விடுபட்ட நரி

எனக்கு வாசிக்கக் கிடைத்தது அவருடைய எட்டாவது புத்தகம். ‘ஆசிரியரின் பிற நூல்கள்’ என கடைசிப் பக்கத்தில் இருக்கும் பட்டியலின் பிரகாரம் தெரிந்துகொண்டேன். ஆனால், அவருடைய பிற புத்தகங்கள் எதுவுமே எங்குமே காணக் கிடைக்கவில்லை. ஒருவேளை, ஆங்கிலத்தில் வெளியானது பதினைந்து சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு மட்டும்தானோ என்னவோ. ‘ஒருபோதும் முடியாத பயணம்’ (Neverending Journey) என்ற இந்த நூலுமேகூட பிரபலப் பதிப்பகம் எதிலிருந்தும் வெளியானது அல்ல.

இமையம் சிறுகதைகள்: பகிரமுடியாத பெண்களின் துயரக் கதைகள்

இமையம், சிறுகதை உத்திகளில் நம்பிக்கையற்றவர். அதனால் நவீனத்துவக் கூறுகளை இவரது கதைகளில் தேடிச் சலிப்படைய வேண்டியதில்லை. இவரைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற எளிய மக்கள்தாம் இவரது கதைகளைப் பின்னிருந்து எழுதுகிறார்கள். ‘இலக்கியம் என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன்’ என்பதுதான் இமையம் தன்னுடைய எழுத்து குறித்து முன்மொழியும் கருத்து

கொடுப்பினை

அப்பாவின் உள்ளங்கைகள் எல்லாம் வெளிறி தோள் செதில்செதிலாக எழுந்திருந்தன. ரத்தசோகை பிடித்தது போன்று வெள்ளைவேளெரென்று உள்ளங்கைகள் ஆகிவிட்டன. சுடுநீரில் டீ கிளாஸ் கழுவிக்கழுவி உள்ளங்கைகள் வெளிறிப் போய்விட்டன. வேட்டியை இப்போ மடக்கிக் கட்டாமல்தான் நின்று வேலை செய்கிறார். அப்பா கடையில் நின்று நின்று இரு கால்களிலும் ரத்த நரம்புகள் சுருண்டு சுருண்டு புடைத்துப் போய்விட்டன. இந்த வெரிகோஸ் நோய் வந்ததிலிருந்து வலியால் கஷ்டப்படுகிறார். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி என்று அலைந்தார். அந்த முறுக்குப் புடைப்புகள் வற்றி அமுங்கவே இல்லை. நாட்டுத் தைலத்தை உள்ளங்கையால் தேய்த்துவிடு வற்றுதா என்று பார்க்கலாம் என்று தந்தார். கெண்டைக்கால் முழுக்க அந்தத் தைலத்தை தேய்த்துவிட்டாள். “இப்ப எப்பிடிப்பா இருக்கு.” “முன்னக்கி இப்ப நல்லா இருக்கு” என்றார்.

தி ஜானகிராமன் புதினங்களில் உள்ள பொதுமைகள்

இந்துத் தத்துவத்தில், வாழ்வின் மீது கொண்ட வெறுப்பினால், நிராசையால், அனைத்தையும் விட்டு விலகி துறவறம் கொள்வது உண்டு. சொல்லப் போனால், சன்யாசம் கொள்வது வாழ்வின் நான்காவது கட்டமாக, உயரிய நிலையாக கருதப் படுகிறது. கடைசியில், அது இறைவனிடம் சரணாகதி அடைவதில் முடியும். ஆனால், சட்டநாதனுக்கு இதுவும் நிகழ்வதில்லை.      எல்லாவற்றையும் இழந்த பின் வரும் வைராக்கியம் வேறு; புதினத்தில் காட்டப்படும் சட்டநாதனின் தனிமை வேறு. ஒரு வித வெறுமை தான் சட்டநாதனுக்கு ஏற்படுகிறது

வாசற்படி

இசக்கி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரு காலத்தில் அரிசிக்குத்தான் கீரை விற்றுக் கொண்டிருந்தார்கள்.  இசக்கி ஒரு குத்து அரிசிக்கு இரண்டு கை கீரையை அளைந்து குத்தாகத் தாராளமாகவே போடுவாள்.  கொஞ்சம் கொசுறாகவும் நாலு விரற்கடை அளவு போடுவாள். இரண்டு கை கீரை வாங்கினால் அன்றையக் கறிப்பாடே கழிஞ்சுரும், கொஞ்சம் கீரையை உப்புப் போட்டு, மசியக் கடைஞ்சு, ரெண்டு இணுக்கு கறிவேப்பிலை காயம், கடுகு உளுந்தம் பருப்பு, புளி கரைச்சு விட்டு, காரமும் சேர்த்துத் தாளிச்சா, புளிக்கீரைன்னு சோத்துக்குப் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்.

