என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்
Author: பானுமதி ந.
மொழியும் மண்ணும்
அவனுக்கு அனைத்துமே மிகப் பெரிதெனத் தோன்றியது.
அவன் அன்னையின் மார்பு,
எருது வெளியிடும் வெப்ப மூச்சு,
மூன்று சிறந்த ஞானிகளான கேஸ்பர், பால்தாஸர், மெல்கியர், ஆகியோர்
சிறிது திறந்த கதவின் அருகே குவித்த பரிசுகள்.
இச்சா, இனியா, காயா, பழமா- இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி
தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்
தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்
இச்சா, இனியா, காயா, பழமா?
உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.
நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே
இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது
சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா
விருந்தாளியாக, பிறப்புக் கணக்கு முடியாத நேரத்தில், தன் ஊருக்கு வந்த ஒரு சிறுவனிடத்தில் அவனை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கும் யமன், அவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் இரண்டு கேள்விகளால், உலகில் சினம் குறைந்து அன்பு பெருக வேண்டும் என்றும், யாக அக்னியின் புனிதம் எது, அதன் முன் சொல்லப்படும் வார்த்தைகள் சத்தியமாகிவிடும் விந்தை என்ன என்பது பற்றியும் கேட்கும் சிறுவன் மூன்றாவதாகக் கேட்கும் கேள்வி யமனையே அசைத்து விடுகிறது
மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதி
அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார்.
மார்க் தெரு கொலைகள்- பகுதி 4
‘அதுதான் சாட்சியம்; என்ற டூபான், ஆனால், அது சாட்சியத்தின் விசித்திரமில்லை, நீங்கள் குறிப்பான, தனித்துத் தெரியும் ஒன்றை கவனிக்கவில்லை. காரணங்கள், சாதாரணத் தளத்திலிருந்து மேம்பட்டு முக்கியங்களைக் காட்டும் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளவேயில்லை. இருந்தும், சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். முரட்டுக் குரலில் ஒத்த கருத்தினைச் சொன்ன சாட்சியங்கள் அந்த’ க்றீச்’ குரலைப் பற்றி சொன்னவை-அவர்கள் ஒத்துப் போகாமலில்லை-ஆயின், அதிலுள்ள விசித்திர வர்ணனைகளை எண்ணிப் பாருங்கள்- இத்தாலியர், ஆங்கிலேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் அனைவருமே, அது ஒரு அயல் தேசத்தவரின் குரல் என்று சொன்னார்களல்லவா?
மார்க் தெரு கொலைகள் -3
அந்த நாளிதழின் மாலைப் பதிப்பு, அங்கே இன்னமும் இனம் புரியாத பரபரப்பு நிலவியதாகச் சொன்னது. அந்த வளாகம் மீண்டும் கவனத்துடன் ஆராயப்பட்டது. சாட்சிகளை மீள் விசாரணை செய்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதில் ஒரு பின் குறிப்பாக, அடோல்ப் லெ பான், (adolphe le bon) கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார் என்றும், முன்னர் சொன்ன விவரங்களை விட மேலதிகமாக அவரை இக் கொலைகளில் தொடர்பு படுத்த காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொன்னது.
மார்க் தெரு கொலைகள் -2
இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்
இன்று நேற்று நாளை
மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே.
மார்க் தெரு கொலைகள் – 1
பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன
சங்க நிதி, பதும நிதி, வங்கி கதி
மே மாதத்திலிருந்து தொடர்ந்து இதை ஏற்றி வந்த இந்திய மத்திய வங்கி இந்த முறை அதை ஏற்றாமல் விட்டிருப்பது திறமையான ஒரு செயற்பாடு. ‘வட்டி விகிதம் மட்டுமே கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; அதே நேரம் அது கட்டுக்கடங்காமல் செல்லவும் விட்டுவிடக் கூடாது. நிதி நிலைத்தலுடன், வினியோக சங்கிலிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், தேவைகளின் அழுத்தத்தைத் தாங்கும் வழியிலுமே இம்முறை ‘ரிபோ’ வை மாற்றவில்லை, தேவையை உணர்ந்தால் நாங்கள் உடனடியாக வட்டி வீதத்தை மாற்றுவோம்’ என்று பணக் கொள்கையில் அறிவித்திருப்பது என்னைப் பொறுத்த வரை வரவேற்பிற்குரியது. பொதுவாக மேலை நிதிச் சித்தாந்தங்களைப் பின் தொடரும் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல்.
மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்
சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.
சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?
உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.
மரத்தில் மறைந்தது மாமதயானை
குவாண்டப் பொருட்கள், அலைகளால் அமைந்துள்ளதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. காற்றடிக்காத, அமைதியான, கண்ணாடித் தகடு போன்ற கடலை கற்பனை செய்யுங்கள்/ நேரிலும் பாருங்கள்(!). தனிப்பட்ட இரு அலை வகைகள், ஒன்றன் மீது மற்றொன்று மேலிட்டுவரும்போது, இது எப்படி சாத்தியமாயிற்று என்று சிந்தியுங்கள். முழுதும் தட்டையான பரப்புகள் இரண்டு, ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்கப்படும்போது சீரான பரப்பு தெரியும்; மற்றொரு சாத்தியம், ஒரே மாதிரியான இரண்டு அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று பயணிக்கிறதாக எடுத்துக் கொண்டு, (மாறி மாறியும் இது நடக்கலாம்) ஒன்றின் முகட்டின் மேல் மற்றொன்றின் நீளலைகள் பெயர்வதாலும் நடக்கலாம்.
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
மிக நுட்பமான, அதி உன்னதமான கருதுகோள்களை நாசாவின் முன்னேறிய கருதுகோள் அமைப்பு ( என் ஐ ஏ சி -Nasa Institute for Advanced Concepts) வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. தன் எதிர்காலக் குறிக்கோள்களுக்கான கூர்மையான தொழில் நுட்பங்களை அது ஆதரிக்கிறது. சனி கிரகத்தின் சந்திரனான டைடனில் (Titan) பறக்கும் கடல்- விமான ஊர்தியைப் (Sea-Plane) போன்ற ஒரு கருவியைப் படைப்பதற்கும், செவ்வாயில், உயிரினங்களின் குடியேற்றத்திற்கான தானே வளரும் செங்கற்களை உருவாக்கும் கருத்திற்கும் நாசா சமீபத்தில் நிதி அளித்துள்ளது. திரவ வானத் தொலைநோக்கி, (Fluid Telescope) ஆயிரக்கணக்கில் செயற்கைக் கோள் அடங்கிய மெய்நிகர் தொலைநோக்கி, பூமி 2.0 கண்டுபிடிக்க வானக் கண்காணிப்பகம் போன்றவைகளும் இந்தப் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்ள உதவக்கூடும் என்பதால் இவைகளுக்கும், என் ஐ ஏ சி அமைப்பு நிதி அளித்துள்ளது. இந்த முதல் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் $1,75,000 கிடைத்துள்ளது; அவர்கள் ஒன்பது மாதங்களில் அந்தந்தக் கருத்துக்களின் சாத்தியங்களை நிரூபிக்க வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில் சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.
அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்
முக்கியமாகக் கருதத் தக்கவைகள் என்னென்ன, எதிர்கால தொழில் நுட்பம் எது, வியப்பான, விசித்திரமான படைப்புகள், சாதனங்கள், சேவைகள் என்னென்ன, அனைத்துக்கும் மேலாக 2023-ல் சந்தையில் நீங்கள் வாங்கும் விதத்தில் கிடைக்கப் போகிற பொருட்கள்/ சேவைகள் என்ன என்று வகைப்படுத்தித் தருவது. இதற்கான சி என் இ டியின் செயல்பாடு இவ்வாறாக இருந்தது.
