எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு

This entry is part 8 of 8 in the series காப்பிரைட் கதைகள்

பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் என்று தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார் டிக்கென்ஸ். அமெரிக்காவில் தங்கள் புத்தகங்கள் விற்பனையாவதால் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அமெரிக்கர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பைரஸியைக் கண்டிப்பதில்லை. அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். என்று கூட்டங்களில் பேசினார் டிக்கென்ஸ். இந்தப் பேச்சை அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.

மாயமான நாட்குறிப்பு

This entry is part 6 of 7 in the series கொலம்பஸ்

கொலம்பஸின் இந்தியாவை நோக்கிய (ஆனால் அமெரிக்காவை சென்றடைந்த) கடல் பயணத் திட்டத்திற்கு ஸ்பெயின் அரச குடும்பம் முதலில் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாண்டாஞ்செல் தனது சொந்தப் பணத்திலிருந்தும், அரசவையின் நிதி ஆதாரங்களிலிருந்தும் கணிசமான தொகையை (சுமார் 1.1 மில்லியன் மாரவெடிகள் ) வட்டியற்ற கடனாக ஸ்பெயின் அரசுக்கு வழங்கினார். இதன் மூலமே கொலம்பஸின் பயணம் சாத்தியமானது

சுகாதார பராமரிப்பு அமைப்பு (HMO) Health Maintenance Organization

This entry is part 26 of 16 in the series பொது நலம்

இந்த அமைப்பின் நோக்கம் இரண்டு: ஒன்று, தேவையற்ற, விலையுயர்ந்த நிபுணர் சிகிச்சைகளைத் தவிர்த்து செலவைக் கட்டுப்படுத்துவது; இரண்டு, ஒரே ஒரு மருத்துவர் உங்கள் முழு சுகாதார வரலாற்றையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் தடுப்பு சிகிச்சையை (preventive care) மேம்படுத்துவது. சில குறிப்பிட்ட சேவைகளுக்கு — உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான வருடாந்திர மேமோகிராம் — பரிந்துரை தேவைப்படாத விதிவிலக்குகளும் உண்டு.

கன்னித்தீவு

This entry is part 5 of 7 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் காலடி பட்ட 30 வருடங்களிலேயே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. ஐரோப்பியர்களால் அறிமுகமான, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, அம்மை (Smallpox) போன்ற நோய்களாலும், கட்டாயப்படுத்தப்பட்டுத் தங்கச் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட பலவிதமான கடின உழைப்புகளாலும், விவசாய வேலைகள் தடைப்பட்டு, ‘குடும்பம்’ என்னும் அமைப்பு உடைந்து, விளைச்சல் குறைந்து, உடல் நலிந்து, ஸ்பானிஷ் படையெடுப்பை எதிர்க்கும் திராணியற்றுப் பலரும் மடிந்தனர்.

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

இறைவனே பிரபஞ்சப் படைப்புக்கு நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறார் என்ற இந்த கருத்தை துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவற்றுக்கும், அத்வைத வேதாந்தத்துக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு இருக்கின்றது. பிற பள்ளிகள் இறைவனே இந்த உலகமாக மாற்றமடைந்து நிற்கின்றார் என்று கொள்கின்றன. அதாவது எப்படி பால் உறைந்து தயிராக மாறுகின்றதோ அதுபோல இறைவனே பரிணாமமடைந்து இவ்வுலகமாக மாறி நிற்கின்றார் என்பது அவர்களது கருத்து. அதாவது இறைவனை அவர்கள் “பரிணாமி உபாதான காரணம்” என்கின்றனர்.

