சாலையின் ஓரத்தில் ஒரு சிறுவன் கிடந்தான்; அவன்மேல் ஒரு சாதாரண உடை அணிந்த அதிகாரி அமர்ந்திருந்தார். அந்த அதிகாரியிடம் லத்தி எதுவும் இல்லை ஆனால் அவருடைய கை கீழே மேலே என்று நகர்ந்துகொண்டிருந்தது. நான் சற்றே அருகே சென்றேன். அவர் கத்தியால் அந்த சிறுவனை குத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து உடனடியாக ஓட தொடங்கினேன்.
Category: மொழிபெயர்ப்புக் கட்டுரை
தேவதை கடந்த கணம்
“இருபது வருடங்களுக்கு முந்தைய பாடப்புத்தகங்களில், ஒரு நாளைக்கு எட்டு முறை கவனம் சிதறினால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று போட்டிருக்கும். ஆனால் இன்று? காலையில் எழுந்து கழிப்பறைக்குச் செல்வதற்குள் எட்டு முறை கவனம் சிதறிவிடுகிறது. வழியிலேயே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு தலைப்புச் செய்திகளையும் மேய்ந்து விடுகிறோம்.”
ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை
ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.
நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2
ரிக் வேதம் பூமியை ‘சக்தி’ எனச் சொல்கிறது. அதர்வ வேத புவி சூக்தத்தில், இடம் பெறும் 63 செய்யுள்களில், சிலவற்றைக் கீழே பார்ப்போம். பூமியை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், அதனால், உயிரினங்கள் எப்படி செழிக்கும் என்று பாடிய முனிவர்கள், சுற்றுச் சூழலின் அவசியம் தெரியாமலா இதைச் சொல்லியிருக்கிறார்கள்?
நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் – 1
ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.
கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.
கே. சிவாரெட்டி
பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக் கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.
குகே வா தியாங்கோ
தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது.
உறங்காமை
தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள், சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.
மைக்கேல்: புலங்களும் ஒளியும்
கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு – விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
இந்திய இசை – ஆனந்த குமாரசுவாமி
பாடலின் வரிகள் எந்தக்காலத்தில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் ஆசிரியரிடமிருந்து வாய்மொழியாக மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அந்த இசைக்கருக்கள் தொன்மையானவை. மற்ற கலைகளையும் வாழ்வையும் போலவே இசையிலும் இந்தியா ஓர் அற்புதமான காட்சி அனுபவத்தை, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் தொல்பழங்காலத்தின் உணர்வுகளுடனும், மிகுஉற்பத்திச்செயல்பாடுகளில் மூழ்கியிருப்பவர்களும் போட்டியை அடிப்படையாகக்கொண்ட சமூகஅடுக்குகளின் பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் அச்சமுற்றமவர்களுமான நமக்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய உணர்வுபூர்வமான அனுபவங்களின் வீச்சுடனும் வழங்குகிறது.
வகுத்துச் செல்வதன் எல்லை ?
அரிஸ்டாட்டிலின்படி, பிரபஞ்சம் தொடர்ச்சியான ஒன்றல்ல – துளிகளாலானது. எனவே எல்லையற்ற சிறு புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு இணைப்பை ஏற்படுத்துதல் முற்றிலும் இயலாத ஒன்று என்பதே டெமாகிரீடஸின் வாதம். எனவே எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையும் அளவும் கொண்ட சிறு துண்டுகளே கம்பியின் ஒரு இணைப்பை உருவாக்க இயலும்.
முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும்
மெக்மாஹனைப் போலவே தெரசா பீஜேன்னும் சமத்துவம் என்கிற கருத்தியல் பழங்காலத்திலும் நவீனக்காலத்திலும் எப்படி மாறுபடுகிறது என்பதை சுட்டுகிறார். தற்போதைய காலத்தில், சமத்துவம் என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், நிலைகளில் உள்ள அனைவரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற கருதுகோளை நோக்கி நகர்ந்திருப்பதாக சொல்கிறார். 17 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து குறித்த விவாதத்தில் அன்றைய சமூகம் வெள்ளை நிற மக்கள் எல்லோரும் சமம் என்ற நிலையை ஏற்றுக்கொண்டது.
வேர்கள்
இந்த உலகம் எவ்வாறு தோன்றியது, எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஒழுங்குபடுத்தப் படுகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்ன? – சிந்தனைக்கும் எட்டாத காலத்திலிருந்து, அல்லது குறைந்தபட்சம் மானுடம் தொல்பிரதிகளை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து மானுடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடைகளையே கொடுத்தனர்
துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம்.