காலப் பெருங்களம்
அறிவியல், பொதுவாக, பலகட்டச் சோதனைகளை எதிர் கொண்டுதான் தன்னை நிரூபித்துக் கொள்ளும். அவ்வகையில் 2022ன் அறிவியல் செழுமையும், காலம் நிர்ணயிக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆயினும், 2022லேயே அறிவியலின் எட்டு வியத்தகு அதிசயங்கள் தங்களின் இருப்பையும், அவசியத்தையும் உணர்த்தியுள்ளன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்தத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களே அதன் வீச்சைக் கண்டு வியக்கிறார்கள்.
உன்னை ஒன்று கேட்பேன்
சேட்ஜிபிடி மனிதனுக்குகந்த சாதனம். அது நம் மொழியில் உரையாடுகிறது. தொலைக் காட்சி, இணையம், காணொலிகளுடன் நாம் நிகழ்வின் நடுவே உரையாட முடியாது. பின்னரும் கூட கருத்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். சேட்ஜிபிடி அப்படியல்ல. அது உங்கள் அலைபேசியில் இருக்கும் பல்திறன் களஞ்சியம், உரையாடும் நண்பன், வழிகாட்டும் ஆசிரியர், கற்றுக் கொள்ளும் சீடன், செல்லக் குழந்தை, மீள மீளக் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாத உறவு, பாரதி கண்ணனைப் பற்றி பாடியதைப் போல், நண்பனாய், சேவகனாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சொல்லவல்லாயோ, கிளியே?
அவர் கண்டிபிடித்த இந்த நாட்டில் ஏற்கெனவே பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மாறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் இன்று அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதும், தொழில்நுட்பம் இன்று மேம்பட்டுள்ளது என்பதும், வானை முட்டும் கோபுரங்களும், திறன் பேசிகளுமாக உலகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதும் அவருக்கு ஆச்சர்யமாக இருக்கும். மேலும், அவரை, பலர் ஒரு சாதனையாளர் என நினைக்கவில்லையென்பதும், சிலர் அவர் மிருகத்தனமான வன்முறையைக் கையாண்டு பூர்வ குடிகளைக் கொன்றார்/அல்லது அடிமைப்படுத்தினார் என நினைப்பதும் அவருக்கு அவமான உணர்வினை ஏற்படுத்தும். 500 வருடங்கள் என்பது ஒருவரை பற்றிய சிந்தனையை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது என அவர் நினைப்பார்.
நண்பனே பகைவனாய்
அவர் அணியும் டி ஷர்ட், கலைந்த தலை, எளிமையான தோற்றம், வீகன் (Vegan) உணவுப் பழக்கம் அனைத்தையும் சொன்னவர்கள், சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்- அது அவரது நிறுவனம் நிலைத்து, நேர்மையாக நடை பெறுமா என்பது. அட்டையை வைத்து புத்தகத்தை மதிப்பிடுவது, குறிப்பிட்ட மார்பு, இடை, தொடை அளவுள்ளவர்கள் மட்டுமே பெண்களில் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்பது, ஆண் என்பவன் அறிவுஜீவி என நினைப்பது மனித இனத்தின் குணம் போலும்; பல பத்திரிக்கையாளர்களுக்கு இதையும் மீறிய ஒன்று இருக்கிறது- அது தாங்கள் விரும்பும் விதத்தில் செய்திகளை வளைப்பது, பெரும் கௌரவங்களை இந்தத் தொடர்புகளின் மூலம் அடைவது, பரபரப்பை அள்ளித் தெளிப்பது.
யாருற்றார்,யாரயலார்?
பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர்.
