மாறாத புன்னகையும் மனவிரிவும்

This entry is part 49 of 72 in the series நூறு நூல்கள்

ஏற்கனவே தமிழ்க்கதை உலகில் நாம் கண்ட எந்தப் பாத்திரத்தின் சாயலும் இல்லாமல் புத்தம்புதிதான பாத்திரங்களை தம் கதைகளில் முன்வைத்திருக்கிறார் அஜிதன். ஜஸ்டின் அத்தகைய பாத்திரங்களில் ஒருவன். அவன் வேலை என்பது கிட்டத்தட்ட கூலிப்படை வேலை. அவன் மாமா ஏவி விடுவார். இவன் சென்று முடித்துவிட்டு வருவான். சரியான அடிதடி ஆள். ஆனால் தனக்கென ஒரு விசித்திரமான நியாயத்தை வைத்துக்கொண்டிருப்பவன். ஒருநாள் மாமா ஒரு குறிப்பிட்ட ஆளை வெட்டிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார்

கல்லை மலராக்கும் கவிதைகள்

இதற்கு இணையாக வேறு வகையான சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும் வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச் சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன

இனிய நினைவு

இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.

தரிசனம்

“அப்பா என்ன பண்றாரு?”
“அப்பா இல்லைங்க மேடம்”
“உயிரோட இல்லயா?”
ஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட ஊரவிட்டே போயிட்டாரு.”
“கூடப் பொறந்தவங்க?”
“ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க”
“படிக்கறாங்களா?”
“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”
“நீதான் படிக்க வைக்கறியா?”
“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க.”

முறிமருந்து

வைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன.
“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது.

கனவு மலர்ந்தது

“சோமு, நாடகம்ங்கறது ரெண்டுமூனு பேரு நின்னு விளையாடி ஜெயிக்கற எடம். சினிமாங்கறது பெரிய குருச்சேத்திரம். வெறும் அஞ்சி பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும். இதெல்லாம் தேவையா சோமு.”

உத்தமன் கோவில்

முன்புறமாக ஊன்றிய இரு கைகளும் பின்புறமாக ஊன்றிய இரு கால்விரல்களும் மட்டுமே உடலின் எடையைத் தாங்கிக்கொள்ள நடுவில் ஒரு பலகைபோல நீண்டிருந்தது அவர் உடல். பிறகு இடைவரை தரையில் படிய இடைக்கு மேலான உடலை வளைத்து வானத்தை அண்ணாந்து பார்த்தது அவர் முகம். அதுவும் ஓரிரு கணமே. மீண்டும் வளைந்து பாதங்களை கைகள் பற்றியிருக்க உடல்மட்டுமே நிமிர்ந்தது. தொடர்ந்து கூப்பிய கைகளுடன் சூரியனை நோக்கிய நிலைக்குத் திரும்பினார்.

கிருஷ்ண ஜெயந்தி

டாக்டர் எங்களைக் கூட்டமாகப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை கீழே தாழ்த்தியபடி “என்னடா, நீங்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்கனு ஊர்வலம் கெளம்பிட்டிங்களா? எல்லாத்துக்கும் காரணம் இந்த பக்தவச்சலம் செஞ்ச வேல,” என்றார். சற்றே தாமதமாகத்தான் எங்களிடமிருந்து அவர் பார்வை விலகி மாமியின் மீது படிந்தது. அவர் தோற்றத்தைப் பார்த்ததுமே “தம்பிங்களா, கொஞ்சம் வெளியே நில்லுங்க,” என்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

ஆனந்த நிலையம்

“கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”
“சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல?”
“அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா?”

உயர்ந்த உள்ளம்

This entry is part 24 of 72 in the series நூறு நூல்கள்

பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.

புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்

கலையாக்கத்தை ஒரு தொழில்நுட்பம்போல பயின்று பயின்று தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் முத்துலிங்கம். இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிப்பழகி இன்று அவருக்கு வசப்பட்டுவிட்ட ஒன்றாக மிளிர்கிறது அந்தக் கலை. இன்று எந்த அபூர்வமான தகவலையும் அவர் அழகானதொரு கதையாக மாற்றியமைப்பதில் வல்லவராக இருக்கிறார். தகவலையும் கலையையும் கச்சிதமான முறையில் ஒன்றிணைத்து புதிதை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளில் இன்றைய காலகட்டத்தில் முத்துலிங்கமே முதன்மையான கலைஞர்.

தீப்பொறியின் கனவு

This entry is part 40 of 72 in the series நூறு நூல்கள்

பெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக்

முப்பத்தெட்டு மேதைகள்

ஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

வஞ்சினங்களின் காலம்

வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’

தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.

வாழ்க்கையில் ஒரு நாள்

“சீக்கிரம் நீங்க சினிமாவுல பாடறத நாங்க கேக்கணும் சார்” என்று வாழ்த்துவார்கள். கைகுலுக்குவார்கள். ”எப்படியாவது மகாதேவனயாவது, இல்ல எம்.எஸ்.வி.யவாவது போய் பாருங்க சார். உங்களுக்கு கண்டிப்பா ஒரு வாய்ப்பு தருவாங்க” என்று நம்பிக்கை ஊட்டுவார்கள். ”எஸ்.பி.பாலசுப்ரமணியன்னு புதுசா ஒருத்தருக்கு அடிமைப்பெண்ல மகாதேவன் வாய்ப்பு குடுத்திருக்காரு. நீங்களும் முயற்சி செஞ்சா கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள். “எதிர்காலத்து டி.எம்.எஸ். நீங்கதான் சார். அதுல சந்தேகமே இல்லை. சார் பெரிய ஆளாவும்போது எங்களயெல்லாம் மறந்துடக்கூடாது” என்று வேண்டிக்கொள்வார்கள்.

மழை விளையாடும் குன்று

படைப்பின் அடிப்படை இயல்பு உணர்ச்சி. ஒட்டுமொத்த மானுட வாழ்வின் உணர்ச்சி அது. ஒரு காட்சியை நம்பகத்தன்மையோடு உருவாக்கி, அதன் பின்னணியில் அந்த உணர்ச்சியைப் படியவைக்கிறார்கள் படைப்பாளிகள். கிட்டத்தட்ட ஒரு கிணற்றைத் தோண்டி, அதில் ஊற்றைச் சுரக்கவைப்பதுபோல. பொருத்தமான ஒரு படிமத்துக்காக வேட்கைகொண்ட விலங்குபோல அவர்கள் மனம் அலைந்தபடியே இருக்கிறது.

அக்கமகாதேவியின் வசனங்கள்

நிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.

ஒட்டகம் கேட்ட இசை

வேலைக்குச் சேர்ந்து நாலைந்துமாத சம்பளங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன கைக்கடக்கமான வானொலிப்பெட்டியை வாங்கினேன். பின்னிரவு நேரங்களில் இலங்கை, சென்னை நிலையங்களிலிருந்து ஒளிபரப்பாகும் பாடல்களால் என் நெஞ்சை நிரப்பிக்கொள்ள அது எனக்கு உற்ற துணையாக இருந்தது. என் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பூனைக்குட்டிபோல அதுவும் படுத்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதெல்லாம் உருகிக் கரைந்துபோவதுபோல இருக்கும். காற்றிலே ஒரு மெல்லிய ஆடை நழுவிப் பறந்து வந்து நமக்குத் தெரியாமலேயே நம்மீது படிந்து மூடியதுபோல ஆறுதலாக இருக்கும்.

சொற்களின் நடனம்

குழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது.

பசியும் பரிவும்

இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.