இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள்: இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு

இந்திய நாடக முயற்சிகள் தொடங்கியபோதே அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் இருந்தன. பல்வேறு மொழிகள் பேசும் இந்திய துணைக் கண்டத்தில், ஒவ்வொரு மொழி பேசும் மாநில எல்லைக்குள்ளேயே பல்வேறு மரபுக் கலை வடிவங்களின் செல்வாக்கு நிரம்பிய ஒரு தேசத்தில் -எல்லா மரபுக்கலை வடிவங்களின் அடையாளங்களோடும் கூடிய ஒரு அரங்கியல் வடிவத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என்பது முக்கிய காரணமாக முன் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தங்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் கால கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு ஒட்டுப் போட்ட ஆடையை உருவாக்குவதைப் போன்றதே தவிர பயன்படுத்தத் தக்க ஆடையைத் தயாரிப்பதாக அமையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திரா பார்த்தசாரதி எனும் பேராளுமை

‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு.  அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.