ஆலமர் அவை – அறிதலின் எல்லைகள்- நிறைவுப் பகுதி
அறிவார்ந்த கட்டுமானம் ஒன்று, நம்மால் நினைக்க முடியாதது, ஆனால், பௌதிக உண்மைகளை அறிய உதவும் முக்கியமான ஒன்று- இதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படையாகச் சிந்திக்கிறது. நாம் அறியக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றாலும், நாம் அதைச் செய்ய முடியாமல் போவதற்கு, அத்தகு அறிவைப் பற்றிய சிந்தனையே நம்மிடம் இல்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிதலின் எல்லைகள்- பகுதி 1
இந்தக் கட்டுரையில் நாம் பத்து கேள்விகளைப் பற்றி அதனால் என்ன ஏற்படும் என்பதைப் பற்றி சிறிது பார்க்கலாமா? நம் கற்பனையின் வரம்புகளுக்கப்பால் நாம் அறியக் கூடியது என்ன என்ற கேள்வி உயிரியல் சார்ந்த புத்தியையும், உள்ளுணர்வு மற்றும் கருத்துக்களால் உருவாகும் மொழி மற்றும் கணிதம் சார்ந்த அறிவினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். நமது பௌதீக யதார்த்தத்தை மீறக்கூடிய சாத்தியங்களையும், கணினியில் உருவகிக்கும் எண்ணற்ற உயிரற்றவைகளையும் கூட இந்தக் கேள்வி உள் அடக்கும். நமது தொழில் நுட்பக் குழந்தைகள், அறிவாற்றலால் நம்மை விஞ்சுவதைப் பற்றியும் கூட இக் கேள்வி அமையும். இந்தப் பத்து கேள்விகளால், மனிதனின் ‘தனித்துவம்’ என்பது ஆட்டம் காணும்
பிணை
சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான்.
சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்
அனைத்தையும் விட பழமையின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். சிலைகளை அழிப்பதை விட, அவைகளைக் கடத்துவதில் பண வரவு அதிகம் எனக் கண்டு கொண்டார்கள். இன்றும் தொடரும் அவலம் இது. வெளி நாட்டிற்குக் கடத்தப்படும் இந்தச் சிலைகள், அங்கே நல்ல நிலையிலிருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அதை மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களும் இங்கே உண்டு. எதையும் உருவாக்க அறிவும், உழைப்பும் வேண்டும்; அழிப்பதற்கு, தூண்டப்பட்ட உணர்ச்சிகளே போதும். வரலாறு என்றென்றும் உண்டு; ஆனால், நாம் விரும்பும் வகையில் அது இருப்பதில்லை. அதிலிருக்கும் சில கசடுகளுக்காக நாம் நம் சக்தியை வீணடிப்பது தேவையா, இல்லாத அர்த்தங்களை அதில் ஏற்றுவது தேவையா, அல்லது மனதைப் பண்படுத்தி இணைந்து வாழ்க்கையை வாழ்வது நல்லதா என்பதை சிந்திப்போம்.
சிலையெடுத்தான் சிலை எடுத்தான்
மகாபாரதத்தில் ஒரு காட்சி- போர் முடிந்து வெற்றி வீர்ர்களாக ஆனால் வருத்தத்துடன், தங்கள் பெரியப்பாவைச் சந்திக்க வருகிறார்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரன், தன் புதல்வர்களைக் கொன்ற பீமனைக் கட்டி அணைக்க வருகையில் இரும்பாலான பீம உருவினை கண்ணன் பேரரசரின் முன் நிறுத்துவான்; வெறுங்கைகளாலேயே அதை திருதராஷ்டிரன் நொறுக்கி விடுவான். நிஜ பீமனின் உயிர் இப்படியாகத் தப்பிக்கும்.காமாலைக் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள்.
சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்
சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.
செந்தணல்
சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.