எனது ஆசிரியர்கள்

என்னுடைய வித்யாரம்பம் உறவினர்களை எல்லாம் அழைத்து, விருந்து வைத்து, வெகு விமரிசையாக நடந்தது. உறவினர்கள் சூழ்ந்திருக்க தலைமை ஆசிரியர் சாமுவேல், புத்தாடை அணிந்திருந்த என்னைத் தன் மடியில் அமர வைத்து, பச்சரிசி நிரப்பப்பட்டிருந்த தம்பாளத்தில் என் ஆள்காட்டி விரலைப் பிடித்து ‘அ’னா, ‘ஆ’வன்னா என்று எழுதினார். சாமுவேல் சாரின் முகம் இன்னும் நினைவிலிருக்கிறது.

இருப்பதனைத்தும் இறைவனே!

சங்கரர் தனது மாண்டூக்ய பாஷ்யத்தில், மாண்டூக்ய உபநிஷத்தையும், கௌடபாதரின் காரிகையையும் தனித்தனி நூல்களாகப் பார்க்காமல் இரண்டையும் ஒருங்கிணைந்த ஒரே பிரமாண நூலாகக் கருதி இரண்டுக்குமே விளக்கவுரை எழுதியுள்ளார். தனது உரையின் துவக்கத்திலேயே மாண்டூக்ய காரிகையை “வேதாந்தார்த்த சார சங்க்ரஹம் – அத்வைத தத்துவத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும், மிகச்சுருக்கமாகவும், மிக ஆழமாகவும் உள்ளடக்கிய நூல் இது” என்று புகழ்கிறார். கௌடபாதரின் காரிகை உபநிஷத் எனப்படும் வேதாந்தப் பிரமாணத்துக்கு உறுதியான தர்க்க அடிப்படையை வழங்குகின்றது. ஸ்ருதி கூறும் அத்வைத உண்மையை அனுபவம் மற்றும் தர்க்க முறைகளைக் கொண்டு நிரூபிப்பதற்கு சங்கரர் காரிகைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆல்பம்

அதைக் கேட்டதும் எல்லோரிடமிருந்தும் மறைத்துவைத்திருந்த ஒரு ரகசியத்திட்டம் வெளிப்பட்டுவிட்டதுபோல வெட்கத்துடன் ஒருகணம் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகம் சிவந்தது. பிறகு மெல்ல கண்களைத் திறந்து அவளைப் பார்த்து நிதானமான குரலில் “ஆமாம். அப்பதான சொந்தக் கால்ல நிக்கறவன்னு ஊரு உலகத்துல ஒரு மரியாதை   இருக்கும். ஊரு உலகத்தைக் கூட விடுங்க. நமக்கே நம்மபத்தி அப்பதான ஒரு மரியாதை, தன்னம்பிக்கை எல்லாம் உருவாகும். அதுல ஏதாவது தப்பு இருக்குதா என்ன?” என்று கேட்டான். பிறகு  அவள் விழிகளை ஆவலோடு பார்த்தான்.

தமிழ் – தலை 10 நாவல்கள் (2026)

என் பட்டியலுக்கு சில வழிமுறைகள் வைத்துக் கொண்டேன்.

சற்றே தெரிந்த பெயர் + அறிமுகமான எழுத்தாளர்.
கடந்த ஆண்டில் வெளியான முழு நீள் புதினம்.
புகழ்பெற்றவர்கள் என்று நான் கருதும் அரங்கம் ரொப்பும் வஸ்தாது எழுத்தாளர்களைத் தவிர்த்து விட்டேன் (அவர்கள் பட்டியலே நீளமானதுதான்.
மொழியாக்கங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கும் இந்தப் பட்டியலில் இடம் கொடுக்கவில்லை.

