்தாள். அவள் சிரிப்பின் உரப்பு, யாரேனும் சொல்வார்களோ என்று கவலைப்படாத அவளின் வாளிப்பு, மறைக்க வேண்டிய ஒன்றாக அவள் ஒருபோதும் நினைக்காத அவளின் உடல், ஜன்னல் திறந்தபடி ஆடை மாற்றும் தன்னம்பிக்கை, மாலைக் காற்றை நெடுநேரம் முகரும் அவளின் கொண்டாட்டவுள்ளம்… நாங்கள் நெருக்கமாக இருந்த காலம் மிகக் குறுகியது. ஆனால் அவளுக்கு அது ஒரு பருவம் மட்டும், எனக்கோ அது வாழ்க்கை.
பஞ்ச் லைன்
இரவு நேரங்களில் படுத்ததும், அவள் அவன் முகத்தைப் பார்த்ததேயில்லை. விளக்கை அணைத்து விட்டுத்தான் அவன் படுக்க வருவான். அவன் அவளை நெருங்கும் நேரம் அநேகமாய், புலர்ந்தும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது கூட அவளுக்குத் புலராத விடியற்காலை தான். அவள் பாதித் தூக்கத்தில் இருப்பாள். தெரியாது. ஒரு மூட்டையாய் அவன் பக்கத்தில் மல்லாந்த பிறகுதான், என்ன நடந்தது என்பது அவளுக்குத் தெரியும். இந்த விஷயங்களில் அவளுடைய விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது.
கன்னி
‘எனக்கு அய்யங்கார் தெரு, ஒரிஜனல் அய்யங்கார். இந்த மடிசார் வேஷமில்லே. நான் எப்பொவும் கட்ற கட்டு. அதோ நடிக்கிறாளே உங்க கதாநாயகி, அவ மடிசார் கட்டி விடறதுக்குன்னே ஒருத்தியைக் கூட்டிண்டு வரா. அவ, அவளுடைய சிநேகிதி… பெரிய்ய அய்யங்கார் குடும்பந்தான். சினிமாக்காரிக்கு மடிசார் கட்டி விடறதிலே அவளுக்கு அலாதி பெருமை…! அவ போட்டோ வார பத்திரிகையிலே வருமே! அவளையும் எவனாவது ஒரு மடையன் பேட்டி கண்டு அசட்டு பிசட்டுன்னு எழுதமாட்டானா? இதை படிக்கன்னு காத்திண்டிருக்கே ஒரு கூட்டம்…”
மீண்ட தெய்வம்
”நம் நாட்டின் பழம் புலவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எந்தவிதக் கூச்சமுமின்றிக் கூறியிருப்பது ‘ஆபாசமாக’ நமக்கு இப்பொழுதுபடுகிறதென்றால், அதற்குக் காரணம், மேல்நாட்டு மரபை ஒட்டிய ‘குற்றமனப்பான்மை’ நம்மையும் பாதித்திருப்பது தான் ஈடன் தோட்டத்தில் மனிதன் செய்த குற்றத்தினால் விளைந்தது மனித சமுதாயம் என்ற பாவ உணர்ச்சியை, பாரம்பரியமாக தாங்கிவரும் மேல்நாட்டுப் பழம்பெரும் இலக்கியங்களில் இந்தக் ‘குற்ற மனோபாவம்’ பிரதிபலிக்கக் காணலாம்.
சூசைம்மாவும் அத்வைதமும்
மூன்று நிமிஷம் நாற்பது வினாடிக்குள் அவ்வறையை விட்டு வெளியே அலறிக் கொண்டு ஓடி வந்தாள், கதவைப் படீரென்று சாத்திக் கொண்டே. அவள் போட்ட கூப்பாடு, நீண்ட தாழ்வாரம் வழியாகச் சென்று கொண்டிருந்த மூன்று நர்ஸ்கள், சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க வந்த நாலு பார்வையாளர்கள், இரண்டு டாக்டர்கள் ஆகியோரை ஸ்டில் புகைப்படங்களாக்கியது.