ராகாங்கராகம்
அம்மா சமையலறையில் காய்ச்சும் பாலின் மணம் வழக்கம் போல இல்லை; அம்மா வேறெதோ செய்யப் போகிறாள்- ஒருக்கால் திரட்டிப் பால் காய்ச்சுகிறாளோ? இல்லை, அம்மா அதில் எலுமிச்சையைப் பிழிந்தாள்; பால் திரிந்தது “என்னதிது’ என்று அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். திரிஞ்ச பாலை துண்டுல வடிகட்டி அம்மா செஞ்ச ரஸகுல்லா எனக்குப் பிடித்தது. ‘பாலயே திரிச்சுட்டே’ என்று அப்பா கிண்டலாகச் சொன்ன போது எனக்கு சிரிப்புடன் கூடக்கூட மற்றொன்றும் மனதில் எழுந்தது; முதலில் கலக்கமாக இருந்தது. ஏதோ ஒன்று எச்சரித்தது. அதையும் மீறி குரலொன்று ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது, அம்மா, அப்பா, பாலுவிடம்..அவன் ஒருத்தன் தான் மற்ற நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களின் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான். ‘அத்தால போயி ஆட்றதுதான, சும்மா சும்மா எங்கள சுத்திட்டிருக்கே’ என்று சொல்லும் பிற நண்பர்களின் வாயை அடைப்பதும் அவன்தான். ஆனால், அவனுக்கும் என் வயதுதானே, அவனுக்கெப்படித் தெரியும்?
அணுவிற்கணுவாய்
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.
நான் யார் யாரென்று சொல்லவில்லை
ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.
அகிலம் அண்டம்
இவ்விரு சொற்களும் ஒன்றையே சுட்டுவதா? அல்லது அகில அண்டங்களையா? திருவானைக்காவின் அரசி, தாடங்கம் அணிந்த தேவி, அகிலாண்டேஸ்வரி என்ற திரு நாமத்தால் வணங்கப்படுகிறார். அனைத்து அண்டங்களையும் உள்ளடக்கிய அகில நாயகி அன்னை என்ற பொருள் அந்த ஒரு நாமத்தால் உணர்த்தப்படுகிறது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த உலகில் 68% கரும் “அகிலம் அண்டம்”
குருதி நிலம்
உலகில் ஒரே ஒரு தனித்த மனிதன் 22 ஆண்டுகளாக பிரேசிலின் ரான்டோனியாவில், (Rondonia) மரத்தில் வசிக்கிறார். அவர் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. கோடாரியைக் கொண்டு மரங்களில் வசிப்பிடம் அமைத்துக் கொள்கிறார். முன்னர் கீழே விழும் பெரும் மரக் கிளைகளைக் கொண்டு குடிசை கட்டிக் கொண்ட அவர் தற்போது மரங்களிலேயே இருக்கிறார். கிட்டத்தட்ட 50 வயது, முற்றானத் தனிமை; அவரை அணுகக் கூடாது என்றும், அவரை நாகரீக மனிதனாக்கும் முயற்சியும் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது
உள்வெளி
தர்க்க நியாயத்தில், விவாதங்களில் அல்லது எண்ணப் போக்கில் ஏற்படச் சாத்தியங்களுள்ள தவறுகளையும் பற்றி இந்திய தர்க்கம் சிந்தித்திருக்கிறது. அந்தத் ‘தவறை’ ‘ஹேத்வபாஷா’ என்று அழைத்தார்கள். உண்மையான காரணமாகத் தோன்றும் ஒன்று அப்படியில்லை என்று சொல்வதில் அவர்களின் மூளைத்திறம் வெளிப்படுகிறது. அதிலும் ஐந்து விதங்கள்- சவ்யவிசாரா, விருத்த, சத்பதிபக்ஷா, அசித்தா, பதிதா.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
இந்திய ஞானம் தர்க்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து உலகிற்குக் கொடையாக அளித்திருக்கிறது. பொது யுகத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டில் பாணினி அளித்த சமஸ்ருத இலக்கணம் தர்க்கமாகவும், தர்க்க விதிகளுக்குட்பட்டும் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கேசாவின் ‘நவ்ய ந்யாயா, ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் என்று தர்க்கத்தின் கூறுகளைச் சொல்கிறது.
