றெக்கை –  அத்தியாயம் 23

This entry is part 23 of 23 in the series றெக்கை

இறகு எஜமானி, எனக்கும் கிழவருக்கும் பொன்னும், வைரமும், முத்தும் மரதகமும் பவிழமும் எல்லாம்  வீட்டில் வைத்தும் விரலில் அணிந்தும் மகிழ்ச்சியோடு பாடி ஆடவும் வயசு பாக்கியாக ஒன்றும் இல்லை. நானோ என் கணவர் கிழவரோ நினைத்தால்  மனதில் கொடூரமாகத் திரும்பும் நினைவுகள் திரும்பத் திரும்ப  நெஞ்சில் ஆழமாகக் குருதி நனைத்து நிலைக்கவொட்டாமல் ஒரு நொடியில் சுவாசிக்க மறந்துபோக வைக்கும். பொன்னும் வைரமும் எம் போன்ற தொண்டு கிழங்களுக்கு ஏற்பில்லை. டாக்டர் எஜமானி,  சரிதானே?

றெக்கை –  அத்தியாயம் 22

This entry is part 22 of 23 in the series றெக்கை

வலனாடு ஊரில் செம்பாதி ஆண்களும் அபூர்வமாக பெண்களும் கடந்த ரெண்டு வருஷத்தில் தான் சைக்கிள் வாங்கி ஓட்டி சவட்டிப் போகிறார்கள். பக்கத்து ஊர் முழுக்க எஸ்பானிய கலாசாரத்துக்கு பங்கம் வராமல் ஆண்டு தோறும் கார்னிவால் என்ற கலைவிழா நடத்துவதில் மும்முரமாகி விக்ஞான முன்னேற்றத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். பெலன் என்ன என்றால் ஓபரா, பேலட், கொல்லேர் தழுவும் மாட்டை அடக்கும் விளையாட்டு என்று நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து விட்டு வேலை செய்கிற கரும்பு ஆலைக்கு கால் தேய நடந்து போகிறார்கள்

றெக்கை –  அத்தியாயம் 21

This entry is part 21 of 23 in the series றெக்கை

இது தினசரி நடப்பு என்று தோன்றும் முகபாவத்தோடு பிருஷ்டத்தில் படிந்த மண்ணை தட்டி விட்டபடி மறுபடி வண்டி ஏறினாள் பிள்ளை மிஸ்.  வெகு வேகமாக சைக்கிள் செலுத்தி அவள் போக, ஜெசிக்கா தன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தாள். ஜாஜா அத்தய் வண்டி ஓட்டறது கண்கொள்ளா காட்சிதானே? எங்கே கத்துக்கிட்டா தெரியுமா?

றெக்கை – அத்தியாயம் 20  

This entry is part 20 of 23 in the series றெக்கை

பாவலன் அதிகமாக மது அருந்தி விட்டு அவனது சமூக பூர்வமான மனைவி பாதவி உறங்கிக்கொண்டிருந்தபோது  அசமூகமான பந்தம் புலர்த்த காதலி பண்ணிகை இல்லம் நாடிச் சென்றான். இரண்டு மணி நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு போதை தலைக்கேற, எடுத்துப்போன மது போத்தலை பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வழியோடு நடக்க, வடக்கு வாசல் அருகே டாகினியிடம் சிக்கினான்.

றெக்கை – அத்தியாயம் 19

This entry is part 19 of 23 in the series றெக்கை

அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும்  லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும்

றெக்கை – அத்தியாயம் 18

This entry is part 18 of 23 in the series றெக்கை

பேரிளம்பெண் நிர்மலாவையும் முத்தச்சியையும் கையெடுத்து வணங்கி, அக்கச்சி, முத்தச்சி ரெண்டு வியக்திகளும் என்னை காப்பாற்றணும்..என்று சொல்லியபோது சிறுமி றெக்கை விரித்தபடி நாலடி பறந்து தெருமுனைக்கு போக, தெருநாய்கள் பலமாக திட்டி அவளை கார் பக்கம் விரட்டின. அடுத்த வினாடி வெண்சிறகு மறைந்துபட அவளோர் ஓநாயாகி பற்களை வெளியே நீட்டி பக்கத்தில் குரைத்தபடி இருந்த தெருநெய் ஒன்றை கழுத்தில் கடித்து தட்சணம் உயிருண்டோ என்று அங்கே இருந்த மனுஷர்களும், நாய்களும் – பேரிளம்சிறகுப் பெண் தவிர – வியப்பும் பயமுமாக உறைந்து போக வைத்தன.