புலி வேட்டை
‘நமது பிரதிநிதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்கர்களின் தூண்டுதல் தான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது . இதுபற்றிப் பார்லிமென்டில் கேள்விகள் எழலாம். நாம் முன்ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். ஆப்பிரிக்கப் புலியைக் கொல்லுவதற்கு இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பாகிஸ்தான் வேறு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் கொதித்தெழுந்த மற்றைய ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கி விட்டன. கன்யாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மோஷ்லாமே நாட்டோடு நமக்கு உணவு ஒப்பந்தமொன்று கையெழுத்தாக இருக்கிறது . “
‘ககனப் பெரு வீதியில்’
சந்திரனில் முதல் மனிதனை இறக்குவது என்பது இப்பொழுது பிரச்னை அல்ல, அகண்ட வெளியில் ஆங்காங்கு ‘ஸ்பேஸ் நிலையங்கள்’ நிறுவி, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளுடைய லட்சியம். சந்திரனுக்கு அப்பால் செவ்வாய் சுற்றிவர இரண்டு ‘மாரினர்கள்’ அனுப்ப திட்டம் வகுத்திருக்கிறார்கள். செவ்வாயில் ஒரு வகையான தாவர உயிர் வர்க்கம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். செவ்வாயின் சுற்றளவும் பூமியில் பாதி. அதன் புவியிர்ப்பு சக்தி பூமியைக் காட்டிலும் மிகவும் குறைவு. பூமியில் ஆறடி உயரம் தாண்ட முடிந்தவன், செவ்வாயில் 16 அடி தாண்டலாம். பூமியில் 220 பவுண்டு எடை உள்ளவன், செவ்வாயில் 80 பவுண்டுதான் இருப்பான். செவ்வாயில் சராசரி சீதோஷ்ண நிலை எப்பொழுதும் பூஜ்யத்துக்குக் கீழேதான் இருக்கும்.
ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி
அர்ச்சனா விளக்கினாள். அந்த இம்மிக்ரேஷன் பெண் திருப்தி ஆகாமல், யார் அழைத்திருகிறார்கள், திரும்பச் செல்ல டிக்கெட் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டாள். அர்ச்சனாவுக்கு எரிச்சலாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது. சென்ற முறை ஷீலாவுடன் வந்த போது, அவளை ஒரு கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டார்கள். அர்ச்சனாவுக்கு மட்டும் இதே மாதிரி கேள்விகளுக்கு பதிலும் டாக்குமெண்ட்களும் கொடுக்க வேண்டி இருந்தது.
தண்டனைக்குரியவன்
சட்டென அவன் நினைவில் ஒரு சொல் ஒலித்தது. “வார்ம்த்” என்றான் தன்னை அறியாமலேயே. எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தனர் அறையில். பாரி சொல்வதை ராகவன் புரிந்தவன் போல் சிரித்தான். பார்வதி குழம்பியவள் போல் பார்த்தாள். கிருஷ்ணன் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான் ராகவனிடம். பாரி எதையுமே கவனிக்கவில்லை. மது போத்தலை எடுத்து கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த திரவத்தின் ஒளியும் பாரிக்குள் அந்த வார்த்தையை மீண்டும் எழுப்பியது. “வார்ம்த்” என்றான் சொக்கிய மன ஓட்டத்துடன்.
மன எல்லைகள் விரியும்போது ….
‘அப்பாடா! நல்லபடியா இத்தோடு கெளம்பி போனாரே?’ ராதிகா வாசற்கதவை சார்த்தி கொண்டு உள்ளே வந்தாள். அவளும் அலுவலகம் கிளம்ப வேண்டும். அந்த நேரத்துக்கு அவனுக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டாளே தவிர அவள் மனதில், ‘என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்? ஏன் பேச்சு கொறஞ்சு போச்சு?’ என்று அவன் கேட்ட கேள்வியே சுழன்று கொண்டிருந்தது.
கூர்வேல்
வந்தியத்தேவர் செறுமினார். “எனக்கென்னவோ கங்கவர்மனின் ஆள் எவனோதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் ராஜதந்திரம் என்று அவனிடம் ஒரு ஒற்றனை அனுப்பினால் அவன் திறமையாக நம் ஒற்றனைக் கொன்றுவிட்டு அந்தக் கொலையையே நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான். அவனுக்கு சாரங்கபாணி விமலாதித்தனை அழைத்து வரப் போயிருப்பது தெரிந்திருக்க வேண்டும். இப்போது பழி விமலாதித்தன் மீது விழுந்துவிட்டால், அவன் தண்டிக்கப்பட்டால், வேங்கி சாளுக்கியரோடு இணையும், நம்மை எதிர்க்கும்” என்று சொன்னார்.
