காவிய ஆத்மாவைத் தேடி…

This entry is part 1 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

எதற்குத் தகுதியாக எதைச் செய்தல்? கவிஞன், காட்டும் கற்பனை உலகுக்குத் தக்கதாக மொழியைச் செய்கிறான். தான் கண்ட காட்சியை ரசிகனும் துய்க்க வேண்டிய அளவு அணிகளைச் செய்கிறான். சொல்லவந்த கருத்துக்கும், துய்க்கவந்த ரசிகனுக்கும், மனத்தில் காணும் தனக்கும் தகுந்தபடி மொழியை அவன் செய்யும் பொழுது அங்கு அலங்காரம் பிறக்கிறது. காவிய உலகில் கவிஞனே பிரம்மா. அவன் இஷ்டப்படிதான் படைப்பு. வெளி உலகின் மூல தத்துவங்களையும், முற்ற முடிந்த சித்தாந்தங்களையும் அவன் தன் காவிய உலகைப் படைக்கும் பொழுது…

காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்

…காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன: ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ….இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. … காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்… ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர்.

அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?

ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஊர் சதாவதானிகளும் சோடசாவதானிகளும் இருந்த நிலை துரதிர்ஷ்டவசமாக மாறி, இவர்கள் ஒரு அரிய மானுட வர்க்கமாகி விட்டார்கள். இந்த அவதானக் கலைகளை பயில எவ்விதமான பயிற்சிகள் … ஒருவர் அஷ்டாவதானமோ தசாவதானமோ செய்யும் போது அவரது மூளை நியூரானிய இயக்கங்கள் செயல்படும் விதம் இவ்வித நவீன கருவிகளால் அறியப்பட்டால் மானுட மனதின் அதி ஆழ செயல்பாடுகள் குறித்த ஒரு சித்திரம் நமக்கு உருவாகலாம். அவதான நிகழ்வுகளின் போது ஏன் தொடர் இறைநாம உச்சரிப்பு ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது? ஒருவித மாற்று பிரக்ஞை தளத்திற்கு (altered state of consciousness) அவதானியை அழைத்து செல்லவா? அதன் மூலம் அவரது நுண்ணறிவுத் திறன்கள் அதிகரிக்கின்றனவா? அப்படி இருக்கலாம் என கருதத்தக்க ஒரு கருத்தை செய்குத்தம்பி பாவலரே சொல்லியிருக்கிறார்: “அவதானத்திற்கென்று மேடை ஏறிவிட்டால் ஒரு தனி உணர்வு உடலை எழுப்பும்; உள்ளத்தை மலரச்செய்யும்; அறிவை ஒளிரச் செய்யும்.; பிறகே என் வாயினின்றும் சொற்கள் வெளிவரும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல இயலாது.” … இவ்வாறு பன்மை நுண்ணறிவு மேலோங்கிய ஒரு மாற்றுப் பிரக்ஞை தளத்துக்கு செல்லும் அறிவியல் ஒன்று நம் கல்வி மரபில் பரவலாக இருந்திருக்கிறதா? அதன் நிகழ் கலை வெளிப்பாடுதான் அவதான நிகழ்ச்சியா?