“உடைமை வாழ்வியல் ” மற்றும் “இருப்பு வாழ்வியல்” முறைகள்

நவீன நுகர்வு கலாசாரம் வாழ்க்கையை தொடர்ச்சியான வாங்குதல் மற்றும் கைவிடுதல் என்ற செயல்முறையாக மாற்றுகிறது. பொருட்கள் நீண்டகால பயன்பாட்டிற்காக அல்லாமல், குறுகிய கால சுகத்தை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மனிதன் உண்மையான திருப்தியை அனுபவிப்பதற்குப் பதிலாக தற்காலிக தூண்டுதல்களின் பின்னால் ஓடுகிறான். இத்தகைய நுகர்வுச் செயற்பாடு மனித வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை மாற்றி உடனடியாக கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றுகிறது.