பைரஸி

This entry is part 6 of 8 in the series காப்பிரைட் கதைகள்

தன் தந்தையின் மரணத்திற்குப்பின் இத்தாலிக்குச் சென்றார் கிறிஸ்டியன் பாக். தொடர்ந்து இசை பயின்றார். ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக இருந்த அவர் கத்தோலிக்கராக மாறினார். இத்தாலிய பாணி ஆபரா நிகழ்ச்சிகளை நடத்தினார். மிலன் நகரில் புகழ் பெற்றார். அன்றைய இத்தாலி அவரைப் போன்ற பல திறமையான இசைக் கலைஞர்களைப் பெற்றிருந்தது. தேவாலயங்கள், அரசவைகளில் இசைக்கலைஞர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது. கிறிஸ்டியன் பாக், லண்டன் நகரம் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

கால வெளிக்கு அப்பால்

பிரபஞ்சம் (Universe ) என்ற சொல்லே குழப்பமானது‌. ‘அனைத்தையும் கொண்டிருக்கிற’ ஒன்றே  பிரபஞ்சம் என்றால்,  இரண்டாவது பிரபஞ்சம் என ஒன்று இருக்க இயலாது. ஆனால், அண்டவியலில் பிரபஞ்சம் வேறொரு அர்த்தத்தில் வருகிறது: நாம் தொடர்ந்து கண்டறியும் விண்மீன் மண்டலங்களை, அதன் வடிவியலுடனும் வரலாற்றுடனும் கொண்டுள்ள காலவெளி‌ தொடர் பொருண்மையே அது. இந்த நோக்கில், காணும் இப்பிரபஞ்சம் மட்டுமே திகழ்கிறது என்பதில்லை. ஜான் வீலரின் கூற்றுப்படி, காலவெளியிட தொடர் பொருண்மை ( spatiotemporal continuum )‌‌ அல்லது காலவெளி , கடல்நுரையென‌ சிதறி நிகழ்தகவுகளின் துளிம மேகங்கள் எனப் பரவும் புள்ளி வரை கடந்த காலத்தை மறு கட்டமைப்பு செய்யலாம்.

பிழைகளும் கொலைமுயற்சியும்!

This entry is part 3 of 7 in the series கொலம்பஸ்

செப்டம்பர் 13 லிருந்து 17ம் தேதி வரையில், அட்லாண்டிக் கடலின் மத்தியில் கப்பல்கள் இருந்தபோது, மாலுமிகளின் காம்பஸ் ஒவ்வொரு நாள் மாலையிலும் நேராக வடக்குத் திசையைக் காண்பிக்காமல் சற்றே விலகி வடமேற்கைக் காண்பித்தது. அக்காலத்தில் காம்பஸ் எனும் திசைகாட்டும் கருவி கடவுளின் அருளால் செயல்படும் ஒரு மந்திரக் கருவியாகவே மாலுமிகளால் நம்பப்பட்டது. அது திசையை மாற்றிக் காண்பித்ததால், கப்பல்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, கடவுளின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட, மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாக அனைவரும் அச்சமுற்றனர்.

சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம

பிரம்மத்தினுடைய இலக்கணத்தை “சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம” என்று தைத்திரீய உபநிஷத் வரையறை செய்கிறது. இதுவே பிரம்மத்தின் ஸ்வரூப லக்ஷணம். மேலும் ஆத்மா மற்றும் பிரம்மத்துடைய இலக்கணமாக சத்-சித்-ஆனந்தம் என்பதையும் அத்வைத வேதாந்தம் வரையறை செய்கிறது. சத்-சித்-ஆனந்தம் ஆகிய மூன்று சொற்களும்தாம் பிரம்மத்தை அறிந்து கொள்வதற்காக துல்லியமான வரையறைகளை அளிக்கின்றன. பிரம்மம் என்பது இருக்கின்ற ஒரே உண்மையைக் குறிப்பதற்கான ஒற்றைச் சொல். அதை மூன்று சொற்களாக சத்-சித்-ஆனந்தம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

தங்கக் கூண்டு

This entry is part 4 of 8 in the series காப்பிரைட் கதைகள்

இசையில் மெலடி என்ற ஆங்கிலச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்டது. ஒன்றை இழை அல்லது  ஒற்றைக் குரல், என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புல்லாங்குழல் மட்டும் வாசிக்கப்பட்டால் அது மெலடி. அதனுடன் ஒரு வயலினும் சேர்த்து வாசிக்கப்பட்டால்? அவை இரண்டும் ஒன்று போல இல்லாமல் தன்னிச்சையாக இருந்தால்?  அவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்படாமல், ஒன்றை ஒன்று மெருகேற்ற வேண்டும்.