ஜஸ்டிஸ் சுந்தரின் இறுதித் தீர்ப்பு

உண்ணி கிருஷ்ணன் “ உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா ? அந்த அம்மா குடும்ப நிலைமை தெரியுமா ? அவங்க ஹஸ்பண்ட் குடிச்சு குடிச்சு சின்ன வயசுலயே செத்துப் போயிட்டான். பார்த்துக்க யாருமே இல்லை, வயசான காலத்துல சாப்பாட்டுக்கு மருந்து வாங்க காசு இல்லைன்னு ஏதோ கவுரவமா, சொந்தமா செய்யலாம்ன்னு வந்திருக்காங்க, அவங்களை விரட்ட வீரமா கெளம்பிட்டீங்க.” என்றார்

தானாக இசைக்கும் பியானோ ராயல்டி கேட்குமா 

This entry is part 12 of 12 in the series காப்பிரைட் கதைகள்

புதிய சட்டம், இயந்திரங்கள் மூலம் ஒரு பாடலை பிரதி எடுப்பதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது. பியானோ ரோல், போனோகிராஃப் தட்டுக்கள், போன்ற வடிவங்களில் பாடல்கள் வெளியானால், அவை “இயந்திரங்கள் மூலம்  மீட்டுருவாக்கம்”  செய்வதாக கருதப்படும் என்று சொன்னது புதிய சட்ட விதிமுறை. அப்படி மீட்டுருவாக்கம் செய்வதை அனுமதிக்க இசையமைப்பாளர்களுக்குத் உரிமை வழங்கியது.  காப்பிரைட் பெற்ற ஓர் இசைப்படைப்பை இப்படி இயந்திரங்கள் மூலம் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பும் எவரும் காப்பிரைட் உரிமை கொண்டவரிடம் அனுமதி பெறலாம். அதற்கு பாடலுக்கு இரண்டு சென்ட் ராயல்டி செலுத்த வேண்டும். அந்த ராயல்டி “மெக்கானிக்கல் ராயல்டி” என்று வரையறை செய்யப்பட்டது.

பாம்பு மனிதன்

அவர்கள் இருவரும் ஒரு வாழை இலையைத் தரையில் விரித்து வைத்து எல்லோரும் பார்க்குமாறு அந்த ராஜ நாகத்தை அதில் கிடத்தி வைத்தார்கள். சுற்றி இருந்த கூட்டத்தார் அந்தக் காட்சியைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். 11 அடி நீளமும் கருப்பான மேல் தோலும் வெண்மையான வயிற்றுப் பகுதியும் கொண்ட அந்த ராஜநாகத்தைக் காணும் ஆர்வத்தோடு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டிருந்த பெண்களும், துறுதுறுப்பான இளைஞர்களும்,உற்சாகக் கிளர்ச்சியோடு இருந்த சிறுவர்களும் அந்த இடத்தில் சூழ்ந்து கொண்டார்கள்.

நுஷூ(Nushu): பெண்களுக்காக பெண்களால் உருவான எழுத்து வடிவம்

பெண்களிடம் காகிதமும் மையும் எப்போதும் இருக்கவில்லை. அதனால் கையில் கிடைத்ததிலெல்லாம் எழுதினார்கள்.காகிதம், துணியால் கட்டப்பட்ட சிறு புத்தகங்கள், விசிறிகள், கைக்குட்டைகள்,நெய்த ரிப்பன்கள், இடுப்புப் பட்டைகள், ஆடைகள் மற்றும் மதச் சடங்கு நூல்களின் ஓரங்கள் என அனைத்திலும் எழுதினார்கள்.

தன்னிச்சையான முக்கியத்துவம்

எண்ண ஆரம்பிக்க மறந்துட்டேன். சீக்கிரமே நான் எத்தனை அடி எடுத்து வச்சிருப்பேன்னு எண்ணவே முடியாம போச்சு. ஒவ்வொரு அடியும் அந்த ஆப்பிரிக்க பாலைவனக் கனவுக்கு ஒரு சின்னப் பங்களிப்பு தான். ஆனா இருட்டுல தடுக்கி விழுந்துடக் கூடாதுன்னு ஒவ்வொண்ணுக்கும் பயங்கர முயற்சி தேவைப்பட்டுச்சு. திரும்பத் திரும்ப, ஒரு காலை இன்னொரு காலுக்கு முன்னாடி தள்ளினேன். கண்ணுக்குத் தெரியற ஒரு தொடுவானம்ங்கற ஆறுதலான பிரமையைப் பறிச்சதும், என் உள்காது ஒரு கேவலமான, குமட்டல் வர வைக்கிற அடம் பிடிச்சுது.

