இந்திரா பார்த்தசாரதியும் நாடகங்களும்

தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.

பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது

தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.

ரொபெர்த்தோ பொலான்யோ – 2666: மேடை நாடகம்

ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666 குறித்த அறிமுகங்களையும், விமர்சனங்களையும் வாசித்து இருப்பீர்கள். கீழே அதை மேடை நாடகமாகக் காணலாம். ஐரோப்பாவின் மேற்கல்வி, ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் அறிவியல், பண்பாட்டு ஆராய்ச்சியாளர் சமூகம், ஓர் எழுத்தாளரைத் தேடியலைகிறார்கள். அந்தத் தேடல் மெக்ஸிகோ நாட்டின் எல்லையோர நகரத்திற்கு அவர்களைக் கொணர்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான “ரொபெர்த்தோ பொலான்யோ – 2666: மேடை நாடகம்”