ஞானம், ஞேயம், ஞானகம்யம்

ஞானயோகத்தைப் பயில்தல் என்றால் தன்னைப் பற்றிய உண்மையான அறிவை அடைதலை, ஆத்ம ஞானத்தை அடையும் அறிவைக் குறிக்கும். ஒரு ஆன்ம சாதகன் இறுதியில் அடைய வேண்டியதை கீதையில் கிருஷ்ணர்  “ஞானம், ஞேயம், ஞானகம்யம்” என்று குறிப்பிடுகிறார். இங்கு ஞானம் என்றால் பரம்பொருளை அறிவதற்குக் கருவியாக இருக்கும் சாஸ்திர அறிவு மற்றும் சாதகனுக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவம், நற்பண்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. ஞேயம் என்ற சொல் இந்த ஞானத்தின் மூலம் அறியப்பட வேண்டிய இறுதிப் பொருளான பிரம்மம் அல்லது ஆத்மாவைக் குறிக்கிறது. ஞானகம்யம் என்ற சொல் அந்த இலக்கு ஞானயோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே அடையக்கூடியது என்பதைக் காட்டுகிறது.

காலம் என்பது இல்லை

சுழல்நுரைகளை வைத்து கணிக்கும் துளிம ஈர்ப்பியலின் இந்த வழிமுறை, கோட்பாட்டு இயற்பியலின் வழக்கமான கணக்கீட்டு முறைக்கு முற்றிலும் வேறானதாக முதல் பார்வையில் தெரியும். குறிப்பிட்ட வெளியோ காலமோ இல்லை , சுழல்நுரைகள் பொது மாதிரியின் துகள்களிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பொருட்கள் எனத் தோற்றமளிக்கிறது. ஆனால், சுழல்நுரை உத்திகளுக்கும் ( techniques)  பொதுமாதிரி உத்திகளுக்கும் இடையே வலுவான ஒற்றுமைகளும் உள்ளன.

எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்

முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது.  ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.

றெக்கை அத்தியாயம்   16

This entry is part 15 of 26 in the series றெக்கை

ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும்  சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும்.  பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார்  மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு  கொடுக்க எங்கே முடியுது. 

துளிமம்

உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்?  பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது.  நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது. 

ஒருமையுள் ஆமைபோல்

எனவே வைராக்யம் என்பது உலகை நிராகரிப்பது அல்ல. உலகத்தினின்றும் ஓடிப்போவது அல்ல. எனக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அல்லது மகிழ்ச்சி தேவைப்படும்போது நான் அவற்றுக்காக உலகைச் சார்ந்திருக்காமல், நிலையான ஒன்றையே சார்ந்திருப்பேன் என்ற தெளிவுதான் பற்றின்மை என்று அழைக்கப்படுகின்றது. 

தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு

இந்த நான்கு தலைப்புகளில் விஷயம், பிரயோஜனம், சம்பந்தம் ஆகிய மூன்றும் வேதாந்த நூலைப் பற்றிய தலைப்புகளாகும். இந்த மூன்றையும் வேதாந்தம் தீர்மானிக்கிறது. இவற்றைத் தன்னுள் கொண்டிருப்பதாக ஒரு வேதாந்த மாணவனுக்கு உறுதியளிக்கிறது. அதிகாரி என்ற தலைப்பு மட்டும் மாணவனைச் சார்ந்தது. அதிகாரித்துவம் எனப்படுகின்ற வேதாந்தக் கல்வியை அடைவதற்கான தகுதிகளை அவன்தான் அடைந்திருக்க வேண்டும்.