வேம்பும், அரசும்
தன் நண்பன் கண்மூடிக் கிடப்பதை அருகில் சென்று பார்க்க அவருக்கு தைரியமில்லை. பெரியசாமியின் வீட்டிற்கு எதிர்சாரியிலிருந்த அந்த நாவல் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பெரியசாமியின் ஆத்ம சிநேகிதர். ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது ஆரம்பித்த அறுபது வருட சிநேகிதம். கருவேல முள்வேலியில் கையைவிட்டு புளியம்பழம் பொருக்கவும், மரத்தில் ஏறி நாவல் பழம் உலுக்கவும், குளம் கண்ட இடத்திலெல்லாம் குதிக்கவும் என்று ஒன்றாகத் திரிந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் அடித்த வெள்ளமும், புயலும், கொளுத்திய அனலும் அவர்களின் சிநேகிதத்தைச் சிதைக்க முடியவில்லை. எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த நேரங்களில், ஒருவர் கையை ஒருவர் இறுக்கிக் கொண்டு கரையேறினார்கள்.
கட்டில்- அலமாரி
மாநாட்டில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு , மிகப் பெரிய பாராட்டுகளுடன் சிவனேறு என்ற பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் பலவற்றுடன் ஒத்துப்போவதில்லை. குறிப்பாக முதலாவது தீர்மானமான “சைவ உணவு உண்ணும் தொண்டை மண்டல முதலியார், கார்காத்தார், சைவ செட்டியார் , தேசிகர், ஓதுவார் , ஓமநல்லூர் , பட்டர்புரம் சீமைச்சம்பிரதி வேளாளர் , சோழபுரம் வேளாளர் என்பவர்கள் அனைவரும் இனி சைவ வேளாளர் என்று அழைக்கப்படுவர்’ என்று குறிப்பிட்டது பிள்ளை அவர்களுக்கு தங்க முடியாத வருத்தத்தை அளித்தது. ‘அது எப்படில நமக்கு இணையா’ என்று குமுறுவர்
பாஹி ஜனனி
சிறு சிறு நகாசுகளுடன் ஸ்திரமான காலபிரமாணத்தில், ஆங்காங்கே கார்வை குடுத்தபடி நாட்டைக்குறிஞ்சியின் வளைவுகளை வெவ்வேறு ஸ்தாயியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். நங்கூரம் போல நடேசப் பிள்ளையின் நடைச் சொற்கள் உடன் ஒலித்துக் கொண்டிந்தன. நாட்டைக்குறிஞ்சியின் மென் பிரயோகங்கள் அழுந்திவிடக் கூடாது என்று சிரத்தை எடுத்து மிருதங்கத்தின் ஒலி அளவை மட்டுப்படுத்தி வாசித்துக் கொண்டிருந்தார் நடேசன். நடேசனின் நடைச் சொற்களைக் கேட்க வேண்டுமென்பதற்காகவே சில சதுஸ்ரங்களை மௌனங்களாக்கிக் கொண்டார் வைத்தியநாதன்.
ஹிக்கூரி
அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான். நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.
குற்றலைகள்
வீட்டைவிட்டு நான் வெளியேறும்போது புழக்கடையில் டெய்சி இருந்திருக்கிறது. பந்தை தனது மூக்கினால் தள்ளியபடியும், பின்னர் அதை தானே துரத்தி எடுத்து மிதித்து விளையாடியபடியும் அது ஆனந்தமாகத்தான் இருந்தது. நான்கு கால்களையும் பரப்பி அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனோவை அது ரொம்ப நேரத்திற்கு சட்டைசெய்யவேயில்லை. பந்து விளையாட்டு சலித்ததும் நட்புடன் வாலை ஆட்டியபடியே அது மனோவை நெருங்கியதும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்த மனோ அதன் மெல்லிய கழுத்தைக் கவ்வி, வெறியுடன் பலமுறை ஆட்டி வீசியது. பிளவுபட்ட டெய்சியின் கழுத்திலிருந்து ரத்தம் கருநிறமாய் கசிவது அந்தக் காட்சியில் அத்தனை துல்லியமாய் தெரிந்தது.
