வாழ்வும் தாழ்வும்

அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.

முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்

நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்

தலைப்பைப் பார்த்தவுடன் இது அம்பாளைப்பற்றிய கட்டுரை என நினைக்கலாம். ஆனால் இது அம்பாளை போற்றும் ஒரு ஸ்துதியைப் பற்றிய கட்டுரை.  அம்பாளை துதிக்க பல வழிகள் உண்டு. ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். ஒரு கோவிலில் அவளை ஆவாஹனம் செய்து துதிக்கலாம். மனதில் அவளை த்யானம் செய்யலாம். இவற்றையெல்லாம் விட “பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்”

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்

This entry is part 4 of 13 in the series வங்கம்

வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.

செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர்

நா.க.ச. லெட்சுமணன் கரையாளர் அவர்களின் மகனான லெ. சட்டநாதன் (L.S.) கரையாளர் அவர்கள் 25-01-1910-இல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் காந்தியின் தலைமையை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி, காலை பத்தரை மணிக்கு சங்கரன் கோவிலில் வெள்ளையருக்கு எதிராக அறவழியிலான போராட்டத்தை முன்னெடுத்தார். இதன்காரணமாக 14-12-1940 முதல் 23-05-1941 வரை வேலூர் மற்றும் திருச்சி ஆகிய சிறைகளில் ஐந்து மாதகால கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். தன்னுடைய சிறை அனுபவங்களை “1941 – திருச்சி சிறை” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை?

மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள்.

அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு

மூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.

சிலப்பதிகாரத்தின் காலம்

சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.

ஆஷ்விட்ஸை நோக்கி

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை நடத்துகிறது. இத்தாலிய மாணவன் இந்த வருடம் அந்தத் தொடர்வண்டியில் பயணித்து வரலாற்றின் சுவடுகளைப் “ஆஷ்விட்ஸை நோக்கி”

ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு

ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட்

மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்

அதிக அளவு விதவைகள் இருந்ததும் சென்னை மாகாணத்தில்தான். மாதர் மறுமண இயக்கம் மேற்கொண்ட மற்ற அச்சு முயற்சிகளைவிடக் கூடுதலான ஓர் அச்சு முயற்சி தேவைப்பட்டது என்று உணர்ந்து, அதனால் பிறந்த அச்சு முயற்சிதான் மாதர் மறுமணம் . 1936 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த முதல் இதழின் அட்டையில் காந்தி இருந்தது. பத்திரிகைக்கு நல்ல கவனத்தைத் தந்திருக்க வேண்டும். காரணம் முதல் இரண்டு இதழ்களும் உடனடியாக விற்றுப்போயின

அணில் கட்டிய பாலம் ஒன்று

கோட்டையூரில் ரோஜா முத்தைய்யா வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. அந்தச் சிறிய ஊரில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கவில்லை. பேருந்தின் நடத்துனரே என்னிடம் முத்தைய்யா அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு நான் போகிறேனா என்று விசாரித்திருந்தார். அவர் வீடு பல ஆராய்ச்சியாளர்கள் வந்துபோகும் இடமாக இருந்தது போலும். நான் வருவது குறித்து முன்பே எழுதியிருந்ததால் பழங்கால வீட்டின் நீண்ட தாழ்வாரத்தை அடுத்த பெரிய் முன்னறையில் கீழே தரையில் அவர் அமர்ந்திருந்தார்.
“வாங்கம்மா” என்று வரவேற்றார்.

சமஸ்கிருதம் – சதுரங்கம் – தேசிகன் – டான் கனூத்

ஹாமில்டோனியன் பாதைகள் குறித்து படிக்க இங்கே செல்லலாம்: Donald Knuth: The 2016 Paris C. Kanellakis Memorial Lecture கீழே கேட்கலாம்:

தமிழ் பதித்த நல்வயிரம்

பொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ஒத்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.

மகரந்தம்

காஷ்மீர் பகுதியில் கிடைத்த ஒரு பாறை ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு மட்டுமல்லாது வானவியலாளர்களையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக பாறை ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று. கார்பன் டேட்டிங் முறையில் உள்ள சிக்கல்களைத் தாண்டி அவற்றின் வயதை அறிவது கடினம். ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னே இருந்த இந்த ஓவியத்தைக் கண்டுபடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதில் இரு பிரகாசமான ஒளி பொருந்திய விண்மீன் வடிவங்களைக் கண்டனர்.

கோணக் கணிதம்

பொது சகாப்தத்திற்கு முன் 120ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஹிப்பார்க்கஸ் என்னும் வானவியலாளர் கோணவியலின் சூத்திரத்தை நிறுவினார் என நேற்று வரை எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது பொது சகாப்தத்திற்கு முந்தைய 1762ஆம் வருடத்திலேயே பாபிலோனியர்கள் கோணக் கணிதத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு காட்டுகிறது. பித்தேகோரஸ் தேற்றம் சொல்வதற்கு ஆயிரம் “கோணக் கணிதம்”

வரலாறும் பொறுப்புணர்வும்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.

மணி பத்மம் – ஆபிரகாம் எராலி

இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.

வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)

ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.
இது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது.

சிரியாவும் இன்ன பிறவும்…

ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது… உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும்…

பூஜாங் பள்ளத்தாக்கு: இலக்கிய ஆதாரங்கள்

மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்கு, தமிழ் வரலாற்றில் புகழ்ந்து கூறப்படும் கடாரம் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிபு. இங்கு நடத்தபட்ட அகழ்வாராய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட அரும்பொருள்களைக் கொண்டு மலேசிய அரசு இங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைத்துப் பராமரித்து வருகிறது. இந்தப் பகுதி பற்றி இதுகாறும் தெரிய வரும் உண்மைகள் பற்றி மலேசியத் தமிழரான வீ.நடராஜா “Bujang Valley: The Wonder that was Ancient Kedah” என்னும் தலைப்பில் ஓர் நூல் எழுதியுள்ளார். இந்த நூல் “சோழன் வென்ற கடாரம்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.