தெய்வநல்லூர் கதைகள்- 32

This entry is part 32 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அன்று மாலை சந்திப்பில் யக்கா கொதித்தார் – “பிரிக்காஷன், டிக்காஷன்னு .. அறிவில்லாதவன விட தனக்குதான் அறிவிருக்குன்னு நெனக்கறவன் நாக்குலதான் இபிலீஸ் எறங்குவான்னு நம்ம உப்புக்கண்டத்தோட பெரிய அத்தா சொல்லுவாரு. சரியாத்தாம்ல இருக்கு, சும்மா ரெண்டு வரிக்கு ஒருக்கா இங்லீசுல பேசுனா அறிவாளின்னு நெனப்பு அவருக்கு. இங்க்லீசுதாம்ல இவருக்கு இபிலீசு.  மீச சார், தமிழ் சார்லாம் அதுக்கப்பறம் ஒரு வார்த்த பேசுதாங்களா அதப்பத்தி? புதுசா வந்த வேல்முருகன் சார் கூட அத மறந்துட்டு படிப்பைப் பாருடேன்னு அன்பாத்தான சொன்னாரு. நீ ஏம்டே பிரேம் அவர் முன்னாடி அழுத?”  

தெய்வநல்லூர் கதைகள்- 31

This entry is part 31 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த  ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண்  உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது. 

செயற்பாலது ஓரும் அறன்

மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

This entry is part 15 of 16 in the series பொது நலம்

ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

தஞ்சம் புகுந்த தமயந்தி

This entry is part 5 of 8 in the series நள சரித்திரம்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன்.  இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?  

தடுப்பூசிகளின் அலை

This entry is part 14 of 16 in the series பொது நலம்

வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள், கட்டர் ஆய்வகம் தயாரித்த தடுப்பூசியால் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கட்டர் தடுப்பூசியில் உயிருள்ள, வலிமையான போலியோ வைரஸ் இருந்தது. அந்த ஆய்வகத்தின் தடுப்பூசியால் 120,000 குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்; 200 குழந்தைகள் நிரந்தரமாக முடங்கினர்; 15 பேர் இறந்தனர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்).

இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து

இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒரு பாமரனுக்குப் புரியும் வகையில், அதாவது கவனத்தைத் திரும்பத் திருத்தவும் அல்லது சீராக்கவும் (attention restoration) அமைத்த விதம். நாம் ஒரு நாள் முழுக்க வெவ்வேறு பணிகள் மற்றும் கணினி, கைபேசி போன்றவற்றில் ஈடுபட்டு சோர்வடையும் உணர்வு பல நேரங்களில் இருப்பது உண்டு. அந்த நேரத்தில் வெளியில் பசுமை சூழ்ந்த இடத்திற்குச் சென்று ஒரு 15-20 நிமிடங்கள் நடந்துவிட்டு வரும்போது, ஒருவிதமான நிம்மதியை அனுபவித்திருப்போம். அந்தக் காலத்தையும் உணர்வையும், பெர்மன் ஆராய்ச்சிக் கணக்குகளோடு இணைத்து காட்டுகிறார்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2

This entry is part 2 of 17 in the series ஹைக்கூ

அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 17 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

கொலகலூரி இனாக்

கட்டுப்பாட்டை இழக்கும் வயது. பைத்தியக்காரக் காதல். அந்த அழகி, உடல் நிறைய நகையணிந்து வீட்டை விட்டுக் கிளம்பினாள். தங்க ஒரு இடமில்லாத தனியான இளம்பெண். கணவனாக வேண்டிய ரங்காராவை நினைத்து வாடும் உதவியற்றவள். அவளோடு யாரோ சிநேகம் செய்தார்கள். ஆசை காட்டினார்கள். அந்த ‘யாரோ’ யாரென்று  யாருக்கும் தெரியாது. அவளையும் அனுபவித்து, நகைகளையும் திருடிக் கொண்டனர். ஆனால் அவள் மனத்தில் இருந்தது ரங்காராவ் மட்டுமே. அதனால் தன்னை ஏமாற்றி நகைகளைத் திருடியது ரங்காராவே என்று நம்பினாள். தன்னைக் கெடுத்தது ரங்காராவே என்று நினைத்தாள். அதையே இன்றும் கூறினாள்

கணிதமா இயற்பியலா?