கடற்கரைக் கிறிஸ்து: எஸ்தப்பான் மற்றும் புனிதத்தின் புனைவு

இங்கே சூழலியல் விமர்சனமும் எழுகிறது. அன்னாவை வெளியேற்றிய காண்ட்ராக்டர், கடலரிப்பைத் தடுப்பதாகக் கூறி கடலில் கருங்கற்களைக் கொட்டி கடல்சுவர் எழுப்புகிறான். சுட்டெரிக்கும் வெயிலில் கூலித் தொழிலாளிகள் பாறைகளைச் சுமக்க, தலையில் துண்டு போட்டுக் காரில் வரும் அவனிடம் எஸ்தப்பான் பாடுகிறான்: “பாறை உருகி நீரானதா? அல்லது பாறை நீரின் வேடமிட்டதா?… உங்கள் கழிவுகளைக் கடலில் கொட்டிவிட்டு அது நிலம் போலத் தோன்றினால், நீங்கள் குற்றவாளிகள் அல்ல. அப்படி இருந்தாலும், இப்பூமியில் எவன்தான் குற்றமற்றவன்?” பொறியியல் என்ற பெயரில் கடலை ஆக்கிரமிக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான எளிய கடலோரச் சூழலியல் புதிர் இது.

பிரேதங்கள்

இமைக்காமல், ஒரு பிணத்தைப்போல பாதி மட்டுமே திறந்திருந்த தனது விழிகளால் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் சிந்து. அகவையின் பாரத்தை ஏந்தியபடி அசைந்த அவரது கைகால்களில் ஒருவித தளர்ச்சி தென்பட்டது. அவள் அணிந்திருந்த புடவையில் குறிப்பிட்ட அளவிலான கசங்கல்களை ஏற்படுத்திவிட்டு மீண்டும் அவள் முகத்தின் பக்கம் வந்தவர் தனது சுட்டுவிரலினால் கழுத்தின் காயத்தை, அதிலிருந்து கசிந்த குருதியின் வடிவத்தை ஒழுங்காக்கினார். பிறகு அனைத்தும் கச்சிதமாக வந்துவிட்ட நிறைவுடன், “குட்!” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.

இலக்கியம் என்னும் காலக்கண்ணாடி

This entry is part 4 of 4 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

தற்காலத்தில் நாம் காண்பது இயல்தமிழ் வளர்ச்சி (அதாவது உரைநடை இலக்கியங்கள்). பாரதியார், முத்தையா பாகவதர், நாமக்கல் கவிஞர், கல்கி, தேசிக விநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், கோடீஸ்வர ஐயர், உளுந்தூர்பேட்டை சண்முகம்; யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலவர்கள்: ஆறுமுக நாவலர் முதலியோர் காவடிச்சிந்து, தேசபக்திப் பாடல்கள், தமிழிசைப்பாடல்கள், பலவிதப் பாடல்கள் ஆகியனவற்றை இயற்றினர்.  பேசுவது போலவே தமிழில் கதை எழுதத் தொடங்கினர், வ, வே சு, ஐயர், முதலியோர் தொடங்கிய இவ்வடிவம் மிகுந்த வலுவுற்றுத் தற்போது பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்கள் (என்னையும் சேர்த்துத்தான்!!!) உள்ளனர்.

துக்கம்

யாருக்கும் கதிரேசன் நினைவு இருந்ததாகவே தெரியவில்லை, ஒரு சிலரை தவிர. அவர்கள் கதிரேசனின் மிக நெருங்கிய உறவினர்கள். ஈமக்கிரியைக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக பல சிரமங்களுக்கு நடுவே கதிரேசனின் மகன் ப்ளைட்டை பிடித்து வந்து சேரவே ஈமக்கிரியையின் கடைசி கட்ட ஆயத்தங்கள் ஆரம்பமாயின. கதிரேசனின் உடலை வெளியே கொண்டு வரவே பெண்கள் பிள்ளைகளின் கதறல்கள் அந்த சூழ்நிலையை இப்போது மிகவும் சோகமாக்கியது. ஈமக்கிரியை கடைசி கட்டத்தை நெருங்கிய நேரத்தில் கூட்டம் அதிகமாகி இரைச்சலும் அழுகைச்சத்தமும் ஒரு கலக்கத்தை உண்டாக்கியது.