மறம் பழகிய நாஷ்வில் கறுப்பின மாணவர்கள்
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தேவாலயம் செல்வோர் போல் உடையணிந்து இருந்தனர். எங்களுக்கு உணவு பரிமாறல் மறுக்கப்பட்ட நிலையில், நண்பகல் உணவு கவுண்டர்களில் அமர்ந்திருந்தவாறே பாடங்கள் படித்துக் கொண்டும் வீட்டுப் பாடங்கள் செய்து கொண்டும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். உணவக நிர்வாகி நண்பகல் உணவுக் கவுண்டர்களையும் உணவகங்களையும் மூடிவிட ஆணையிட்டார்
தப்பி ஓடுதல்
ஏழு வருடங்களாக, வருடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிய பிறகு, மான்கெல் வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார், கூடவே இந்தத் தொடரை வேறு எங்கு செலுத்துவது என்றும் யோசித்திருக்கிறார். நடந்ததென்னவென்றால், தொடரின் கடைசி நூலான நொந்திருந்த மனிதன் (The Troubled Man-2009), நன்றாக உருவாக்கப்பட்டு, காத்திரமான இறுதிக்கட்டத்து முடிச்சவிழ்ப்பு கொண்ட உளவுக் கதையாக அமைந்திருந்தது. ஆனால் முந்தைய பத்தாண்டில் வெளியான மூச்சடைக்கும் வேகம் கொண்ட மர்மக் கதைகள் போலன்றி இது சில நேரங்களில் மெதுவாக ஊர்கிற கதையாக இருந்தது.
நேற்றைய மனிதர்கள் – புராண முறைகளின் மரணம்
மீண்டும் கட்டமைத்து ஆரம்பிக்கக்கூடிய சில அடித்தளம் எப்போதும் மீதமிருக்கும். அத்தகைய நேரங்களில், அரசியலின் முக்கிய சவால் என்பது தவிர்க்க முடியாத வீழ்ச்சிகளின் பாதிப்பை குறைப்பதும், காட்டுமிராண்டித்தனத்தின் எல்லையை குறுக்குவதும், படிப்படியாக முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை உண்டாக்குவது தான். இத்தகைய நம்பிக்கை, பிற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமய காரணங்களுக்காக அவசியமானது என அவர் கருதுகிறார்
எல். சுப்பிரமணியத்தின் ராக ஹார்மனி கருத்து எவ்வாறு உலகளாவிய இசைக் கலவையை உருவாக்க உதவும்?
மேற்கத்திய இசைக்கு ஒத்த சுருதியான ஏற்றங்களை மாற்றி மேம்படுத்த விரும்பும் இசைக்கலைஞர்கள் ஒத்திசைவாகக் கட்டப்பட்ட ராகத்தை புரிந்து கொண்டால் அவ்வாறு செய்யலாம். மேற்கத்திய இசை ஒன்றிப்பும் கோட்பாட்டையும் நன்கு அறிந்தவர்களுக்கு இந்த அமைப்பு மேலும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கத்திய பாரம்பரிய நல்லிணக்கம் அதன் வரலாறு முழுவதும் மாற்றங்களையும் புதுமைகளையும் கண்டுள்ளது.
சூஃபி ஷாஹ் இனாயத் ஷஹீத்
ஷாஹ் இனாயத்தின் தியாகத்துக்கு 305 ஆண்டுகள் கடந்துவிட்ட இக்காலப்பகுதியில், சமூக நீதிக்காவும், தீவிர ஜனநாயகத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த மண்ணின் மைந்தன் ஷாஹ் இனாயத்தின் மரபுகளை இன்றைய 21 ம் நூற்றாண்டின் இந்திய-பாகிஸ்தானிய புதிய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்கும், புத்துயிரூட்டுவதற்குமான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது.
