செருப்பிடைச் சிறுபரல்!

பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.

யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில்  இராமன் வில்லை முறித்தான்.