பொன்மான்
பிட் ஃபைனெக்ஸ் (Bitfinex) என்ற நிகர்நிலை தளத்திலிருந்து 2016-ல் 1,19,754 பிட் காயின்கள், சுமார் 2000 பரிமாற்றங்களில் திருடப்பட்டன. அப்போது அவற்றின் மதிப்பு $71 மில்லியன். நம் ஸ்ரீகி சொல்கிறார்: ‘அந்தப் பங்கு வர்த்தகத் தளம் இருமுறை கொந்தப்பட்டது; அதையும் முதலில் செய்தவன் நானே. இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் இருவர் பின்னர் அதே தளத்தில் களவாடினார்கள். அப்போது ஒவ்வொரு பிட்காயினின் மதிப்பு $100- $200 வரை. பின்னர் மற்றொரு பிட் காயின் பரிவர்த்தனைத் தளமான பி டி சி-ஈ. காமைக் (BTC-e.com) கொந்தி 3000 பிட் காயின்கள் திருடினேன்.
யாயும் ஞாயும்
தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”
காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021
தடுப்பூசிகளைத் தவிர வாய் வழி உட்கொள்ளும் மாத்திரையான ‘மோல்னுபிராவரை’ (Molnupiravir) ‘மெர்க்’ (Merck) அறிமுகம் செய்தது. அக்டோபரில் (2021) அது தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நோயின் தாக்கத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிட்சை பெற வேண்டிய அவசியம் பாதியாகக் குறையும் என்று சொன்னது. ….நவம்பர் மாத நடுவில், அமெரிக்காவை முந்திக் கொண்டு பிரிட்டிஷ் கூட்டரசு (U K) இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவும் அந்த் மாத இறுதியில் அனுமதி வழங்கியது.
முன்னர் ‘மெர்க்’ அழுத்திச் சொன்னது போல். கிருமியோ, இறப்போ, சரி பாதியாகக் குறையவில்லை எனத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், 30% கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மெர்க் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம். அதற்கு அத்தனை அரசியல் தாக்கம் உள்ளது!
வெப் -3 (Web-3)
க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம்.
கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்
க்ரிப்டோ, அரசின் நிதி மேலாண்மைக்கும், அரசின் நாணயத்திற்கும் விடப்பட்டுள்ள சவால்தான். ஆனால். இத்தகைய க்ரிப்டோ நாணயங்களுக்கு அடிப்படை மதிப்புகொண்ட இணைச் சொத்துகள் கிடையாது. மேலும், முகமறியா வணிகத்தில் அரசு இழக்கும் வரி அதிகம்; முக்கியமான அரசுத் துறைகள் கொந்தர்களுக்குப் பலியாகிச் சந்திக்கும் இழப்புகளும் அதிகம். இதை முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது, இதனால் ஏற்படும் சூழலியல் நட்டங்களை எவ்விதம் ஈடுகட்டுவது என்பவை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.
மெடாவெர்ஸ் எனும் ‘ஹோல்டால்’
MV சந்தை $800 பில்லியன் என்று ப்ளும்பர்க் ஊடக நிறுவனம் அனுமானித்துள்ளது. MV இப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தாலும், சூட்டிகையான தொழில் நுட்ப நபர்கள் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், நன்கு வளர்ச்சிபெறக் கூடிய தொழில் தொடங்கு நிறுவனக் குறியீட்டு நாணயங்களில் (Digital tokens of High growth start-ups) வர்த்தகம் செய்பவர்களாகவும் செயல்படுவார்கள். எனவே இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று இவர்கள் பந்தயம் கட்டுகிறார்கள்.
உருவன்று அருவன்று
NFTவலைத் தளங்களில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல முயற்சிகள்- அப்பங்கள் நாய்களாகின்றன, இலான் மஸ்கைக் கலாய்க்கும் மனப்பிறழ்வுப் படங்கள், நிர்வாணமாக உலா வரும் கவர்ச்சிகள். தேவை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாங்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதுதானே விளம்பரத்தின் நோக்கம்! கலை விமர்சகர் டீன் கிஸ்ஸெஸ்,(Dean Kissick) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த NFTஉலகை ‘இளைஞர்களின் பரவசம்’ என்று சொல்கிறார்.