நம்பிக்கையா அல்லது ஆறுதலா? – சஸ்கியா ஹாமில்டன்
லோவல் கடிதங்களின் பதிப்பாசிரியராக இருந்த, மறைந்த அமெரிக்க கவிஞர் சஸ்கியா ஹாமில்டனின் இறுதி தொகுப்பான “அனைத்து ஆன்மாக்கள்” நூலில் துல்லியம், விவரித்தல், நிரந்திரமின்மை என்றே அதே பாடுபொருளை (அல்லது) கவலைகளை கையாண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஹாமில்டன் தன்னுடைய கடைசி கவிதையில், லோவலின் “நிறைவுரை” கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். லோவெலின் கடைசி கவிதை தொகுப்பை போலவே, ஹாமில்டன் இறந்த பின்பே அவருடைய கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்
“தயாரான மனதை அதிர்ஷ்டம் சாதகமாக்குகிறது” என்று கூறிய பாஸ்டரை (Pasteur) நான் மேற்கோள் காட்டுவேன். நான் நம்புவதையே அம்மேற்கோளும் மொழிகிறது என்று நனைக்கிறேன். ஆம், சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் சொல்லவருவது இதுவல்ல. விரைவாகவோ தாமதமாகவோ தயார் நிலையில் இருக்கும் மனது முக்கியமானதைக் கண்டறிந்து அதைச் செய்து முடிக்கிறது. ஆக, ஆமாம் அதிர்ஷ்டம்தான்; குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயத்தைக் கண்டறிவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது, ஆனால் முக்கியான ஏதோவொன்றை நீங்கள் செய்துமுடிப்பதில் அதிர்ஷ்டமேதுமில்லை.
ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள்
உங்களுக்கென்று ஒரு வேலையை அமைத்துக் கொள்ளுங்கள், அதை செய்து முடியுங்கள்; அந்த வேலை ஏற்றதல்ல என்பதை ஒத்துக் கொள்ளலாம், நீங்கள் இன்னமும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்க முடியும்; அதை நிறுத்துவது கடினம், வேறெங்காவது செல்லலாம் என்ற பழக்கம் ஏற்படுமானால், அது வேலையின் குறைபாடில்லை, நீங்கள் தான், நீங்களேதான். ஒருமுறை ஒதுங்கலாம்; உங்கள் பலத்தை நீங்கள் ஒரு மாற்றேனும் குறைத்தால், நீங்கள் உங்களையே குறைத்துக் கொள்கிறீர்கள்
நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும்
ஒவ்வொன்றோடும் நாம் முரணப்பட்ட உறவை வளர்த்துக் கொள்கிறோம். “இயற்கை” (கட்டமைக்கப்பட்ட, காலத்திற்கு ஏற்றாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் பொருளுடைய சொல்) என்பது நம் கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று; மாறிக்கொண்டே இருக்கும் நதிகளின் பாதைகள் மாற்றப்படுகின்றன, மரபணுக்கள் மாற்றப்படுகின்றன, கச்சா எண்ணெய் எரிப்பொருளாய் மாற்றப்படுகிறது.
ஜொராஸ்ட்ரியனிசம்
ஜொராஸ்ட்ரியர்கள் இந்த சடங்கு விழாக்களை செய்வதற்காக மகிகளுக்கு வணக்கஸ்தலங்களை நிர்மாணித்துக் கொடுத்தனர். அவை ஆங்கிலத்தில் ‘fire temples’ (தீக் கோயில்கள்) என அழைக்கப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில், சசானிய பாரசீகப் பேரரசு ஜொராஸ்ட்ரியனிசத்தை அதன் அதிகாரபூர்வ மதமாக மாற்றியபோதே உண்மையில் அது ஒரு மதமாக நிறுவப்பட்டது என்று சொல்வேன். அதற்கு முன், இது பாரசீக மற்றும் பிற பேரரசர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது உத்தியோகபூர்வ அரச மதமாக மாறிய பின்னர்தான் பரவத் தொடங்கியது.
நாம்
இயற்கையே நமது இருப்பிடம்- இயற்கையில் நமது இருப்பிடத்தில் இருக்கிறோம். அறிநுண்ணுணர்வு நமக்கு அளிக்கும், சிறு துகள்களாலான வெளியினைக் கொண்ட, காலமே இல்லாத, எதுவுமற்ற விந்தையான, பலவண்ணமுடைய, ஆச்சரியமூட்டும் இந்த பிரபஞ்ச சித்திரம் நாம் எதனால் உண்டாக்கப்பட்டுள்ளோம் என காட்டுகிறது. நம்மை உண்மை இயல்பிலிருந்து முரண்பட வைப்பதில்லை
நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்
கற்பனையோ இல்லையோ, காலம் கடப்பதையோ ஓடுவதையோ ஒழுகிச் செல்வதையோ எப்படி விளக்குவது? காலம் கடப்பதை நாம் நன்றாகவே அறிகிறோம். நமது சிந்தனைகளும் பேச்சும் காலத்தில் தான் இருக்கின்றன. மொழியின் அடிப்படை கட்டமைப்பே காலத்தைச் சார்ந்தது – ஒரு பொருள் இருக்கிறது – இருந்தது – இருக்கலாம் . பொருட்களோ வண்ணங்களோ, ஏன் வெளியோ இல்லாமல் கற்பனை செய்ய முடியும் பிரபஞ்சத்தினை காலம் இல்லாமல் கற்பனை செய்வது மிகவும் கடினமானது.
புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! – முதல் பகுதி
இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை கதையுடனும் அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும் குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது. உண்மையாகவே, சாமானிய இந்துக்கள் எதிர்கொள்ளக்கூடிய விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது.
வெளியின் துகள்கள்
அடிப்படை நடைமுறைகள் என்பது தருணங்களின் தொடர்ச்சியான ஒழுக்காக இருப்பதில்லை. வெளியினுடைய துகள்களின் நுண்-அளவு நிலையில், இயற்கையின் நடனம் என்பது , இசைக்குழு நடத்துனர் கோலின் ஒரு தாளத்திற்கு ஏற்ப ஆடுவது அல்ல. ஒவ்வொரு நடைமுறையும் தன்னுடைய தாளத்தில்,மற்றதுடன் தொடர்பின்றி ஆடுகின்றன
துகள்கள்
துளிம இயக்கவியல் மற்றும் துகள் கொள்கை விவரிக்கும் உலகம் இதுவே. லாப்லாஸூம் நியூட்டனுடையதுமான, நிரந்தர வடிவமைப்புடைய வெளியில், ஒரு மிகச்சிறிய கூழாங்கல் நீளமான துல்லிய எறிபாதையில் முடிவின்றி பயணிக்கும் இயந்திர உலகிலிருந்து வெகுதூரம் சென்று விட்டோம். நுண்துகள் பரிசோதனைகளும் துளிம இயக்கவியலும் பிரபஞ்சம் என்பது இடைவிடாத, ஓய்வற்று அசையும் பொருட்களால் ஆன ஒன்று ; தொடர்ச்சியாக பார்வைக்குத் தோன்றி மறையக்கூடிய அற்பாயுளுடைய பொருட்கள் என்று கற்பிக்கின்றன
தத்தெடுக்கப்பட்ட சீனப் பெண்
சீனர்களும் வெண்தோலினரும் வெவ்வேறு விகிதத்தில் வாழும் ஒரு வித இடைப்பட்ட வாழிடத்திலேயே நான் எப்போதும் வசித்து வந்தேன். குறிப்பாக வட அமெரிக்காவில் இனங்கள் ஊடே தத்தெடுக்கப் பட்டவர்களுக்குரிய புறவெளிகளும் வசதிகளும் (spaces and resources) போதிய அளவில் அமைக்கப் படவில்லை இனத்தின் மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், புறவெளிகளும் வசதிகளும் .வெகு குறைவாக, தொலை தூரத்தில் இங்கும் அங்குமாக, பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளன.
பிரபஞ்சத்தின் கட்டமைப்பு- 3
விண்மீன் மண்டலங்கள் பொறிக்கப்பட்ட , அளவற்ற , நெகிழக்கூடியதான, உச்சகட்ட வெப்பமும் அடர்த்தியும் கொண்ட மிகச்சிறிய புகைமண்டலத்திலிருந்து உருவான, ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற ஒன்று தான் பிரபஞ்சம் என்பதே நம் இறுதியான கண்டறிதல்.
துளிமம்
துளிம கொள்கையின் ‘பிறப்புச் சான்றித’ழாக மேற்சொன்ன எளிய தெளிவான வரிகளைக் கொள்ளலாம். இந்த தொடக்க வரி , ‘எனக்குத் தோன்றுவது என்னவென்றால்..’ , ‘ நான் (இவ்வாறு) சிந்திக்கிறேன்..’ என்னும் டார்வினின் பரிணாமம் குறித்த அறிமுகக் குறிப்புகளின் தொடக்கம் அல்லது காந்தப்புலம் குறித்த அறிமுகத்தின் போது பாராடவிடம் காணப்பட்ட தயக்கம் போன்று அற்புதமானது .
பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை
சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது.
ஒழிக தேசியவாதம்!