றெக்கை – அத்தியாயம் 17

This entry is part 17 of 23 in the series றெக்கை

நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள். 

றெக்கை அத்தியாயம் 14

This entry is part 16 of 23 in the series றெக்கை

இந்த வகைப்படுத்தல் யாருக்காக செஞ்சிட்டிருக்கேன்? லெவி இருந்தால் வாங்கி படிச்சுட்டு, பாத்ரூம் எங்கேன்னு பகடி பண்ணுவான். ஆல்பீ இருந்தால் படிக்கறதுக்கு முன்னாலேயே இதிலும் ஒரு ரசம் உண்டு என்று குறும்புச் சிரிப்போடு சொல்வான். ரெண்டு பேரையும் நான் இழந்துட்டேன். ரெண்டு பேரோடு உறவு வச்சுக்கறது   குடும்பப் பொண்ணுக்கு அதென்ன சொல்றா இழுக்கு தான். ரெண்டு பேரோடு எங்கே உறவு கொண்டாடினேன்? ஆல்பீ போய்ச் சேர்ந்து ஆறு மாதம் கழிச்சுத்தானே லெவியை கல்யாணம் செஞ்சது.

றெக்கை – அத்தியாயம் 13

This entry is part 13 of 23 in the series றெக்கை

maidin mhaith dochtúir  அய்ரிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லி சிரித்தபடி இருக்கையிலிருந்து எழ முயல, தலை குப்புற விழுந்தாள் -பள்ளிக்கூடம் ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ளை மாதிரி. நிர்மலா பதறிப்போய் விரைந்து ஒநெல்லி பாட்டியம்மாளைத் தூக்கி நிறுத்தப் பார்த்தாள். கிழவி நல்ல கனமான உடம்பு கொண்டவள் என்பதால் அவள் தரைக்கு வழுக்கிக் கொண்டு போனாள். இதெல்லாம் அவளுக்கு   வேடிக்கை காட்ட நடத்தப்படும் நிகழ்ச்சி என்று தோன்ற, நிறுத்தாமல் சிரிக்கத் தொடங்கினாள்.

நாவல்  றெக்கை– அத்தியாயம் 12

This entry is part 12 of 23 in the series றெக்கை

குழுவில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளராக வலநாடும் மற்றும் ஃபிஜியும், மொரீஷியஸ்ஸும் வந்தவர்களுக்கு அடுத்த தலைமுறை தமிழர்கள். மதறாஸ், மதுரை, நெல்லை, கோவை என்று சுற்றுலாவாகக்கூட மெயின்லாண்ட் போனவர்கள் யாரும் இல்லை. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் அநேகமாக எல்லோரும் தட்டுத் தடுமாறி தாய்மொழி பேசக்கூடியவர்கள்.

றெக்கை– அத்தியாயம் 11

This entry is part 11 of 23 in the series றெக்கை

தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.

றெக்கை  அத்தியாயம் பத்து

This entry is part 10 of 23 in the series றெக்கை

வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா  நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி

றெக்கை– அத்தியாயம் 9

This entry is part 9 of 23 in the series றெக்கை

லெவி  எஜமான் மூணு வேலை செய்து முடிக்க உத்தரவு பண்ணியிருந்தார் முதலாவதா, ஒரு பொருளை, இல்லை, ரெண்டு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கணும், சேர்த்தாச்சு. ரெண்டாவது உத்தரவு ஆல்பி எஜமான் டாக்டர் கடை நடக்க ஏற்படுத்தி இருக்கற ஸ்தலத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தியாச்சு. உங்க மூணு பேருக்கும் காலை தீனியும் சாயாவும் உண்டாக்கி இங்கே எடுத்து வரணும்னு மூணாவது கட்டளை

றெக்கை– அத்தியாயம் 8

This entry is part 8 of 23 in the series றெக்கை

எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு  பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த   அசலாக  உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.  ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம்   முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம்  மற்ற ஆண் மடியிலும்  மெல்லத் தொட்டு     இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது, 

றெக்கை– அத்தியாயம் 7

This entry is part 7 of 23 in the series றெக்கை

நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா?  ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு  பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் .. 

றெக்கை– அத்தியாயம் 6

This entry is part 6 of 23 in the series றெக்கை

வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது. 

