பாடுநனி கேட்டல்

யூரிபிடீஸைப் பற்றி எழுதத் தொடங்கியபோது ஆன் கார்சனின் முன்னுரைகளே மீண்டும் மீண்டும் என் மனதில் நிழலாடின. அவற்றைக் கடந்து அந்நாடகங்களைப் பற்றி என்ன பெரிதாக எழுதிவிடப் போகிறேன் என்ற அசூயை என்னை ஆட்கொண்டது. பின்னர் இந்த முடிச்சை அவிழ்க்க ஒரு வழி கிடைத்தது. மிகச் சிறப்பான அந்த நான்கு முன்னுரைகளையும் மொழிபெயர்த்தால் அவற்றின் கூட்டுத்தொகையே யூரிபிடீஸின் உலகிற்கான கச்சிதமான அறிமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. அவற்றை அடுத்தடுத்து மொழியாக்கம் செய்தேன்.