தசாப்தங்களாக முன்பிருந்த கருத்தை முற்றிலும் மறந்துவிட்டு ஹிந்து இந்தியன் இவற்றிற்குள்ள பாகுபாட்டை அழித்துக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வசிக்கும் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று கூறுமளவிற்கு சென்று விட்டனர். இது முற்றிலும் தவறான நோக்கு என்பதை நான் திருப்பித்திருப்பி சொல்ல வேண்டிய தேவையில்லை. இது நயமானதல்ல என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்களும் கிருத்துவர்களும், தங்களை கேட்காமலேயே ஹிந்துத்துவ பிரிவில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒருவரும் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை. அரை குறை அரசியல்வாதிகள், இப்பொய் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இன்றியமையாதது என்றால், அவர்கள் வாயிலிருந்து வரும் பொய் அவர்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக்கு மாறானது என்பதை உணர்த்த வேண்டும். பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இப்பொய்கள் எதிரிகளை முட்டாள்களாக்குவதற்காக கூறப்படுவது தங்களையே முட்டாள்களாக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதை உணர வேண்டும். ஹிந்துவும் இந்தியனும் ஒன்றல்ல எனும் உள்ளுணர்வு மிக அத்தியாவசியம்.
சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?
அவர் நாடும் சோசியலிசம் நிறுவனங்களை பலவீனப்படுத்துவது அல்லது அதற்கு மேலும் சென்று அவற்றை அழிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளுவதில்லை. அல்லது அதில் அடிப்படையாகவே புதிய ஆளுகைக் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற கற்பனைகளும் இல்லை. நடப்பில் உள்ள இயங்கமைவுகள் (mechanisms) மற்றும் குறியீடுகள் (indices) -வரிவிதிப்பு, மக்களுக்காக செலவிடுதல், பெருநிறுவனத்தின் நிர்வாகக் குழு, பொருளாதாரப் புள்ளி விவரங்கள், உயர் கல்வி, யூரோப் ஒன்றியம்,மத்திய ரிசர்வு அமைப்பு – ஆகியவற்றை மாற்றியமைத்து புதிய சமத்துவ நியாயத்தைப் (Egalitarian Logic ) பின்பற்றச் செய்வதே அவர் நோக்கம்.
சோசலிசத்துக்கான நேரம்
ஏற்றத்தாழ்வை ஆழமாக்கும் போக்கைக் கொண்ட முதலிய மனோபாவம் பெருந்தொய்வின் (Great Depression) பின்விளைவாக தற்காலிகமாக தலைகீழ் மாற்றம் பெற்று அகண்ட நடுத்தர வர்க்க உருவாக்கலை சாத்தியமாக்கியது. ஆனால் பின்னர் வந்த உலகமயமாக்கல் (globalisation)காலத்தில் முதலியம் பழிவாங்கும் விதமாகத் திரும்பி வந்து தன் வழக்கமான போக்கைத் தொடர்ந்தது.
இந்திய கீதத்தின் சின்னம் – 1
தேசியக் கொடிக்கு சத்ரபதி சிவாஜியின் குங்குமப்பூ நிறத்தைப் போன்ற முழு ஆரஞ்சு வண்ணத்தையே உபயோகிக்கலாமா என விவேகமாகச் சிறிது காலம் சிந்தித்தது. இது மௌமார் கடாஃபியின் முழு பச்சைக் கொடியைப் போலிருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கம் இந்தப் படிகம் போன்ற தெளிவான சின்னத்தை விரும்பாததால் தூர தள்ளி வைக்கப்பட்டது. 1907ல் ஷ்டுட்கார்டில்நடந்த சோஷலிச மாநாட்டில் திருமதி. பிகாஜி காமா1 சூரியனையும் சந்திரனையும் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்.
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும் ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும், ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர்.
கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது
மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்!
