சின்ன பொம்மைகளை வீட்டில் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிறந்து பாதி வாழ்க்கையை கழித்திருந்தாலும் லண்டனில் இப்போதைய பாதி இருப்பதை இது குறிக்கலாம் என்கிறார். “இடைத்தரகர் குடும்பம்”
Category: இதழ்-194
நைபால் பேட்டி
ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்
அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது. அந்த காலகட்டத்தில் நான் மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக …
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி!
இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்.
வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்
நோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக …
கஞ்சனம்
நய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்?” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.
நைபால் எங்கிருந்து வருகிறார்?
தெலுங்கு மொழியில் 1930களின் துவக்கங்களில் எழுதப்பட்ட ‘ஹாஹா ஹூஹூ’ என்ற அற்புதமான சிறுகதையில் விஸ்வநாத சத்யநாராயணா (1893-1976) ஒரு விபத்தாய் இங்கிலாந்து சென்ற பயணியை விவரிக்கிறார்: ஒரு கந்தர்வன், செவ்வியல் காலத்துக்குரிய இந்தியாவிலிருந்து வந்த பறக்கும் பாதி மனிதன் பாதி குதிரை, தன் சிறகுகளை இழந்து ட்ரஃபல்கர் சதுக்கத்தில் விழுகிறான். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவன் சிறகுகள் மீண்டும் முளைக்கக் காத்திருக்கையில் ஆங்கில சமூகத்தை எதிர்கொள்வது பல விஷயங்களைப் பற்றி வரண்ட நகைச்சுவையுடன் பேச சத்யநாராயணாவுக்கு வாய்ப்பளிக்கிறது: கலாசார வேறுபாடு, அறிவியல் வளர்ச்சியின் இயல்பு, காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் இந்திய கலாசாரம் இழக்காதிருக்கும் வளங்கள், இவற்றில் சில. இது உயர்வுநவிற்சி தன்மை கொண்ட பிரதியல்ல, பண்டைய இந்து விழுமியங்களின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் தீவிர குரலுமல்ல. தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கிய மரபின் நீண்ட தொடர்ச்சியில் முழுமையாய் ஒன்றியிருந்தும்கூட தனித்தன்மை கொண்ட நவீன இலக்கிய நுண்ணுணர்வு அமையப் பெற்றிருந்த சத்யநாராயணா இன்று ஆந்திர பிரதேசத்துக்கு வெளியே அதிகம் வாசிக்கப்படுவதில்லை. அவரது கந்தர்வன் விண்ணில் உயரப் பறந்து கதைக்கு முடிவு கட்டுகிறான், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தன் ஆங்கிலப் பிணைப்பாளர்களை நோக்கி, ‘இதைவிட சிறுபிள்ளைத்தனமான இனத்தை’ கண்டதேயில்லை என்று கூவிச் செல்கிறான்
மீர்ச்சா கர்த்தரெஸ்கோ
The past is everything, the future nothing, and time has no other meaning.* சில நாட்கள் குளிருக்கு பின் மீண்டும் வெயிலேற ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மதிய நேர, மூன்று பதினெட்டிலிருக்கும் கடிகாரத்தின் காலம், ஒவ்வொரு முள்ளாக முன்னேற முயன்று கொண்டிருக்க, நான் ஒவ்வொரு நொடிக்கும் “மீர்ச்சா கர்த்தரெஸ்கோ”
மூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)
அண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…
விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி
‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)
”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.
‘ஆழி சூழ் உலகம்
குளக்கரை
இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா?- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்
மகரந்தம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், நாம் யார் என்பதற்கான அடையாளம் நம் முகம்தான். ஆனால் விபத்துகளில் முகம் முற்றிலும் சேதப்பட்டவர்கள் நிலை இதுவரை ஒன்றும் செய்ய முடியாததாக இருந்து வந்தது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய், இன்று முகத்தை முழுதாகவே தானம் பெற்று மாற்றியமைக்கும் சிகிச்சை வந்து விட்டது. இது வரை நாற்பது பேர் முகம் மாற்று சிகிச்சை பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை குறித்து மனதைப் பிசையும் புகைப்படங்களுடன் ஒரு கட்டுரை இங்கிருக்கிறது. . இதில் தொடர்புடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் என்று அனைவைரையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது. கருணை மிக்க ஒரு சமூகம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்தாலும்,
ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
இந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின் பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம் பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான்.
ஈர்ப்பு
பெண்களின் கண்ணீர்க் கதைகளில் பெரும்பாலும் இருப்பது இவனுக்கு என் விரிசல் தெரியவதேயில்லை என்ற அங்கலாய்ப்பு தான். அல்லது தன்னை விரிசலற்ற இடத்தில் தாக்கி தனக்குள் நுழைந்தவன் மீதான பொறுமல்கள். இந்த ஆட்டங்களை நான் அறிந்து விலகியவன் என என்னைப் பற்றி கற்பனை செய்து விட வேண்டாம். நான் இந்தக் களத்தில் நுழையும் வாய்ப்பவற்றவன். பெண் என்ற உயிரினத்துக்கு அடிப்படையில் ஒரு தேர்வுணர்வு உள்ளது. ஒரு விதத்தில் பெண் என்பவள் அந்த தேர்வுணர்வு மட்டும்தான். ஆண் என்பவன் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உணர்வு.
3 கவிதைகள்
வானிலிருந்து பிரிந்து எழுகிறது முழுநிலா,
பதறி கண்மூடித்திறக்கையில்
மென் ஒளி கரும்பட்டுத்திரையில்
வட்ட ஒளிக்கல்.
தெருவெங்கும் அவளின் நடமாட்டம்
அனேகமாக மாடிகளில் எவருமில்லை. இந்த வெயில்நாட்களின் துவக்கத்தில் தெருவில் கட்டிலில் படுத்திருக்கும் வயசாளிகளைத் தவிர, மாடிகளில் ஆள் நடமாட்டமே இல்லை. மனித மனதை என்றவென்று சொல்வது. கள்ளமற்று திரிந்த சிறுமிகளின் மனதிலும் பயத்தை ஊன்றி நிறுத்திவிட்டார்கள். குழந்தைகள் மட்டும் எதுவும் அண்டாத தெய்வங்களாக எப்போதும் போல, அவர்கள் நேரத்திற்கு அழுது சிணுங்கிக் கொண்டிருக்கும் சந்தடிகள் கேட்டன.
காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்
இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்
தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்