பார்க்கப்படாத வாழ்வுகளின் சாளரம்: ஷாராஜின் வீதிகளூடே ஒரு பயணம்  

கைவிடப்பட்ட , மனப்பிறழ்வுக்கு ஆளான , சுய சுகாதாரத்தைப் பேணிக்கொள்ளத் தெரியாத நிலையில் பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலோ, நம் ஊர்களிலோ அல்லது நாம் வசிக்கும் வீதிகளிலோ, இப்படி ஏதோ ஒரு இடத்தில் தம் உயிரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு நம்மிடையே பிழைத்துக் கிடக்கும் மனிதர்களை நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம்; அப்படி இதுவரை இல்லையெனில் இனி நிச்சயம் சந்திக்க நேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியான ஒரு பெண்ணின் கதை தான் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ பரட்டச்சி ’ என்கிற கதை.

வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு

ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’  – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”