கன்னித்தீவு

This entry is part 5 of 5 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் காலடி பட்ட 30 வருடங்களிலேயே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. ஐரோப்பியர்களால் அறிமுகமான, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, அம்மை (Smallpox) போன்ற நோய்களாலும், கட்டாயப்படுத்தப்பட்டுத் தங்கச் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட பலவிதமான கடின உழைப்புகளாலும், விவசாய வேலைகள் தடைப்பட்டு, ‘குடும்பம்’ என்னும் அமைப்பு உடைந்து, விளைச்சல் குறைந்து, உடல் நலிந்து, ஸ்பானிஷ் படையெடுப்பை எதிர்க்கும் திராணியற்றுப் பலரும் மடிந்தனர்.

பிழைகளும் கொலைமுயற்சியும்!

This entry is part 3 of 5 in the series கொலம்பஸ்

செப்டம்பர் 13 லிருந்து 17ம் தேதி வரையில், அட்லாண்டிக் கடலின் மத்தியில் கப்பல்கள் இருந்தபோது, மாலுமிகளின் காம்பஸ் ஒவ்வொரு நாள் மாலையிலும் நேராக வடக்குத் திசையைக் காண்பிக்காமல் சற்றே விலகி வடமேற்கைக் காண்பித்தது. அக்காலத்தில் காம்பஸ் எனும் திசைகாட்டும் கருவி கடவுளின் அருளால் செயல்படும் ஒரு மந்திரக் கருவியாகவே மாலுமிகளால் நம்பப்பட்டது. அது திசையை மாற்றிக் காண்பித்ததால், கப்பல்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, கடவுளின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட, மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாக அனைவரும் அச்சமுற்றனர்.

கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்

This entry is part 2 of 5 in the series கொலம்பஸ்

கேப்டன் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறிய அறைகள் இருந்தன. சாதாரண மாலுமிகளுக்கும் மற்ற பயணிகளுக்கும்  தனி இடம் கிடையாது. அவர்கள் கப்பலின் தரைத்தளத்தில் (Deck) ஆங்காங்கே  குளிரோ,  கடுங்காற்றோ, பனியோ, உப்பு நீர் அறைதலோ எதுவானாலும் அங்கேயே படுத்துக்கொள்வார்கள்.   மழையின் போது மட்டுமே சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடுங்கிக்கொள்வார்கள்,

கொலம்பஸ்

This entry is part 1 of 5 in the series கொலம்பஸ்

கொலம்பஸிற்கு வைஸ்ராய், அட்மிரல் மற்றும் கவர்னர் போன்ற பட்டங்களும், அதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படுமென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய நிலப்பரப்புகளில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பில் 10% கொலம்பஸிற்கு வழங்கப்படுமென்றும், எதிர்காலத்தில் அவர் கண்டுபிடித்த நிலப்பரப்புகளிலிருந்து கிளம்பும் எந்த வணிகக் கப்பலின் செலவிலும் எட்டில் ஒரு பங்கு (1/8th) அளிக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் லாபத்திலும் எட்டில் ஒரு பங்கு அவருக்கு அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.