கவிஞர், ஞானி என்ற பார்வைகளில் போற்றப்படும் ஆவுடையக்கா செங்கோட்டை அக்கிரகாரத்தில் ஆசாரமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். திருமண வாழ்க்கை, யார் தன்னுடைய கணவன், என்பது பற்றிய தெளிவு என்று எதுவுமறியாத பருவத்தில், வயதுக்கு வருமுன்பே பெற்றோர் அவளுக்கு அண்டை வீட்டுப் பையனை மணமுடித்து வைத்தனர். ஒரு நாள் தன் வீட்டில் அழுகையும், அதிகமான வருத்தமும் தொடர்ந்திருக்க, ஆவுடை அக்கா தாயிடம் அதற்கான காரணம் கேட்கிறாள். அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்து விட்டான் என்று தாய் சொல்ல. அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்ததற்கு நாம் ஏன் அழ வேண்டுமெனக் கேட்கிறாள்.
Tag: தி. இரா. மீனா
பூவன்பழம்
அவள் இடுப்பளவு உயரத்தில் தான் அந்தச் சுவர் இருந்தது. தோள்களைச் சுற்றிக் கம்பளி அணிந்திருந்தாள். அவளது அழகான நீண்ட கூந்தலின் ஒரு கற்றை முடி முகத்தில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது. தனக்கான சொந்தம் என்று இந்த உலகில் யாரையும் சொல்லிக் கொள்ள இயலாத அந்தப் பெண்மணியிடம், கட்டுக்கடங்காமல் தங்களால் நடந்து கொள்ள முடியுமென்று அவைகளுக்குத் தெரியும்.
அந்த முக்கிய நபர்
“இந்த விசிட்டிங் கார்டை அவரிடம் காட்டுங்கள்” பையிலிருந்து எடுத்து அவனிடம் தந்தார். பளபளப்பான தாளில் அழகாக இருந்த அந்தக் கார்டை, முக்கிய நபர் ராமன் மிக நுணுக்கமாகப் பார்த்தான். அந்தக் கார்டோடு சேர்த்து என்ன தரவேண்டும் என்பதை அறியாதவர் அந்த மனிதர் என்பது வெளிப்படை.
போட்டியாளர்கள்
எப்படி அவளை அடிபணிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் வயதுடைய பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் பணிந்து விடுவார்கள். இவள் மட்டும்தான் எதிர்ப்புக் காட்டுகிறவளாகத் தெரிகிறாள். அவர்களிடையே குடும்பத் தகராறு இருந்த போதிலும் அவன் வெளிப்படையாக அவளை அவமதித்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் யாரையுமே அவன் அவமதித்ததில்லை.
அது நமக்கான தூக்கு மேடை
இருட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் கண்கள் நீரால் நிறைந்திருந்தன.’ வம்சம் வளர வேண்டும் என்ற எண்ணத்திலானது எங்கள் உறவு. அந்த உறவு வேர்கள் என்னோடு மட்டும் தொடர்வதில், முடிவதில் விருப்பம் காட்டி வந்தவரிடமிருந்து இந்தக் கொடுமைக்காரன் என்னைப் பிரித்து விட்டான். உறவின் உச்ச நிலையில் நான் கத்தியதும், ஓலமிட்டதும் நிஜம்தான்.
கே.சட்சிதானந்தன் கவிதைகள்
நாம் சிலதைப் பெறுகிறோம்
நாம் சிலதைக் கொடுக்கிறோம்.
‘சாவு நிதிநிலை அறிக்கை தயாரிக்கிறது’
சொர்க்கம் என்பது ஒரு பொய் , ஆனால்
நரகம் ,ஆமாம், உளதாயிருக்கிறது.
திக்குதல்
திக்குதல் என்பது ஊனமல்ல
அது பேச்சின் ஒரு முறை.
திக்குதல் என்பது,
சொல்லுக்கும் அதன் பொருளுக்குமிடையேயான மௌனம்,
அது வார்த்தைக்கும் செயலுக்குமிடையேயான
தடுமாற்றம் போன்றது.
நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால் அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.
அவள், அழிவற்றவள்
‘ஒரு கதையை எனக்கு முடிக்கத் தெரியவில்லை என்ற எண்ணம் வந்தால் இதைத்தான் நான் செய்கிறேன். முடிவில்லாத எதுவும், தொடர்ந்து இருக்க அனுமதிக்கக் கூடாது.எது முடிவற்றதோ அது தன்னைத் தானே கொன்று கொள்ளும். அக்கா, வாழ்க்கை முடிவற்ற சோகம்! உலகம் கூட ஒரு சோகம்தான்.சோகம் மட்டும்தான் உண்மை.உண்மையின் முகம் பார்க்கப் பயப்படுபவர்கள் பேனாவைக் கையிலெடுக்கக் கூடாது.