உலகில் மிகவும் அதிகமாக அகற்றப்படும் திடப்பொருளாகவும் , உலகின் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கும் மணலின் பயன்பாடு மொத்தத்தில் முறைப்படுத்தப் படாமலேயே இருந்து வருகிறது. இதனால் கடந்த பல நூறு ஆயிரம் ஆண்டுகளில் நிதானமான புவியியல் நடைமுறைகளால் உருவாக்கப்பட்டு வந்துள்ள மணல் வளம், இன்று ஈடு செய்து கொள்ளப் பட முடியாத அளவில் உற்பத்தி விகிதத்தை விட மிக அதிக வேகத்தில் நம்மால் நுகரப் பட்டு வருகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
பானுகூல் சமையலறை ராகங்கள்
இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்:
‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல
இந்திரப்ரஸ்தா எனும் பேரூர் மஹாபாரதம் மூல பிரபலமான பாண்டவ சகோதரர்களால் தங்களது தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. மூத்த சகோதரரான யுதிஷ்டிரர் தர்மராஜாவாக பதவி ஏற்றார். மூவாயிரம் வருடங்களுக்கு பிறகு 2016 நவம்பர் 22-23 தேதிகளில், திரௌபதி கனவு அறக்கட்டளை(Draupathi Dream Trust) முதல் இந்திரப்ரஸ்தா மாநாட்டை டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் நடத்தியது. இம்மாநாடு, இந்திரப்ரஸ்தாவைப் பற்றிய பெரிய அளவு துவக்க முயற்சியில் ஒரு பகுதி
மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..
இச்சட்டம் யாரையும் பாகுபடுத்தவில்லை. இது அனைத்து மத இந்தியர்களுக்கும் பொதுவானது. இதன் வரலாற்றைப் பார்த்தால் முகம்மதியர்களை அவமதிக்கும் புத்தகங்களைத் தடை செய்வதற்கும் ஹிந்துக்களின் வாயை அடைப்பதற்குமாக ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று தெரிகிறது. இச்சட்டம் ஹிந்துக்களை ஆதரிக்கிறது, ஹிந்துக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு சலுகை அளிக்கிறது எனும் டானிகரின் மறைமுகமான குறிப்பீடுகள் இரண்டுமே தவறு. …மாறாக, ஹிந்துக்களுடன் எதிருக்கெதிராக ஒப்பிட்டால் இச்சட்டம் சிறுபான்மையினருக்குதான் சலுகை அளிப்பதாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்
பெரும்பான்மையான இந்திய பத்திரிகை நிருபர்களும் இந்திய நிபுணர்களும், மதச்சார்பற்றவர்கள் அவர்களது மூக்கில் ஏற்றியுள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதால், அவர்கள் கூறும் ஹிந்துக்களுக்கு எதிரான, பாரபட்சமான, தவறான செய்திகளையே மக்களிடம் கக்குகிறார்கள். நிகோலஸ்ஸுடன் காரில் சென்ற சமயச்சார்பற்றவரின் முதல் குறிப்பே ஒரு சராசரி பார்வையாளரின் மனத்தில் பின் வரப்போகும் சம்பவங்களைப் பற்றிய சந்தேக மேகத்தை கவிழ்க்கிறது. ஆனால், திறம்பட படமாக்கப்பட்டிருந்த அந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், காரில் சென்றவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்துவது போலவோ, விளக்கப்படுத்துவது போலவோ ஒன்றுமே நடக்கவில்லை.
குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி
இந்திய பாரம்பரியங்களின் கவர்ச்சியை வெளி உலகிற்கு மதபோதக உணர்வுடன் எடுத்துச் செல்வதும் ஹிந்துத்தனம் அல்ல. ஒரு மதபோதகர் மற்றொரு மதத்தினரை பார்த்த மாத்திரத்திலேயே அவரது உணர்வு மட்டுமல்லாமல், முகபாவமும், உடற்வாகும் மாறிவிடும். இவரை எந்த இடத்தில் தட்டினால் நான் சொல்லப் போவதை உடனே ஏற்றுக் கொள்வார் என்பதைதான் சிந்திப்பார். ஹிந்துக்கள் இவ்வாறு சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிற மதத்தினர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் வாயிலிருந்து வருவதை கேட்பதில்தான் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மத உணர்வை அழித்து அவ்விடத்தில் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கில்லை. பிற மதங்களின் சாராம்சமும் இந்து மதத்தினுடையது போல் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களது அனுமானம்தான் இதற்கு காரணம்.
தீர யோசித்தல் – இறுதிப் பாகம்
ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கே தெளிவில்லாத தன் துவக்க நிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொண தொணக்கலாம், அல்லது தன் முன் நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது.
குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும்- அத்தியாயம் -17 ஆசிரியரின் முன்குறிப்பு: முன்னணியிலுள்ள ஒரு சிந்தனையாளர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.)மிக்க செல்வாக்கு பெற்றவரும் அதனாலேயே தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மதிப்பிற்குரியவருமான, குரு கோல்வால்கர் எழுத்துகளை கூர்ந்து ஆய்வு செய்வதற்காக நேரம் ஒதுக்க முற்பட்டது அறிதிறன் “குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்”
