அறத்தின் குரலாய் ஒலிக்கும் திருக்குறள் வகுத்த விதிகள் பலவற்றுக்குக் கம்பராமாயணம் விளக்கம் தர முற்பட்டிருப்பதை இரு நூல்களையும் இணைத்துச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.இன்னொரு வகையில் சொன்னால் திருக்குறள் இலக்கணம் எனில் கம்பராமாயணம் இலக்கியம் எனலாம்.
Author: செ. ஜகந்நாத்
வைணவத்தில் ஓர் நாவலர்
நாவலர் இவ்வாறு மூன்று தல புராணங்கள் இயற்றியுள்ளார். ஸ்ரீமுஷ்ணம் என்னும் தலத்து வரலாற்றையுரைக்கும் திருமுட்டத்துப் புராணம், திருவண்ணாமலை என வழங்கப்படும் தலம் வைணவத் தலமே என உரைக்கும் ஸ்ரீசுதரிசனகிரிப் புராணம் சிதம்பரம் ஆலய வளாகத்தினுள் உள்ள 108 திவ்யதேசங்களுள் ஒன்றான திருச்சித்திரக்கூடத்துப் புராணம் ஆகியன இவரால் இயற்றப் பெற்ற தலபுராண நூல்களாகும்.
கரிசல் பூமியின் இசைத் தெய்வம் – விளாத்திகுளம் சுவாமிகள்
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச் சொல்கிறார்.
