மகரந்தம்

புயலினால் வீடிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதை விட தன்னுடைய மக்கள் தொடர்பு மேலும் மின்னவே செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) சங்கம் முயன்றதாக, அவர்களுடைய ஊழியர்களே தெரிவித்திருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்களுக்காக செலுத்த வேண்டிய முதலுதவி வண்டிகளை, மருத்துவ வசதிக்காக பயன்படுத்தாமல், தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கு பின்னணியாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஹரிகேன் சான்டி மட்டுமல்ல… லூயிசியானாவிலும், மிஸ்ஸிசிப்பியிலும் கூட இதே அலட்சியம் கலந்த கண்துடைப்புதான் கோலோச்சுவதாக செஞ்சிலுவைத் தொண்டர்களே வருந்தியிருக்கிறார்கள்.

கரடி வேட்டை

தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறுகதை. விலங்கு – மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய். இந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம், டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.

ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது.’ ராபர்ட் சௌதி (Robert Southey). சௌதி, ஆங்கிலக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி அரசவைக் கவிஞர் (பொயெட் லாரியேட்- Poet Laureate) என்ற பதவியையும் தாங்கியவர். பிற்காலத்தில் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷார்லட் ப்ராணடீ (Charlotte Bronte) என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்டபடி எழுதியுள்ளார்.
ராபர்ட் சௌதியின் அந்தக் ‘குற்றச்சாட்டு’ ஷார்லட் ப்ராண்டீயின் மனதை எவ்வாறு புண்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறில்லாமல் அந்த இளங்கவிஞர் தன்னைப் பற்றின விமர்சனத்தில் உள்ள உண்மையான பொருளை உணர்ந்து மேலும் அறிவுசார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்தது அந்த இளம் வயதிலும் அவருக்கிருந்த அறிவு முதிர்ச்சியைக் காண்பிக்கிறது.

தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் – 3

பயன்முதற்கொள்கைகளிலும் (utilitarian), தர்க்கப் பயிற்சியிலும் தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் போர்பிரி அற்புதமாக உருவம் பெற்றிருக்கும் பாத்திரம். குற்றத்தைத் துப்புத் துலக்கும் அவன் இப்போது ரஸ்கோல்னிகோவைக் கைப்பற்றத்தக்க வலையொன்றை பொறுமையாகப் பின்னத் துவங்குகிறான். இந்த அறிவுப் போராட்டத்தில் இவ்விருவரும் பயன்படுத்தும் உவமானங்களும் கூட ஒன்றையொன்று பொருந்துவனவாக இருக்கின்றன. போர்பிரியைச் சந்திக்கவிருப்பது குறித்த தன் நிலையை ரஸ்கோல்னிகோவ், “மெழுகின் தீபத்தை நோக்கிப் பறக்கும் விட்டில்,” என்று உருவகித்துக் கொண்டால், நான்காம் பகுதியில்,போர்பிரி “அவன் என்னை விட்டு விலகியோட மாட்டான்… மெழுகுவர்த்தியின் அருகிலுள்ள விட்டிலை நீ எப்போதேனும் பார்த்ததுண்டா?” என்று கேட்கிறான்.

உலகமே ஆத்ம வடிவம்தான்

அப்படியானானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை விழுங்கும் என்றால் உலகின் நிலையாமை என்னை பயமுறுத்தும் என்றால் எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும் எங்களுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?

காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்

“பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

சீமைக் காரைச் சாலை

“அது என்ன எளவுல?படம் கிடம் எடுக்கானுவளா? மயிறு மாதி கெடக்கத் தெருவ கோட்டிக்காரப்பயலுவ என்ன நோண்டிக்கிட்டு நிக்கானுவ?” நீண்டு கிடந்த சாணி மொழுகிய வெளிப்புறத் திண்ணையில் அமர்ந்து,பல்குத்திக்கொண்டு நின்றிருந்த காளிமுத்துவிடம் வினவினார் கோளவடியார். எதிர்ப்புற சின்னமணி வீட்டிலிருந்து ஒரு சீரற்ற காட்டாற்றுத் தடம் போல் கருந்திட்டாய் கொசுமொய்த்து நெளிந்துகொண்டிருந்தது சாக்கடை.