முடிவாக ஒரு முதன்மைக் கோடு!

ஒரு கடிகாரம் இயங்க வேண்டுமென்றால் சீரான இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் ஓர் இயக்கம் தேவை. பெண்டுலம் கடிகாரத்தில் ஊசல் (Pendulum) ஆடுகிறது. குவார்ட்ஸ் கடிகாரத்தில் படிகம் (Quartz) அதிர்கிறது. அதே போல அணுக்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மின்காந்த அலைகளைச் செலுத்தும் பொழுது அவை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. இந்த அதிர்வெண் ஒரே வகையான அணுக்களுக்கு அவை உலகில் எங்கிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு மிகத் துல்லியமான கடிகாரங்களை உருவாக்க முடிந்தது.

வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

அவன் பதில் சொல்லும்முன் புலி நகர்ந்தது. ஸமருசி அவன் கையைப் பற்றினாள். மேட்டின் மேலே இருந்த மனிதர் சப்தமிட்டு புலியை நோக்கி எதையோ எறிந்தார், புலியின் கவனம் அவரை நோக்கித் திரும்பியது. வேகம் கொண்டது. அவரும் புலியை நோக்கி மேட்டில் இருந்து சரசரவென இறங்கினார்.

காலவெளிக் குமிழியில் காசி

This entry is part 3 of 3 in the series காசி

அநித்தியம், முடிவு, பிறப்பு-இறப்புச் சுழற்சி, வாழ்க்கையின் அர்த்தம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று பல தெளிவில்லாச் சிந்தனைத் துணுக்குகள் தீப்பொறிகள் போல் மனதில் எழுந்தன. இவ்விடத்தை விட்டு நகர்ந்த உடன், காற்று புகையைக் கலைப்பது போல், அன்றாடத்தின் விசை இந்த எண்ணங்களைக் கலைத்துப் போட்டுவிடும் என்று தெரிந்திருந்தும், ‘மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்’ என்று சில வினாடிகளுக்காவது எண்ண வைக்கும் இடங்களில் ஹரிஷ்சந்திரா படித்துறையும் ஒன்று. ஒரு சில வினாடிகளே இருந்தாலும், வாழ்க்கை என்னும் அபத்தம் தீ நாக்குகளாக, அடர் புகையாக மனதில் புகுந்து கமற்கிறது.

அதே நிலம்

பல ஆண்டுகளாக அந்தப் பகுதி வழியாக மழைநீர் நிலத்துக்குள் ஊடுருவியதால், அங்குள்ள ஆழ்மண் ஈரப்பதம் சுற்றிய பகுதிகளைவிட அதிகமாக இருப்பதாக system தெரிவித்தது.

இலையுதிர் காலத்தின் வண்ணத் திருவிழா

இலையுதிர்காலத்தில் எல்லா மரங்களும் ஒரே நிறத்தைப் பெறுவதில்லை. சில மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றன. சில ஆரஞ்சு நிறமாக மாறுகின்றன. சில தீப்பிழம்பைப் போல சிவப்பாகவும் செங்கருஞ்சிவப்பாகவும் காட்சியளிக்கின்றன.இந்த வேறுபாட்டிற்கான முக்கிய காரணம், ஒவ்வொரு மரத்திலும் உள்ள நிறமிகளின் வேறுபாடும், அவற்றை உருவாக்கும் உயிர்வேதியியல் பாதைகளும் ஆகும். மஞ்சள் நிற இலைகளில் பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த கரோட்டினாய்டுகள் வெளிப்படுகின்றன. அவை குளோரோஃபில் குறைந்தபின் தெளிவாகத் தெரிகின்றன.