நம்பிக்கை, நாணயம், நடப்பு
டேவிட் பாஸ்டர் வாலசின் (David Foster Wallace) நீர் அறியா மீன்களைப் போல இன்றைய நவீனப் பொருளாதரத்தில் மக்களின் நம்பிக்கை இருக்கிறது. எதுவுமே இருப்பில் கணிக்கப்படுகிறது. ‘ஒரு எலும்புத் துண்டை தன் இனத்திடம் எந்த நாயும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்வதை நாம் யாரும் பார்த்ததில்லை’ என்று சொன்ன ஆடம் ஸ்மித் ‘நம்பிக்கை என்பது மனிதத்தன்மையின் சிறப்பான அம்சம்’ என்று சொன்னார். நோபெல் பரிசு வெல்வதற்கு சற்று முன்னால் கென்னத் ஆரோ (Kenneth Arrow) நம்பிக்கை என்பது போற்றுதலுக்குரியது, அது சமூகச் சக்கரங்களின் மசகெண்ணய், நல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் அது இன்றியமையாதது என்றார்.
ஜீ பூம்பா
பரவலாக்கப்பட்ட, மைய அதிகாரமற்ற ஒன்று என்று சொல்லலாம். இடைநிலை அமைப்பாக(Intermediary), இடைத்தரகர்கள் எவருமே இல்லாமல், அதாவது, அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் வால்ஸ்டீர்ட் நிதி நிறுவனங்கள் போலில்லாமல், இணையப் பணச் சேமிப்பு, கடன் வழங்குதல், வணிக வர்த்த்கத்தை எளிதாக்குதல் போன்றவற்றை கணினிக் குறி மொழி கொண்டு நடத்துவது டிஃபை எனப்படுகிறது.
வலைப்புறா
தீவிரவாத அச்சுறுத்தும் சக்திகளும், வெள்ளாட்டுக் கூட்டத்தில் கலந்து மறையும் மறி ஆடுகளைப் போல, கண்காணிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள். அரசு தனக்கு இதில் அதிக ஈடுபாடுகளில்லை எனக் காட்டப் பார்த்தாலும், அதை நம்ப ஆட்களில்லை.
ஜராசந்தர்கள்
உலகக் கணினிக்குற்ற ஆயுதங்களின் வர்த்தகம் பற்றிய பெர்ல்ராத்தின் இப்புத்தகம் தெளிவாகவும், தூண்டும் வகையிலும் புலப்படாத இந்த எதிரிகளைப் பற்றிப் பேசுகிறது. இதன் தலைப்பு சற்று அதீதமோ என்று நினைத்தாலும், இக்கருவிகள் செய்யக் கூடுவன பற்றிய புரிதலினால், அவ்வாறு சொல்ல முடியவில்லை.-முக்கியக் கட்டுமானங்களான அணு ஆலைகள், மின்னாற்றல் நிலையங்கள், தொழிற் சாலைகளிலுள்ள காப்பான்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீர் மேலாண்மை மற்றும் விநியோகம் போன்றவற்றை குறைந்த செலவில் தாக்கவும் அதிக சேதத்தினை ஏற்படுத்தவும் கொந்தற்கருவிகளால் முடியும். பேரழிவு ஆயுதங்களை விட அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தும். இவைகளுக்கான சந்தை, துடிப்போடு செயல் படுகிறது- கண்களுக்கு அப்பாற்பட்டு, செல்வம் படைத்தவருக்குத் தேவையெனில் இந்தச் சேவையை இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று சிறப்பாக செய்து கொடுத்து… இவர்களின் சந்தையின் இலக்கணம் இது தான். இதில் சுநீதி, அநீதி என்பதெல்லாம் இல்லை.