நேருக்கு நேர்

“வரலாறு மனித எண்ணங்கள் அனைத்தையும் வடிவமைக்கிறது” என்று அந்தப் பருவத்தின் தொடக்க விரிவுரையிலேயே வரலாற்றுப் பாட விரிவுரையாளர் வகுப்பில் கூறியிருந்தார். அந்த வரி ஒரு முழக்கவரியைப் போல ‘நச்” என்று உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது. அடிக்கடி என்னை யோசிக்கவும் வைத்தது. ஆம்! எந்த ஒரு நாடும் அதன் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றைப் படிப்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளும். இந்தோனீசியா, வியட்னாம், இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் வரலாறுகளை – வரலாற்றுத்தலைவர்கள் மிகப் பலரைச் செல்வம் போலப் பெற்றிருந்த அந்த நாடுகள் சிறந்திருந்ததைப் படித்தபோதெல்லாம் எப்படியும் எனக்குள்ளும் பேருவகை பிறந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.

அறுபடலின் துயரம் – பூக்குழி

This entry is part 38 of 48 in the series நூறு நூல்கள்

“பூக்குழி” போன்ற இலக்கிய ஆக்கங்களும், “ஃபேன்ட்றி” போன்ற கலைப் படங்களுமே அந்தந்த காலத்தின் அவலங்களைக் கண்முன் நிறுத்தும் சாட்சியங்களாக விளங்குகின்றன. தர்மபுரி அரசு கல்லூரி ஒன்றில் தற்காலப் பணிமாற்றதில் சென்றிருந்த பொழுது, உயர் சாதி சமூகத்தில் பிறந்த பெண்ணைக் காதல் திருமணம் புரிந்த தலித் இளைஞரான தர்மபுரி இளவரசனின் மரணம் சம்பவித்த பொழுது – “கல்கி” இதழில் தொடராக இந்த நாவலை பெருமாள்முருகன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசனின் மரணமே இத்தொடரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் தனது முன்னுரையில் பெருமாள்முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண் கவிஞர்கள்: ஆவுடையக்காள்

ஆணென்றும் பெண்ணென்று மலைந்து திரிந்ததும் போச்சே
அசையாமல் ஞானஸ்தலத்தி லிருக்கவுமாச்சே
அகங்கார துக்கமசூயை இடும்புகள் போச்சே
தூங்காமல் தூங்கி சுகமாயிருக்கவுமாச்சே

யாமினி – பகுதி 4

பாலாவின் கலைவாழ்க்கை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியதும் அதன் உடன் நிகழ்வாக யாமினியின் தோற்றமும் நமக்கு விதி குறிப்புணர்த்துவது இதைத்தான் போலும். ”செவ்வியல் மரபில், இன்று நடனமாடும் இளம் வயதினரில் சிறந்திருப்பது யாமினி தான்” என்று பாலசரஸ்வதி சொன்னதும் தானே யாமினியைத் தன் வாரிஸாக பிரகடனப் படுத்தியது போலத்தான். பாலசரஸ்வதியிடமிருந்து பாராட்டாக ஒரு வார்த்தையைப் பெறுவது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போலத் தான்.

பெருமைப்பட பத்து பெண் அறிவியலாளர்கள்

அக்டோபர் 14ம் தேதியை கணினிக்கும் கணினி மொழிக்கும் வித்திட்ட ஆடா லவ்லேஸ் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த தினத்தை முன்னிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட இந்தியப் பெண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான விக்கிப்பிடியா பக்கத்தில் குறிப்புகளை சேர்த்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து பத்து பேர் குறித்த அறிமுகத்தை இங்கே அறியலாம்.