கிட்டத்தட்ட இணையான சமன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஹில்பர்ட், ஐன்ஸ்டைனது வெற்றியை கேள்விக்குள்ளாக்காமல் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.  மேலாக, ஐன்ஸ்டைனுக்கு கணிதத்துடன் இருந்த ‘பிணக்கு’’ – பொதுவாக சொல்வதானால் இயற்பியலுக்கும் இருந்த பிணக்கினை மிக அழகாக பின்வருமாறு கூறினார்.

தொடரும் விதுர நீதி

மனிதனின் உடல் ஒரு தேர். ஆன்மா அந்த தேரை செலுத்தும் தேரோட்டி. உணர்வுகள் தேரை இழுக்கும் குதிரைகள். அந்த உணர்வுகளை பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த பயின்ற ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாய் பயணிக்கிறான். உணர்வுகளை அடக்க முடியாதவன் சொல்ல இயலாத துன்பங்களை அடைகிறான்.

நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து

This entry is part 3 of 8 in the series நள சரித்திரம்

யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது.  இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம்.   இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.   

கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்

பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.  

தமயந்தியின் ஸ்வயம்வரம்

This entry is part 2 of 8 in the series நள சரித்திரம்

தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது.  போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்?  நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின்  என்னை நம்ப வேண்டுமே,  நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?

தெய்வநல்லூர் கதைகள் – 26

This entry is part 26 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

அதுவரை குழப்பமாகவே இருந்த எங்களுக்கு சூழலின் விபரீதம் புரிந்தது.   ஆனால் எம் எஸ் சி சார் எவ்வித வெறுப்பும் வெளிப்படாத முகத்தையே காட்டினார். இதற்கு முன் இந்த வகுப்புக்குள் தான் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (பெயர், படிப்பு – என் பேரும் படிப்பும் ஒண்ணுதாண்டே ) தன்னுடைய குடும்பம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் ஒவ்வொருவரையும் குடும்பம் குறித்து சொல்லச் சொன்னார். வழக்கம் போல முன் பெஞ்சு மாணவனாகிய தெண்டிலு எழுந்தபோது அவரை கையசைவால் அமர வைத்தவர் –“அதென்னடே, மொத பெஞ்ச்சுன்னதும் எல்லாத்துலயும் மொத ஆளா வந்துரணுமா? அடுத்தவனும்தான் வரட்டுமே” தெண்டிலு முகம் குழப்பமானபோது பிரேம் முகம் இறுக்கமானது.

முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்

This entry is part 12 of 12 in the series சமூக உணர்ச்சி

அலுவலகங்களிலும் இதே விஷயம் நடக்கிறது. தலைவர்கள் எப்படி சிக்கலான முடிவுகளை எடுக்கிறார்கள், தவறுகளை எப்படி ஏற்கிறார்கள், பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை ஊழியர்கள் கவனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் தலைவர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், அதிலிருந்து கற்றுக்கொள்வது பற்றிப் பேசினால், அந்த நிறுவனத்தில் ஒரு கற்றல் கலாச்சாரம் உருவாகும். ஊழியர்களும் தங்கள் தவறுகளை மறைக்காமல், அவற்றிலிருந்து கற்க முயல்வார்கள்.

தொடர்ந்த தூதுப்படலம்

சிறந்த அரசனானவன் தன் நல்லறிவைக் கொண்டு நல்லது கெட்டது என்ற இரண்டை வேறுப்படுத்திப் பார்ப்பான். பரிசு, சமாதானம், வேறுபடுத்துதல் மற்றும் பலம் இவற்றை உபயோகப்படுத்தி நண்பர்கள் , எதிரிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டுப்படுத்துவான். தன் ஐம்புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பான். இராஜ்யங்களுக்கு இடையேயான ஆறுவிதமான உறவுகளை அறிந்திருப்பார்கள். ஏழு விதமான கெட்டவைகளிடம் இருந்து ( ஆசை, சூதாட்டம், வேட்டை, கொடுஞ்சொல் கூறுவது, குடி, கொடுமையான தண்டனைகள் விதிப்பது மற்றும் செல்வத்தை வீணடிப்பது) விலகி இருப்பான்