நானாகிய
பூங்காவை விட்டு வெளியேறும் போது அழகான அரிவை என் முன் தோன்றினாள், அன்று நான் பார்த்ததில் கடைசி முகம் அதுதான் என்ற அளவிற்கு அந்த முகம் என்னுள் பதிந்துள்ளது. அவள் அணிந்திருந்த உடை எனக்கு சிந்தையில் இல்லை, கருமையான அவளது முகத்தின் சிறப்புகளை மட்டுமே மீட்க முடிகிறது-கடுமையான செயல் ஒன்றும் இல்லை இப்போதும் என்னால் எளிமையாக அந்த முகத்தை விவரிக்க இயலும்- புருவம் குறைவாக இருந்தது; உதடுகளுக்கு அரக்கும் சிவப்பும் கலந்த ‘பால்ம்’ பயன்படுத்தியிருப்பாள்போல, தண்ணீர் போன்ற அந்த உதடுகள் அவளது அழகென்ற சேனைக்கு அணு ஆயுதம்போல வலு சேர்த்தது. இருப்பினும், என்னை பெரிதாக கவர்ந்தது அவளது தாடைதான்.
பில்லியன் நிழல்கள்
“நிக், உன் மூளை இப்போது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க மறுக்கிறது,” என்றார் பேராசிரியர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோட்டு. “சாதாரணமாக, நமது உணர்வு நிலை கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகளை ஒரு கணத்தில் வடிகட்டி, ஒரே ஒரு யதார்த்தத்தை மட்டும் உருவாக்குகிறது. கண் திறந்ததும் நாம் “இங்கே இருக்கிறோம்” என்று உணர்கிறோம். அந்த வடிகட்டுதல் நிகழவில்லை என்றால், எல்லா சாத்தியக்கூறுகளும் ஒரே நேரத்தில் காட்சி தரும். அதுதான் இப்போது உன் நிலை.
மிங்ஹுன் (Minghun)
மகனின் மரணத்தையும் தாயின் சங்கடத்தையும் கேட்டறிந்த துறவி, கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந்தார். காதலியுடன் திருமணத்தில் இணைய முடியாமல் ஏங்கித் தவிக்கும் மகனின் ஆவியால்தான் தாயிற்கு இவ்வளவு தொல்லைகளும் என்பதை விளக்கி, ‘மிங்ஹுன்’ செய்து, தனித்து அலையும் ஆவிகளை தம்பதிகளாக மேலுலகில் இணைத்து வைத்தால் இந்தத் தொல்லைகள் நீங்கும் என்ற தாவோயிச நம்பிக்கையை எடுத்துச் சொன்னார்.
அலாஞ்சியம் சால்விஃபோலியம்
முதலில் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு மருந்து நெடியும் வீச்சமும் அடித்தது. இருட்டாக இருந்தாலும் குளிர்ச்சியாக இருந்தது.சிறிய வரவேற்பறையில் அரை இருட்டில் ஒலி இல்லாத டீவிக்கு முன்பு சக்கர நாற்காலியில் இருந்தது பெரியப்பா என்று அறிய ஒரு கணம் தாமதம் ஆனது. நாங்கள் உள்ளே வந்தது அவருக்கு தெரியவில்லை, கண்களை பாதி மூடிய மாதிரி அசையாமல் டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஸ்விட்ச்
ஸ்னாக் சுதாரித்து, விண்கலத்துடன் ஒன்றுவதைக் கைவிட்டு, அதன் உந்துவான்கள் (thrusters) வேகமாக உந்தித்தள்ள, அவசரமாக சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியது. சற்றைக்கெல்லாம், ஆராய்ச்சி நிலையத்திற்கும், ஸ்னாக்கிற்கும் இடையில், விண்வெளிக் குப்பைகள் மிதமிஞ்சிய வேகத்துடன் அவ்விடத்தைக் கடந்து போயின. எல்லாமும் கடந்து போய்விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் ராடார் கருவி மற்றும் நட்சத்திரக் கண்காணிப்பான் (star trackers) இருளைத் துழாவிவிட்டு பச்சையில் ஒளிர்ந்தது.
அதிபன்
ராஜகோபால் அந்தத் திரையைச் சுருக்கிவிட்டு, மற்றொரு திரையைத் திறந்து, அதில் அவர் சற்றுமுன் பதிவிறக்கம் செய்துவைத்திருந்த காணொளியை ஓடச்செய்து நோக்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அரவிந்தன் மிக வேகமாய் சிலம்பம் பயிற்சி செய்வதும், திடீரென செவி அருகே வந்த பூச்சியைத் தவிர்க்கும் முயற்சியில் அவன் நிலையிழப்பதும், கையில் அசுரவேகத்தில் சுழன்றுகொண்டிருந்த கழி தறிகெட்டுத் தெறித்து, ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டனின் முகத்தைத் தாக்குவதும் அதில் தெளிவாக பதிவாகியிருந்தது.