இயற்பியல் சிந்தனைச்சோதனைகள்

ஒரு இரும்புப்பெட்டி. பெட்டிக்குள் ஒரு பூனை. அதே பெட்டிக்குள் ஒரு கண்ணாடிக்குடுவையில் கொஞ்சம் விஷம். தனியாக இன்னொரு பாத்திரத்தில் கதிரியக்கத்தன்மை உள்ள ஒரு சமாச்சாரம் அது ஒரே ஒரு அணுவாகக்கூட இருக்கலாம். அடுத்த ஒரு ஒரு மணிநேரத்தில் அந்தப்பெட்டிக்குள் கதிரியக்கம் நிகழும் சாத்தியக்கூறு 50 சதவீதம். கதிரியக்கம் நிகழ்ந்தால் அதை உணர ஒரு உணர்வி (Geiger Counter). கதிரியக்கம் நிகழ்ந்து விட்டால், அந்த உணர்வி இயங்கி ஒரு சுத்தியலால் அந்த விஷக்குடுவையை உடைத்து விடும். எனவே விஷம் பெட்டிக்குள் பரவி பூனை பரலோகம் போய்ச்சேரும்.

ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை

மேலை நாடுகளில் பணக்கார மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகை எலிசபெத் டெய்லர் மாதா மாதம், பெரும் தொகையை ஜீவனாம்சமாக தன் முன்னாள் கணவர் லேரி ஃபொர்டென்ஸ்கிக்கு (Larry Fortensky) கொடுக்கிறார். மேலை நாடுகளில் இது வழக்கம் என்று ஒதுங்கிவிடுவோமே தவிர, நம் மூக்குக்கு கீழ் ஆசியாவில் நடக்கும் என்று நினைக்க மாட்டோம். ஆனால்…

முடி

சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது.

எமிலி முல்லர்- ஓர் அற்புதம்

திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகிறார் எமிலி முல்லர். அவருக்கு முன் மூன்று பேர் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எமிலிக்கு இதுதான் முதல் திறன் தேர்வு. அவருடைய பையிலிருந்து பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றைப் பற்றிச் சொல்லுமாறு இயக்குநர் கேட்கிறார். எமிலிக்கு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததா? அவர் “எமிலி முல்லர்- ஓர் அற்புதம்”

பெண் கவிஞர்கள்: அவ்வையார்(கள்)

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

'பெண்களின் விடுதலை' – யதுகிரி அம்மாள்

“நீங்கள் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நின்றிருக்கிறது. நீங்கள் மில் வேஷ்டி உடுத்துகிறீர்கள். நாங்கள் தறியில் நெய்த புடவையை உடுத்திக் கொள்கிறோம். வழக்கங்கள், பண்டிகைகள், ஆசாரங்கள், பிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இங்கிலீஷ் பண்டிதர்களான உங்களுக்கு அவைகளை படித்துப் பார்க்க வேளை எங்கு இருக்கிறது? யாரவது ஒரு வெள்ளைக் காரன் சொன்னால் அப்போது தான் உங்கள் தாயார்களை, “பாராயண புஸ்தகம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள்” என்று இந்தியப் பெண்களின் பெருமையை எடுத்துச் சொன்னேன்.
பாரதியார்: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கி விட்டிருக்கிறாயே! பரவாயில்லை.குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து

என் சகோதரனை ஏழாவது வயதில் பழைய கால சம்பிரதாயப்படி, தாய் வழிப்பாட்டனாருடைய சீர்வரிசைகளோடு மேள தாளங்களுடன், மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். ஆனால் எனக்கு அக்ஷராப்பியாசம் (எழுத்தறிவித்தல்) கூட நடைபெறவில்லை. காரணம் முன்பெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் காது குத்தல், அக்ஷராப்பியாசம் செய்வித்தல் ஆகிய சடங்குகள் கிடையாது. பெண்களுக்கென்று தனிப்பள்ளிக்கூடம் இல்லாமையால், என் தாயார் என்னைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையைக் கொன்டு எனக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.