கார்காலக் கதை

 குழந்தைகள் எல்லாரும் காரின் பின்னாடியே ஓடி வந்தார்கள். பூர்வஜாவின்  அண்ணன் பிரதாப் பல தெருக்கள் தாண்டி ஓடி வந்து டாட்டா காட்டிவிட்டு,  பின்பு “எங்க கார், எங்க கார்!’’ என்று கத்தியபடியே திரும்பி ஓடினான்.  திரும்பி அவனுக்குக் கைகளை அசைத்துக் கொண்டு வந்த பூர்வஜாவின்  முகத்தில் சில்லென்று காற்று பட்டதும், ஒட்டுமொத்த முடியும் காற்றில் பறக்க வாயைத் திறந்து காற்றை விழுங்கிய படியே சென்றாள். சற்று நேரத்திலெல்லாம் எல்லோருடைய முடியும் காற்றில் பறக்க முல்லக்காடு  சென்று இறங்கினார்கள். 

மூன்றாம் பயணமும் தலைகுனிவும்!

This entry is part 13 of 13 in the series கொலம்பஸ்

மாதக் கணக்கில் நடுகடலில் வீசிய கொடூரமான வெயில், நாவறண்டு போன தொண்டை, கொதிக்கும் தார் வழிய மரப்பலகைகள் வெடித்த நரக வேதனை, கையில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் மரணத்தின் விளிம்பில் பயணித்தன அந்த மூன்று படகுகள். அந்தப் பயங்கரமான இரவுகளிலும், விடியும் வேளையிலும் ஒவ்வொரு மாலுமியும் தன் உயிர் பிரியும் என்ற பயத்தோடுதான் விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுதுதான், மூன்று கப்பல்களில் ஒன்றான ‘ல காப்ரா’ (La Capra) கப்பலின் பாய்மர உச்சி மீதிருந்து ஒரு “நிலம்!… நிலம் தெரிகிறது!…”  என்னும் குரல் திடீரெனக் கேட்டது!

கண்டறியாதன கண்டேன்

கொடுக்கப்பட்ட புரத தொகுப்பிலிருந்து மாதிரி புரதம் கொண்ட தொகுப்பு எடுக்கப்படுகிறது. அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அது படித்து ஏற்கனவே வெளியான விடைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதையும் சரி பார்க்கிறது. பிறகு ஒரு குறிப்பிட்ட அமைப்பில் சேராத மரபணுகளில் இருக்கும் செய்திகளை படித்து சிறு குறிப்பாக மனிதர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனுடைய செயல்பாடு என்ன அதற்கான ஆதாரம் என்ன என்பதையும் சொல்கிறது. மாதிரிக்காக எடுக்கப்பட்ட பல புரத தொகுப்புகள் இதில் வெளியேற்றப்படுகின்றன. ஒரே ஒரு புரத தொகுப்பு கூட மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படலாம்.

பொம்மைக்கு நரைப்பதில்லை

This entry is part 20 of 20 in the series ஹைக்கூ

ஹினா மட்சுரி நாளில் அடுக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை பெண் துறவியும் ஹைக்கூ கவிஞருமான செய்ஃபு பார்த்தார். பொம்மைகள் அவரைக் குதூகலப்படுத்தவில்லை. ஆனால், கவிதை எழுதத் தூண்டுகின்றன. தான் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டதைப் பொம்மைகளை முன்னிறுத்தி எழுதுகின்றார். ஆனால், இன்னொரு பார்வையில் குழந்தைமையிலிருந்து அவர் விலகியதன் காரணம் துறவு வாழ்க்கையாகவும் இருக்கலாம். துறவு வாழ்க்கை மேற்கொள்ளாதவராக செய்ஃபு இருந்திருப்பின், ஹினா மட்சுரிப் பொம்மைகள் அவருக்குத் தன் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியிருக்கலாம்.

அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம்: ட்ரம்ப்புக்கு மக்கள் கொடுத்த தேர்தல் பாடம்!

ரஷ்யா, ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை தங்களுக்குச் சாதகமாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளது. சீனா, அமெரிக்கத் தேர்தல் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நிர்வகித்து ஒத்துழைப்பைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஜப்பான், தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தனது வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாகத் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளது.

டோரதி பார்க்கர் கவிதைகள்

இளமைப் பருவத்தில்,
இயன்ற வரையிலும்
பிறரை மகிழ்விப்பதையே
பிரதான நோக்கமாக
நான் கொண்டிருந்தேன்;
கடந்து வந்த இளைஞர்களின்
கருத்தோட்டங்களுக்கேற்ப
என்னை மாற்றிக்கொண்டேன்,
ஆனால் இப்போதோ, ​​
எனக்கு வேண்டியவை
எவையென அறிவேன்;