அவரவர் அடிசில்
சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது “அவரவர் அடிசில்”
JANUS
இரண்டாம் பகுதியைப் படிக்க முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை. கண் விழித்துவிட்டோமோ? இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை… மெல்ல புரண்டு படுத்தார். ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்… எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 “JANUS”
அறுந்துவிடாத நூல்
மதுரையின் வெயில் அந்திசாயும் நேரத்திலும் பிசுபிசுவென சட்டையை இழுத்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே நின்றபோது, எண்பதுகளைக் கடந்த உஸ்மான் பாயின் முழங்கால் மூட்டுகள் லேசாகத் தாளம் தப்பின. ஆனாலும் நடை நின்றுவிடவில்லை. காலையில் நிலக்கோட்டையில் பார்த்த அந்த அடக்கஸ்தலத்தின் ஈரம் இன்னும் செருப்படியில் ஒட்டியிருப்பது போன்ற “அறுந்துவிடாத நூல்”
தலைப்புச் செய்திகள்
பயங்கரமான கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவது போல்தான் இருந்தது, மொபைலில் படித்த செய்தி. சுந்தரேசன் இறந்து போய்விட்டான். மரியாதையுடன் சொல்லணும் இல்லையா? ‘…காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ வாட்சப் செய்தி. போன மாதம் வரை அவனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போ போயிட்டான். உடனே சுந்தரேசனின் மொபைலுக்கே போன் “தலைப்புச் செய்திகள்”
கேள்வி-பதில்
நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”
பெதும்பை
அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து “பெதும்பை”
நாய்வால்
என் வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை விலைக்கு வாங்க முடியுமா என்ன, அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை. நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை விடுங்கள் அந்த மனையை விலைக்கு வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும் “நாய்வால்”
கூடடைதல்
புழுக்கம் மிகுதியாக இருந்ததால் அப்பா அன்று சட்டை அணிந்திருக்கவில்லை. திண்ணை விளிம்பில் மடித்துவைக்கப்பட்டிருந்த தினசரி அருகே உள்ளங்கையளவு ரேடியோவில் இருந்து சன்னமான இசை கேட்டுக்கொண்டிருந்தது. அவருடன் அமர்ந்திருந்த அம்மா வெந்த பனங்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நொடித்து அவர் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருந்த அவளது வலதுமூட்டில் நிரந்தமான “கூடடைதல்”
காஞ்சி பூசூடா உமையாள் படலம்
யாருக்கு கற்றுத்தருவது என்று காத்திருந்தாற் போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”
மஜ்ரேஹா
என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.
பிறந்தநாள் பரிசு
காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.
தேனம்மை
கல்யாணப்படம் எதிர் சுவற்றில் தொங்கியது. ‘அக்கா மஞ்சள் நிறம்..அத்தான் மாநிறமானாலும் அழகு. கண்கள் ஈர்ப்புடையது. நின்று நேருக்கு நேர் பார்க்கமுடியாது. இவனுடைய அப்பாவின் இறப்பிற்கு பின் அங்குதான் அண்ணனோடு சேர்த்து இவன் ஜாகையும்.பயமும் மரியாதையும் கலந்த உறவு. நேருக்குநேர் பார்த்துப் பேசியதில்லை’.
வாட்ஸாப்ப் தாத்தா
குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையைப் பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்? யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
விழுது தேடிய வேர்
எப்போதும் மடிப்பு கலையாத, தங்கப் பொத்தான்கள் மின்னும் அந்த வெள்ளை ஜிப்பா இன்று இல்லை. அதற்குப் பதிலாக மார்பு வரை போர்த்தப்பட்டிருந்த வெண் பட்டு வேஷ்டி , அந்தத் தேகத்தின் கம்பீரத்தை மறைத்திருந்தது. காதுகளில் எப்போதும் மின்னும் அந்தக் கடுக்கன்கள் கழற்றப்பட்டு, வெறும் துவாரங்கள் மட்டுமே எஞ்சி நின்றன.