றெக்கை– அத்தியாயம் 5

This entry is part 5 of 23 in the series றெக்கை

தீனி மேசையில்  வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள்  ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன.  கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு  வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். 

றெக்கை – அத்தியாயம் 4

This entry is part 4 of 23 in the series றெக்கை

ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி 

றெக்கை – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 23 in the series றெக்கை

“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும்  குழந்தை பெத்துக்கலியா? அவ   தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப்  போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ  பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன்  முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”

றெக்கை – அத்தியாயம் 2

This entry is part 2 of 23 in the series றெக்கை

கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.

றெக்கை – அத்தியாயம் 1

This entry is part 1 of 23 in the series றெக்கை

அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.  போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.

மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து   பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம்.

மிளகு – அத்தியாயம் 88

இன்னொண்ணு தெரியுமா, ஒரு கனவு கண்டேன். கனவில் அப்பா அப்பா என்று அழைத்தபடி சுழலும் ஒரு கட்டிடத்தின் முன் நின்ற பையன் அப்பா வந்தாச்சு என்று சந்தோஷமாகக் கூவியபடி ஒரு முதியவரை அணைத்துக் கொள்கிறான். அவர் அச்சு அசலாக தெரிசாவின் ஓட்டல் பார்ட்னர் திலீப் ராவ்ஜி அப்பா பரமேஸ்வர அய்யர் போலவே இருந்தார். 

மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று 

சொல்லிக்கொண்டிருக்கும்போதே  பஸதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது. 

மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு

சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள். 

மிளகு  அத்தியாயம் ஐம்பத்தெட்டு

அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிவிங்கி – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 4 in the series சிவிங்கி

அழுக்கான ஈரச் சிறகுகளை உடம்போடு உயர்த்தி மடித்துச் செருகிச் வழுவழுப்பான கால்கள் வெளித்தெரிய இரண்டு  தேவதைகள் கிணறுகளைச் சுற்றித் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஈரவாடையோடு அங்கங்கே நகம் உதிர்ப்பது போல் சிறு சிறகு உதிர்த்துக் களைந்தபடி கண்ணில் மையிட்ட அத்தேவதைகள் வாய்ச் சண்டையிட்டுக் கிணறுகளை சுற்றிப் பறந்தபடி

பட்டாவளி

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார். 

மிளகு  அத்தியாயம்  ஐம்பது

ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம்

மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு 

 அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார். அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.

மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம். யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை? 

மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து

பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிட்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்க கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”

மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு  செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே,  நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே.

மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று

இன்னொரு விசாரணை இழை, லிஸ்பனில் இருந்தபடிக்கே சென்னாவை ஓய்த்து உட்கார வைக்க நிகழக்கூடிய சதி பற்றியது. சக்தி குறைந்த வெடிவெடிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.  சக்தி அதிகரித்து, நெருப்புப் பற்றி வெடித்ததுமே அடுத்து நிற்கும் ஆளைக் கொல்லும் அதிக அளவு வெடியுப்பு கலந்த வெடிகளை உருவாக்க  வேண்டும். அவற்றை உபயோகப்படுத்திக் கூடுதல் நாசம் விளைவிக்கும் முயற்சிகளை மேலெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் அழிவு தான் குறிக்கோள். சிறுவர்களை முன்னால் நிறுத்தி வட்டத்துக்கு உள்ளே செயல்படுகிறவர்கள் அந்தத் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, நடக்கக் கூடியது என்ற வகையில் பட்டது. சாட்சியங்களோ ஆதாரங்களோ எதுவும் இல்லாத, தர்க்கரீதியான ஆய்வுமுடிவு.

மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு

மொத்தம் மூன்று சாரட்கள். முன்னால் ஒன்று பாதுகாப்பாகப் பெட்டகத்தில் பணம், துணிமணிகள், உணவு, குடிக்கவும் புழங்கவும் கடகங்களில் தண்ணீர் ஆயுதங்கள் என்று இரண்டு சிப்பாய்கள் காவலிருக்க நகர்ந்து போனது. அடுத்து ராணி பயணம் செய்யும் ராஜரதம் என்ற பெரிய, வசதியான சாரட் நான்கு காவல் வீரர்களோடு நகர்ந்தது. அதன் பின்னால் சற்றே சிறிய இன்னொரு சாரட்,   பல   மருந்துகளோடு வைத்தியனும், அவன் மனைவியும், ராணியின் தாதியுமான   மிங்குவும் அதில் பயணம் செய்து ராணியைத் தொடர்ந்து வந்தார்கள். பின்னால் நான்கு வீரர்கள் குதிரைகளில் சவாரி செய்து மொத்தப் பாதுகாப்பு அளித்தார்கள். 

மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று

எல்லோரும் அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு,  அழைக்கப்பட்டபோது கருத்து சொன்னார்கள். எல்லோரும் துரதிருஷ்டவசமானது என்பதில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டார்கள். விஷமிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று கொங்கணியிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் திடமாகச் சொன்னார்கள். இன்று சிறிய வெடி, நாளை பெரிய வெடிவெடிப்பு என்றாகலாம் என அச்சப்பட்டார்கள். பிரதானி நஞ்சுண்டய்யா ஜாக்கிரதையாகப் பேசியதாக சென்னபைரதேவி மகாராணிக்குப் பட்டது. எல்லோரும் தான். எதற்குப் பயப்படுகிறார்கள்? எதை மறைக்கிறார்கள்?

மிளகு அத்தியாயம் நாற்பது

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.

மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது

அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்

மிளகு அத்தியாயம் முப்பத்தேழு

”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”

மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.

மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து

கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”

மிளகு  அத்தியாயம் முப்பத்திமூன்று

மிங்கு, தீபாவளி நேரத்திலே எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துக்காவது இல்லே அது போல  நேரங்களிலாவது  ஸ்கர்ட்டும் ப்ளவுசும் உன்னை மாதிரி குமருகள் உடுத்த ஆசைப்பட்டா, ரொம்பவும் கண்டிக்கக் கூடாது தானே. முழுக்க உடம்பு மூடின உடுப்பு அதெல்லாம்னு மிங்குவுக்கு தெரியும் தானே. அதுவும் துணியும் செய்நேர்த்தியும் மட்டும் தான் போர்ச்சுகீஸ். தைத்து உடுப்பாக்கி தந்தது நம்ம தையல்காரங்க. பிடவை கூட இடுப்பு தெரியும். ஸ்கர்ட் போட்டா முழுசாக மூடி இருக்கும்”.

மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று

இந்த கலாசார பரிமாற்றத்தை போர்த்துகல்லில் பாதிரியார்கள் கண்டிக்கிறதாகவும், கொங்கணியை அவர்கள்  உத்தேசித்திருப்பதாகவும் லிஸ்பனிலிருந்து வரும் வதந்திகள் தெரிவிப்பதாக நஞ்சுண்டய்யா பிரதானி நேமிநாதனிடம் சொல்லியிருக்கிறார். எது எப்படியோ, கொங்கணக் கொங்கைகள் இப்போதைக்கு லிஸ்பனில் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.வார இறுதியில் கவிதை,  நஞ்சுண்டையா வீட்டு மிளகுப் பொங்கல், ரோகிணி என்று மனம் சுவாரசியமான கலவையாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.

மிளகு  அத்தியாயம் முப்பது  

வேறு ஒன்றுமில்லை இந்த உங்கள் வீட்டு மாடியில் இரண்டு விசாலமான அறைகள்  இருப்பதைப் பார்க்கிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவ்வப்போது இங்கே வந்திருந்து கடல்காற்று வாங்கி மனதுக்குப் பிடித்த வைத்திய சாஸ்திர ஏடுகளை ஆராய விரும்புகிறேன். நான் பைத்தியநாத் அரச வைத்தியரிடம் வைத்திய சாஸ்திரம் பயில்வது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம் சென்ஹோர் பெத்ரோ. இரண்டு வீடு கடந்து பிரதானி நஞ்சுண்டையாவோடு சேர்ந்து இந்தியக் கவிதைகளை போர்த்துகீசிய மொழியாக்கம் செய்யவும் செயல்படுகிறேன். எல்லாவற்றையும் கவனிக்க, இந்த இரண்டில் ஒரு மாடி அறையை எனக்கு தற்காலிகமாக கொடுத்து விடக் கோருகிறேன். மாதம் நூறு வராகன் குடக்கூலி தருவேன். அதற்கு மேல் தேவை என்றாலும் தருவேன்”.  

மிளகு  அத்தியாயம் இருபத்தொன்பது

அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து, மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம்.