பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று, ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது. இந்நிலைக்கு மாறாக, தனது வாழ்க்கை தரத்தை பிற நாடுகளின் அதிபர்களுடைய வாழ்க்கைத் தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா.
Author: இராம் பொன்னு
மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்
‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண “மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்”
திருப்பூர் குமரன் என்றொரு தியாக உரு
திருப்பூரில் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பக்கம் குமரன் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1991 ஏப்ரல் 7ஆம் நாள் ஸ்தூபியின் பின்புறம் குமரன் நினைவு மண்டபம் ஒன்றும் கட்டப்பெற்றுள்ளது. அதனுள், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 1997 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலைப் பொன்விழாவின்போது குமரன் அடிபட்டு வீழ்ந்த நினைவிடம் சீரமைக்கப்பெற்றது.
திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு
கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன…
திருப்பரங்குன்றம்- திருக்கோயில்
மதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது.
தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்
இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன. இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.