கவிதையில் வரலாற்றுணர்வு

பழைய மரபும், புதிய படைப்பும் ஒன்றின் மீது மற்றது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தமிழில் கம்பரைக் கொண்டு விளக்குகிறார் பேராசிரியர். ‘கம்பரைப் படிந்தோமானால் அவருக்கு முன்பு சென்ற அத்தனைக் கவிஞர்களின் படைப்புகளையும் அறியும் பேறு நமக்குக் கிடைத்ததாகும்’ என்று சொல்லும் பேராசிரியர், சங்கக் கவிதை, ஆழ்வார் பாசுரம், சீவக சிந்தாமணிக் காப்பியம் முதலான முன்மரபுகள் எல்லாம்

பாபிநேனி சிவசங்கர்

உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன

மருதத் திணை

அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’ 

சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு

This entry is part 10 of 12 in the series சமூக உணர்ச்சி

நண்பர்களின் ஆதரவு  என்பது ஒருவழிப் பாதை அல்ல. உதவி பெறுபவருக்கு மட்டுமல்ல, உதவி வழங்குபவருக்கும் மன நலன் மேம்பாடு கிடைக்கிறது. இது சமூகக் கற்றலின் அழகான அம்சமாகும் – கற்பிப்பவனும் கற்கிறான், உதவுபவனும் உதவி பெறுகிறான். ஒரே தடைகளை இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது கலந்து பேசும்போது அந்தத் தடைகளை அவர்கள் இருவரும் சேர்ந்தே தகர்த்தெறியும் வழிமுறைகளை எளிதாகக் கண்டுகொள்கிறார்கள்.

அஸ்வத்தாமனின் கோபம்

“எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!”

எழுது சித்திரம்

கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.

ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?

ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.

றெக்கை – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 26 in the series றெக்கை

“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும்  குழந்தை பெத்துக்கலியா? அவ   தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப்  போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ  பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன்  முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”

12. என்றென்றும் நிலைத்திருப்பது  

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.

தொடரும் தேடல்

புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான்.  ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான்.  அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான்.  அருகில் ஒர் சிறுவன்.  ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.

வதனமுறு பெரும் கொள்கை

காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்?  பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும்.  இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.

சகோதரியை தேடி

‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை  குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான்.  தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர்.   அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான். 

றெக்கை – அத்தியாயம் 1

This entry is part 1 of 26 in the series றெக்கை

அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.  போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.

நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்குமா

அக இலக்கியத்தில் தோழியும் செவிலியும் உயிர்ப்புள்ள பாத்திரங்கள். தலைவியின் மனத்தின் குரல் என்றே தோழியை      அடையாளப்படுத்திவிடலாம். ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாகவே இணைந்து தோன்றுகிறார்கள். தலைவியின் காதலைச் செவிலிக்கு உணர்த்த ஒரு விரிவான உரையாடலைத் தோழி தொடங்குகிறாள். தெய்வத்தின் மீது சூள் வைத்து, அன்று நடந்தது இது தான் என்று நாடகியமாகத் தெரிவிக்கிறாள். சில தகவல்களை நடப்பியல் பாணியில் இணைக்கவும் செய்கிறாள்.

சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்

This entry is part 6 of 12 in the series சமூக உணர்ச்சி

நேர்மறையான பள்ளி சூழல் சமூக உணர்ச்சி கற்றலுக்கான அடித்தளமாக செயல்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மாணவர்கள் தங்கள் புதிய திறன்களை தயக்கமின்றி பயிற்சி செய்ய முடிகிறது. தவறுகள் செய்து அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், ஆதரவான உறவுகளின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.